அர்னால்டு
Posted in Uncategorized

கார் விபத்தில் சிக்கிய நடிகர்

கார் விபத்தில் சிக்கிய நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
அர்னால்டு


பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின.

மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய

காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

அர்னால்டு

விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பெண்

ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Posted in Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார

அமைச்சு தெரிவித்துள்ளது

    Posted in Uncategorized

    யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

    யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

    யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நடமாடும் மக்களிடம் நகைகளை இலக்கு வைத்து

    கொள்ளையடித்து வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது

    நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி குற்ற செயல் தொடர்பாக போலீசார் மேற்க்கண்ட

    கண்காணிப்பு தேடுதல் வேட்டையின் பொழுதே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

      மனித உரிமை
      Posted in Uncategorized

      இலங்கை மனித உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

      இலங்கை மந்த உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

      மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.

      மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக

      ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பாக சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான

      நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.

      உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித

      உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை

      மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

      2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

      இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19

      தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித

      உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்

      நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம்

      பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

      மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை

      விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

      சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாக நாம்

      குறிப்பிட்டுள்ளோம். அவர்களுடனான எமது தொடர்ச்சியான தொடர்புகளைத் தொடர்ந்துள்ள அதே வேளையில், இலங்கையுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்டையும் ஊக்குவித்துள்ளோம். விஜயங்களை மேற்கொள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள்

      சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட ஆணையுடையவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் போது, நாம் அனைத்து வகையான உள்நாட்டு உரையாடல்களையும் அணுகுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம்,

      ஆலோசனை மற்றும் கரிசனைகளுக்கு திறந்த நிலையில் இடமளித்துள்ளோம். அபிவிருத்தி நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட தொடர்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எமது உள்நாட்டு சிவில் சமூகப்

      பங்காளிகளுடனான எமது தொடர்புகளை நாம் குறிப்பாக மதிக்கின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை அடைந்து

      கொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஒரு பரந்த முனையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்கையின் புலம்பெயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்ளோம்.

      மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக, 2021 செப்டெம்பர் மாத சபை அமர்வில் நாம் குறிப்பிட்டது போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் சபையுடன் இலங்கை தனது நீண்டகால ஒத்துழைப்பைத் தொடரும். உள்நாட்டு

      செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் வழங்குகின்றோம். வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது போல, ‘எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் திறந்த

      நிலையில் காணப்படும் அதே வேளை, பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை

      அடைந்து கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’. தீர்மானம் 46/1 இல் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது சபையில் பிளவுக்கு வழிவகுத்தமையானது

      தேவையற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்கையில் அரசியல்மயமாக்கல் மற்றும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என இலங்கை கருதுகின்றது

      தீ குளித்த
      Posted in Uncategorized

      வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

      வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

      இலங்கை தர்மபுரம் பகுதியில் உள்ள நாதன் குடியிருப்பு பகுதியில்


      தாய் மற்றும் அவரது 17 வயது மகள் ஆகியோர் தீயில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்

      இது கொலையா அல்லது தற் கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        ஜப்பான் நீர்மூழ்கி
        Posted in Uncategorized

        ஜப்பான் நீர்மூழ்கி 80 வருடங்களின் பின்னர் கண்டு பிடிப்பு

        ஜப்பான் நீர்மூழ்கி 80 வருடங்களின் பின்னர் கண்டு பிடிப்பு

        இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பலான சுங் 80 இராணுவ

        சிப்பாய்களுடன் அவுஸ்ரேலிய கடல் அருகில் வைத்து காணாமல் போனது

        அவ்விதம் காணாமல் போன அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டது

        அந்த கப்பலே அவுஸ்ரேலிய கடற்படையால் தற்போது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது


        மீட்க பட்ட கப்பல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        1942 ஆம் ஆண்டு இந்த கப்பல் மூழ்கடிக்க பட்டது என குறிப்பிட படுகிறது

