மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் பிக்கு தாக்கியுள்ளார் .
அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்கு கைது
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.
ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,
“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன்.
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம்
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,
“இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.
பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.
மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த
படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது
முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்
பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .
இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு . அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் .
லுணுகலை கும்புக்கன் ஓயா பகுதியில் இறந்த நிலையில் மர்ம சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் காணமல் போனவரது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இவர் எவ்வாறு மரணமானார் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
கடந்த மூன்றாம் திகதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ,காணமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல் துறையில் முறைப்பாடு செய்தனர் .
அதனை அடுத்து காணமல் போனவர் தொடர்பாக காவல்துறையினர் தேடுதலை நடத்திய பொழுது ,லுணுகலை கும்புக்கன் ஓயாவில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக ,காவல் துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மர்ம கொலை
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்ய ப்பட்டு இருக்கிறார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்க பட்ட பகுதியில் ,கொலைக்கான தடயங்களை தேடி சேகரிக்கும் நடவடிக்கையில் குற்ற பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் தொடரும் இவ்வாறான கொலைகளும் ,சடலங்கள் மீட்க படுவதால் ,சீரியல் கில்லர் சிலர் இந்த கொலைகளை நடத்துவதாக சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி .
வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றைக் அனுப்பி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.
1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை.
விசா கட்டணம்
ஆனால் 2012ல் ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.
2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயல்முறை தடையின்றி நடந்தது.
எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து நீக்கி VFS GLOBAL என்ற தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஒன்லைன் வசதி மூலம் விசா
அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.
மேலும், 2012 முதல் 2024 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.
எனினும், அந்த கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் சிறுவர்களுக்கும் 100.5 டொலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை
இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், சுற்றுலாப் பயணி ஒருவர் ஒன்லைனில் விசா வசதியைப் பெறும்போது, அது குடிவரவு மற்றும்
குடியகல்வுத் திணைக்களத்திற்குத் அறியவந்தாலும் On Arrival முறை மூலம் வரும் சுற்றுலாப் பயணிக்கு வழங்கப்படும் விசா வசதி முதலாவது சந்தர்ப்பத்திலேயே திணைக்களத்திற்கு தெரியவராமை ஆகும்.
இந்நிலைமை 1949 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO என்ற பயண முகவர்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருளினி பாட்டால் அழுத மக்கள்
அருளினி பாட்டால் அழுத மக்கள்
சரிகமபாவில் மலேசியா பெண், அருளினி பாட்டால் அழுத மக்கள்.
சீனியர் சரிகமபா பாட்டு மன்றத்தில் பாடி அசத்திய மலேசியா குயில் அருளினி .
சரிகமபா நடுவர்கள் அந்த அரங்கில் குழுமி இருந்த மக்கள் யாவரும் ,அருளினியின் சிரிப்பில் மயங்கினர் .அருளினியின் கொஞ்சு தமிழும் ,வெளிப்படை தன்மையான பேச்சும் யாவரையும் கவர்ந்துள்ளது .
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ,சரிகமபா நிகழ்வில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பெண்ணாக அருளினி காணப்படுகிறார் .
ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட அருளினி
ஆட்டிசத்தால் அருளினி பாதிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்த பொழுது, அங்கிருந்த மக்கள் யாவரும் கலங்கி போயினர் .தன்னை வாழவைத்து வருவது இந்த இசை தான் ,என அவர் தெரிவித்தார் . .
இந்த மேடையில் முதன் முதலாக அலேக்கா அலேக்கா என்கின்ற பாடலை பாடினார் ,அப்பொழுது நடுவர்கள் மற்றும் அந்த அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்தியது .
மதுர குரலை தன்னகத்தே வைத்துள்ளார் ,மேல் சுருதியில் அருளினி பாடலை பாடிய பொழுது நடுவர்களே வியந்து, தம்மை மறந்து கைகளை தட்டி வாழ்த்தினர் .
அவ்வாறான சிறப்பு தகமை கொண்ட அருளினியின், சரிகமபா பயணம் புதிய அனுபவத்தை கற்று கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
நான் வெற்றி பெறுவேனோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல . இறுதிவரை நிகழ்வில் பாட வேண்டும் என்பது எனது ஆசை என ,அவர் உண்மையை உரக்க கூறி இருந்தது ,அவரது வெளிப்படை தன்மையான பேச்சை காட்டியுள்ளது .
வெல்லுங்கள் அருளினி ,கலங்காது நடை போடுங்கள் ,உங்களோடு உலக தமிழர்கள் இருக்கிறோம் .
இவ்வாறானவர்களை இணைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .
யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .
ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.
ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்
காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .
தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .
லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .
பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .
அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .
தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
பாலஸ்தீனம் ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா சூளுரைத்துள்ளது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரம் பெற்றுள்ள வேளையில் அமெரிக்காவோ ஹமாஸ் அழிக்க படும் என்கிறது .
கடந்த வருடம் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்து சென்றனர் .
அவ்வாறு ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்டவர்களை ஏழு மாதங்கள் கடக்கின்ற பொழுதும், இதுவரை இஸ்ரேலினால் மீட்கமுடியவில்லை .மீட்பு நகர்வில் அமெரிக்காவும் தோற்று போனது ..
ஹமாஸ் போர் படை
இவ்வாறாந தோல்வியின் விளிம்பில் உள்ள அமெரிக்கா இஸ்ரேல் என்பன மீளவும் ,காசா ஹமாஸ் போர் படைகளை முற்றாக அழிக்க போவதாக அறிவித்துள்ள செயல் ,சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமது வல்லாதிக்க அடக்கியாளும் ,அடக்குமுறை சுரண்டல்களுக்கும் ,மிரட்டி ஆளும் ,உலக கொள்ளையர் அமெரிக்காவினால் ,ஈரானுக்கு எதிராக முழுமையாக செயலாற்ற முடியா நிலையில் ஹமாஸ் அழிக்க படும் என்கிறது
.மத்திய கிழக்கு நாடுகள்
அவ்வாறு ஹமாஸ் இஸ்ரேல் அமெரிகாவினால் அழிக்க பட்டாலும் ,ஈரான் உள்ளவரை ,ஹமாஸ் முளை விட்டு கொண்டே இருப்பார்கள் என்பதை ,உலக் சண்டியர் அமெரிக்கா மறந்து விட்டது .
ஆப்கானில் அடி வாங்கி ஓடியது போல ,தற்போது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ,தென் ஆசியாவிலும் அமெரிக்கா ஓட்டம் பிடிக்க போகிறது என்பதே ஹாமாஸ் அழியும் என்ற இவர்கள் இந்த பேச்சுக்கள் மூலம் காணமுடிகிறது .
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .
ஏமன் ஹவுதி போர் படை
அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .
அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு என இன்று அறிவிக்க பட்டுள்ளது .
காணி அபகரிப்பு என தெரிவித்து சுண்டிக்குளம் மக்களுக்கு எதிராக வனஜீவராசிகள் அமைச்சினால் வழக்கு தொடுக்க பட்டது .
மக்களுக்கு எதிரான வழக்கு தற்போது ஒத்திவைப்பு என முன்னாள் வடமாகாணசபை சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ள்ளார் .
சிங்கள ஆக்கிரமிப்பு
திட்டமிடப்பட்டு மக்கள் விவசாய காணிகளை அபகரிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நடத்த பட்டு வருவதாக ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
உடையார் கட்டு குளத்தின் கீழ் ,நீர்ப்பாசன விடயத்தை பெற்று மக்கள் விவசாயம் செய்யும் 138 பேரது காணிகளை அபகரித்துள்ளது என பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
காரிய வயல் தொடர்பான வழக்கு, வனஜீவராசிகள் திணைக்களத்தால் இந்த குடும்பங்களுக்கு எதிராக தொடுக்க பட்டுள்ளது என ரவிகரன் சுட்டிகாட்டாடினார் .
காணி அபகரிப்பு
அந்த காணி அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட நிலையில் ,தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .
அரச காணி சட்டத்தின் கீழ் காணிகளுக்கு உறுதி வழங்க பட்ட நிலையில் ,அந்த காணிகள் அரசுக்கு சொந்தமானது என தெரிவித்து ,வனஜீவராசிகள் திணைக்களம் அபகரிக்க முனைந்துள்ளதாக கண்ணீர் மல்க மக்கள் தெரிவித்துள்ளனர் .
சிங்கள காணி அபகரிப்பு
சமாதான தேவன் என தன்னை அறிமுக படுத்திய ரணில் விக்கிரமசிங்காவின் காலத்தில் ,சிங்கள இனவாத அடிப்படையில் தமிழர் மீது இவ்விதமான நடவடிக்கைகள் நடத்த பட்டு வருகின்றன .
ஆண்டுகளாக தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டு அவர்களது பூர்வீக குடியேற்றங்கள் சிங்கள இனவாத ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி ,தமது உடமை என தெரிவித்து ,தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் செல்கின்றனர் .
சமாதானத்தை ஏற்படுத்துவோம் எனவும் ,ஒன்றித்த இலங்கையில் வாழ்வோம் என தெரிவிக்கும் ஆளும் ஆட்சியாளர்கள் ,தொடராக தமிழ் மக்கள்மீது வன்முறை யை கட்டவிழ்த்து விட்டுள்ள செயல் , மீளவும் ஒரு பேரழிவை நோக்கி இலங்கை செல்ல போகிறது என்பதே காலநிலவரமாக உள்ளது .
பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கைவிடப்பட்ட பாழடைந்த வீட்டில் சடலம் மீட்க பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மர்மமான முறையில் பாழடைந்த வீட்டில் ஆணின் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பாழடைந்த வீட்டுக்குள் இந்த வாலிபர் எவ்வாறு வந்தார் ,அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாள்தோறும் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த படுகொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை பொலிஸாரால் கண்டுபிடிக்க பட முடியாத நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
போதை பாவனை அதிகரித்துள்ள நிலையில் ,வன்முறை ,ஆக்கிரமிப்பு ,விரோத ,பகைமைகள் அதிகரித்து காணப்படும் ,இக்கால கட்டத்தில் ,இவ்வாறாக சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
மக்கள் யாரும் அற்ற கைவிட பட்ட நிலையில் பாழடைந்து காணப்பட்ட வீட்டுக்குள் ,இந்த வாலிபர் எவ்வாறு இறந்தார் ..? இவரது சாவின் மர்மம் என்ன ..?கண்டு பிடிக்குமா இலங்கை பொலிஸ் ..?
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார் .இலங்கை வந்தடைந்த யோகோ கமிகாவா பிரதமருடன் பேசிட உள்ளார் .
இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்குடன் , ஜப்பான் நடவடிக்கைகள் முன்னெடுக்க படவுள்ளதாக இலங்கை அரச வட்டாரங்கள் ஜப்பான் சந்திப்பு தொடர்பாக தெரிவிக்கின்றன .
பொருளாதாரத்தில் நலிவுற்ற இலங்கைக்கு உதவும் ஜப்பான்
பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் இலங்கை மக்கள் வாழ்வாதாரத்தை முதன்மை படுத்த ,ஜப்பான் உதவிகளை செய்து வருகிறது .
அவ்விதமான நீண்ட புரிந்துணர்வின் அடைப்படையில் இலங்கை ஜப்பான் பல நடவடிக்கைகளை மேற் கொண்டு .வருகின்றனர் .
இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை பயணித்துள்ளது பலவிடயங்களை பேச வைக்கிறது .
சீனாவுக்கு எதிரான ஜப்பான் இலங்கையில்
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜப்பான் உள்ளது . சீனாவுடன் இலங்கை கூட்டுறவை வைத்துள்ளது .
இவ்வாறான முரண்பட்ட நிலையில் இலங்கையுடன் பல இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி ,ஜப்பான் சார்ப்பு நிலையை கட்டி பயணிப்பதை காணமுடிகிறது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரதமர் தினேஷ் குணவர்த்தன ,மற்றும் அமைச்சர்களையும் ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் சந்தித்து கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்க .பட்டுள்ளது .
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து உத்தரவு .
இவ்வாறான பஸ்களின் சாரதிகளை கைது செய்ய வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐந்து இலட்சம் ரூபா அபராதம்
இவ்வாறு கைது செய்யப்படும் பஸ் சாரதிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது .
, அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சினால் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுகிறனர்.
குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
இதுபோன்ற பஸ்களின் சாரதிகள் உடனடியாக கைது செய்யப்படுவதோடு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
இறுதி போர் கால பகுதியில் கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள் விடயம் உண்மை என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .
கைது செய்யப்பட்ட தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கடலில் சடலங்கள் வீசப்பட்டது மறைக்க முடியாத உண்மை என சிவாஜிலிங்கம் இடித்துரைத்துள்ளார் .
கற்கள் கட்ட பட்டு சடலங்கள் கடலில் வீசல்
சடலங்களின் உடல் பாகங்களில் கற்கள் கட்ட பட்டு அந்த தமிழர் சடலங்கள் கடலில் வீசப்பட்ட வரலாறுகள் ,ஆதாரபூர்வமாக வெளியீடு செய்ய பட்டு இருந்தது .
அவ்வாறான மிக பெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற பின்னரும் ,இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையால் தீர்வு காணப்படவில்லை .
இலங்கை புரிந்த மனித படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
33 புதை குழிகள் கண்டு பிடிப்பு
தமிழர் தாயாக பகுதிகளில் இதுவரை 33 க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
அந்த மனித புதைகுழிகளுக்குள் கண்டு பிடிக்க பட்ட சடலங்கள் ,உடல் பாகங்கள் சிங்கள அரச படைகளினால் அழிக்க பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை விசாரணைக்கு உள்ளாக்க படும் திடமான பொறி முறை உருவாக்க பட்டுள்ளதாக ,சிவாஜிலிங்கம் குறிப்பிடுகின்றார் .
சர்வதேச நீதிமன்றில் இலங்கை பாரப்படுத்த படலாம் என்பதால் ,மனித புதைகுழிகளும் ,அங்கிருந்த தமிழர் சடலங்களும் காணமால் ஆக்கப்பட்டுள்ளன என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் சிவாஜிலிங்கம் .
சிங்கள இராணுவத்தை காப்பாற்ற புதைகுழிகள் அழிப்பு
தமது மக்களையும் ,இராணுவத்தையும் காப்பாற்றி கொள்ளும் நோக்கில் இவை திட்டமிட பட்டு செயல்முறைவடிவம் கொடுக்க பட்டு நகர்த்த பட்டுள்ளது .
இறுதி போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த பொழுதும் ,இதுவரை தமிழர்களுக்கான தீர்வு ஏதும் கிட்டவில்லை .
கடலில் ,வீதிகள்,கடல் கரைகளில் ,நீர் ஏரிகளில் குண்டு வீசி கொலை செய்ய பட்ட தமிழர்கள் ,காணாமல் போன பட்டியலில் உள்ளடக்க பட்டனர் .
மனித புதைகுழி தடயங்கள் அழிப்பு
அவர்கள் புதைக்க பட்ட ,அல்லது பலியான பகுதிகளில் சடலங்கள் தோண்டி எடுக்க பட்டு ,அந்த தடயங்கள் அழிக்க பட்டுள்ளன என்கின்ற விடயத்தை சிவாஜிலிங்கம் மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் .
இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் மிக தெளிவாக பாரப்படுத்த பட்டுள்ளதாகவும் ,தீர்வு ஒன்று கிடைக்க பெறும் என்ற சிறு நம்பிக்கையை சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ளார் .
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .
சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .
இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .
சாதனை படைக்க நடை பயணம்
52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .
இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .
இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .
இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .
சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .
புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?
ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .
தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்
எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .
அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .
தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மொனராகலை பகுதியில் மாமி மற்றும் மனைவி மீது கணவன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார் .
கணவனின் தாக்குதலில் மாமியார் சம்பவ இடத்தில் .பலியானார் ,பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி ,சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார் .
குடும்ப தகராறு
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி மற்றும் மாமியாருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது .
அவ்வேளை சீற்றம் அடைந்த கணவன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
கணவன் நடத்திய தாக்குதலில் ,தாய் ,மகள் பலியான சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கூட்டு குடும்பம்
கூட்டு குடும்பமாக வாழும் இக்காலத்தில் ,ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்ல வேண்டும் .
அவை இல்லாத பட்சத்தில் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது என சமூக நல மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
அதிகரித்த படுகொலைகள்
இலங்கையில் வழமைக்கு மாறாக தற்போது ,இவ்விதமான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான கொலைகளை விசாரிப்பதற்கே தனி விசாரணை படைகளை இலங்கை காவல்துறை அமைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ள பட்டுள்ளது .
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மாமி மற்றும் மனைவி மீதான தாக்குதலும் நீண்ட நாள் வன்மத்தின் உச்சமே காரணம் என ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர் .
