Posted in சினிமா

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை

அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா
ராஷி கண்ணா


2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவ

ர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில்

பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர்.சியுடன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம்

முன்னணி நடிகையாக உயர்ந்தார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி

கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராஷி கண்ணா

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார்.

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்

    வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்

    பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்

    நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO

    அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை

    பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

    இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது

    அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண

    கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .


    எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்

      Posted in Uncategorized

      வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

      வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

      இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன


      மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்

      படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது

      சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

        இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது

        இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்

        முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது

        இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது

        பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
        தடை செய்ய படுகின்றன.

        அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது

          Posted in பங்கு சந்தை Forex Trade

          GBP usd has a free signal today

          இன்றைய30-11-2021 நாணய மாற்று சந்தை நகர்வு இதுவாக அமைய பெறலாம் GBP usd has a free signal today

          hi dear friend buy area is வாங்கும் இடம் 1,32896 and 1,32639 and மற்றும் விற்கும் இடம் sell area 1,33725 or 1,34238( retest area 1,33126)


          good luck dont missed trade market ending is mostly uptrend சந்தை முடியும் போது மேல் நோக்கிய நகர்வாக அமைய பெறும் ,

          அதனால் குறித்த பகுதிகளில் வாங்கி விற்க மறக்காதீர்கள் ,

          பதட்டம் இன்றி பயணியுங்கள் ,இலக்கு வரும் வரை காத்திருங்கள் ,

          இலக்கை சொல்வது நாம் வெற்றியை தீர்மானிப்பது நீங்கள், நன்றி thanks vanni

          மேலதிக தொடர்புகளுக்கு 00447536707793

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

            மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

            சோழ கடலில் ஆடிய வீரம்
            சோரம் போனதுவோ – பகை
            சோர்வை அகற்ற கயவர் கூடி
            சோடனை செய்ததுவோ

            வில்லும் வாழும் பொருதியே களத்தில்
            விண்ணில் எறியவர்
            பண்ணிசை பாடியே பாமர மக்களை
            படைக்கு அழைத்தவர்

            இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
            இந்நிலை ஆடாதே
            ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
            ஓர்மம் கொள்ளாதே

            காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
            கலவரம் பிறக்காதோ
            கயவர் இவரென பகைவர் அவரென
            களமது முளைக்காதோ

            எழுவதும் வீழ்வதும்
            எழுவாய் பயனிலை
            ஏற்றம் தரித்தல்
            செயல் படு பொருள் நிலை

            வழித்தடம் விழித்திடும் போதினில்
            வழியெங்கும் பகையுடல் சரியும்
            மொழியுடன் புரட்சி வெடித்திடும்
            மொழியா புகழுடன் விடிந்திடும்

            நஞ்சு கட்டியே களமது பொருதினார்
            நாளை வந்திடுவார்
            நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
            நல் வழி செய்திடுவார் …!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 30-11-2021

              Posted in இலங்கை செய்திகள்

              கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

              கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்

              யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று

              மீட்க பட்டுள்ளது

              இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

                தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்

                மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர்

                தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக

                மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

                அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

                குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை

                வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9

                மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்எண்ணெயை ஊற்றி தீயிட்டு

                தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

                தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

                  விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

                  இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று

                  பொலிஸாரினால் , சுற்றிவளைக்க பட்டது ,இதன் போது மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                    Posted in இலங்கை செய்திகள்

                    கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

                    கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

                    இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார

                    அமைச்சு தெரிவித்துள்ளது ,அரசு தெரிவிக்கும் இந்த மரணங்களை விட இறப்பு விகிதம்

                    இரட்டிப்பாக உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

                      கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்

                      யாழ்ப்பாணம், மாதகல்- குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன்

                      குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

                      மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின்

                      தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு

                      பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.

                      அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக

                      அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை ,

                      கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

                      அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன

                        Posted in சினிமா

                        அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி

                        அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி

                        4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு,

                        கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

                        தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி


                        ஸ்ரேயா கோசல்


                        தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களி

                        ல் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.

                        பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை

                        சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி

                        வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.

                        சித்ஸ்ரீராம்

                        ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா…, ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற

                        ‘‘உருகுதே மருகுதே…, ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகிய பாடல்கள், ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.

                        இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில்

                        உள்ள இசை குடும்பத்தை சேர்ந்தவர். ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘‘வெண்ணிலவே…’’

                        பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே…’’ என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல், சாதனா சர்கம் பாடி வெற்றி பெற்ற பாடல்கள்.

                          Posted in சினிமா

                          படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா

                          படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா

                          பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.

                          படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்


                          மாளவிகா மோகனன்
                          ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்

                          ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

                          இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக

                          உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன.

                          மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.

                          மாளவிகா

                          அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு

                          முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக

                          வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                            பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                            பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

                            அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில

                            கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின

                            இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

                              Posted in Uncategorized

                              சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                              சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                              சீனா உலக நாடுகளில் முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாதனை படைத்தது

                              வருகிறது ,அவ்விதம் உயர் மலை ஒன்றை குடைந்து அதன்வழியாக வீதி அமைக்க பட்டுள்ளது

                              ,இந்த வீதி உலகில் மிக ஆபத்தான மரண சாலை என இடம்பிடித்துள்ளது

                              கரணம் தப்பினால் மரணம் என்பது இது தான் பாருங்கள் மிரள வைக்கும் வீதி

                                Posted in Uncategorized

                                வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                                வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                                துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி

                                வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன

                                இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்

                                படுகாயமடைந்துள்ளனர்

                                காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்

                                தெரிவித்துள்ளன

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு

                                  ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு

                                  ஸ்கொட்லாந்தில் 17,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன


                                  சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிலவியுள்ளது ,கடும் குளிர் நிலவி வருவதால்

                                  மக்கள் பெரும்
                                  துயரில் உறைந்துள்ளனர்

                                  பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக்க பட்டுள்ளதாக மின்சார

                                  வாரியம் தெரிவித்துள்ளது

                                  இம்முறை சினோவானது ஐந்து சென்றி மீட்டர் வரை பொழியும் என எச்சரிக்கை விடுக்க

                                  பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in உளவு செய்திகள்

                                    ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                                    ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                                    ரஷியா நாடானது தற்போது ஒலியை விட ஐந்து மடங்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட

                                    புதிய கைபிரட் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது

                                    இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

                                    பிரிட்டனை இதன் மூலம் இலகுவாக தாக்கி அழிக்கலாம் என்பதாக கூற படுகிறது ,போர் ஒன்று

                                    ஆரம்பிக்க பட்டால் இந்த ஏவுகணையின் செயல்பாடு முதன்மையான ஒன்றாக அமைய

                                    பெறுவதுடன் இவ்வாறான ஏவுகணைகளை செய்மதி மூலம் கண்காணித்து சுட்டு வீழ்த்த முடியாது

                                    அதனால் செய்மதிகளையும் இதன் ஊடாக சுட்டு வீழ்த்தலாம் என்பதே இங்கே முதன்மையான

                                    ஒன்றாக அமைய பெற்றுள்ளதால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட எதிரி நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன

                                    Posted in இந்தியா செய்திகள்

                                    அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

                                    அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

                                    இந்தியா கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் பாடசாலையில் கல்வி கற்று வந்த 13 மாணவர்களுக்கு

                                    புதிய கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                    இவ்வாறு அடையளம் காணப்பட்டவர்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                    மக்களை தொடர்ந்து சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து கொள்ளும் படி வலியுறுத்த பட்டு வருகிறது

                                      Posted in சீமான் பேச்சு

                                      அமீர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் – சீறும் சீமான் video

                                      அமீர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் – சீறும் சீமான் video

                                      அமீருக்கு சீமான் கடும் எச்சரிக்கை – நட்புக்குள் வெடித்த போரா இல்லை அரசியல் போரா

                                      நெருங்கிய உறவுக்குள் நடந்த வெடித்த பெரும் போர்