பெண் வெட்டிப் படுகொலை

Spread the love

பெண் வெட்டிப் படுகொலை

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில் தனிப்பட்ட குரோதம் காரணமாக. பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளாரென பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், கொலையுண்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 25

வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ள பொலிஸார், கொலையுண்ட பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேட்டியொன்றில் முகத்தைக் கட்டி, சரமாரியாக கத்தியால் வெட்டி இக்கெலையை

செய்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசொதனைக்காக நுவெரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *