சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை

Spread the love

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை

முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன்


நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன்

ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. அதே சமயம் இப்படம் தியேட்டரில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர்

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *