Tag: மரக்கறி
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
பிரியாணி செய்வது எப்படி
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி HOW TO MAKE VEGETABLE BIRYANI ,காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது தொடர்பாக இந்த காணொளியில் முழுவதுமாக பார்க்கலாம் கடைசி வாயில் மிக இலகுவான ஈஸியாக செய்வது எப்படி.
இந்த மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்வது எவ்வாறு அதனை சுவையாக நாங்கள் உண்டு கொள்ள முடியும் என்பதற்காக கீழே செய்முறை விளக்கம் தரப்படுகிறது .
காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களும் காணப்படுகின்றன இதுபோன்று நீங்களும் சமைத்து வீட்டிலே சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள் மக்களே.
மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்)
பாஸ்மதி அரிசி 1 கப் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1
கரெக்ட் 1 ,போஞ்சி 3 அல்லது 4,பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு
50 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி 100 கிராம் புதினா மல்லி இலை 50 கிராம் என்னை அல்லது நெய் 3 டீஸ்பூன்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

பன்னீர் மரக்கறி பிரியாணி
மரக்கறி பிரியாணி
பன்னீர் மரக்கறி பிரியாணி ,அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும்.
சூடாகிய நெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக கறுவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் ,பிரியாணி இலை,பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாய் வரும் வரை வதக்கவும் .
அதன் பின்னர் தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுள் தயிர் சேர்த்து தயிர் வாடை நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவிம்
பின்னர் அதனுள் வெட்டிய மரக்கறியையும் பன்னீரையும் சேர்த்து நன்கு வேகும்வரை மூடி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானா நீரில் அரிசியை போட்டு வேக வைக்கவும்.
சோறு ஒன்றறோடு ஒன்று ஒட்டாத பதத்தில் இறக்கி நீரை வடித்து எடுக்கவும்.
பின்னர் சோற்றை தயாரான பிரியாணி கலவையுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியபின் பரிமாறவும்.
சுவையான அதிரடி பிரியாணி தயாராகிற்று .நீங்களும் இதுபோல தினம் தோறும் செய்து சாப்பிடுங்கள் மக்களே .
கடை சுவையில் இது போன்று மரக்கறி பன்னீர் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் மக்களே .
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் போஞ்சி, பச்சை மிளகாய், கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 900 முதல் 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 400 ரூபாவாகவும், முட்டையின் விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பாகற்காய் மற்றும் தும்பகரவில ஆகியவற்றின் சில்லறை விலை 600 ரூபாவாகவும், தம்பல,வெட்டக்குளு,மேக்கரல் சுண்டைக்காய், நோகோல்,
தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கிழங்கு ஆகியவற்றின் சில்லறை விலை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
புடலங்காய், முள்ளங்கி, கெரட், பூசணிக்காய் ஆகியவற்றின் சில்லறை விலை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாக இருந்தது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கறிமிளகாய் மொத்த
விற்பனை விலை 800 ரூபாவாகவும், சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு கிலோ கிராம் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் உள்ளது. .
இது தவிர சில பகுதிகளில் தேங்காய் 200 ரூபாவாகவும், அதே தரம் கொண்ட தேங்காய் எண்ணெய் போத்தல் 800 ரூபாவாகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு
கிலோ கிராம் சிவப்பு வெங்காயத்தின் சில்லறை விலை 450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது
சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது
நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
மழை யுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார்.
இதேவேளை, இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.
வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரம் மீள தற்போது முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது மீளவும் அதி உச்சம் பெற்று வரும் விலை வாசிகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
சந்திகளில் காய்கறிகள் விலைவாசி மீளவும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மீளவும் கொதி நிலை ஏற்படுத்தியுள்ளது .
Featured
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.
அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று (24.01.2023) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கரட கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பணை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.
அதேபோல கோவா 470 ரூபாய்,
லீக்ஸ் 480 ரூபாய்,
ராபு 170 ரூபாய்,
இலை பீட்ரூட் 420 ரூபாய்,
இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய்
கறி உருளை கிழங்கு 320 ரூபாய்
நோக்கோல் 340 ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு
வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு
வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும்
முன்னாள் தலைவருமான அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார நிலையத்தின் தற்போதைய புரவலர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு விவசாய சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டை இன்று (01) காலை நுவரெலியா பொருளாதார நிலையத்தில் வைத்து அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர்,
பொருளாதார மையத்தில் இன்றைய மொத்த விற்பனை விலை கேரட் கிலோ 750 ரூபாய், பீட்ரூட் கிலோ 360-380 ரூபாய், முட்டைகோஸ் கிலோ 500 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 250-270 ரூபாய், பீன்ஸ் கிலோ 600-650 ரூபாய், 600. -ஒரு கிலோ தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் 700 ரூபாய்.கிலோ 1,600-1,800 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு
வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதைய காய்கறி விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிடலாம்.
காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், கடந்த காலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன.
கடந்த ஆண்டுகளில் இந்த பருவத்தில் 100 கிலோ காய்கறிகளை சேமித்த விவசாயிகள், இந்த ஆண்டு பத்து கிலோ காய்கறிகளை மட்டுமே சேமித்துள்ளனர்.
100 கிலோ காய்கறிகளை 100 ரூபாய்க்கு விற்றபோது 10,000 ரூபாய் கிடைத்தது. இம்முறை 300 க்கு 10 கிலோவுக்கு 3,000 ரூபா கிடைத்துள்ளது.
விலை உயர்ந்துள்ளதால், காய்கறி சாகுபடிக்கு கிடைத்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்ததால், லாபம் இல்லை.
2023ஆம் ஆண்டைப் போல அல்லாமல், 2024ஆம் ஆண்டை முறையான திட்டத்தின்படி செயல்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு, 2025 ஆம் ஆண்டை விவசாயிகளுக்கு நல்ல ஆண்டாக மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசின் ஆதரவை பெற வேண்டும், என்றார்.
நுவரெலியா மத்திய சந்தையில் மலையக மரக்கறிகளின் சில்லறை விற்பனை தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் போது, பொருளாதார நிலையத்தின் மொத்த விலையை விட 50% அதிக விலைக்கு சில்லறை மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக அறிந்தோம்.
கடந்த ஆண்டுகளில் புத்தாண்டைக் கொண்டாட நுகர்வோர்கள் கிலோ கணக்கில் காய்கறிகளை எடுத்துச் சென்றதுடன், தற்போது காய்கறிகளின் சில்லறை விலை உயர்வால் 250 கிராமாக குறைந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன்,
லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை குறைந்துள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய
நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வியாபாரிகள் நுவரெலியாவுக்கு
வராத காரணத்தினால் சில மரக்கறிகள் பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

























