பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
Posted in உலக செய்திகள்

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
பினாகா ஏவுகணை

இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தொழில்நுட்ப உதவியுடன் தனியார் நிறுவனத்தில் பினாகா ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பினாகா ஏவுகணைகள் 40 கி.மீ. முதல் பல்வேறு தூர அளவுகளில் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கின என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்

தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ஏவுகணைகளின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது.

பல்வேறு தூர அளவுகளுக்குச் செல்லும் வேறுபட்ட தாக்குதல் திறன் கொண்ட 24 பினாகா

ராக்கெட்டுகள் கடந்த 3 நாட்களில் பரிசோதிக்கப்பட்டன. அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    மாற்றி யோசி

    மாற்றி யோசி

    உன்னை போல் நானிருக்க
    ஒரு போதும் முடியாது
    என்னை போல் நீ இருக்க
    எண்ண நீ கூடாது

    மாற்றி சிந்திக்க
    மனதை கொஞ்சம் மாற்று
    மரணித்த பின்னாலும்
    மன்றில் உனை ஏற்று

    முடியாத ஒன்றை
    முன்னேற்ற பழகு
    உனக்கான விதி ஒன்றை
    உலகில் நீ எழுது

    தொட முடியா உச்சத்தை
    தொட்டிட முனைந்தால்
    தடை போட்ட வாயெல்லாம்
    தண்ணீராய் கரையும்

    ஒப்பிட்டு பார்க்கும்
    ஓரத்தில் நிற்காதே
    ஓட்ட முடியா உச்சத்தில்
    ஓடி ஏற மறக்காதே

    எவரையும் பின் தொடர
    என்றும் நீ எண்ணாதே
    உன்னை பின் தொடர
    உலகை வைக்க மறக்காதே

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 12-12-2021

    Posted in இலங்கை செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

    கைது செய்யப்பட்டவர்கள் கடலில் சடலங்களாக மிதப்பு

    வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக்

    கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா? இவ்வாறு சடலங்களாக கரையொதுங்குகின்றனர் என்றும்
    கேள்வியெழுப்பினார்.

    சரணடைந்தவர்கள், இப்போதுதான் கொலை செய்து கடலில் வீசுகிறார்களா? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.


    2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம்


    நேற்று (10) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
    அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    “யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணியில் கரையொதுங்கிய உடல் எங்கேயென யாருக்கும் தெரியாது. மருதங்கேணி பொலிஸார் அந்த உடலை சென்று பார்த்துள்ளனர். இப்போது அந்த

    உடலை காணவில்லை. கரையொதுங்கிய உடல் எவ்வாறு காணாமற்போகும்? அதனை யார் எங்கே கொண்டு சென்றனர் என்பது தெரியாதுள்ளது” என்றார்.

    சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களை வைத்திருந்து, கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா?

    அந்த உடல்கள்தான் கரையொதுங்கியுள்ளனவா? என காணாமல் போனவர்களின் உறவுகளினால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றார்.

    மேலும், பாகிஸ்தானுக்கு 3,500 கண்களை இலங்கையில் இருந்து தானம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்

    . அந்த கண்கள் யாருடையவை என்பதில் சந்தேகங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

      போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் ஒன்று சிறைபிடிப்பு

      இலங்கை தெற்கு கடல்பகுதியில் போதைவஸ்துடன் நடமாடிய வெளிநாட்டு கப்பல் ஒன்று

      இலங்கை கடல் படையினரால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது


      மேற்படி கப்பலில் பயணித்த ஆறு பேர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

        Posted in உலக செய்திகள்

        இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான்

        இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான்

        இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு ஒமைக்ரான் வைரசு தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் அனைவருக்குமே மிதமான அறிகுறிகளே இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

        டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
        டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த 93 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 83 பேர் ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து

        வந்தவர்கள் 13 பேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இதுவரை உலகம் முழுவதும் 59 நாடுகளில் கரோனா பரவியுள்ளது.

        உலகம் முழுவதும் மொத்தம் 2936 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதுதவிர 78,054 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

        இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இந்த வேளையில் நாட்டில்

        மக்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

        நாம் இப்போது மிகவும் ஆபத்தான ஏற்புடையது அல்லாத வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதற்குப் பின்னரும் முகக்கவசம் முக்கியம்.

        ஒமைக்ரானுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை ஏதுமில்லை. கரோனாவின் மற்ற உருமாறிய வைரஸ் பாதிப்புக்கான அதே சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. நாட்டில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட்

        என்பது 0.73% க்கும் கீழ் உள்ளது. கடந்த 14 நாட்களாக அன்றாட பாதிப்பு 10,000க்கும் கீழ் இருக்கிறது.

        கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே ஒட்டுமொத்த பாதிப்பில் 43% பதிவாகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படுகின்றன.
        என்று தெரிவித்தார்.

        நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் பேசுகையில், “பிரிட்டனிலும், பிரான்ஸிலும் ஒமைக்ரானால் அடுத்த அலை உருவாகியுள்ளது. இந்த புது

        உருமாறிய வைரஸ் ஆச்சர்யங்கள் நிறைந்ததாக, புதிய திருப்பங்களைத் தருவதாக உள்ளது.

        ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவிதில் ஒருபோதும் சுணக்கம் காட்டக் கூடாது” என்றும் கூறினார்

          Posted in உலக செய்திகள்

          ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

          ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

          வேலை நிறுத்தத்தையொட்டி சகாயிங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.

          மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
          ஸ்டிரைக் காரணமாக வெறிச்சோடிய சாலை

          மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

          நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

          மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அந்நாட்டு அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல்

          கொடுத்து வந்த ஆங் சான் சூகி மீது தேசவிரோதப் பேச்சு உள்பட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

          ஆங் சான் சூகி

          இந்நிலையில் மனித உரிமை தினமான இன்று ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் நாடு தழுவிய அளவில் அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த

          போராட்டத்திற்கு மியான்மர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அதன்படி அந்நாட்டின்

          அனைத்து நகரங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

          இந்த போராட்டம் தற்போதைய சூழலில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய யாங்கூன் மாணவர் சங்க செய்தித் தொடர்பாளர் மின்ஹான் ஹெட் , எனினும் மியான்மர்

          மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி, ராணுவ அதிகாரத்திற்கு எதிராக உளவியல் ரீதியான போரை நடத்தினர் என்றார். இது வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

          முன்னதாக உரிய காரணமின்றி மூடப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை என்றும்

          மியூஸ் நகரத்தை சேர்ந்த கடை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

          வேலை நிறுத்தத்தையொட்டி சகாயிங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து சென்றனர். வீடுகளில் இருந்தவர்களும் கறுப்பு உடை

          அணிந்து, சிறிய போஸ்டர்களைப் கையில் பிடித்தபடி செல்பி எடுத்துக்கொண்டனர். எங்கள் ஊர்

          எங்களுக்குச் சொந்தமானது என்றும், புரட்சி மூலம் மனித உரிமையை திரும்பப் பெறுங்கள் என்றும் அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது.

            Posted in உலக செய்திகள்

            பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்

            பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
            பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

            முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்… பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
            தலிபான்கள்
            இஸ்லாமாபாத்:

            பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்

            மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ராணுவ

            பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

            இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த அக்டோபர் 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டது.

            இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை

            இதன்படி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான் படையினரை விடுதலை செய்வது உள்பட 6

            அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றன. இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது.

            இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

            அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.

            முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.

            மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

            இதனை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள்

            என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

            மேலும், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

            Posted in உலக செய்திகள்

            அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து தீர்ப்பு

            அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து தீர்ப்பு

            அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

            அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

            அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’

            செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

            இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

            பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது.

            உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது.

            ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

            கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து

            ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த

            அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. கீழ்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு கோர்ட்டில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது.

            இந்த வழக்கை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு கோர்ட்டு அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

            இதன் மூலம் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவு திறந்துள்ளது.

            Posted in சினிமா

            சாதனை படைத்த ஜெய் பீம்ர்

            சாதனை படைத்த ஜெய் பீம்ர்

            ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

            முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்
            சூர்யா


            ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை

            கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது.

            இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும்,

            சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன.

            ஜெய் பீம்

            ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது. இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் சூர்யா

            வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

              Posted in சினிமா

              80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

              80 கோடிக்கு திருமண வீடியோ விற்ற நடிகை

              பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.

              இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
              கத்ரினா கைப்- விக்கி கவுசல்


              பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.

              திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

              இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன்

              கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

              கத்ரினா கைப்
              கத்ரினா கைப்- விக்கி கவுசல்

              கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில்

              புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு

              எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளன

                Posted in இலங்கை செய்திகள்

                தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

                தொடரும் மனித உரிமைகள் எப்போது முடியும் கேள்வி கணைகளால் துளைத்த இலங்கை தூதரகம் -படங்கள் உள்ளே

                இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டி காட்டி,
                குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு போராட்டத்தை தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . , (10:12:2021 )வெள்ளி கிழமை மதியம் 12:30 மணியளவில் அமைதியான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் .போராட்டத்தில் .
                தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அரசாங்கத்தை தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க பல கோரிக்கை களை முன்வைத்து கோவிட் விதிகளை பின் பற்றி செய்வனவே செய்திருந்தனர் .
                இதன்போது

