யாழில் வாள் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .

கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.

இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண் ,யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மருதங்கேணி பொலிஸ்

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பெண் ஒருவர் கொலை

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை நேற்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு

யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்

பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .

இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.

அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை

பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.

அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.

தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.

அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

ஆனால் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.​ை

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு

குறித்த சம்பவம் நேற்று (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே
வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை

காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டன.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை

இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்ற போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேகநபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் தெலிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து

யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .

இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்

சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்

சிங்ளகளை காவல்துறையை கழுவி
ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம் .

தமிழர்களை அடக்குவது ,கேவல் படுத்துவது ,பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பது என்ற நாடகத்தை ஆடும் பேரினவாக சிங்கள பவுத்த அரசுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வழங்கிய சாட்டை அடி

முஸ்லீம்கள் சொத்துக்களை கடைகளை ,பள்ளி வாசல்களையே அடித்து உடைப்பது ,இந்துக்களின் ஆலயங்களை உடைப்பது தான் இன்றைய சிங்கள தீவிரவாதம் என்பது .


அப்படியா சிங்கள கூலிகளுக்கு இவர்கள் வழங்கிய தரமான சம்பவம் இது .

இந்த வருடத்தின் சிறந்த தரமான சம்பவம இது பதிய பெற்றுள்ளது .

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

வீடியோ

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வீடியோ

யாழில் கேரள கஞ்சா மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கேரள கஞ்சா மீட்பு

யாழில் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44

வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற

நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

யாழில் வன்முறை கும்பல் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வன்முறை கும்பல் கைது

யாழில் வன்முறை கும்பல் கைது

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிரதேசத்தில் அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் 8 பேர் யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ளநிலையில், 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன், ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள், மோட்டார் சைக்கிள்கள், வாள்கள், கோடாரி, இரும்பு கம்பி, உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.

யாழில் வன்முறை கும்பல் கைது

டென்மார்க்கில் வசிக்கும் ஒருவரால் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்ய முயற்சித்தமை என்ற குற்றச்சாட்டில் இன்று (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னி​லைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் பிரதான சந்தேக நபரான டென்மார்க்கில் வசிப்பவரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் வன்முறை கும்பல் கைது

கடந்த 15ஆம் திகதி கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்திருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV கெமராக்களும் சேதமாக்கப்பட்டிருந்தன.

குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மூன்று ரவுடிகள் கைது

யாழில் மூன்று ரவுடிகள் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 6 பேரை எதிர்வரும் ஜூலை 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து ஜுன் மாதம் 28 ஆம் திகதி

இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த 2 இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

யாழில் மூன்று ரவுடிகள் கைது

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.

நீர்வேலி மற்றும் மடத்தடி பகுதிகளைச் சேர்ந்த 20, 25, மற்றும் 28 வயதுடைய 3 சந்தேகநபர்களே (03) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழில் இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை

அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி, இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,

கோப்பாய் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது
செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

இலங்கை ,யாழ்ப்பாணம் ; இலங்கை யாழ்ப்பாணத்தில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன .


எரிபொருள் இல்லாமை போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தற்போது ஐம்பது வீதமான பேருந்துகளை செலுத்தி செல்கின்றனர் .

இதனால் தடைப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்து மீள இயங்கு நிலைக்கு திரும்பியுள்ளது.

எனினும் பேருந்துகளில் வழமைக்கு மாறாக மக்கள் அதிகமாக ஏற்றி செல்ல படுவதால் பலத்த நெருக்கடிகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர்.