கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகை
கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகை
தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.
அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
கணவருடன் ரிச்சா கங்கோபாத்யாய்
நடிகை ரிச்சா, கடந்த 2019-ம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன்
அமெரிக்காவில் வசித்து வரும் ரிச்சா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் குழந்தை பிறக்க
உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்
19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்
இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 59வது ராக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த ஏற்பாடு
செய்யப்பட்டது. கல்விசார் மற்றும் வர்த்தக ரீதியிலான 19 செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் இணைக்கப்பட்டு, ராக்கெட்டை ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு காலை 10:24 மணிக்கு ராக்கெட் விண்ணில் சிறிப்பாய்ந்தது. ராக்கெட் சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும், செயற்கைக்கோள்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, அவற்றின் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
ஏவுதளத்தில் ராக்கெட்
இது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிகரீதியாக செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக் கோள்களில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா, பிரேசில் நாட்டுக்கு சொந்தமானது. இது 637 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். புவி ஆய்வு, அமேசான் காடுகள் கண்காணிப்பு இதன் முக்கிய பணி ஆகும்.
இதுதவிர, இஸ்ரோவின் சிந்துநேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் தவான் சாட், உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 5 செயற்கைக் கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை ஊடகங்கள், பொதுமக்கள் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கப்படலை. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
இன்று Katupotha வீதியில் காவல்துறை ஜீப் வான் ஒன்று ஆட்டோ
ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் பலியாகியுள்ளனர்
இறந்தவருடைய மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த ஜீப் வண்டியை செலுத்தி சென்ற கான்ஸ்டபிள் ரக அதிகாரி
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
சந்தேக நபர் ஒருவரை துரத்தி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்
சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்
கண்டுபொட பகுதியில், மாந்திரிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர், உயிரிந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் உடலில், அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் அதனால் அதை வெளியேற்றுவதற்கு,
பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அப்பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவர், சிறுமியை பூசைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு ஒருவகை எண்ணை பூசி, தோஷம் நீக்குவதாக தெரிவித்து, தடி ஒன்றால் அவரை மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறிய இந்தப் பெண் தாக்கியுள்ளார். இதனால்
பாதிக்கப்பட்ட சிறுமி, மயக்கமடைந்தமையால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பியகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாந்திரிகம் செய்துவரும் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் போர் விமானங்கள் திடீர் முற்றுகை
கொழும்பில் போர் விமானங்கள் திடீர் முற்றுகை
இலங்கை தலைநகர் கொழும்பு வான்பரப்பில் திடீரென மிகையொலி கிபீர் விமானங்கள் வட்டமடித்துள்ளன
இந்த திடீர் பறத்தல் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ,இது மக்களுக்கு
பெரும் பீதியை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளதாக அதனை
கண்ணுற்ற கொழும்பு வாசிகள் முக நூலில் பதிவுகளை இட்டு வருகின்றன
சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!
சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் காணப்படும் சர்வதேச பிரதிநிதிகள், தமது ஓய்வூதிய காலத்தில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் சட்டமாஅதிபர் ரம்சி கிளாக், போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்ரீபன் ராப், ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நாவின் முன்னாள் வல்லுனர் ஜஸ்மின் ஆகியோரை இலக்குவைத்து தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், வல்லுனர்கள் என பலரது கூட்டுஅறிக்கைக்கு பின்னராக இவ்வாறான கோபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இவர்களது உறவுகளுக்கான ஆதாரங்களை ஊடகப்பதிவுகளை குறிப்பிட்டு, சிறிலங்கா மீதான இவர்களது குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், இவர்களின் நிலைப்பாடு ஒரு பக்கசார்பானது எனவும் இந்த ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
இலங்கை பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மீது மர்ம நபர்கள் குழு ஒன்று இடீர் தாக்குதலை நடத்தியது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை போலீசார் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ
யாழில் 52 கைதிகளுக்கு கொரனோ
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறை சாலை ஒன்றில் கைதிகளாக உள்ள
ஐம்பத்தி இரண்டு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு
சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த
‘]வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று
வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய
கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிசாசு
அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.
உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா
உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா.
இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்
டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்து வரும் 3:33 என்ற திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ரேஷ்மா
இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்த ரேஷ்மா அதில் பெண்களின் உள்ளாடைகள் குறித்து விரைவில் ஒரு
வீடியோவை வெளியிட இருக்கிறாராம். பெண்களுக்கு உள்ளாடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாகவும்
உள்ளாடை குறித்த பல சந்தேகங்களை அவர் தீர்க்க போவதாகவும் அதில் அறிவித்துள்ளார்.
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்-இலங்கை தமிழ் பெண் புகார்
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்-இலங்கை தமிழ் பெண் புகார்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம்
பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
ஆர்யா
அந்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார்.
இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம்
செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் ஆயுதங்களுடன் 18 பேர் கைது –
அவுஸ்ரேலியாவில் ஆயுதங்களுடன் 18 பேர் கைது –
அவுஸ்ரேலியாவில் போலீசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்
பொழுது சட்டவிரோதமாக ஆயுத பாவனையில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து அதி நாவீன ரக ஆயுதங்கள் ,மற்றும் போதைவஸ்துஎன்பன மீட்க பட்டுள்ளன
அவுஸ்ரேலியாவின் விக்டோரியா பகுதியில் இந்த தேடுதல் முற்றுகை
இடம்பெற்றுள்ளது ,கைதானவர்கள் தொடர்ந்து சிறப்பு புலன் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
மாணவிகள் கடத்தல்
நையீரியா நாட்டில் நேற்று பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த ஆயுதம்
தாங்கிய தீவிரவாதிகள் அங்கு கலவி பயின்று வந்த சுமார் 317 மாணவிகளை காடத்தி சென்றுள்ளனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகள் இந்த கடத்தல் காரர்களினால் கடத்தி செல்ல பட்டுள்ளனர் ,கடத்த பட்டவர்களில்
பத்து ,மாற்றும் பதின்மூன்று வயதுடைய சிறுமிகள் பலடசின் பேர் உள்ளனர்
இராணுவ நடவடிக்கை
மேற்படி மாணவிகளை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மிக பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேகொண்டுள்ளனர்
கற்பழிப்பு
,பொக்கோ காராம் அமைப்பு இவ்வாறு இருநூறு பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர்
விடுவிக்க பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்
ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது
தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,
இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்
வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி
வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்
லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை
லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை
கடந்த தினம் இரவு ஒன்பது மணியளவில் லண்டன் Paddington Green பகுதியில் பத்தொன்பது வயதுடைய வாலிபர் ஒருவர் ,
மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தியும் ,வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
தகவல் அறிந்து விரைந்து வந்த அம்புலன்ஸ் பாதிக்க பட்ட
வாலிபருக்கு சிகிச்சை வழங்கிய பொழுதும் ,அது பயனின்றி அவர் பத்து மணியளவில் இறந்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பொழுது நூறு பேர் கைது
செய்யப் பட்டுள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ,மற்றும் 82 கைபேசிகள் ,ஒருமில்லியன் பவுண்டுகள் பெறுமதியான
போதைவஸ்து ,53 ஆயிரம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டுள்ளது
கைதானவர்களில் 13 பெண்களும் உள்ளடங்குவார்கள் ,இதில் 12
பேர் ,பதினெட்டு வயதுக்கும் உட் பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொரனோ லொக்கடவுன் காலத்தில் போதைவஸ்து குழுவை
இலக்கு வைத்து போலீசார் நடத்திய தேடுதலில் பலநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமாரா 2,246 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 80,625 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே நாளில் பிரிட்டனில்
345 பேர் மரணித்தும் 8,523 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்
பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது
ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .
இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பத்தாயிரம் மீனவர்களுடன் இந்தியா செல்வேன் – டக்கிளஸ் கூவல்
இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட, பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவுக்குப் படகில் சென்று, அந்த
பிரச்சனையை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுமெனவும், இந்திய மீனவர்களின் பேச்சு
வார்த்தை வருவது போவதாக உள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக
காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் என்றார்.
இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று
சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இருந்தாலும் அது
நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முயற்சிப்பேன் எனவும் தெரிவித்தார்.