                போலி என்கவுன்டர்களை அரங்கேற்றுவதை நிறுத்துங்கள்

                ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் உள்ள அதிகப்படியான ராணுவத்தை அகற்றவும்,

                போரின் விதவைகளை மிரட்டி பணம் பறிப்பதையும் பாலியல் துன்புறுத்தலையும் நிறுத்து

                தமிழர்களை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ விடுங்கள்

                சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இனவெறியை ஊக்குவிக்காதீர்கள்

                ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பகுதிகளில் அதீத இராணுவத்தின் இருப்பை அகற்றவும்

                இலங்கையின் இறையாண்மையை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டாம்

                ஓரினச்சேர்க்கை பாலியல் சித்திரவதை செய்யாதீர்கள்

                PTA ஐ உடனடியாக ரத்து செய்

                போதை மருந்துகள் தமிழ் மண்ணிற்குள் வருவதை நிறுத்து

                அப்பாவி அரசியல் கைதிகளை விடுதலை செய்.

                என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்களாக முழங்க
                பட்டது .

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் மட்டும் இந்தவாரம் மட்டும் சுமார் 44,600 பேர் கொரனோ

                நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,கடந்த தினம் மட்டும் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                நோயாளர் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன


                இவ்வாறு நோயின் அதிகரிப்பு தொடரும் எனின் மூன்றாவது தடவையாக லொக்கடவுன் நிலை

                ஏற்படுத்த படும் அபாயம் உள்ளது ,நத்தார் தினத்தை அண்மித்து அடித்து பூட்டும் நிகழ்வுகள்

                பிரிட்டனில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு

                  பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு

                  பிரிட்டன் மற்றும் லண்டனை மையப்படுத்தி நடத்தப்படவிருந்த ஏழு தீவிரவாத தாக்குதல்கள்

                  காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளை மற்றும் தேடுதல்

                  நடவடிக்கையின் மூலம் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  கொரனோ காலத்தில் மட்டும் ஏழு மிக பெரும் தாக்குதல்கள் நடத்தபட இருந்த நிலையில் அவை

                  முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    கவிழ்ந்த அகதிகள் லொறி -54 பேர் மரணம் -பலர் காயம்

                    கவிழ்ந்த அகதிகள் லொறி -54 பேர் மரணம் -பலர் காயம்

                    அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக லொறி ஒன்றுக்குள் அடைத்து ஏற்றி வரப்பட்ட நூறு

                    அகதிகள் கொண்ட லொறி ஒன்று முடக்கு திரும்புகையில் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது ,இவ்வேளை

                    அதற்குள் பயணித்த 54 பேர் உடல் நசிந்து பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    மேற்படி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      நான் வாழ நீ வா ..!

                      நான் வாழ நீ வா ..!

                      இன்றேவா இதயம்தரவா
                      இக்கீதம் இசைந்தே இசைக்கவா
                      இசையே இணைந்தால் இசையாவேன்
                      இன்றே இணையே இசைவேன்

                      நீபாட நினைவுக்குள் நீராடா
                      நிகழ்காலம் நின்றாட
                      ஓடும்நதியாக ஓடுவேன்
                      ஓடும்கரை ஓடமாவேன்

                      நாள்தோறும் நான்வாழ
                      நீவா நினைவுதா
                      உன்னை உயிலெழுதி
                      உயிரே உயிரேதா

                      சீர்மோனை சீதனமா
                      சீரிட்டாய் சிக்கனமா
                      உன்னாலே ஊர்கிறேன்
                      உள்ளமே உயிராகிறேன்

                      எந்நாளும் என்நெஞ்சில்
                      ஏமனமே ஏறியாடு
                      எனக்காக என்னுயிரே
                      எந்நாளும் ஏக்கமிடு …!

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 10-12-2021

                        Posted in இலங்கை செய்திகள்

                        கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

                        கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டா

                        எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

                        கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                        அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்திலேனும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோடு, தற்கால உலகை வெற்றிகொள்வதற்கு அவசியமான ஏனைய திறன்களையும் பெற்றிருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

                        நமது பல்கலைக்கழகங்களால், ஏற்கெனவே பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர் தொகையைப் பத்தாயிரத்தால் அதிகரித்தமை தற்போதைய அரசாங்கம் அடைந்த பாரிய வெற்றியாகுமென்றும், அவ்வாறு அதிகரித்தாலும்கூட, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறமுடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னமும் இருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                        இதற்குக் காரணம், தகுதிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இடமளிப்பதற்கு அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் போதுமான கொள்ளளவின்மையாகும். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாத்திரம் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகில் உள்ள அனைத்துச் சிறந்த பல்கலைக்கழகங்களும், அரச பல்கலைக்கழகங்கள் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

                        பெரும்பாலானவை சுதந்திரமான சுயநிர்வாக நிறுவனங்களாகவும் தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாமைக்குக் காரணமில்லை என்றும் குறிப்பிட்டதோடு, இதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால், அதைச் செய்ய முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

                        அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள், பட்டங்களை விற்கும் கல்விக் கடைகள் என்ற பழைய ஆட்சேபனைகள் முட்டாள்தனமானவை என்பதோடு, பட்டப்படிப்புக்குப் பிறகு தொழிற்சந்தையில் வாய்ப்புகளை வழங்க முடியாத பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                        “நாட்டில் மூன்றாம் நிலைக் கல்விக்கான சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், சர்வதேசத் தரம்வாய்ந்த பிராந்திய உயர்க்கல்வி நிறுவனங்களை இலங்கைக்குள் ஈர்க்க முடிவதோடு, அதன் மூலம் இந்நாட்டில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.

                        “காலப்போக்கில், இது இலங்கையின் உயர்க்கல்வித் துறையை பொருளாதாரத்துக்குச் சாத்தியமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக மாறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாடு விரைவாக அபிவிருத்தியடைந்து, எதிர்காலத்தில் வளமான நாடாக மாற வேண்டுமாயின், இலங்கைக்கு அவசியப்படுவது உயர்க்கல்வி கட்டமைப்பில் பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

                        சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்புக் கல்வி, முகாமைத்துவம், வர்த்தக மேலாண்மை, சட்டம், மருத்துவம், பொறியியல் மேம்பாட்டு முகாமைத்துவம், தொழில்நுட்ப விஞ்ஞானம், சமூகவியல், இணை சுகாதார விஞ்ஞானம் மற்றும் ஆக்கப்பூர்வமான சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் 1,408 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

                        இவர்களில் கலாநிதிப் பட்டதாரி ஒருவரும் பட்டப் பின்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா ஆகியோரும் அடங்குவர். இதன்போது, 1,180 பேர் தமது முதல் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

                        சிறந்த இராணுவப் படை அதிகாரியாக கெடட் அதிகாரி எஸ்.எச்.ரொத்ரிகோ, சிறந்த கடற்படை அதிகாரியாக லெப்டினன் எஸ்.டி.கருணாசேன, சிறந்த விமானப்படை அதிகாரியாக பறக்கும் அதிகாரி எஸ்.கே.எஸ்.ருக்ஷான், அதிசூர அதிகாரியாக லெப்டினன் எல்.டி.ஐ.லியனாரச்சி ஆகியோர், ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

                        முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம், 1981இல் நிறுவப்பட்டது. 2009ஆம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் அது முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டில் சிவில் மாணவர்களுக்கும் பட்டக் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தற்போது, முப்படை மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாநிதிப் பட்டம் மற்றும் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பாடநெறிகளை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

                        கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகமாக பொதுநலவாய அமைப்பின் பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

                          திருமணவீட்டுக்கு சென்ற வான் சிதறல்- பலர் காயம்

                          இலங்கை அநுராதபுரத்திலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன் வான் ஒன்று

                          மோதியதில் சம்பவ இடத்தில இருவர் படுகாயமடைந்தனர் .


                          மேற்படி விபத்தில்சிக்கிய வான் திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த பொது இந்த விபத்து

                          நேர்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in உலக செய்திகள்

                            ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

                            ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

                            ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

                            இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

                            கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள்

                            ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

                            இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர்.

                            அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 11ஆம் திகதி ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

                            கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று

                            கொள்ள விரும்பினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                            அன்றிரவு ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு, அவரும் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

                            இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண்

                            குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

                            இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை

                            ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே இரத்தப்பிரிவு என இந்தியச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

                              இந்தியா பறந்த இலங்கை இராணுவ தளபதி

                              இந்தியாவின் இராணுவ தளபதி விபத்தில்பலியானதை அடுத்து தற்பொழுது அவரது உடலுக்கு

                              அஞ்சலி செலுத்திட இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா டில்லிக்கு பயணமானார்

                              இந்த விபத்து சதி என பேச படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                                பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

                                சர்வதேச (‘இன்டபோல்’) பொலிஸாரினால் ‘சிவப்பு அறிவித்தல்’ பிறப்பிக்கப்பட்டிருந்த ,பிரேசில்

                                நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

                                பிரேசில் பொலிஸார் இவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது, இவர்

                                தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக, விமான நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

                                இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கில் இவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

                                கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை, குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.