Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா
காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா
இலங்கை காலிமுக திடலில் சமீப நாட்களாக மக்கள் போராட்டம் வீழ்ச்சியடைந்த
நிலையில் காணப்பட்டது ,ஊரடங்கு ,மற்றும் இராணுவ குவிப்பின் காரணமாக மக்கள் வருகை மந்தமாக காணப்பட்டது
இன்று வழமை போல மக்கள் அதிகம் வருகை தந்து தமது எதிர்ப்பை காண்பித்த வண்ணம் உள்ளனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த போட்டத்தின் வாயிலாக இதுவரை கோட்டா பதவி விலகாது உள்ளமை
மக்களை மேலும் கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –
இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –
இலங்கையில் எதிர்வரும் முள்ளிவாய்கால் 18 ஆம் திகதி புலிகள் குண்டு தாக்குதலை
மேற்கொள்ள உள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்களை மிரட்டவும் ,அடக்கவும் குண்டு தாக்குதல்கள் அவசியமாக உள்ளது
அதனை புலிகள் பெயரில் நடத்த கோட்டா திட்டமிட்டுள்ளது ,இதன் ஊடக
அம்பலமாகியுள்ளது ,இல்லாத புலிகள் இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்த உள்ளனர்
என்ற தகவல்தமிழர்களை மேலும் பழிவாங்க கோட்டா திட்டம் போட்டு நகர்வதாக இந்த விடயங்கள் அம்பல படுத்துகின்றன
நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்
நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணிலினால் தீர்வு காண முடியும் என முன்னாள்
முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் ,இவர் அதனை செய்திட தாம்
நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க தயார் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்
இவ்வாறான கோரிக்கையை ரணில் ஏற்று அதனை நிறைவேற்றாது காலத்தை கடத்தி
செல்வார் என்பது ரணில் தந்திரமாக உள்ளதும் ,பின்னர் அவரை தூற்றுவதும் ,அதில் அங்கம் வகித்தவர்கள் வேலையாக உள்ளதும்
கடந்த கால கசப்புணர்வுகளாக படிந்துள்ளதை தமிழர்கள் அவதானிக்கலாம்
வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது
வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை
இடம்பெற்றது ,இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறி 230 பேரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்
இந்த கைது நடவடிக்கை போராட்ட காரர்களை மிரட்டும் நகர்வாக உள்ளது
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் ஆறு மாவாட்டங்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நிகழ்கால கலாநிலை காரணமாக ஆறு மாவாட்டங்களுக்கு மண்சரிவு
அபாயம் ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதன் பிரகாரம் Ratnapura, Kalutara, Kandy, Kegalle, Matara and Nuwara Eliya. பகுதியில் இந்த
அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது
டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை
டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க பட்ட நிலையில் பேரூந்து போக்குவரத்து முடங்கியுள்ளது ,
மீள இந்த சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப எரிபொருள் வழங்குதலை அரசு வழங்க வேண்டும் என்பது
போரூந்து ஓட்டுனர்கள் கருத்தாக உள்ளது
இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடம் ஆகும்
இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடம் ஆகும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள நாடு ஒரு வருடம்
பிடிக்கும் என பொருளியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து அதனை நடைமுறை படுத்த அதில் இருந்து மீள
இந்த கால எல்லை தேவையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்
மீளவும் மக்கள் தலையில் வரிகள் உயர்ரத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது.
மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்
மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண்
இலங்கை இராகலை நகரில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 35
வயதுடைய ஒரு பிள்ளையின் தயார் ஒருவர் அந்த உணவகத்தில் வேலையை
ஆரம்பித்து சில மணி நேரத்தில் அந்த உணவகத்தின் யன்னல் வழியாக குதித்துள்ளார்
இவரது இந்த தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு
செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு
இலங்கை முல்லைதீவு செம்மலை கடல் பகுதியில் நீராட சென்ற நபர்களில் மூவர் நீரில் இழுத்து செல்ல பட்டு காணாமல் போயிருந்தனர்.
இவர்களில் இருவரது சடலம் மீட்க பட்ட நிலையில் மூன்றாவது நபராது சடலம் மீட்க பட்டுள்ளது.
மேற்படி மக்கள் உயிர் பலி அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது- சிறி எம்பி
இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின்
பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
70 களில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டின் போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையில் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டபஜ ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக ஒரு ஆசனத்துடன் பாராளுமன்ற
வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.
அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு அதே ராஜபக்ச அரசியல் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார
மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறு தான் செய்திகள் வந்தன.
ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று
நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும் போது தான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.
அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத
ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டுசெல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.
இந்த நிலையில் புாராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி
அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது சிறைகளில் இருந்து தப்பித்து சென்ற
கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதனால் தற்போது இந்தியா கடலோர பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது
தப்பியவர்களை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
இலங்கைக்கு இந்தியா 65 மெட்ரிக் தொன் யூரியா
இலங்கைக்கு இந்தியா 65 மெட்ரிக் தொன் யூரியா
இலங்கையின் அவசரகால நெருக்கடியை தீர்க்கும் முகமாக இந்தியா 65.000 மெட்ரிக்
தொன் எடையுள்ள யூரியோவை வழங்கியுள்ளது
இவை போதுமானதாக இல்லாத பொழுதும் ஒரு கண்துடைப்பிற்கு அரசு இவற்றை பயன் படுத்தி கொள்கின்றமை குறிப்பிட தக்கது
எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
இலங்கையில் நாவின்ன சாந்தி அருகில் மக்கள் எரிபொருளை தரும்படி கோரி
போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
இதனால அந்தவழி சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது ,
பிரதமர் மாறிய நிலையிலும் மக்களின் தற்கால நெருக்கடிகளை இவர்களினாலே தீர்க்க முடியாது போயுள்ளது குறிப்பிட தக்கது
ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம். அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம்.மனோ கணேசன்
ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம். அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம்.
- தமிழ் முற்போக்கு கூட்டணி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. ஆனால், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம். பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.
தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம். ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.
இது தொடர்பில் கூட்டணி சார்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ரணில் விக்கிரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.
நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது. இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20ஐ வாபஸ் வாங்கி,
மீண்டும் 19ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச
பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை.
இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
அணைத்து எம்பிகளுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தல்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் பொழுது அமைச்சர்கள் எம்பிக்கள் வீடுகளும் தாக்குதளுக்கு உள்ளாக்க பட்டன
,இதனை அடுத்து தற்போது ஒவ்வொரு எம்பிக்கும் ஆறு போலீசார் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவு வழங்க பட்டுள்ளது
இது அணைத்து கட்சி எம்பிகளுக்கும் உள்ளடங்கும் என்பது குறிப்பிட தக்கது
அமைச்சும் வேண்டாம் – அரசும் வேண்டாம்- மைத்திரி
அமைச்சும் வேண்டாம் – அரசும் வேண்டாம்- மைத்திரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை
அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்கபோவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
கீழ் அமையப்போகும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டா,மகிந்த ,ரணில் ,சந்திரிக்கா,சர்வதேச மன்றில் நிறுத்துங்க – சிவாஜிலிங்கம் – வீடியோ
இலங்கையில் தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட
சந்திரிக்கா,ரணில் ,மகிந்தா,கோட்டா ஆகியோரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி
தண்டிக்க வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினரா சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் அணியில் இருந்து ரணில் கட்சியுடன் இணைந்து செயல்பட இருபத்தி ஐந்து பேர்
தயார் நிலையில் உள்ளனர்
இவ்வாறு செல்வோர் அனைவரும் ரணில் அணியினர் என சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்
சஜித்தின் வெற்றியை தடுத்து ,அந்த கட்சியை உடைக்கும் நிலையில் ரணில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட
தக்கது.
ரணில் வீட்டே போ என்ற கிராமம் உருவாக்கம் – கொதித்தெழுந்துள்ள மக்கள்
ரணில் வீட்டே போ என்ற கிராமம் உருவாக்கம் – கொதித்தெழுந்துள்ள மக்கள்
இலங்கையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்டுள்ள நிலையில் இவர் மகிந்தவின் மகுடி என தெரிவிக்கும் மக்கள் ரணில் கோ கமே என்ற கிராமத்தை ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊரடங்கு பிறப்பிக்க பட்டு இராணுவத்திற்கு துப்பாக்கி சூடும் அதிகாரம் வழங்க பட்டுள்ள நிலையிழும் மக்கள்
தமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வது குறிப்பிட தக்கது.
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம்
இலங்கையில் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின படுகொலையின் நினைவு நாள் அனுஷ்டிக்க படுகிறது
இம்முறை மக்கள் அதிகம் கலந்து கண்டு தமது மக்களுக்கு அகவணக்கம்
செலுத்துவார்கள் என எதிர்பார்க்க படுகிறது






