முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரமேஷ் என்ற நபரை
டி 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காட்டு கதை என்ற இலங்கை ராணுவ புலனவித்துறை அடித்து விட்டுள்ளது.
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன்
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன் இவர் துப்பாக்கி பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோடிக்கப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் செய்கிறார்கள் என்கின்ற தகவலை பரப்ப ,இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது என்கின்ற முதலாவது கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆக இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரை மீளவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்.
அத்துடன் தமிழர்களை தமிழர்களை அடக்கியாள முற்படுகிற விளையாட்டின் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக இதனை எதிர்பார்க்கலாம் .
இந்த கைது நடவடிக்கையின் பின்னால் பல நடவடிக்கைகள் உள்ளது என்பதை இப்பொழுதே நாங்கள் அடித்து கூறலாம்.
இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அனுரா அரசின் ஆட்சிக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும் என்பதை, விரைவில் அந்த அரசு உணர்ந்து கொள்ளும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.







