Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு ,எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்
அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடித்தம் செய்யாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீற்றர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40-100 கிலோமீற்றர் வரை இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையும் அளிக்க வேண்டும்.
100-150 கிலோமீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாட்களும், 150 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 2 நாட்களும் அவகாசம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
இருப்பினும், இதற்காக, பணியாளர்கள் உரிய விடுமுறைக் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக நிறுவன தலைவரிடம் வழங்க வேண்டும்.
மேலும், விசேட விடுமுறைக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்புக் காலத்தைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு நிறுவனங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது கந்தானை-கந்தேவத்த பகுதியில் நேற்று (02) மாலை திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.
இதன்போது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள்
தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, புத்தளம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும்
விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும்
விருந்து கொடுத்தால் எம்.பி பதவி பறிபோகும் ,நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை
எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க,
“வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளன.
“இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், அத்துடன், பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தெரிவித்தார்.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை கண்டியில் உள்ள ஹோட்டல்கள் என்று கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது என்பது சம்பந்தப்பட்டவரின் கவுன்சிலர் பதவியை உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்று, கண்காணிப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்
அறுகம்பே தாக்குதல் திட்டம் மேலும் பலர் கைது
அறுகம்பே தாக்குதல் திட்டம் மேலும் பலர் கைது
அறுகம்பே தாக்குதல் திட்டம் மேலும் பலர் கைது ,அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர்.
அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய் ,செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோதும், 7 கிலோ ஹெரோயின் மற்றும் 1 கிலோ ஐஸ் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினர்.
குறித்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, செவனகல பிரதேசத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
200 கோடி ரூபா பெறுமதியான 54 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தொகை, செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள கோழிக்கூடு ஒன்றிற்கு அருகில் மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த வீட்டில் வசிக்கும் கணவன், மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்த நிலையில், குறித்த போதைப்பொருளை பொரலஸ்கமுவில் கைதான நபர் புதைத்து வைத்தது அவர்களின் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ள பெண் அந்த நபரின் சகோதரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும் ,இந்த நாட்டிலே தமிழர்கள் உரிமைகளைப்பெற்று வாழவேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும், தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு
நீதிகிடைக்க வேண்டுமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அவற்றினை பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று (01) மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் மூல வாக்களிப்பின் ஊடாக மக்கள் வடக்கு கிழக்கு பூராவும் இலங்கை தமிழரசு கட்சிக்கு அதிகளவான வாக்குகளை அளித்திருக்கிறார்கள் எங்களுடைய மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் காலை
முழுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே ஆசிரியர்களாக இருக்கட்டும், ஏனைய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இம்முறை தங்களது வாக்கு தமிழரசு கட்சிக்கு கட்சிக்கு நாங்கள் அளித்திருப்பதாக பெருமளவாக கூறி இருக்கிறார்கள்.
எங்களுடைய இம்முறை ஒரு பாரிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இந்த பாரிய வெற்றியை அடைவதே முதலாவது கட்டத்தை நாங்கள் அடைந்திருக்கின்றோம் ஏனென்றால் தபால் மூல
வாக்கெடுப்பின் ஊடாக வாக்களித்தவர்கள் நிச்சயமாக தங்களுடைய பிரதேசங்களில் ஏனைய தரப்பினரும் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த வகையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு அமோகமான வெற்றி பெற காத்துக் கொண்டிருக்கின்றது ஏனைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவதானித்த அளவிற்கு மக்கள் மத்தியில்
சென்று ஒரு பரப்புரை கூட்டம் கூட நடத்திக் கொள்ள முடியாத அளவிற்கு பல கட்சிகள் பல வேட்பாளர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
மாவட்டம் ஒரு மிகப்பெரிய மாவட்டம் வெறுகல் தொடக்கம் துறைநீலாவனை வரை நமது படுவான் கரையையும் இணைத்தால் 1,200 கிராமங்கள் எமக்கு இந்த பரப்புரைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதிக்குள் இந்த
அனைத்து கிராமங்களுக்கும் சென்று நாங்கள் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் முடிந்த வரைக்கும் எங்களுடைய மக்களை தற்பொழுது வர இருக்கும் தேர்தலுக்கான பரப்புரை இன்னமும் 11 நாட்கள் இருக்கின்றது.
