Tag: இலங்கை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.
ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் பண்டார கூறுகிறார்.
இதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதி ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் வைபவம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றதாகவும் இலங்கைத் தூதுவர் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது 500 க்கும் மேற்பட்ட ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் இதுவரை ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்ததாக அவர் கூறினார்.
அந்த அனைத்து வான்வழி தாக்குதல்களையும் அயர்ன் டோம் அமைப்பு மூலம் அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் அதிகம் விரும்பும் இடம்
சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் அதிகம் விரும்பும் இடம்
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 200,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வந்துள்ளனர்.
மேலும், வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரியா, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக்கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், அவர்களின் எண்ணிக்கை 106,004 பேர் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.
இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.
இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை
இலங்கையில் புதிய திட்டம் நடைமுறை
கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது.
மூன்று மாதங்களில் 75000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்
மூன்று மாதங்களில் 75000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்
இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை தேடும் போக்கு அதிகரித்துள்ளது.
இலங்கையில் 2,374 பேர் தென்கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.
ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின.
பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தெரணவில் உருவான பிரபல நட்சத்திரம், சமீபத்தில், நாட்டின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்று மிகவும் பிரபலமான பாடகர் ரவி ரோய்ஸ்டரின் பாடல் இந்தியாவில் ஒரு திரைப்படத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
“பஸ்ஸ” என்ற சிங்கள பாடலைக் கேட்கும் போது, புதிய தலைமுறை பிரபல பாடகர்களான ரவி ரோய்ஸ்டர் மற்றும் திமிதிரியே நினைவுக்கு வருவார்கள்.
இந்தப் பாடலை யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அதன்படி இலங்கையில் அதீத வரவேற்பை பெற்ற பாடல் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
அதாவது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய “ரோமியோ” திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலைத் தேர்வு செய்ததன் மூலம்.
உலகப் புகழ்பெற்ற மியூசிக் பிரேண்டான திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.
யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது “வெத்தல” பாடல்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்றதன் மூலம் ரவி ரோய்ஸ்டர் புகழ் பெற்றார்.
அதில் 5 இறுதிப் போட்டியாளர்களுக்குள் ரவி ரோய்ஸ்டருக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு, “ஹமாரா பனவரா” பாடல் உட்பட பல பாடல்களுடன் ரவியால் பொதுமக்களை சென்றடைய முடிந்தது, கச்சேரி மேடையில் தவிர்க்க முடியாத பாடகராக மாறினார்.
அத்துடன் டி.வி. தெரணவில் ஒளிபரப்பான சின்னத்திரை நாடகங்களின் பாடல்களுக்கும் ரவி தனது குரலில் பங்களித்தார்.
இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் இந்திய ஆய்வாளர்களுக்கும் இலங்கையின் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மின்சக்தி , எரிசக்தி அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு, புதிய திட்டங்களை
ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.
சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:
தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்
காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.
இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு
கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்
இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்
இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த கப்பல் தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை வெளியேறவுள்ளது.
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று
இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (02) கொண்டாடப்படுகிறது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பாதுகாவலர்களாக நாட்டிற்கு ஆற்றிய சேவையை குறிக்கும் வகையில் இலங்கை விமானப்படை 73வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணமாகும்.
இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.
இதனை ஜனாதிபதி நேற்று (24) மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல அமைச்சர்கள் சில பிரச்சினையான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, உருவாகும் அனைத்து அரசியல் கூட்டணிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
எனினும் பேசும்படியான புதிய அரசியல் கூட்டணிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மெர்க்ஸ் யூனிகார்ன்’ கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர்.
இலங்கையர்களை நாடு கடத்திய சீனா
ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் (UL-867) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
(செய்தி பின்னணி)
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார். மீனவர்கள் நலமுடன் இருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள்,
நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் இருதய நோயாளர்கள் அதிகரிப்பு
பிராந்திய ரீதியாக இலங்கையில் இருதய நோய் பதிவாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்
- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு
- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை
- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு






























