Tag: மாணவர்களை
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ்
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் ,இஸ்ரேல் இராணுவ தாக்குதலுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ் அராயகம் .
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் இராணுவ தாக்குதலினால் பாலஸ்தினம் காசா மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .
,அவ்வாறான மக்கள் மீது நடத்த படும் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்த கோரி ,அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தும் மக்கள் மீது ,வன்முறை தாக்குதலை அமெரிக்கா பொலிசார் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது ,அமெரிக்கா காவல்துறை மாணவர்கள் மீது நடத்தும் இந்த தாக்குதல் மிக பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா நிலை பாட்டுக்கு எதிராக வரும் நாட்களில் மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த அடக்குமுறைகள் ஊடக ஆதிக்க சக்திகளின் இரும்பு கரத்தில், எவ்வாறு அப்பாவி மக்கள் சிக்கி சீராழிந்து வருகின்றனர் என்பதற்கு ,இவை சிறந்த முன்னுதாரணமாக காண படுகின்றன .
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் தாக்குதல் காணொளிகள் ,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும் ,மக்கள் ,மாணவர்கள் மீது அமெரிக்கா காவல்துறையினர் பொல்லுகளினால் தாக்குதல் நடத்துவதையும் காண முடிகிறது .
அமைதி வழியில் இடையூறு இன்றி போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் நசுக்கும் திகைக்கும் காட்சிகளை வெளியிட பட்டுள்ளன ..
இஸ்ரேலிய போருக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் என்பன தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன .
அவ்வாறான நிலையில் மாணவர்களை அடக்கி ஆளும் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளும் அமெரிக்கா பொலீஸ் செயல்பாடுகள் ,உலகலாவிய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.
NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.
விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