          மிரட்டும் சீனா
          Posted in Uncategorized

          சீனா கடலுக்குள் அமெரிக்கா கப்பல் – மிரட்டும் சீனா

          சீனா கடலுக்குள் அமெரிக்கா கப்பல் – மிரட்டும் சீனா

          தென் சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவின் மிதக்கும் போர் கப்பல் அணிகள்
          பயணித்துள்ளன

          இந்த கப்பல்கள் நுழைவை அடுத்து சீனா அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது

          கடந்த முறை இவ்விதம் நுழைந்த அமெரிக்கா கப்பல் ரூமில் சீனாவின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தமை பதட்டத்தை ஏற்படுத்தியது

          அது போன்ற தாக்குதல்களை சீனா தொகுக்க கூடும் என அஞ்ச படுகிறது

            வெடித்த குண்டு
            Posted in Uncategorized

            வெடித்த குண்டு 2 பேர் மரணம் – 26 பேர் காயம்

            வெடித்த குண்டு 2 பேர் மரணம் – 26 பேர் காயம்

            கிழக்கு பாகிஸ்தான் லாகூர் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் குண்டு

            ஒன்று வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் 26 பேர்

            படுகாயமடைந்துள்ளனர்
            தலிபான்கள் வசம் ஆப்கான் வீழ்ச்சி உற்றதன் பின்னர் பாகிஸ்தானில் தொடர் குண்டுகள்

            வெடித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு

              கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு

              கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

              கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
              உலக சுகாதார அமைப்பு

              உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

              கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளது.

              ஒமைக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் இது லேசான நோய் என்று சொல்வது தவறாக வழிநடத்துகிறது. ஒமைக்ரானும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது. பலர் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

              இவ்வாறு அவர் கூறினார்.

              இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசினார்.

              அப்போது அவர், “கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் உலகம் இன்னும் உள்ளது. உலகம் முழுவதும் உண்மையில் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

              தொடர்ந்து அவர் கூறும்போது, “ஒமைக்ரான் தொற்றை பொறுத்தமட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியில் ஒரு அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்த முடியும். ஒமைக்ரான் கொரோனாவுக்கான நேரடி தடுப்பூசியாக இருக்கப்போகிறதா என்றால் இது ஒரு திறந்த கேள்வி. ஏனென்றால் புதிய உருமாற்றங்கள் வெளிவருகின்றன” எனவும் கூறினார்.

              எனவே “கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணித்து கூறி விட முடியாது” என்று குறிப்பிட்டார்.

                நிக்கி கல்ராணி.
                Posted in Uncategorized

                ஆடைகளைத் திருடியதாக நடிகை மீது புகார்

                ஆடைகளைத் திருடியதாக நடிகை மீது புகார்

                ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்‘ திரைப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

                அதனை தொடர்ந்து அவர் ‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா

                வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

                தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் வசித்து வரும் அவர் அண்மையில் அண்ணாசாலை பொலிஸ் நிலையத்தில் ”தனது வீட்டில் பணிபுரிந்து வந்த தனுஷ்

                என்பவர் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் எனவும் குறிப்பாக தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கெமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

                இதனையடுத்து பொலிஸார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

                இதனையடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை பிடித்து விசாரித்த பொலிஸார் குறித்த நபரிடமிருந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

                இந்நிலையில் பொருட்கள் திரும்ப கிடைத்ததை அடுத்து தனுஷ் மீது கொடுத்த வழக்கை வாபஸ் பெற நிக்கி கல்ராணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized

                  கோட்டாவால் தமிழ் மக்கள் அவமதிப்பு

                  கோட்டாவால் தமிழ் மக்கள் அவமதிப்பு

                  நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை

                  செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.

                  பாராளுமன்றத்தில், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நேற்று (19) உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

                  இதன்போது அவர் மேலும் தெரிவித்ததானது,

                  ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் நடத்த அதிக நேரம் வேண்டும் என இறுதியாக கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் வாதிட்டோம். ஜனாதிபதியின் உரை மீது

                  அதிக நேரம் விவாதிக்க நேரிடும் என கருதினோம். ஆனால் ஜனாதிபதியின் உரையை கேட்ட பின்னர், நாம் அதிக நேரம் கேட்டு வாக்குவாதப்பட்டது வீணானது என்றே கருதுகின்றேன்.

                  கொள்கை என ஒன்றுமே இல்லாத உரை என்றே அவரது உரையினை கூற வேண்டும். அவரது உரையில் பிரச்சினைகள் பற்றி கூறிய போதிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதனையும் கூறவில்லை.

                  அவரது உரையில் ஒரு சில விடயங்களை கூறினார், குறிப்பாக ‘ மிக மோசமான நாணய நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளோம், பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் நாம்

                  உள்ளோம், இதற்கான தீர்வுகளை காண கடந்தகால அரசாங்கங்கள் தோல்விகண்டுள்ளதாக’ கூறினார். இறுதியாக இருந்த அரசாங்கத்தை மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களையும் ஜனாதிபதி குறை கூறியுள்ளார்.

                  இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களில் இரண்டு அரசாங்கங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக தலைமை தாங்கினார். ஆகவே இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு

                  மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் காரணம் என்பதையும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது என்பதையே ஜனாதிபதி கூறியுள்ளார்.

                  பிரச்சினையை இனங்கண்டு அதனை மஹிந்த ராஜபக் ஷவின் தோளில் சுமத்திவிட்டுள்ளாரே தவிர இந்த நெருக்கடிக்கு தீர்வு என்ன, எந்த பாதையில் பயணித்து இந்த நெருக்கடிகளில் இருந்து மீளப்போகின்றோம் என்ற தீர்வுத்திட்டங்களையும் முன்வைக்க தவறியுள்ளார்.

                  அவரது உரையினை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில குறுஞ்செய்திகள் வெளிவந்தன, அதனை பார்க்கும்போது மேலும் 500 மில்லியன் டொலர்கள் எமது பிச்சை பாத்திரத்தில் போடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதுவொரு நாளாந்த செயற்பாடாக மாறிவிட்டது.

                  கையில் பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு யாரும் பிச்சையிடுவார்களா என காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று எமது நிலையாக மாறியுள்ளது. அடுத்த கட்டத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பது தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

                  அவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் உரையில் எதுவுமே இல்லாது ஒரு சில காரணிகளை கூறிச் சென்றுள்ளார்.

                  அதேபோல் இந்த பாராளுமன்றத்தில் வெவ்வேறு மக்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு ஆணையுடன் உள்ளனர் என்பதை கூறியுள்ள போதிலும் வடக்கு கிழக்கு விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

                  நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார்.

                  எமது மக்கள் சுய நிர்ணயம், சுய ஆட்சி, ஆளுகையை பகிர்ந்துகொள்ளும் ஆட்சி என்பவற்றையே கேட்டு நிற்கின்றனர். ஆனால் வெறுமனே வசதிகளை மட்டும் எமது மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனை செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுவதும், நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு எனவும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு இதுவென்பதையும் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

                  வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது சித்தார்ந்தத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

                  சித்தார்ந்தம் என்பது எமது கொள்கையாகும், அது எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணையாகும், அதனை ஓரமாக வைத்துவிட்டு உங்களின் கருத்துக்கு செவிமடுக்க முடியாது. எமது மக்கள் எமக்கு கொடுத்த ஆணைக்குழு அமையவே எமது செயற்பாடுகள் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

                  தீ குளித்த
                  Posted in Uncategorized

                  ஆலயத்தில் தீ குளித்த இளம் பெண் மரணம்

                  ஆலயத்தில் தீ குளித்த இளம் பெண் மரணம்

                  கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு

                  நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                  உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்றும் அவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

                  இந்த நிலையில், தீக்காயங்களுக்கு சிகிச்சைப் பெறாமல் வீட்டில் இருந்த அந்த பெண் மறுநாள்

                  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

                    வெடித்து சிதறிய பயணிகள் ரயில்
                    Posted in Uncategorized

                    வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

                    வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

                    பாகிஸ்தான் Jaffar Express பயணிகள் ரயில் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில்