மக்கள் இம்முறை தமிழரசி கட்சிக்கு அதிகளவான வாக்குகளை வழங்குவதற்கு அதிக காரணங்களை கூறுகின்றார்கள் அதற்கான
காரணங்கள் இந்த மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த காலத்தில் மக்களுடைய அதிகளவான வாக்குகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள்.
தங்களை தங்களது குடும்பங்களை வளர்த்துக் கொண்டார்கள் தங்களுடைய நெருக்கமானவர்களுக்கு பணம் உழைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுத்தார்களே தவிர மக்களுக்கு பெரும்பாலான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.
அந்த வகையில் தமிழரசு கட்சி மக்களுக்கு சொல்லும் விடயம் தமிழரசு கட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தங்களுக்கு ஒரு பெருமையை
தரும் வாக்காகவே அமைந்திருக்கின்றது ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இனம் ஒரு அதி சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை போன்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஒருவகையாக அரசாங்கத்தினுடைய பேரினவாத சக்தி உடைய குடியேற்றத் திட்டங்கள் இன்னும் ஒரு பக்கத்தில் காணி அபகரிப்பு, தொல்பொருள் தொடர்பான விடயங்களில் பல பிரச்சனைகள், நில ஆக்கிரமிப்பு, மகாவலி
அதிகார சபை, வன இலாகா, கரையோர பாதுகாப்பு பிரிவு இவ்வாறாக அரச திணைக்களங்களை வைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுடைய
காணிகளை அபகரித்துக் கொண்டு சுவிகரித்துக் கொண்டு இருந்தது நாங்கள் அனைவரும் பார்த்த விடயம்.
ஆகவே இந்த விடயங்களுக்கு எல்லாம் மக்களோடு நின்று போராட்டங்களை செய்து மக்களுடைய பிரச்சினைகளை குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பேசி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஜனாதிபதியுடன் பேசி
வேலைத்திட்டங்களை மக்கள் இட்ட வாக்கினால் தான் செய்யக் கூடியதாக இருந்தது என்பதனை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயங்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க முடியாது நாங்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளிகளில் என்று சொன்னது இவ்வாறான விடயங்களை
பாதித்துக் கொண்டிருந்த மக்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளி போன்று நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் தான் இந்த போராட்டங்கள் போன்ற விடயங்களின் ஊடாக அந்த நோயாளியை உயிர்
தப்ப வைத்து கோட்டா ரணில் ஆட்சி காலத்தை கடக்கும் வரைக்கும் அந்த நோயாளியாக பார்த்தால் உயிர் தப்ப வைத்திருக்கின்றோம்.
மீண்டும் தமிழினம் இந்த மண்ணிலே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் கௌரவமாக வாழ வேண்டும் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை
அமைக்க வேண்டும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே அரசியல் தீர்வை அடைய வேண்டும் பொறுப்பு கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நில அபகரிப்புகள் இடம் பெறக் கூடாது இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்றால் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம்தான் செய்ய முடியும்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அதி சிகிச்சை பிரிவில் இருந்து எவ்வாறு நோயாளிகளை காப்பாற்றினோமோ அந்த நோயாளியை மீண்டும் வீட்டிற்கு வரும் வகையான வேலை திட்டங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால் எங்களுடைய மக்கள் சிலர் தவறான முடிவுகளை எடுத்து மீண்டும் அமைச்சர் வேண்டும் என்று சொன்னால் அது சிகிச்சை பிரிவிலே இருக்கும் நோயாளிகளை போன்ற வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் இனம் நேரடியாக
மோட்ச்சரைக்கு சென்று உயிரிழக்கும் வேலையில் தான் அவர்கள் செய்வார்கள் அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்
இன்னமும் தெளிவுபடுத்தல்களை நாங்கள் எதிர்வரும் பாரங்களிலேயே வழங்க இருக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு இந்த மாவட்டத்திலே நான்கு ஆசனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்ற வெற்றி இதேபோன்றுதான் வடக்கு
கிழக்கு பூராக அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசு கட்சி அமோகமான வெற்றி அடையும் என தெரிவித்தார்.
நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
நானுஓயா விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல் ,நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர்
காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .
இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த
போதும் லொறி சாரதி லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும்
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான
பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான
பதுளை விபத்து இடம்பெறுவதற்கு முன் பதிவான ,பதுளையில் நேற்று (1) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
23 வயதுடைய மாணவிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதில் ஒருவர், நிவிதிகல, தொலபுகமுவ, பஹலகந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இசுரி உமயங்கனா என்ற மாணவியாவார்.
