Posted in உளவு செய்திகள்

ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட உள் நாட்டு போர் ,தமிழீழ விடுதலை புலிகளின்

அழிவின் பின்னர் முற்றாக நீக்க பட்டது ,அதன் பின்னர் இலங்கை முழுவதும் சிங்கள பவுத்த பேரினவாத ஆக்கிரப்பின் கீழ் சூறையாட பட்டுள்ளது

பலிகளை அழித்து வெற்றி கண்டோம் என இலங்கை ஆளும் கோட்டா ,மகிந்த ஆட்சியில் ஆரவாரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வாறான நிலையில் புலிகளை அழித்திட முன் நின்று உதவியது சோனியா காங்கிரஸ் ஆட்சி ,அதன் பரிபூரண உதவி வழங்கல் என்பது அதே இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

இலங்கைக்குள் சீனா முழுமையாக நுளைந்து வேகமாக தனது கட்டுமானங்களை அது புரிந்து வருகிறது ,இந்தியா ,அமெரிக்காவில் தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என்பதை கருத்தில்

கொள்ளும் இலங்கை தமது தேசிய பாதுகாப்பிற்கு என புதுவகையான ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சித்து வருகிறது

அதற்கு அமைவாக இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் ஏவிய ரொக்கட் தாக்குதலை அடுத்து ,அவர்களது அந்த ரொக்கட் தயாரிப்பு தொழில் நுட்பங்களை பயன் படுத்தி ஏவுகணை தயரிப்பில் ஈடுபட கோட்டபாய தீவிர கவனம் செலுத்தி வருகிறார்

இதற்கு அமைவாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கோட்டா காண்பித்து வருகிறார் ,


ஒரு நாட்டின் ஆதரவை பெற துடிக்கும் கமாஸ் இலங்கைக்கு தாம் பயன் படுத்தும் ஏவுகணை

தயாரிப்பு விடயங்களை பகிர்ந்து ,தென் ஆசியாவில் இலங்கையும் ரொக்கட் பலம் கொண்ட நாடக மாற்றம் பெற உதவுமா என்பதே இன்றைய கேள்வியா உள்ளது

இலங்கை மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை இஸ்ரேல் மொசாட் மோப்பம் பிடித்து கொள்ளாதா என்பது வேறு விடயம்

ஆக இந்தியாவுடன் போட்டிக்கு தயராக ,சீனா இலங்கையை பின்புலத்தில் தூண்டி விடுகிறது ,மேலும் செய்மதிகளை விண்ணுக்கும் அனுப்பும் முயற்சியில் சீனாவுடன் இணைந்து இலங்கையில் செயல் படவுள்ளது

இலங்கை ஏவுகணை தொழில் நுட்பத்துடன் கூடிய பலம் பொருந்திய நாடாக தன்னை காட்டி கொள்ள

கோட்டா எடுக்கும் இந்த விடயங்கள் இலங்கையை பேராபத்தில் சிக்க வைக்குமா ..? அல்லது அதில் வெற்றி கொண்டு நிமிருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

  • வன்னி மைந்தன் –
Posted in Uncategorized

மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த

குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

    முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

    பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்

    பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

    இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி

    உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

    இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

    அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்

    பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி

      65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி

      நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

      ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

      இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

      மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும்

      செலுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25இ000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும்.

      நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50இ000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

      10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன.

      கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை எதிர்வரும் புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

        Posted in Uncategorized

        2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

        இலங்கை

        2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

        கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

        நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

        குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்

        பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

        இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

        இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது

        பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது

        கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது

        செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

        உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது

          வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது

          வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று (08) அதிகாலை விபத்திற்கு உள்ளாகியது.

          குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

          இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்கு உள்ளாகியது.

          விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

          விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..

            Posted in உலக செய்திகள்

            கூகிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் 189 மில்லியன் யூரோ தண்டம்

            கூகிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் 189 மில்லியன் யூரோ தண்டம்

            பிரான்ஸ் நாட்டின் French competition authority, அமைப்பின் விதிகளை மீறி கூகிள் நிறுவனம் ,வாங்கி

            ,விற்றல் விளம்பரங்களை வெளியிட்ட காரணத்தினால் 189 மில்லியன் அபராதம் விதிக்க பட்டுள்ளது

            நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் முடிவில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது


            உலக இணைய யாம்பவனாக உள்ள கூகிள் இந்த அத்துமீறலை புரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

              பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

              பாகிஸ்தானில் இரு பயணிகள் ரயில் நேரெதிர் மோதி சிதறியதில் ,அதில் பயணித்த நாற்பது பேர்

              மரணமாகினர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

              இந்த விபத்து தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in உலக செய்திகள்

                கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்தது

                கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்தது

                பிரிட்டன் பட்டத்து இளவரசர் கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

                பிறந்த குழந்தைக்கு பாட்டி குயின் மற்றும் தாய் டயானா ஆகியோர் பெயரை இணைத்து வைத்துள்ளனர்


                அரண்மனை வாழ்வை துறந்து சென்றாலும் பாட்டியின் பெயரை மகளுக்கு வைத்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in சினிமா

                  வதந்தி… நம்பாதீங்க… அஞ்சலி.

                  வதந்தி… நம்பாதீங்க… அஞ்சலி.

                  கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது.

                  எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

                  நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.

                  தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி

                  வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

                  அஞ்சலி

                  “தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை.

                  வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

                    Posted in சினிமா

                    பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

                    பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

                    இந்தி டி.வி. நடிகர் பியர்ல் புரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார்.

                    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

                    ஆனால் சில நடிகைகள் பியர்ல் புரி குற்றமற்றவர் என்று சொல்லி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்தும் பியர்ல் புரிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

                    யாஷிகா
                    யாஷிகா ஆனந்த் – பியர்ல் புரி

                    சமூக வலைத்தளத்தில் பியர்ல் புரியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘பியர்ல் புரி மிகவும் அமைதியாக பேசக்கூடியவர்.

                    எனக்கு தெரிந்த அன்பானவர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுத்திருப்போம்.

                    நான் பியர்ல் புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறியுள்ளார்

                      Posted in சினிமா

                      திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி

                      திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி

                      தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

                      திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்
                      ஸ்ருதி ஹாசன், Shruti Haasan


                      கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி

                      தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார்.

                      ஸ்ருதி ஹாசன்

                      இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

                      அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஸ்ருதிஹாசன், ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

                        Posted in Uncategorized

                        இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                        இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                        இலங்கை அரச இராணுவத்தினர் பயன் படுத்தி வரும் புலிகள் பயன்படுத்திய இலகு ரக விமானம் போன்ற ஒன்று அவசரமாக தரை இறக்க பட்டுள்ளது

                        இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விமானம் திருகோணமலை ,நிலாவெளி

                        விமான படைத்தளத்தில் தரை இறக்க பட்டுள்ளது ,எனினும் விமானிகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துள்ளனர்

                          Posted in Uncategorized

                          யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                          யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                          யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உள்ள சுடலைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள்

                          அங்கு புதைக்க பட்ட கல்லறைகளை உடைத்து ,அதற்குள் புதைக்க பட்ட சடலங்களில் உள்ள நகைகளை திருட முயன்று வந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          இரவு வேளைகளில் சுடலைக்குள் புகும் இவர்கள் அங்கு பிணங்களுக்கு அணிவிக்க பட்ட தங்க

                          நகைகளை திருட முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு

                          வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு

                          பைஷல் இஸ்மாயில் –

                          திருகோணமலை – கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு பிரிவாக இயங்கி வருகின்றது.

                          வைத்தியசாலையில் வழமையாக இடம்பெற்று வந்த வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் கிசிச்சைகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

                          குறித்த வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வேறு பிரிவாக பிரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் யாவும் வேறாக இயங்கி வருகின்றது. கடந்த

                          காலங்களில் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வழமையான வைத்திய சேவைகளுக்கும், கொவிட் 19 தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லாதவாறே இயங்கி வருகின்றன.

                          குறிப்பாக, வழமையான வைத்திய சேவைகள் வேறாகவும், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு அவைகள் வெவ்வேறு தனித்தனி பிரிவுகளாக இயங்கி

                          வருகின்றது. அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், சிகிச்சை பெற இருப்பவர்கள் தங்களின் சிகிச்சைகளை அச்சம் கொள்ளாமல் வழமை போன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

                          எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைமையை கருத்திற் கொண்டு கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும்

                          செய்யப்பட்டுள்ளது. அதற்காக 0773205168 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களின் கிளினிக் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

                          Posted in பங்கு சந்தை Forex Trade

                          இன்றைய தினத்துக்கான GBP USD பங்கு சந்தை நகர்வு

                          இன்றைய தினத்துக்கான GBP USD பங்கு சந்தை நகர்வு எப்படி அமையும் ..?
                          நமது கணிப்பில் இவ்வாறு அமையலாம் என்பதாகிறது

                          இதில் இழப்பு இன்றி வாங்கும் இடமாக BUY AREA இவை அமைகிறது .1,41045

                          அதே போல இந்த நிலையில் விற்று SELL AREA 1,42145 OR 1,42290 AND TAKE PROFIT AREA அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ளுங்கள் 1,41648 OR 1,41469

                          இங்கே காலை மற்றும் பிரிட்டன் நேரம் மதியம் 12 மணிக்கு பின்னரும் சிலவேளைகளில்
                          குறிப்புக்கள் இணைக்க படலாம்

                          The market wil move, Mostly TODAY 8 to 13 pips.

                          அவ்வேளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

                          இலக்கை சொல்வது நாம் – வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்

                          நன்றி – வன்னி

                          Hi, Dear friends

                          The market wil move, Mostly TODAY 8 to 13 pips.

                          When you market goes higher sell 😀 . and when it goes lower buy!
                          so you would need to go to the sell area 1,42145 and tp 1.41650

                          Then you need to go buy 1.41045 then take to the profit area 1.41645.

                          Today market will move sideways! watch every single second and dont blink 09 to 10 AM
                          Have a great day! Stay safe.
                          from vanni

                          இணைப்பு இரண்டு

                          sell area 1.41930 and 1,42165 – tp area 1,41665 or 1,41539

                            Posted in Uncategorized

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற

                            சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்

                            அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்

                            மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in Uncategorized

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              இலங்கையில் நடமாடும் தனிமை படுத்தல் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தி சென்றால்

                              அவர்கள் தனிமை படுத்தி வைக்க படுவார்கள் என போலீசார் எச்சரிக்கி விடுத்துள்ளனர்

                              மக்கள் முகக்கவசம் இன்றியும் ,மாகாண எல்லைகளை தாண்டியும் பயணித்து வருகின்றனர்

                              இதனை அடுத்தே மேற்படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

                                இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

                                கர்ப்பிணி (Risk )தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை

                                முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

                                நாடு முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம்

                                எதிர்வரும் 9ஆம் திகதி காலை பிலியந்தல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும்