Tag: விலை
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ,உலக எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை இலங்கை உணரும்
ரஷ்யா மீதான தடைகள்
ரஷ்யா மீதான தடைகள் உட்பட பல காரணிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய எரிபொருள் விலைகளின் தற்போதைய உயர்வு குறித்து இலங்கை
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மதிப்பீடு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் CPC, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பைக் கவனத்தில் கொண்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோலிய வர்த்தகத்தின் உயர்மட்ட ஒழுங்குமுறை அமைப்பால் மதிப்பிடப்பட்டபடி, நவம்பர் முதல் மூன்று வாரங்களில் விலை வளைவு அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது.
CPC இன் கூற்றுப்படி, குளிர்காலத்தில் எரிபொருளுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை இறுக்குவது ஆகியவை காரணங்களில் ஒன்றாகும்.
117 கப்பல்கள் மீதான தடை
ரஷ்ய எரிபொருளை கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள 117 கப்பல்கள் மீதான தடைகளும் விலைகளில் மேல்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார்.
இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் சமாதான ஒப்பந்தம் குறித்த செய்தி நவம்பர் 22 ஆம் தேதி எண்ணெய் விலையில் சிறிது சரிவை ஏற்படுத்தியது, ஏனெனில் அது விநியோக அச்சங்களைத் தணித்தது.
இலங்கை ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
உள்ளூர் சந்தைக்கான அடுத்த விலை திருத்தத்திற்கு முன்னதாக, CPC தற்போது உலகளாவிய சந்தையை மதிப்பிடுகிறது.
உள்ளூர் சந்தையில் செலவு பிரதிபலிப்பு எரிசக்தி விலை நிர்ணயத்திற்கான சூத்திரத்தை CPC பின்பற்றுகிறது.
திடீர் குறைப்பு எரிபொருள் விலை
திடீர் குறைப்பு எரி பொருள் விலை
திடீர் குறைப்பு எரிபொருள் விலை என இலங்கை அரசு அறிவித்துள்ளது,இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது .Sudden reduction in fuel prices.
அதனை எடுத்து இன்று முதல் இந்த எரிபொருள் விலைகுறைப்பு இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது .
பெட்ரோல் புதிய விலை New price of petrol
அதன் அடிப்படையில் பெட்ரோல் புதிய விலை இன்றுடன் 2 99 ரூபாய் ஆகும் ,லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் 313 ஆகவும்
நிர்ணயிக்கப்படும் ,அதேபோல ஆட்டோ டீசல் 288 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலை அதை விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம்
இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம் தொட்டதை அடுத்து தற்போது கண் துடைப்பு நிகழ்வு ஒன்றுக்காக இந்த விலை குறைப்பு இடம் பெற்றுள்ளது.
மக்கள் தமக்கு எதிராக திசை திரும்புது பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு ஏமாற்று சித்து விளையாட்டாக இந்த ஏரி பொருள் விலை குறைப்புக்கு காணப்படுகிறது .
ஆளும் அனுரா அரசு பொருளாதார நெருங்கடியில் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது திடீரென எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ள பட்ட விடயம் என்பது பெரும் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மத்தியில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தமது கருத்துக்களைதெரிவித்து வருகின்றனர்.
பால் மா விலை அதிகரிப்பு
பால் மா விலை அதிகரிப்பு
பால் மா விலை அதிகரிப்பு .இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதிகரித்த புத்தகங்களின் விலை
அதிகரித்த புத்தகங்களின் விலை
அதிகரித்த புத்தகங்களின் விலை ,பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு
தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஒரு புத்தகத்தின் விலை 20% அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர். முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15% ஆக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட
புத்தகங்களுக்கு VAT வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 – 18%ஆக அறவிடப்பட்டது. எழுதுபொருட்களுக்கு 3%ஆக மட்டுமே இருந்தது.
அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது,
அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இது குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார்.
புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது
உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில்
இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு புத்தகம் கூட வாங்க முடியாது.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்
தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும்
இலங்கையில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கும் எதிர்வரும் காலங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலைமை கூட ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகளே முக்கிய காரணம் என
அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும்
தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் இருந்து தேங்காய்கள் குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் இந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று, இலாபத்தைப் பெறுகிறார்கள்.
இந்த நடைமுறை தென்னை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் தேங்காய் விலை 200 ரூபாவுக்கும் அதிகமாகவே உள்ளது. இது ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஆகும்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்புகள் இருந்தபோதிலும்,
தொடர்ச்சியான விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடலின் போது கவலைகள் எழுந்தன.
இந்த விலை அதிகரிப்புக்கு ஓர் தீர்வாக கையிருப்பில் உள்ள தேங்காய்களிழல் ஒரு பகுதியை மட்டுமே ஏலங்கள் மூலம் விற்பனை செய்யவும், எஞ்சியவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் தேங்காய் விலைகள் தொடர்பில் விசாரணைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
விலைகளை நிலைப்படுத்த திட்டம் ஒன்றை வகுக்குமாறு விவசாயத்துறையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏற்ப தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை தயாராகி வருகிறது.
அரசாங்கம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னந்த தோட்டங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், அந்த நிலங்களில் பல போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் இருப்பது கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கம் தற்போது அந்த காணிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அவர்களின் கணிப்பு குறித்து தென்னங் பயிர்ச்செய்கை சபை லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தற்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய் விற்கப்பட்ட தேங்காய் என்று தற்பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முகவர் முன்னணி தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை
இலங்கையில் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனையாவது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நாள்தோறும் இலங்கையில் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் என்ன செய்வதென தெரியாத திருடர்கள்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் அதிகமான தமிழர்கள் தண்ணீரிலேயே கறியை வைப்பது வளமை தேங்காய் பாவிப்பதில்லை.
ஆனால் எங்கள் நாட்டில் முதல் பால் இரண்டாம் பால் என தேங்காய் பயன்படுத்தி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர் .
இலங்கையில் தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது
தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது என்ற நிலை இலங்கையில் காணப்படுகிறது இது யார் தவறு.
மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
ஆளும் ஆட்சி மிக பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளதை விரைவில் அது ஒரு அரசுக்கு எதிரான போர் வடிக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்து சொல்லலாம்.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி , அடைந்துள்ளதாக இலங்கை வாழ்வாக்கள் பலர் தெரிவிக்கிடர்.
50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை என்று தற்பொழுது 20 முதல் 24 ரூபாய் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை நினைத்து சில பொருட்களின் விலைகளும் இந்த குறைந்து காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி அதிகரித்த நிலையில் .இலங்கையில் ஒரு முட்டை விலை ,24 ரூபாவாக கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பல டன் கணக்கான முட்டைகள், கப்பல்கள் ஊடாக எடுத்துவரப்பட்டு ,மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைக்க பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக ,அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது தொடர்பாக ,மக்கள் தற்பொழுது கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனை அடுத்து புதிய புதிய வழிகளில் புதிய புதிய விடயங்களை தெரிவு செய்து மக்கள் ஆதரவு கொடுக்க மறுத்து வருவதன் காரணமாகவே ,இலங்கையில்
நாள்தோறும் முட்டை விலைகள் உள்ளிட்டவைகள் வீழ்ச்சி உற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டை விலை அடுத்து தற்போது மூட்டையினால் தயாரிக்கப்படும் .அனைத்து உணவு பொருட்களும் விலை குறைக்கப்பட்ட நிலையில் .விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூட்டை விலை குறைப்பை அடுத்து ,தற்போது முட்டை வாங்கி உண்ணும் முட்டை பிரியர்கள் ,முட்டையை அதிகமாக உண்டு, முட்டை போல வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.
எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.
ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.
எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை ,முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின் விலை 70 ரூபாய்க்கு மேல் உயர்வதைத் தடுக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வற் வரி விதிக்கப்படவில்லை என்றாலும், கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், முட்டைகளுக்கான தேவை குறைந்து வருவதால் நாட்டில் முட்டை உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தியாளரின் வருமானத்தின் அடிப்படையில் VAT நிர்ணயிக்கப்படுகிறது என்றும், முட்டை உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப தங்கள் வரி கோப்புகளைத் திறக்க வேண்டும் என்றும் தலைவர் கூறினார்
குறைந்த விலையில் போசாக்கான உணவு
குறைந்த விலையில் போசாக்கான உணவு
குறைந்த விலையில் போசாக்கான உணவு ,மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திக் கீழ் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் ‘பெலெஸ்ஸ’ (Palessa) உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (01) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார அறிவத்துள்ள ‘Clean Sri Lanka’ திட்டத்துடன் இணைந்து, தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய
அமைச்சு மற்றும் வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.
இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார்.
இதன்போது, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா
விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு ,பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால்
அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.
தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.
அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
இளநீர் விலை 300 ஐ தாண்டியது
இளநீர் விலை 300 ஐ தாண்டியது
இளநீர் விலை 300 ஐ தாண்டியது ,கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும்.
இதற்கிடையில், சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்
உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல் செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவு வகைகளின் விலைகள் திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின்
சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பாதீட்டில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை
அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும்
என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டளவில் , தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் தேங்காய்களின் விலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில், ஒரு தேங்காய் சந்தையில் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரு தேங்காயின் விலை சுமார் 100 ரூபாவாக இருந்தது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சராசரி சில்லறை விலை 80 – 120 ரூபாவாக இருந்தது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்கள் குறைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளது.
தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன.
இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்
பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் இன்று முதல் திருத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாய் ஆக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000 ரூபாயாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு,பச்சை மிளகாய் கிலோ 1000 ரூபாய்க்கு மேலாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொழிந்து வருவதால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பச்சை மிளகாய் விலை அதிகரித்தது அடுத்து மக்கள் சொல்லு நான் துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலைக்கு ஏற்ப தமது பயிர்களை பயிரிட மறுப்பதே இந்த விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையில் பருவகால மழை பொழிந்து வருவதும் இவ்வாறான விலைகள் அதிகரித்துச் செல்வதையும் கருத்தில் எடுக்காது விவசாயிகள் உள்ளதை இந்த விலையேற்றத்தை காரணமாக உள்ளது.
திடீரென பச்சைமிளகாய் மிளகு அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இதற்கு மாற்றீடாக ஏதாவது செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

எரிவாயு விலையில் திடீர் மாற்றம்
எரிவாயு விலையில் மாற்றம்
எரிவாயு விலையில் திடீர் மாற்றம் , எரிவாயு விலையில் திடீர் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக எரிவாயு பகுதி பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றது .
இதன் அடிப்படையில் எரிவாயு விலை சூத்திர பிரகாரம் லிட்ரோ உள்ளூர் எரிவாயு விலை இமாதம் ஜனவரி மாற்றம் ஏற்பட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
இதன்படி 12 .5 அரை கிலோகிராம் என்ற உள்ளூர் எரிவாயு விலை 3690 ஆகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1452 ரூபா ஆகும் எரிவாயுவின் விலை அதேபோன்ற்று 2,3 கிலோ கிராம் 6 94 ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அனுரா குமர கிச்சன் நாயக்கர் உடைய ஆட்சி அதிகாரத்தில் வந்த அமர்ந்ததன் இவ்வாறான விலைகளில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை ஆனால் தற்போது ஏற்றப்பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது .
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் போஞ்சி, பச்சை மிளகாய், கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 900 முதல் 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 400 ரூபாவாகவும், முட்டையின் விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பாகற்காய் மற்றும் தும்பகரவில ஆகியவற்றின் சில்லறை விலை 600 ரூபாவாகவும், தம்பல,வெட்டக்குளு,மேக்கரல் சுண்டைக்காய், நோகோல்,
தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கிழங்கு ஆகியவற்றின் சில்லறை விலை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
புடலங்காய், முள்ளங்கி, கெரட், பூசணிக்காய் ஆகியவற்றின் சில்லறை விலை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாக இருந்தது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கறிமிளகாய் மொத்த
விற்பனை விலை 800 ரூபாவாகவும், சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு கிலோ கிராம் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் உள்ளது. .
இது தவிர சில பகுதிகளில் தேங்காய் 200 ரூபாவாகவும், அதே தரம் கொண்ட தேங்காய் எண்ணெய் போத்தல் 800 ரூபாவாகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு
கிலோ கிராம் சிவப்பு வெங்காயத்தின் சில்லறை விலை 450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்
விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்
விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம் ,ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த பொருட்களின் விலை குறைப்பு சதவீதம் குறித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதையும், மூலப்பொருள் விலை குறைப்பையும் பயன்படுத்தி பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் மக்களுக்கு உரிய விலையை வழங்குகிறார்களா என்பது, குறித்து தற்போது ஆராயப்படுகிறது.
அதேநேரம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து விலை குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி ,விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கான வழிமுறைக்கு அழைப்பு:
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளுக்கு குறைந்த உள்ளீடு செலவுகள்:
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அதிக பலன்களை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
அரிசி ஆலைகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, மக்களுக்கான பிரதான உணவான அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நுகர்வோர் பொருட்களின் தற்போதைய விலைகள் குறித்து பங்கேற்பாளர்கள் கவனம் செலுத்தினர்.
கட்டுப்பாட்டு விலை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தாம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலையில் அரிசியின் விலையை மாற்றியமைப்பது நியாயமற்றது என அவர் நம்புகின்றார்.
மேலும், விவசாயிகள் தங்கள் அரிசிக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்யும் முறையான பொறிமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அரிசியின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி திஸாநாயக்க, நீண்டகாலமாக கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்தாமையே இந்த விலை ஸ்திரமின்மைக்கு காரணம் என குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பங்கு பதுக்கல்காரர்களின் பிரச்சினை குறித்து ஆராயப்பட்டதுடன், இந்தக் குழுவை பதிவு செய்யுமாறு விவசாய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களைத் தணிக்க உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த உரையாடல் எடுத்துரைத்தது.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு













