என்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல என்ற உயிரிழந்த மறைய மாணவி, குருநாகல் உனகொலகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (1) இரவு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கயான் குரே தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் உயிரிழந்த இரு மாணவிகளினதும் இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற
விபத்துக்குள்ளான பேருந்து அதிவேகமாக பயணிக்கும் காட்சி கார் ஒன்றின் டேஷ் கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது
IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது
IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வு
பற்றி கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே; நாங்கள் இலங்கையில் ஒரு பணியை மேற்கொண்டோம், அங்கு நாங்கள் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது, மேலும் இந்த ஆதாயங்கள்
பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரை பெற்ற வெற்றிகளைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
புதிய அரசாங்கம் IMF-ஆதரவு திட்டத்திற்கு, குறிப்பாக நிதி மற்றும் கடன் இலக்குகள் தொடர்பாக முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீனிவாசன் மேலும் வலியுறுத்தினார்.
“அடுத்த மறுஆய்வு பற்றிய விவாதங்களைத் தொடர இலங்கையில் இருந்து ஒரு குழு வாஷிங்டனில் இருந்தது, பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்றாவது மறுபரிசீலனைக்காக இந்த பேச்சுவார்த்தைகளை தொடர இலங்கைக்கு திரும்புவதே எங்களின் பணியாகும்” என்று அவர் கூறினார்.
மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது ,போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மகிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.
நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ.
எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.
2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.
இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்
34 வருடங்களுக்கு பின் போக்குவரத்திற்காக அனுமதி
34 வருடங்களுக்கு பின் போக்குவரத்திற்காக அனுமதி
34 வருடங்களுக்கு பின் போக்குவரத்திற்காக அனுமதி ,யாழ்ப்பாணம், பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன்
மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது அங்கஜன் ,தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் நேற்று (31) பிற்பகல் யாழ். நாவாந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
9 பாராளுமன்ற ஆசனங்களாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது 6 ஆசனங்களாக குறைந்து இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் வாக்களர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை.
கிராமங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள் ,கல்முனை முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும். இந்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள். தமிழர்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன்
இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லிம், தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு பிரதேச செயலகம் இயங்குவது நாட்டின் இறையாண்மைக்கும் இன நல்லுறவிற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்து ஒரு இனத்திற்கு என்று பிரதேச செயலகம் ஒரு சமூகத்திற்கு என்று பிரதேச செயலகம் இல்லாமல் இந்த பிரதேச
செயலகத்தின் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்து பிரதேச செயலகத்தினை ஒரே ஒரு பிரதேச செயலகமாக மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என திகாமடுல்ல மாவட்டத்தின் சுயேட்சைக்குழு 21 இல் போட்டியிடும் செயற்பாட்டாளர் றியாஸ் தெரிவித்தார்.
அம்பாறை, திகாமடுல்ல மாவட்டத்தின் சுயேட்சைக் குழு – 21 இல் கைக்கோடாரி சின்னத்தில் இளம் தொழிலதிபர் டி.எம்.எம் ஹினாஸ் தலைமையில் கல்முனை,
செயிலான் வீதியில் அமைந்துள்ள சுயேட்சைக் குழுவின் தேர்தல் காரியாலயத்தில் நேற்று (31) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு ஒன்றினை தெரிவு செய்து தேர்தலில் களமிறங்கியுள்ளோம். தேர்தலில் சுயேட்சைக்குழுக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக களமிறக்கப்பட்ட போதிலும் எமது
10 அங்கத்தவர்களை கொண்ட இளைஞர்கள் சுமார் ஆயிரக்கணக்கான வாக்குகளை கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் ஊடாக எங்களுக்கு நடந்த அநீதிகளையும் துரோகத்தையும் முறியடிக்கும் விதமாக ஒன்று சேர்ந்திருக்கின்றோம்.
இதற்காக எமது சுயேட்சை குழு -21 இற்கு வாக்களிப்பதன் ஊடாக எம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகளை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
பாராளுமன்ற ஆசனம் ஒன்றினை நாங்கள் பெறுவதென்றால் சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும். அந்த வாக்குகளை இறைவன் எங்களுக்கு
தந்தால் நாங்களும் ஒரு ஆசனத்தை பெறக் கூடிய வாய்ப்பு இருக்கும். தற்போதைய தேர்தல் களம் அவ்வாறு இல்லை.
எமது பிரதிநிதித்துவம் எமது வாக்கு பிரிந்து செல்லக்கூடிய நிலை தான் இருக்கின்றது. இதனால் நாங்கள் ஒரு முக்கியமான தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்கு கூடி இருக்கின்றோம். 8 அம்ச கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் பாராளுமன்ற
தேர்தலில் நாங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகி உள்ளார்.
அவர் பாராளுமன்றத்தில் அதிக ஆசனம் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு முடிவினை எடுத்துள்ளோம். அதன்படி எமது சுயேட்சைக்குழு 21 ஆனது 8 அம்ச கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்துள்ளது.
எமது 8 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி நாங்கள் தேசிய மக்கள் சக்தியை கல்முனை
தொகுதியில் வெற்றி பெற வைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த 8 அம்ச கோரிக்கையில் முதலாவது கோரிக்கையாக கல்முனை சட்டவிரோத செயலக விவகாரம்.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள். தமிழர்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லிம் தமிழ்
ஆகிய இனங்களுக்கு இரண்டு பிரதேச செயலகம் இயங்குவது நாட்டின் இறையாண்மைக்கும் இன நல்லுறவிற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்து நாட்டின் ஜனாதிபதி அவர்கள். இனம் மதம் ஊழல் ஒரு இனத்திற்கு என்று பிரதேச செயலகம் ஒரு சமூகத்திற்கு என்று பிரதேச செயலகம் இல்லாமல் இந்த பிரதேச செயலகத்தின் பிரச்சினையை
உடனடியாக நிவர்த்தி செய்து பிரதேச செயலகத்தினை ஒரே ஒரு பிரதேச செயலகமாக மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த கோரிக்கையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி
பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி
பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி ,பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பதுளை மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் (துன்ஹிந்த நுழைவு வீதிக்கு அருகில்) பேருந்து கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 35 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை ,கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்
“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல. வாக்குகளை பெற்று கொழும்பில் இருக்கும் தலைவர்கள் அல்ல.
அதனால்தான் எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை. அரசாங்கம் தரப்போவதும் இல்லை.
கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள். மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள்.
இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை. கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் என்றார்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மீகொடை, படவல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று (31) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், வர்த்தகரை அச்சுறுத்துவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமருக்கும் இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு ,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்ப்சன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தரநிலைகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக உரையாடலை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனம்
செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிகள் மற்றும் பரஸ்பர உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தொழில் அமைச்சு வழங்கிய ஆதரவுக்கு திருமதி சிம்சன் நன்றி தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களை, குறிப்பாக
பெண்களைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர் சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய முக்கியமான தேவை மற்றும் பாலின சம்பள இடைவெளியைக்
குறைப்பதன் மூலம் பெண்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்து இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அசித செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட இலங்கை அரசின் பிரதிநிதிகள், பிரதமரின் மேலதிக செயலாளர் மகிந்த
குணரத்ன, தொழில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி. வசந்தன் மற்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் திலினி குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ
வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.
இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த
3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு
அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு
அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு ,மயூரன் யோகபாலன் ஆகியோர் அர்ச்சுனா முதுகில் குத்திய துரோக செயல்கள் இடம்பெற்றுள்ளன .
இவர் இவ்வாறு செய்வார் என முதலாவது ஊடக சந்திப்பில் இருந்தே நாம் அடையாளம் கண்டு கொண்டோம் .அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மயூரன் ,யோகபாலனுக்கு பணம் அனுப்பியவர்கள் மொத்த பண தொகை அறிந்திட உங்கள் பற்று சீட்டுக்களை வன்னி மைந்தன் வாட்சாப்புக்கு அனுப்பி வையுங்கள் மக்களே .
துரோகிகளை நாம் அடையாளம் காண்டு கொள்ள இவை பேருதவியாக இருக்கும் ,எனவே மக்களே காணொளியை முழுமையாக பாருங்கள் .வாட்ஸாப் 0044 7536707793
இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்
https://www.youtube.com/watch?v=FyNon0o1PeA
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி |
அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி ,மக்கள் விடுதலைக்கு போராடி வரும் மாவீரன் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்ய பட்டுள்ளார் என்ற விடயம் மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
என்ன நடந்தது ,என்பது தொடர்பாக காணொளியில் விபரம் ,பார்க்க மக்களே
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை



























