யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு








