Posted in Uncategorized

இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

இலங்கையில் முஸ்லீம்கள் முக்காடு போட வருகிறது தடை

இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்தமத வாதிகளின் கடும்போக்கு நிலை காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் முக்காடு போட தடை வருகிறது

இது தொடர்பான புதிய பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்க படவுள்ள நிலையில்

,பிரான்ஸ்,சுவிசை போன்று இலங்கையிலும் இந்த தடை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டு வருகின்றன

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்

பாம்பை தோளில் போட்டு தடவிய யாஷிகா ஆனந்த்

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இவர் பாடம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். தற்போது கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், துபாய் பார்க்கில் இருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தை கயிறு கட்டி இழுப்பது, பாம்பை தோளில்

தூக்குவது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

கார் குண்டு தாக்குதல் – 23 பேர் காயம்

கார் குண்டு தாக்குதல் – 23 பேர் காயம்

Herat city பகுதியில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இதன் பொழுது இரு இராணுவத்தினர் உள்ளிட்ட இருபத்தி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

இதுவரை இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Home » Uncategorized » Page 119

Posted in Uncategorized

பற்றி எரிந்த கப்பல் – தப்பிய பயணிகள்

பற்றி எரிந்த கப்பல் – தப்பிய பயணிகள்

உலகில் மிக பெரும் போக்குவரத்து பயணிகள் கப்பலாக விளங்கி வரும் Greek cruise liner docked என்ற கப்பல் கடந்த தினம் மதியம் 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றி கொண்டது

இவ்வேளை குறித்த கப்பலில் 72 சிப்பந்திகள் ,பணியாளர்கள் பணியில் இருந்துள்ளனர்

அனைவரும் பாதுகாப்பாக காப்பாற்ற பட்டனர் ,எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,சம நேரத்தில் பயணிகள் எவரும் கப்பலில் இருக்கவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,

மேற்படி தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

இங்கிலாந்தில் text message மூலம் 20 மில்லியன் மோசடி புரிந்த த கும்பல் – மக்களே எச்சரிக்கை

இங்கிலாந்தில் text message மூலம் 20 மில்லியன் மோசடி புரிந்த த கும்பல் – மக்களே எச்சரிக்கை

பிரிட்டனில் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இதே நாட்டில் உள்ள மிக பெரும் இரு பிராதன வங்கிகளை மைய படுத்தி அவர்களது வாடிகையாளர்களுக்கு கைபேசி வாயிலாக குறும் செய்தி அனுப்பி அதன் ஊடாக அவர்கள் விபரங்களை பெற்று சுமார் இருபது மில்லியன் பவுண்டுகளை மோசடி செய்துள்ளது கும்பல் ஒன்று சிக்கியது

மேற்படி விடயம் தொடர்பில் இடம்பெற்று வந்த தீவிர விசாரணைகளின் பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய மூலைகளாக விளங்கிய இருவர் கைது செய்ய பட்டனர்

அத்துடன் அந்த திருட்டு கும்பலும் முடங்கி போனது

இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுமார் இருபது மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது

இவர்கள் இருவருக்கும் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டு தீர்ப்பளிக்க பட்டுள்ளது

மக்களே வங்கிகளில் இருந்து உங்களது கைபேசிக்கு தகவல்கள் கிடைக்க பெற்றால் அதனை முறையாக கவனித்து செயல் படுங்கள் ,சந்தேகம் ஏற்பட்டால் உடனே வங்கிக்கு தெரிய படுத்துங்கள் ,

எச்சரிக்கை ,திருடர்கள் உங்கள் அருகில்

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் கொரோனா நிதி

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் கொரோனா நிதி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி மசோதாவில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திட்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம்) வழங்கும் பணி தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

சாரதி செய்த செயலால் -பள்ளத்தில் விழுந்த பேரூந்து- 27 பேர் மரணம்

சாரதி செய்த செயலால் -பள்ளத்தில் விழுந்த பேரூந்து- 27 பேர் மரணம்

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் பஸ், சுமேதாங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.

இந்த கோர விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்துக்கு காரணம் பஸ்சில் ‘பிரேக்’ செயல்படாதது தான் என விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் சாலைகள் மோசமாக இருப்பதால்

விபத்துக்கள் நடப்பது சாதாரணமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ஒரு பஸ் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது

கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 நபர்கள் கைது

கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கல்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி வண்டியொன்று சோதனை செய்யப்பட்டதுடன் லாரி வண்டிக்குள் இருந்

த சந்தேக நபர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர் அப்போது குறித்த லாரி வண்டி சாரதியுடன் 24 நபர்கள் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் தயாராகி கல்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை காத்திருப்பது தெரியவந்ததால், அந்தக் குழுவும் லாரி வண்டியும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 நபர்களின் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) உள்ளனர். இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும்

, 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைதீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லாரியின் சாரதி புத்தலம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது லாரி வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்

நீராடச் சென்ற மாணவன் மாயம்- தேடும் பொலிஸ்

மஹவெல பொலிஸ் பிரிவில் அங்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

16 வயதுடைய மாணவன் மற்றும் 26 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் தலுபோத்தகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர்.

