Tag: காதலனின்
Posted in இலங்கை செய்திகள்
காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2023
காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்
தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே திங்கட்கிழமை (16) தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அந்நிலையில் ” என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் ” என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி
- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்