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் இவ்வாறான கொலைகள் ,இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது .
இலங்கையில் எற்பட்டடுள்ள பொருளாதார சீர்கேடு ,அதனால் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாகவும் ,இவ்விதமான கொலைகள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது .
அரசும் அதன் நிர்வாகமமுமே ,மக்கள் வாழ்வியல் சுமைகளை குறைத்தால் இவ்விதமான விடயங்கள் நீர்த்து போகும் எனப்படுகிறது .
கோபத்தின் விளைவு இன்று தாய் ,மகள் மரணம் ,கொலை குற்றத்தில் கணவன் தற்பொழுது சிறை சென்றுள்ளார் .
இவர்களது பெற்ற பிள்ளைகள் அனாதைகளாக மாற்றம் பெற்றுள்ளனர் .
எதை எங்கு யாரிடம் சொல்லவேண்டும் ,எதை சொல்லக்கூடாது என்ற விடயம் இல்லாது ,தாங்களே புத்தியீவிகள் என்ற கணக்கில் ,கட்டவிழ்த்து விட படும் கதைகளும் .புனைவுகளும் இந்த கொலைகளுக்கு காரணமாக மற்றம் பெற்றுள்ளதை காணமுடிகிறது .
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் ,ஹிஸ்புல்லா போராளிகள் விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் அப்பர் கலிலி பகுதியை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இதில் இஸ்ரேலிய பெண்கள் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
லெபனான் அப்பாவி மக்கள் வீடுகளை தாக்கி அழித்த இஸ்ரேலுக்கு இப்பொழுது , போராளிகள் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன .
இந்த விமான தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் அழிக்க பட்டும் ,அங்கு வசித்த மக்களுக்கு காயங்களும் ஏற்படுத்த பட்டுள்ளன .
தற்கொலை விமான தாக்குதல்
தற்கொலை விமான தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலில் ,இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,76000 மக்கள் காயமடைந்துள்ளனர் .
இரண்டு லட்சம் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளது , இஸ்ரேலிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .
நீயும் அடித்தால் நானும் அடிப்பேன் ,ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு பதில் பழிக்கு பழி அடி இது போலும் .
ரபா எல்லை தாக்குதல் ஆரம்பம்
எகிப்து எல்லையான ரபா எல்லை வழியான தாக்குதல்கள் ஆரம்பிக்க பட்டதான தோற்றப்பாடு காணப்படுகிறது . அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
அவ்வாறான தாக்குதல் நடத்திய இரண்டு மணித்தியாலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் வீடுகள் ,மற்றும் அதே இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அயோண்டோம் ஏவுகணைகள் தூங்கி கொண்டிருக்க ,போராளிகள் விமானம் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைகளின் கண்ணை கட்டிவைத்து ,போர் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளனர் .
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம். ஹிஸ்புல்லா தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் இராணுவத்தின் முகாம்களை தாக்கியுள்ளனர் .
லெபனான் வடக்கு எல்லையில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தினர் மிக முக்கிய கண்காணிப்பு, இராணுவ தளத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இஸ்ரேல்படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .
ஐந்தில் இஸ்ரேல் இராணுவம் முகம் பகுதியில் இருந்து புகை மண்டலமாக புகை கிளம்பும் காட்சிகள் காணப்படுகின்றன .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை ஏற்றுள்ள இஸ்ரேல் இராணுவம், தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
தெற்கு லெபனான் ஹிப்புள்ள ஆளுகை பகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதல்களை ஹிஸ்புல்லா போராளிகள் வேகமாக நடத்தி வருகின்றனர் .
அசைத்து பார்க்க முடியாது என கம்பீரமாக அமைக்க பட்ட இஸ்ரேல் வடக்கு உளவுத்துறை முகாம் ,மற்றும் கண்காணிப்பு இராணுவ தளங்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன .
ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்,சிரியா இராணுவத்தின் ஆயுதகளஞ்சியம் எரிகின்றது இராணுவம் காயம் என சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
சிரியா வன்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆளற்ற உளவு விமானம் ,சிரியா இராணுவத்தின் ஆயுத சேமிப்பு களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
இதந்த வான்வழி தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் வெடித்து பற்றி எரிகிறது .
இந்த சூட்டு தாக்குதலில் சிரியா அரச இராணுவத்தினர் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ,அதே சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .
மேலும் தமது ஆயுத தள பாடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் விமானம் தாக்குதல்
கோலன் குன்று வழியாக நுழைந்த இஸ்ரேல் விமானம் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .
இதே வழிகளை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஆதலால் கோலன் குன்றுகளை கட்டு படுத்துவதன் ஊடாகவே, இஸ்ரேல் விமான தாக்குதலில் இருந்து சிரியா தப்பித்து கொள்ள முடியும் என்பதே கள நிலவரமாக உள்ளது .
ஆயுத களஞ்சியத்தில் ஈரான் வழங்கிய ஆயுதங்கள் சேமித்து வைக்க பட்டு இருந்தன .அவ்விதமான ஆயுதங்கள் தற்போது தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இதற்கான பதிலடி தாக்குதல்களை இஸ்ரேலுக்கு ,சிரியா போர் படைகளினால் வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரானால் நீண்ட தூர ஏவுகணைகள் இங்கு காளஞ்சியப்படுத்து வைக்க பட்டிருந்தன .அவையும் வெடித்து சிதறியுள்ளது .
இங்கு ஆயுதங்கள் உள்ளது என காட்டி கொடுக்க பட்டதாலேயே பேரழிவு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஹிஸ்புல்லா பேரை சொல்லவே அலறும் இஸ்ரேல் இவ்விதமான கோழைத்தனமான தாக்குதலை சிரியாவுக்கு உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம் ,சீவல் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய காவல்துறை செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மன்னார் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியை சேர்ந்தஹ் சீவல் தொழிலாளி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சீவல் தொழிலாளியான இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பதான குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில் ,இவர் மீது பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழு பொதுமகனுக்கும் காவல்துறைக்கும் இடையில் ,ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பிறிதொரு நபர் வாழங்கிய தகவலை பெற்று கொண்ட காவல்துறையினர் ,பொதுமகன் மீது பொய்யான குற்ற சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக ,தாக்குதலுக்கு உள்ளான பொதுமகன் தெரிவித்துள்ளார் .
ஆனால் காவல்துறையினரோ பொதுமகனை தாம் விசாரித்து கொண்டிருந்த பொழுது ,அவர் எம் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்த பொழுது ,அவர்கள் காவல்துறையினரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர் .
மக்களை தாக்கும் காவல்துறை
இலங்கையில் சமீப காலமாக மக்கள் மீது இலங்கை காவல்துறைனர் தாக்குதல் நாடத்துவதும் ,அதனால் மக்கள் இவ்வாறு காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்க படும் செயல் பாடுகள், அதிகரித்து காணப்படுகின்றன .
இவ்வாறான நிலையில் மன்னர் அடம்பன் பகுதியில் சீவல் தொழிலாளி மீது நடத்த பட்ட தாக்குதல் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள இனவாத ஆயுத படைகள் ,அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டு ,மக்களை அடக்கி ஒடுக்கி வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு வழங்குவதற்கு நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02) தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர் அப்பகுதி மக்கள்போராட்டம்
இந்த நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அதிகளவிலான காவல்துறையினரின் பிரசன்னம் இருந்தததாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார் .
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு
இதனால் துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் நாளில் உறவுகளால் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் கடந்த வருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது துரைராசா ரவிகரன் ,மக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மக்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்
அளம்பில் பகுதியில் குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் ஒரு புறத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினையும் (தனியார்
காணியினையும்) மற்றைய புறத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினையும் சிறிலங்கா இராணுவத்தின், சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்காக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கையகப்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினை நிரந்தரமாக கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லக் காணியில் இராணுவத்தினர் உணவகம் ஒன்றை மாத்திரமே தற்போது வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணியினை உயிரிழந்த தமது உறவுகளினை நிம்மதியாக நினைவுகூர தருமாறு மக்கள் பலதடவை கோரியும் இராணுவம் இவ்வாறு தொடர்ச்சியாக அபகரிக்க முயன்றுவரும் நிலையில் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று இராணுவத்துக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக முல்லைத்தீவு காவல்துறையினர்
குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு தொடர்பாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துளளார் .


































































