Tag: பிரியங்கா மோகன்
ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன் இணையும் பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன்
நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.
இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் – முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
சிவகார்த்திகேயன், நெல்சன்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை
பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50
சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது..






