தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
Posted in இலங்கை செய்திகள்

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

மாத்தறை, நெடொல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், வீடொன்றில் இருந்த சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

பாதி கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் ஊஞ்சல் போன்ற தொட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் மேல் தளத்தில் குறித்த சீமெந்து தூண் கம்பிகளை பயன்படுத்தி முறையான வகையில் நிர்மாணிக்கப்படாமல் நான்கு ஆணிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? என நீதிக்காய் போராடும் சிறுமி போல், கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது

உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களுக்கு துணையாக அணிதிரளுமாறு பிரான்ஸ் தமிழர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, தாய்மார்களின் நீதிக்கான போராட்டமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30

செவ்வாயன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ளது. முக்கியமான இந்த அனைத்துலக நாளில் தாயகத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

இதனொரு அங்கமாக பிரான்சில் தலைநகர் பரிசின் Boulevard du Montparnasse பகுதியில் இருந்து மதியம் 2 மணிக்கு தொடங்குகின்ற நீதிக்கான பேரணி, நாடாளுமன்ற முன்றலை சென்றடையவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக நாடாளுமன்ற முன்றில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

நீதிக்காய் போராடும் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க பிரான்ஸ் வாழ் தமிழர்களை இந்நாளில் அணிதிரளுமாறு

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

அன்புரிமையோடு அழைப்பு விடுப்பதாக C’est Nous les Tamouls, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு,

தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர்

தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு
தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு


பகுதியாக இருப்பதோடு, இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில்
சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாகவுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கோர விபத்தில் தாய் ,மகள் பலி

    கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்

    இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று

    ,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்

    ,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்


    சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    கோர விபத்தில்
    கோர விபத்தில்
      Posted in இலங்கை செய்திகள்

      தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

      களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்

      உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

      உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

      களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க

      சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

      தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக

      கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்


      சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

        Posted in இலங்கை செய்திகள்

        தந்தையை குற்றி கொன்ற மகன்

        தந்தையை குற்றி கொன்ற மகன்

        இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு

        கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்

        வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்

        ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்

        இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

        ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

          இலங்கையில் தந்தை தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

          நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.

          பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

          இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

          இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார்.

          இந்த விடயம் தொடர்பில் தான், தனது தந்தையான சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

          “இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா ஒன்றை தயாரிக்க முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

          தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, பயன்படுத்தப்பட்ட பின்னர், வெளியில் வீசப்படும் பட்சத்தில், அதில் இருந்து மரங்கள் வளரும் வகையில் இந்த பேனா தயாரிக்கப்பட்டுள்ளது.

          முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா கூறுகிறார்.

          பேனாவின் அளவு சிறியதாக உள்ளதால், சிறிய விதைகளை மாத்திரமே பேனாவில் உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

          எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா நம்பிக்கை தெரிவித்தார்.

          தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, 96 சதவீதம் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்லும் என்றும் முதல் கட்டமாக, பேனாவில் மரக்கறி கன்றுகள், பூக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத செடிகள் போன்ற விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

          இந்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடி துளிர்விட ஆரம்பிக்கின்றன.

          இந்த பேனாவை, பின்புறமாக, மண்ணில் நட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பேனா, பயன்பாட்டிற்குப் பின்னர், மண்ணில் நடப்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கன்று வளரும் என அவர் தெரிவித்தார்.

          குறிப்பாக நடப்படும் பேனாவுக்கு, உரிய வகையில் நீர் சேர்க்கப்படுவதாக இருந்தால், அந்த செடி உரிய வகையில் வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா தெரிவிக்கிறார்.

          இந்த பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

          இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அண்மையில், இந்த பேனாவை தயாரித்த கிரிஷ்டினா, அவரது தந்தை சுகிர்தன் ஆகியோரை அழைத்து, ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்த அரசாங்கம் உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேனாவை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

          அதேபோன்று, இந்த பேனாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்துழைப்பையும் இலங்கை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.

          இலங்கையிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இந்த பேனாவின் பயன்பாட்டை அதிகரிப்பதே தமது நோக்கம் என அவர் கூறுகிறார். இதேபோன்று, பேனாவின் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமது மற்றுமொரு நோக்கம் என்று கே.சுகிர்தன் தெரிவித்தார்.

          இலங்கையை விடவும், வெளிநாடுகளில் வாழ்வோர் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்வதற்கு முக்கியத்தும் வழங்குவதாகவும் அதனால், வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இந்த பேனாவை மிக இலகுவாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

          எதிர்வரும் காலங்களில் இந்த பேனாவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கே.சுகிர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

            Posted in Uncategorized

            தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

            தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

            யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

            வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

            நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

            கோரமாக அடித்து கொன்றுள்ளார்

            எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

            இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

            Home » தந்தை » Page 2
            Posted in இலங்கை செய்திகள்

            தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்

            தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்

            இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து

            வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .


            ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்

            வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .

            இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்

            துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
            ஒரே குடும்பத்தில்

            இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

            தீயில் எரிந்து
            தீயில் எரிந்து
            Posted in இலங்கை செய்திகள்

            மகளை கற்பழித்த தந்தை கைது

            மகளை கற்பழித்த தந்தை கைது

            இலங்கை – கந்தளாய் பகுதியில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்த தந்தை செயலால் மனைவி முன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார் .

            இவ்வேளை அங்கு உறங்கிய 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
            .
            பாதிக்க பட்ட மகள் விடயத்தை தாயிடம் தெரிவித்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்