                    அந்த ரயில் முற்றாக சேதமடைந்தது

                    குண்டு வெடித்த பொழுது அந்த ரயில் தீயில் எரிந்துள்ளது ,இவ்வேளை அதற்குள் இருந்த பலடசின் மக்கள் எரிந்து பலியாகியுள்ளனர்

                    மேலு பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் ,குறித்த குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      போர் ஒத்திகை
                      Posted in Uncategorized

                      ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

                      ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

                      மத்திய தரைக் கடல் பகுதியில் சீனா ,ஈரான் ,ரஷியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பெரும் போர்

                      ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளன

                      இந்த ஒத்திகை மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                      ,எனினும் இந்த கூட்டு நகர்வின் ஊடக அவை மிரண்டு விடுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                        Posted in Uncategorized

                        மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

                        மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

                        சோமாலியா Mogadishu பகுதியில் தற்கொலை குண்டுதாரி நடத்திய திடீர் மனித வெடிகுண்டு

                        தாக்குதலில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                        தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                          பிரிட்டன் கடற்படை
                          Posted in Uncategorized

                          பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

                          பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

                          பிரிட்டனுக்குள் பிரான்ஸ் கடல் வழியை பயன்படுத்தி படகு மூலம் அகதிகள் நுழைந்து வரும்

                          நிலையில் அதனை தடுக்கும் முகமாக பிரிட்டன் கடற்படையினர் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளன

                          பல நீரூந்து விசை படகுகள் இந்த விசேட பணியில் ஈடுபடுத்த படவுள்ளன

                          இந்த படையினர் ஈடுபடுத்த பட்டாலும் இந்த அகதிகள் வரவை தடுத்து நிறுத்த முடியுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                          அகதிகள் விடயம் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ள நிலையில் இந்த நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன

                            விமானங்கள் திடீர் இரத்து
                            Posted in Uncategorized

                            அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

                            அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

                            அமெரிக்காவில் இடம்பெற்று வரும் பாரிய பனிமழை புயல் காரணமாக 2700 பயணிகள்

                            விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

                            மேலும் 1500 விமானங்கள் தாமதமாக தரை இறக்க பட்டன

                            தொடர்ந்து சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் மேலும் விமான பயணங்கள் தடை படலாம்

                            என எதிர்பார்க்க படுகிறது

                              விமானம் தாக்கி அழிப்பு
                              Posted in Uncategorized

                              புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு

                              புலிகள் பாணியில் இராணுவ சரக்கு விமானம் தாக்கி அழிப்பு

                              ஏமன் நாட்டு இராணுவ படைகள் Shabwah விமான நிலையத்தில் தரித்து நின்ற ஐக்கிய அரபு

                              எமிரேட்ஸ் விமானத்தை தாக்கி அழித்துள்ளதாக அறிவித்துள்ளது

                              24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரண்டாவது மிக பெரும் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

                              ஏமன் நட்டு இராணுவத்தினரை அழிக்கும் முகமாக சவுதியுடன் இணைந்து ஆயுதங்களை கப்பல்

                              மூலம் அனுப்பிய நிலையில் , இந்த பழிவாங்கும் இராணுவ தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன


                              இந்த தாக்குதலானது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                சீமான் வீட்டில்
                                Posted in Uncategorized

                                சீமான் வீட்டில் உளவுத்துறை// சீமான் சிக்கியது எப்படி? video

                                சீமான் வீட்டில் உளவுத்துறை// சீமான் சிக்கியது எப்படி? video

                                இதில் அழுத்தி காணொளி பாருங்க

                                அமெரிக்கா இராணுவம்
                                Posted in Uncategorized

                                ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

                                ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

                                ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடராக நாள் தோறும் தாக்குதல்கள் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளன

                                ஈரானிய ஆதரவு குழுக்கள் இந்த தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                Basra மாகாணத்தின் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில்


                                கவச வண்டிகள் தாக்கி அழிக்க ,பட்டுள்ளன ,இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உரிய இழப்பு தொகை வெளியிட படவில்லை