Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்
பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்
பிரிட்டனில் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் புதிய சட்டம் அறிமுக படுத்த படுகிறது
,இதன் பிரகாரம் வண்டிகளை ஓட்டுபவர்கள் கைபேசி பேசியவாறு செலுத்தினால்
அவர்களுக்கு இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிடுவதுடன் ,ஆறு புள்ளிகள் நிரந்தரமாக பறிக்க படும் என்ற புதிய சட்டம் அறிமுகமாகிறது
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த விடயம் அமூல் படுத்த படுகிறது
வேக சாலைகளில் மேலே பொருத்த பட்டுள்ள கமராக்கள் மூலமும் இந்த அவதானிப்பு செலுத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது
சாரதிகள் யாக்கிரதை
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை
சிரியா அரச இராணுவம் Al-Nusra பகுதியில் அமைக்க பட்டுள்ள துருக்கிய ஆதரவு
படைகளின் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
இந்த தாக்குதலினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது .தொடர்ந்து இரு
தரப்புக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்
நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்
இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்
ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
பறந்த விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம்
பறந்த விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம்
மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் மாயமானது.
திடீரென்று விண்ணில் மாயமான ஜப்பானிய ஜெட் விமானம்
ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்ணில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் இன்று மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் பறந்து
கொண்டிருந்தபோது மாயமானது. ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அதனுடன் தரையில் இருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. விமானம் ரேடார் வரையறையை தாண்டி மாயமாகிய நிலையில்
அதை தேடும் பணியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு எப்-35 ஏ ஸ்டெல்த் ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த ஜோடி
வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த ஜோடி
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனிமையில் இருந்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த பெங்களூரு ஜோடி
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலியுடன் பெங்களூருவில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி அந்த இளைஞர் சைபர்செல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது காதலியும் சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள
ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அதை வீடியோ பதிவுசெய்து சிலர் ஆபாச இணைய தளத்தில் அப்லோட் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில் தங்களின் முகம் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் நபரின் மார்பு பகுதியில் உள்ள அடையாளத்தை வைத்து, அந்த இளைஞர் அது தாம்
தான் என புகார் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்
இலங்கை வங்கிகளில் உள்ள பணத்தை சுருட்ட கோட்டா இரகசிய திட்டம்
இலங்கை வங்கிகளில் பணத்தை வைப்பு செய்து வட்டியை பெற்று வரும் மக்களுக்கு பெரும் ஆப்பு ஒன்றை வைக்க கோட்டபாய முனைந்து வருகிறார்
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி ,பொருளாதார பிரச்சனை குறித்து தீர்வு காண்பதற்கு மக்களின் பணத்தை அரசு உடமையாக்கவும் ,அவசரகால நிதியாக அதனை
பயன்படுத்தவும் கோட்டபாய இரகசிய திட்டமிடல்கள் இடம்பெற்று வருவதான கசிவுகள் வெளியாகிய நிலையில்
வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள மக்கள் அந்த பணத்தை மீள பெற்று வெளி நாடுகளில் பதுக்கி வருகின்றனர்
இவ்வாறு 260 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய இரு வர்த்தகர்களை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது
இவ்வாறு முக்கிய செல்வந்தர்களை இலக்கு வைத்து கோட்ட பாய முதல் ஆட்டத்தை
ஆரம்பித்துள்ள நிலையில் வங்கிகளில் பணத்தை வைத்துள்ள மக்கள் பீதியடைந்து வருகின்றனர்
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் 13 க்கு மேற்பட்ட
அப்பாவி பாலஸ்தீனர்கள் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டனர்
இராணுவத்தினரால் பலமாக தாக்க பட நிலையில் இழுத்து செல்ல பட்டுள்ள காட்சிகள்
உலக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை
சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை
சிரியாவின் அ டமகாஸ் பகுதிக்கு வெளியில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மீது
விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது
குறித்த ஏவுகணைகளை தாம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் சிலது இலக்கை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
சிரியாவுக்குள் உள்ள ஈரான் மற்றும் ,சிரியா அரச இராணுவ நிலைகளை இலக்கு
வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது
தமது ஏவுகணைகளி துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்
கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்
இந்திய காஸ்மீர் பகுதியில் நடமாடிய ஐந்து தீவிவாதிகள் என சந்தேகிக்க படும் ஐவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது
அவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டவர்கள் அப்பாவி மக்கள் என அவரது
குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்
இந்திய இராணுவம் இலங்கையில் தமிழர்களை புலிகள் என சுட்டு கொன்றதை
போலவே காஸ்மீரிலும் நடத்தி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு
வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை
தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்
நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
- ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது
- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை
- சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆளும் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரநிலை
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதையில் 133 கப்பல்கள் திருப்பிவிடப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
- அதிகரித்த கப்பல் தாக்குதல்களால் ஹோர்முஸ் எண்ணெய் ஏற்றுமதி ‘கடுமையாகக் குறைந்துள்ளது
- இரண்டு பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், விவசாயிகள் ஆலிவ் அறுவடைக்குத் தடை
- ரமல்லாவின் வடக்கே நடந்த தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் இஸ்ரேலியப் படைகளால் காயமடைந்தார்
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை
நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
“நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நான் ஏன் காந்தியை கொன்றேன் திரைப்படத்தின் போஸ்டர்
மகாத்மா காந்தியை கொலை செய்தது தொடர்பாக கோட்சே முன்வைத்த வாதங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான் ஏன் காந்தியை கொன்றேன்”. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால் மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. பின் இந்த படத்தை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், மீளமுடியாத பாதிப்பு ஏற்படும். நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும்,
வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது.
உச்சநீதிமன்றம்
அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை
நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும். இப்போதும் கூட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது
தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை
தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை
ஈரான் ஆராக் சிட்டி பகுதியில் உள்ள மிருக காட்சி சாலையில் வளர்க்க பட்டு வந்த சிங்கம் ஒன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது
குறித்த பூங்காவின் ஊழியர்கள் சிங்கத்திற்கு இறைச்சிகளை உண்ண கொடுக்க
வாயிலை திறந்த பொழுது இவர்களை மிரட்டி விட்டு சிங்கம் தப்பி ஓடியுள்ளது
இவ்வாறு ஓடிய சிங்கத்தை போலீசார் துரத்தி சென்றனர் எனினும் அது தப்பி தொடராக
மக்களை வேட்டையாட ஓடிய வேளை சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது
பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்
பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்
மெஸ்சிக்கோவில் பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது.இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் தீயில் எரிந்து பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் தலைகீழாக வீழ்ந்து நொறுங்கிய போது ஏற்பட்ட தீ பற்றலில் இந்த
சோகம் இடம்பெற்றுள்ளது
தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்… ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
பிறந்த 40 நாளில் தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
23 ஆண்டுக்கு பின் தாயை கண்ட மகிழ்ச்சியில் அமுதவல்லி.
தாய்…
முதன் முதலாக நாம் பார்த்த தெய்வம்…பிறந்ததும் முதன் முதலாய் பார்த்த முகம்…ஆண்டுகள் கடந்தாலும் காட்டும் அளவற்ற பாசம்…நம் கண் கலங்கினால் துடிக்கும் ஒரே இதயம்…அன்பின் ஒட்டுமொத்த பிறப்பிடம்…
எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் யாரும் இல்லை எனலாம். அந்த தாய்க்கு உலகமே தன் குழந்தைதான். மகளோ, மகனோ யாராக இருந்தாலும் அவர்களுக்காக தன்னையே உருக்கிக்கொள்வாள் தாய்.
23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்…
ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் தர்மபுரி மாவட்டம் ஜகுரு பகுதியில் கணவர் ரங்கநாதனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெனிபர், அமுதவல்லி ஆகிய 2 மகள்கள் பிறந்தனர்.
ரங்கநாதனின் முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளனர். ரங்கநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அமுதா குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து காடையாம்பட்டி தாசசமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அமுதவல்லி பிறந்ததும் அவரை வளர்க்க முடியாமல் அமுதா தவித்தார். இதனால் அந்த குழந்தையை தத்து கொடுக்க முன்வந்தார். இதையடுத்து அமுதவல்லி பிறந்த 11-வது நாளில் சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரியில் தத்து கொடுத்தார்.
அங்கு ஒப்படைக்கப்பட்ட அமுதவல்லியை 40-வது நாளில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்தனர். பின்பு அந்த குழந்தையை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். நெதர்லாந்து பிரஜையாக அமுதவல்லி வளர்ந்தாள்.
அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தாள். நாட்கள் ஓடின… 23 ஆண்டுகள் ஆன நிலையில் அமுதவல்லி வளர்ந்து பெரியவள் ஆனாள். தற்போது அமுதவல்லி நெதர்லாந்தில் அலங்கார பூச்செண்டு விற்பனை மையம் (பிளவர் ஷாப்) நடத்தி வருகிறார்.
நெதர்லாந்தில் பெற்றோரிடம் அளவற்ற பாசம் காட்டி வளர்ந்த அமுதவல்லிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தது. தனது தாயகம் இந்தியா என்றும், குழந்தையாக இருக்கும்போதே தான் தத்து கொடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்தார்.
இதை தொடர்ந்து அமுதவல்லி, பெற்றெடுத்த தாய் மற்றும் குடும்பத்தை பார்க்க விரும்பினார். கடந்த 2 ஆண்டுகளாக முகநூல், இன்டர்நெட் மூலம் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
அதனை அறிந்த வளர்ப்பு பெற்றோர்களே அவருக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவரது தாயாரின் இருப்பிடத்தை தெரிவித்து நேரில் பார்த்து விட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
அதன்படி தனியொரு பெண்ணாக நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த அமுதவல்லிக்கு மொழிப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதிக்கு வந்தார்.
அங்கு தனது வீட்டிற்கு சென்றார். அங்கு பாசத்தின் உருவமான தனது தாயை பார்த்தார். அந்த தாய்க்கு முதலில் தன் மகள் என்பதை அறியமுடியவில்லை. பின்பு அமுதவல்லி மொழிபெயர்ப்பாளர் மூலம் விவரத்தை கூறியதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தனது தாயை நேரில் பார்த்த அமுதவல்லிக்கு கடவுளே நேரில் காட்சி கொடுத்தது போன்ற உணர்வு…அந்த சில நிமிடங்களில் பாசப்பெருக்கால் பனித்துளி போல கண்களில் கண்ணீர் கொட்டியது.
இதுகுறித்து அமுதவல்லி கூறும்போது, என்னை பெற்ற தாயை பார்த்தபோது ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. இவர்கள் காட்டும் அன்பும், பாசமும் நெகிழ வைக்கிறது என்றார்.
அவரது தாய் அமுதா கூறும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவரின் குடிப்பழக்கத்தால் என்னை கைவிட்டுவிட்டார். வறுமையில் இருந்ததால் எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற தத்து கொடுத்தேன்.
அதன்பிறகு எனது குழந்தையை நினைத்து அடிக்கடி வருந்துவதுண்டு. 23 ஆண்டுகளுக்கு பிறகு மகள் என்னை பார்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை
ஐ.நா அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கியது காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம்.
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்
கொலை செய்யப்பட்ட ஐ.நா.அதிகாரிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரிகளான மைக்கேல் ஷார்ப் என்ற அமெரிக்கரும், சைடா கேட்டலான் என்ற ஸ்வீடன் நாட்டவரும் கடந்த 2017ம் ஆண்டு திடீரென மாயமாகினர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஆயுதம் ஏந்திய நபர்களால் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 51 பேருக்கு காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
ஏமன் நாட்டின் Ma’rib பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆள் இல்லா அமெரிக்கா
இராணுவத்தின் கழுகு ரக உளவு விமானத்தை எமனிய கவுதிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
ஏமன் பகுதிகளை இலக்கு வைத்து சவுதி விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும்
நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
கிழக்கு சிரியாவின் al-Hasakah பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முகம் மீது ஆறு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தொடராக இலக்கு வைத்து தாக்க பட்டு வரும், இந்த முகாம் மீதான தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேற கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதே முகாமில் 22 பல் நாட்டு படைகள் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது
எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா
எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா
எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேட்டோ படைகள் அலட்சியம் செய்ததன்
விளைவ இந்த பதட்டத்திற்கு காரணம் என ரசியா தெரிவித்துள்ளது
உக்கிரேன் அருகில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில்
அமெரிக்கா நேட்டோ படைகளும் இராணுவத்தை குவித்து வருகின்றனர் ,இதனால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்
நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்
பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்
ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முயன்ற போது, குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17 தொழிலாளர்களும் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






































