Tag: மதுபானம்
மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு
மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு
மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு ,2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு மதுபானம்
ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மேற்படித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
வெட் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மது வரி மற்றும் வெட் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில்
ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (51) என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றனர் எனவும், அவர்கள் திருப்பி
வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், பொலிஸில் முறையிட்டனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்தில் இருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- அதிர்ச்சியில் குடி மகன்கள்
மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- அதிர்ச்சியில் குடி மகன்கள்
ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும்.
மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி- மது பிரியர்கள் அதிர்ச்சி
மதுபானம்
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் அதிபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து
திடீரென அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை
சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும். புதுச்சேரி அரசின் இந்த அதிரடி உத்தரவால் மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
















