Posted in உலக செய்திகள்

1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி

1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தினசரி வருவாய் ரூ. 1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி
கவுதம் அதானி


ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ள நிலையில், அதானி குழுமத்தின் கவுதம் அம்பானி 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்த

உயர்வுக்கு காரணம் அவரது சொத்து மதிப்பு 1,40,200 கோடி ரூபாயில் இருந்து 5,05,900 கோடி ரூபாயாக உயர்ந்ததுதான். இது ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாகும். கவுதம் அதானியின்

தினசரி வருவாய் 1002 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் சீனாவின் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் ஜோங் ஷன்ஷானை முந்தியுள்ளார்.

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாகும். கவுதம் அதானியின் சகோதரர் வினோத் ஷாந்திலால் அதானி 1,31,600 கோடி ரூபாய் உடன் 8-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானி

ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் 2,36,600 கோடி ரூபாய் உடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஹெச்.பி. இந்துஜா 2,20,000 கோடி ரூபாய் உடன் 4-வது இடத்தில் உள்ளார். சைரஸ் எஸ். பூனவல்லா

,74,400 கோடியுடன் 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தகவலை ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

    பிரிட்டன் கென்ட்டில் 15 வயது பெண் கற்பழிப்பு பாடசாலைக்கு சீல்

    பிரிட்டன் கென்ட்டில் 15 வயது பெண் கற்பழிப்பு பாடசாலைக்கு சீல்

    பிரிட்டன் கென்ட் பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமி ஒருவர் field near Edward Road, Queenborough.

    பகுதியில் வைத்து கற்பழிக்க பட்டுள்ளாராம் , மேற்படி சம்பவத்தை அடுத்து இவர் அருகில் உள்ள சிறார் பாடசாலை ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது

    இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள்

      வடகொரியா ஏவுகணை சோதனை – எச்சரிக்கும் அமெரிக்கா

      வடகொரியா ஏவுகணை சோதனை – எச்சரிக்கும் அமெரிக்கா

      இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும்.

      புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்
      வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை நெருப்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த காட்சி.
      பியாங்யாங் :

      நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது ராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது.

      அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.

      இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டுமொரு ஏவுகணையை சோதித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

      இதுகுறித்து கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆயுத அமைப்பின் வளர்ச்சி எல்லா வகையிலும் தற்காப்புக்கான தேசத்தின் திறன்களை அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

      இதனிடையே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத ஏவுகணை சோதனையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

      Posted in Uncategorized

      பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

      பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

      பிரிட்டனில் இதுவரை அகதிகளாக வருகை தந்தவர்கள் வேலை செய்திட அனுமதி வழங்கப்படவில்லை ,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக

      கைதிகளை வேலை செய்திடவும் ,அகதிகள் வேலை செய்திதிடும் புதிய சட்டம் ஒன்றி அமூல் படுத்திட அரசு ஆராய்ந்து வருகிறது

      இதற்கு அதிக அமைச்சர்கள் ,எம்பிக்கள் ஆதரவு வலுத்து வருகிறது

      புலம்பெயர் ஐரோபாய நாட்டு சாரதிகள் ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள வெளிநாட்டு அமைச்சு ,,மேற்படி புதிய சட்டத்தை அமூல் படுத்தும் ஆலோசனையை கையிலெடுத்துள்ளது பிரிட்டன் அகதிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது

      இந்த சட்டம் அமூல் படுத்த பட்டால் அகதிகள் நன்மை பெறுவதுடன் தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்க படும் என்பதாக உள்ளது

        Posted in Uncategorized

        ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்

        ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்

        தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு

        இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

        அதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்கு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து அல்லது புகையிரத சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

        மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in Uncategorized

        வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

        வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

        நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

        விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

        குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

        இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

        நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

        Posted in Uncategorized

        பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

        பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

        துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

        இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

        இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

        சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.

        Posted in Uncategorized

        இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்

        இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்

        1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்
        2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்
        3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்
        4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை
        5. சாப்பாட்டு விடுதிக்கு அனுமதி இல்லை

        6.மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேர் பங்கேற்கலாம்

        7..உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி ஐவர் பங்கேற்கலாம்.

        Posted in Uncategorized

        கால நிலை மக்களுக்கு விசேட அறிவித்தல்

        கால நிலை மக்களுக்கு விசேட அறிவித்தல்

        இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

        2021 செப்டம்பர்30ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

        2021 செப்டம்பர்29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது

        இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்துஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

        நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

        நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

        இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

        Posted in இலங்கை செய்திகள்

        ஆயுதங்களுடன் 5 பேர் கைது

        ஆயுதங்களுடன் 5 பேர் கைது

        கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

        குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

        இவர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

        21, 22 மற்றும் 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        Posted in சினிமா

        படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார்

        படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார்

        நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தில், அவருக்கு ஜோடியாக வனிதா நடித்து வருகிறார்.

        படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார் – மருத்துவமனையில் அனுமதி
        பவர் ஸ்டார் சீனிவாசன்


        தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து

        நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு

        படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

        இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை

        படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

        ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

          Posted in சினிமா

          பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம்

          பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம்

          கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது.

          ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம்?

          கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

          இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

          அதன்படி நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி பிரியங்கா, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, ஷகீலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி பிரபலம் கனி ஆகியோரது பெயர்கள் ஏற்கனவே

          வெளிவந்த நிலையில், தற்போது மாஸ்டர் பட பிரபலம் சிபி சந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

          இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது.

            Posted in Uncategorized

            பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

            பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

            ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 20-ந்தேதி வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

            பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா: அக். 20-ந்தேதி வரை பள்ளி மூடல்

            கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

            இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

            செய்யப்பட்டுள்ளது. 60 மாணவர்களில் இரண்டு பேருக்கு அறிகுறி இருந்தது. இதனால்

            மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

              Posted in Uncategorized

              புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்

              புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட்

              டெல்லியில் புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட், அதிகாரிகளால் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

              புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட்: அதன்பின் நடந்தது என்ன?

              தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரெஸ்டாரன்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணை

              ரெஸ்டாரன்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என அந்த பெண் கேட்க, புடவை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

              இதனால் அந்த பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டவை என ரெஸ்டாரன்ட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

              இந்தநிலையில் ரெஸ்டாரன்டை நடத்துவதற்கு சரியான உரிமம் பெறவில்லை. அதனால் ரெஸ்டாரன்டை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உரிமையாளரும் ரெஸ்டாரன்டை மூடுவதற்கு சம்மதம் தெரிவித்தள்ளார்.

              அந்த பகுதி சுகாதார இன்ஸ்பெக்டர் சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரன்ட் இயங்கி வந்ததை கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

              பின்னர், பொது சுகாதார இன்ஸ்பெக்டர் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அதே நிலையில் இயங்கி வந்ததால் நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

                Posted in Uncategorized

                வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                சிரியா அலப்போ Jarabulus பகுதியில் திடீரென குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் பதின் ஐந்து பேர் படு காயமடைந்துள்ளனர்

                தொடரும் உள்நாட்டு ,சர்வதேச படை மோதல்களில் சிக்கி இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

                  உலக

                  பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

                  பிரிட்டனில் எரிபொருள் டாங்கிகளை செலுத்தி செல்ல சாரதிகள் போதாமை உள்ளதினால்

                  தற்போது ,இராணுவ சாரதிகள் எரிபொருட்களை விநியோகிக்க களத்தில் இறக்க பட்டுள்ளனர்

                  எரிபொருள் நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று எரிபொருளையே நிரப்பி செல்கின்றனர்
                  இதனை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

                    Posted in சினிமா

                    சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி

                    சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி

                    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

                    சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
                    விஜய் சேதுபதி, சல்மான் கான்


                    இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில்

                    அடுத்ததாக உருவாகும் படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

                    பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியிருந்தாராம். கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில்

                    கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.

                      Posted in சினிமா

                      மாட்டு வண்டி ஓட்டிய ரம்யா

                      மாட்டு வண்டி ஓட்டிய ரம்யா

                      சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் நடிகை ரம்யா நம்பீசன், ஒரு படத்திற்காக மாட்டு வண்டி ஓட்டி இருக்கிறார்.

                      மாட்டு வண்டி ஓட்டிய ரம்யா நம்பீசன்
                      ரம்யா நம்பீசன்
                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                      கதாநாயகிகளில் நடிப்பு மட்டும் அல்லாமல் தனித்திறமையுள்ளவராக இருப்பவர் ரம்யா நம்பீசன். நடிப்போடு பாட்டுப்பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. பல படங்களில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

                      ஒரு படத்தில் புல்லட் ஓட்ட வேண்டும் என்றவுடன் ஒரே நாளில் பயிற்சி எடுத்து, தைரியமாக ஓட்டிக்காட்டினார். இப்போது வெற்றி துரைசாமி இயக்கும் என்றாவது ஒரு நாள் படத்தில் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறார்.

                      இது குறித்து ரம்யா நம்பீசன் கூறும்போது, கிராமத்தில் குடும்பக் கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டிப் பிழைக்கும் பெண்ணாக வருகிறேன். முதல் நாள் மாடுகளை கையாளுவதில் எனக்கு சிக்கல் இருந்தது. அப்புறம் அந்த மாடுகளே பழகிவிட்டன என்றார்.

                      ரம்யா நம்பீசன்

                      இப்படம் விவசாயம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறது.

                        Posted in சினிமா

                        தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்த விஜய்

                        தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்த விஜய்

                        விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

                        தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு

                        விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

                        இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அந்த பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்து இருந்தார்கள்.

                        ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். அதற்காகவே இந்த விளக்கம்.

                        நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளேயே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள். அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

                        விஜய்

                        ஏனெனில் எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யும் அவருடைய தாயும் எப்பொழுதும் போல்

                        பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, மனக்கசப்பும் இல்லை.

                        அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்ததாக பொய்யான ஒரு தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன்.

                        இதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்’ என்றார்.

                          Posted in சினிமா

                          எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும்- தயாரிப்பாளர்

                          எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும்- தயாரிப்பாளர்

                          பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சிங்கம், சிறுத்தை படங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

                          எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் – பிரபல தயாரிப்பாளர்
                          சூர்யா – கார்த்தி


                          பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தனஞ்ஜெயன், சி.வி.குமார், நலன் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

                          ஞானவேல் ராஜா பேசும் போது, அட்டகத்தி படம் பத்திரிகையாளர் சந்திப்பு போல் இருக்கிறது. படக்குழுவினரிடம் பழகும் போது கல்லூரி சென்ற அனுபவம் போல் இருந்தது.

                          குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள். அட்டகத்தி படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருக்கும் அமையும்.

                          எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் தான். அதாவது சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை படங்கள் தான் எனக்கு நல்ல லாபத்தையும் பெயரையும் கொடுத்தது.

                          அதுபோல் இப்போது பன்றி படம் எனக்கும் படக்குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன் என்றார்.