வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்

வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.

NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.

விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் விபத்து 4 பேர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வேரஹெர பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து

வேரஹெர பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து

வேரஹெர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற பயங்கர விபத்து சிசிடிவி கெமராவில் பதிவாகி இருந்தது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த பலர் சம்பந்தப்பட்ட மண்டபத்தில் அமர்ந்திருந்த போது திடீரென அவர்கள் அமர்ந்திருந்த மண்டபத்தின் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது.

சாரதி பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த காரை, அன்றைய தினம் சாரதி பயிற்சிக்கு வந்திருந்த ஒருவர் செலுத்தி வந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

குறித்த நபருடன் பயிற்சியாளரும் காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ட்ர​க் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி 6 பேர் பலி

அமெரிக்கா Mojave Desert பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் ஆறு பேர் பலியாகியுள்ளனர் .

குறித்த உலங்குவானூர்தியில் இரண்டு சிப்பந்திகள் உள்ளிட்ட நான்கு பயணிகள் பயணித்துள்ளனர் ,இதன் போதே உலங்கு வானூர்த் வீழ்ந்து நொறுக்கியது .

அமெரிக்கா லாஸ் வேகா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த உலங்குவானூர்தி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்காவில் தொடராக இவ்விதமான் விமான விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .

மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
Posted in இலங்கை செய்திகள்

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன

விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன

விபத்துக்கள் அதிகம் சாலைகளில் ஏற்பட சாரதிகளே கரணம் என பந்துல குணவர்தனதெரிவித்தார் ,இவ்வாறான விபத்துகளினால் சாரதிகள் இறப்பதுடன் காயமடைந்து வருவதாக பந்துல குணவர்தன கவலை வெளியிட்டார் .

வீதி விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,ஆண்டு தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .

கல்வி முறையில் இருந்து வீதி போக்குவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே இந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரன்ன – ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ – மாத்தறை வீதி பகுதியில் நேற்று (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 12 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 7 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 75 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

விபத்தில் லொறி சாரதியும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணமுர, களுபொத்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

64 வயதுடைய யத்தெஹிகந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – கொக்கவில வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்டதில் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A26 பிரதான வீதியில் அபித விளையாட்டரங்கிற்கு அருகில், திகனவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய 69 வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வீடியோ

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .

இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.

அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சீர் செய்தனர்.

பெயரளவில் மாத்திரம் முறிகண்டி பொலிஸ் காவலரண் காணப்படுவதாகவும், அதனால் எப்பயனும் மக்களுக்கு இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

கண்டியில் இருந்து லக்‌ஷபான ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் –கொழும்பு- கண்டி வீதியில் தியகல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீதியை முற்றாக தடை செய்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடச் சென்ற போது, ​​குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்துக்களில் ஐவர் பலி

வாகன விபத்துக்களில் ஐவர் பலி

வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீரம்புகெதர, வாரியபொல, அச்சுவேலி, கம்பஹா மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீரம்புகெதர, கிரலபொக்க பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும்

பின்னால் அமர்ந்து சென்றவரும் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்துக்களில் ஐவர் பலி

இதேவேளை, வாரியபொல நகரில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 69 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பலத்த

காயமடைந்து வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாபிம பகுதியில் வீதியில் பயணித்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிமடை தம்புலன்கந்துர பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பாறையில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதியும் மேலும் இருவர் பரணகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து

கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு மருங்கையேனும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளத்சிங்கல – பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக வேகமாக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.

தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்

இவ்வாறு பயணித்த போது கீழ் நரகல பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.”

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

“இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.

“இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்.”

“ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்றார்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர்.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று வியாழக்கிழமை (19) பதிவாகியுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் புரண்டதில் பயணி பலி 18 பேர் காயம்

அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் காயமடைந்த 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் , 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்ததவர் நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த கிவுலேகேதர சுவர்ணலதா முனதுங்க (51 வயதுடைய )என தெரியவந்துள்ளது.

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்

விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்

நாட்டின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (11) இரவு கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண் உயிரிழந்துள்ளார்..

உயிரிழந்தவர் பள்ளியவத்தை, மஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பெண் பலி எகிறும் விபத்துக்கள்

சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பஸ்யால – மீரிகம வீதியில் பொஹொன்னறுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ்யால பகுதியிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் டிஃபெண்டர் வாகனத்தின் சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் சிதறிய பொலிஸ் வண்டி இரு போலீசார் மரணம்

மழையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த டிஃபெண்டர் வாகனம் வீதியில் சென்ற கறவை மாடு ஒன்றின் மீது மோதியதாகவும், பின்னர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தையில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.