தீ விபத்தையடுத்து, பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த இராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறினர்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

விறகு சேகரிக்கச்சென்ற வாலிபனை காணவில்லை

விறகு சேகரிக்கச்சென்று காணாமல் போன இளைஞனை மோப்ப நாயின் உதவியுடன் தேடும் பணியில் பொகவந்தலாவ பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ குயினா மேல்பிரிவை சேர்ந்த 26 வயதுடைய திருச்செல்வம் பிரபாகரன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பிற்காக போபத்தலாவ வனப்பகுதிக்குள் சென்றவர் திரும்பி வரவில்லை என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் உறவினர்களால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொது மக்களும் பொலிஸாரும் இரண்டு நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற வானிலைக்கு மத்தியில் காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரையில் குறித்த இளைஞனை கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காணாமல் போன இளைஞன் தனது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையெனவும் பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண் வருகின்றமை குறிப்பிடதக்கது.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹன்சிகாவுக்கு திருமணம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ்

திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அண்ணனுடன் ஹன்சிகா

இந்நிலையில் நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறதாம். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளதாம்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

ஐ.நாவில்-தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம்

தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு
தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான

வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது.

தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.

இன்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு

நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவுக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே

தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக

நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.

அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.

எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு

முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

லண்டனில் ஆள்கடத்தல் – 225 லாரிகள் தீவிர சோதனை

லண்டனில் ஆள்கடத்தல் – 225 லாரிகள் தீவிர சோதனை

லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக அகதிகள் நுழைந்து வருகின்றனர் ,அது தவிர தரை வழியாகவும் ,லொறிக்குள் பதுங்கி நுழைந்து வருகின்றன

இவ்வாறான மனித கடத்தலை தடுக்கும் முகமாக போலீசார் திடீர் சோதனையை நடத்தினர்

இதில் சுமார் 225 லாரிகள் சோதனைக்கு உட்படுத்த பட்டது எனினும்

அதற்குள் இருந்து எவரும் மீட்க படவிலை என்பதே ஏமாற்றமாக அமைந்துள்ளது

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி

காவல்துறை அதிகாரியை இடித்து கொன்ற இராணுவ வண்டி

ஹபரண – பொலன்னறுவ வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹபரண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தை செலுத்தி வந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம்

தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கொஹுவல, ஆசிரி மாவத்தையில் எரியுண்ட காரில் இருந்து 33 வயதான வர்த்தகரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

களுபோவில, ஹாதியா மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Home » Uncategorized » Page 119

Posted in Uncategorized

கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா..

கையை உடைத்துக் கொண்ட ஜெனிலியா..

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து

நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

எப்போதும் குடும்பம், குழந்தைகள், திரைப்பட விழாக்கள் என இன்றைக்கும் தனக்கே உரிய குறும்பு தனங்களோடு வலம் வரும் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்

கொண்டு இருக்கிறார். தான் கற்றுக்கொண்ட ஸ்கேட்டிங் திறமையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில்

வெளியிடலாம் என எண்ணியிருக்கிறார். அப்போது ஸ்கேட்டிங் செய்யும்போது நிலை தடுமாறி கிழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

ஜெனிலியா

ஆனால் தனக்கு ஏற்பட்ட இந்த வலியையும் பொருட்படுத்தாத ஜெனிலியா எப்போதும் போல அதே குறும்பு சிரிப்புடன் இந்த வெற்றிக் கதை தோல்வியில் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்வேன் எனக் கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தான் வெளியே செல்வதில்லை என்று சோகமாக கூறியிருக்கிறார்.

வெளியில் செல்ல பயப்படும் அஜித்தின் ரீல் மகள்
அனிகா சுரேந்திரன்


அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா

சுரேந்திரன். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அனிகா சுரேந்திரன்

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும்

நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Home » Uncategorized » Page 119
Posted in Uncategorized

தாலிபான்கள் வெறியாட்டம் -30 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து

வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தபேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத

தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில்

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான காந்தஹாரில் உள்ள அர்கந்தாப் மற்றும் ஜாரி மாவட்டங்களில் தலீபான்

பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 30 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்‌.

Home » Uncategorized » Page 119