வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்
முல்லையில் மீனவர்கள் வலைகள் நாசம் – தமிழக மீனவர்கள் அடாவடியாம்
முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், நேற்று (11), கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட வேளை, மாவட்ட கடற்றொழிலாளர்களின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்,
அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள், உள்ளூர் மீனவர்களின் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்ததுடன், கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்தின.
இது குறித்து மாவட்ட கடற்றொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய இராணுவ தளபதி இலங்கையில்
இந்திய இராணுவ தளபதி இலங்கையில்
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில், காலை 11.05 மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருந்தனர்.
இந்தக் குழுவை வரவேற்க, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏராளமானோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை
நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 90 நாட்களாக தொடர்ந்துவரும் தொழிற்சங்க போராட்டம் குறித்து இன்று (12)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியராளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று எட்டப்படும் சுமுகமான தீர்வை அடுத்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய பூசகர் துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.
கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
தொட்டதை விட்டான் கடல் எழ
வன புலி என்றே இவன் எழ
வாடினர் பகைவர் விழி அழ
நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
நெய்திட அன்றே வந்தான்
கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
கொடி நாட்டே போர் செய்தான்
கடலென தரையென விரிந்தவர்
கடுகதி வானிடை ஏறினர்
முப்படை தாங்கியே விண்ணிடை
முப் போரினை விரித்தனர்
அப்படை தளபதி அரியணை
அத்தனை வந்ததுமே குந்தினர்
எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
எங்களின் மறவரே தரித்தனர்
இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
இப்படி விழும் படி சிரித்தனர்
இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
இப் புகழ் நிலை விடியலிடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி
50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான வண்டி
ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் பகுதில் கெப் ரக வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஓடையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (10) இரவு ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்து கெப் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதி மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசினால் சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் மற்றும் மாவின் விலையும் அதிகரித்துளளது
மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் ,மற்றும் இதர மாவினால் உருவாக்க படும் பொருட்களும் அதிகரிக்க படலாம் என மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடித்து சிதறும் எரிமலை
வெடித்து சிதறும் எரிமலை
எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் தொடர்ந்து வெடித்து சிதறும் எரிமலை- ஆறுபோல் வழிந்தோடும் லாவா குழம்பு
எரிமலை வெடிப்பு
ஸ்பெயினின் லா பல்மா தீவில் சீற்றத்துடன் காணப்பட்ட கும்ரே வீஜா எரிமலை, கடந்த மாதம் 19ம் தேதி வெடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது.
எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறுபோல் வழிந்தோடி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள 4 கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்துவிட்டன.
லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேனரி தீவுகளின் மற்ற விமான நிலையங்களும் திறக்கப்பட்டன.
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்- 16 பேர் பலி
விமான விபத்து
ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ரஷியாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
அப்துல் காதிர்கான் மரணம்
இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான்.
அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கினார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டார்.
85 வயதான அவருக்கு சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
விவாகரத்து விவகாரம் – நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
வனிதா, சமந்தா, நாக சைதன்யா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள்
நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’,
சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக
நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் – முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
சிவகார்த்திகேயன், நெல்சன்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை
பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50
சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது..
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு! photo
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன்
இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தினர்..











