Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தின் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து
தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன்
நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10
ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
.
வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
– வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்துவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
வைரமுத்து
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின்
மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்
பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.
வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி
தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின்
பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், வைரமுத்து குறித்து புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து வைரமுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
“காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே”
என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
புதிய காதலன் ஆதில் கான் துரானி, தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
அரைகுறை ஆடை அணிவது என் காதலனுக்கு பிடிக்கவில்லை – பிரபல நடிகை
ராக்கி சாவந்த்
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதன்பிறகு ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். ஆதிலின் குடும்பம் நான்
கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த
நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு
பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் ஆதில் துபாயில்
தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன்.
ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது
குடும்பத்தினருடன் என்னை அறிமுகபடுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில ‘எதிர்ப்பு’ இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம்
கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார். வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது
விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக
மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என ராக்கி சாவந்த் கூறினார்.
ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்
ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி தான் ரியல் டான் என – பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
பாராட்டியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த
இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
இப்படத்திற்கு இளம் இசை புயல் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது.
இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு. ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த். தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,
“இந்திய சினிமாவின் “டான்” ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். ரஜனி சாரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும்.
உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று நெஞ்சுருகி சிவகார்த்திகேயன் பதிவிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய போனிகபூர்
போனிகபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ,மற்றும் தயாரிப்பாளரான ,போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம்
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட்
கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக
பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது.
தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார்.
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு
பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக
காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான
புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில்
வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம்
அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக
திருமணம்
நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
நடிகை பிதிஷா தற்கொலை செய்த 2 நாளில் அவரது தோழியான பிரபல மாடல் அழகியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
மஞ்சுஷா நியோகி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும்
நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுஷா நியோகி – பிதிஷா டி மஜும்தார்
இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு
பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அறையில் உள்ள
மின் விசிறியில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுஷாவின் தாயார் கூறும்போது, பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என
மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார். பிதிஷாவை பற்றியே எப்போதும் பேசி கொண்டே இருந்துள்ளார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன்.
ஆனால், அதேபோன்று நடந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட
விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில்,
கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, நடித்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடித்த படத்தின் தேதி வெளியீடு ஒத்திவைப்பு
அண்ணாமலை
அண்ணாமலை நடித்த “அரபி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் ‘அரபி’. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும்
விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை
பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக
இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘அரபி’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
நடித்த அரபி படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மனைவிக்கு கள்ளத்தொடர்பு- புலம்பும் நடிகர்
மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்
தன் மனைவியான நடிகை நிஷா ராவலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக நடிகர் கரண் மெஹ்ரா குற்றம்சாட்டி உள்ளார்.
என் மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. புலம்பும் பிரபல நடிகர்
கரண் மெஹ்ரா – நிஷா ராவல்
இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவர்களுக்கு
இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாவும், கரணும் ஆறு ஆண்டுகள் காதலித்து, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். 2017ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நிஷா. இந்தி
சின்னத்திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் கரண் மெஹ்ரா. அவர் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். கரண் தன்னை தாக்கியதுடன்,
தன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி எடுத்துவிட்டதாக காவல் நிலையத்திற்கு சென்றார் நிஷா.
இதையடுத்து 31.05.2021 அன்று கோரேகாவ்ன் காவல் நிலையத்தில் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரண் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும்,
அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் நிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண், பின்னர் ஜாமீனில் வெளியே
வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கை அடுத்து கரணும் அவரது குடும்பத்தாரும் முன்ஜாமீன் பெற்றார்கள்.
கரண் தற்போது ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நிஷாவுக்கும், ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதை அந்த நபரே ஒப்புக் கொண்டார். அதன் பிறகும் அந்த
நபரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன். பின்னர் மகன் கவிஷ் பிறந்தான். அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்.
கடந்த 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறார் என கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு பெரும் சச்சையை ஏற்படுத்தியுள்ளது
காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
போண்டா மணி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய
போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல
படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ்
படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.
போண்டா மணி
இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.
கணவர் மீது நடிகை மோசடி புகார்
கணவர் மீது நடிகை மோசடி புகார்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு வங்கியில் நகை கடன் மோசடி.
கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை
சைத்ரா ஹள்ளிகேரி
கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,
மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் மூலம் தனது கையெழுத்தை போலியாக போட்டு, தங்க நகை கடன்
வாங்கியுள்ளனர். இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தன்னை
அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது 2018-ல் சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து,
புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கமல், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கமல் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கமல் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
கமல் மன்னிப்பு கேட்டு கொண்ட செயல் மக்கள் மத்திதியில் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20
ரூபாய் செலவு செய்வார்கள். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன். வேற மாதிரி
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட-கமல்
நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்
விபத்தில் சிக்கிய சமந்தா
விபத்தில் சிக்கிய சமந்தா
குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா
சமந்தா – விஜய் தேவரகொண்டா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்
சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு
தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா – சமந்தா
நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி
ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்
அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை
படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை
வரவழைத்தோம். இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில்
படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
சிம்பு – டி.ராஜேந்தர்
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்நிலையில் டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து அவருடைய மகனும் நடிகருமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய
இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர்
சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார்.
உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
40 வயதை கடந்த பெண்களுக்கு வரும் மூட்டு வலி
40 வயதை கடந்த பெண்களுக்கு வரும் மூட்டு வலி
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
இன்றைக்கு 40 வயதைத் தாண்டியவர்கள் பலரையும் பாடாகப்படுத்தும் பிரச்சனை, முழங்கால் மூட்டுவலி. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய் விடுவதும் உண்டு. மூட்டுகளுக்கு
வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம். மூட்டுகள் உறுதிக்கு உதவும் 10 உணவுகள் இங்கே…
மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம்.
அதிகம் நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது.
உடலுழைப்பு இல்லாதது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது .
உணவில் அதிகமாக புளிப்பு சுவையை சேர்ப்பது.
மூட்டு வலி நீங்க வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். ஒரு
தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.
இஞ்சி சாறு
இஞ்சியில் ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை நிரம்பியுள்ளது, இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.
இஞ்சி தேனீர்: ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
எப்சம் உப்பு
எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல் நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
கற்பூரம் எண்ணெய்
கற்பூரம் பொடி கலந்த எண்ணெய் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் சிரமத்தை நீக்குகிறது, கற்பூர எண்ணெயைத் தயாரிக்க ஒரு கப் சூடான (இதமான
சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும்.
மஞ்சள்
மஞ்சள்: ஒரு சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள்
தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.
ஐஸ் கட்டி
ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது
மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த முறைகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் உங்கள் குடும்ப மறுத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா
மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.
படுக்கையறை காட்சி பற்றி கேள்வி.. கடுப்பான மாளவிகா மோகனன்
தனுஷ் – மாளவிகா மோகனன்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்
தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரசிகரின் கேள்வி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக
வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில்
தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான
எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணிக்கு ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
ஒரே நாளில் நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு
ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
நிக்கி கல்ராணி
சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர்
பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
யோகி பாபு
2008-இல் வெளியான ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இப்படத்திற்கு பிறகு கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கி
முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது, மலையாளத்தில் வெற்றிபெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக
வைத்து இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
ஆர்.கண்ணன் – யோகி பாபு
இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு
‘பெரியாண்டவர்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவன் வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார். இப்படம் வசனத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இதில் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார்.
இதற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
தமிழ் சினிமாவின் முன்னணி திரைபிரபலமான ஆதி-நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
ஆதி – நிக்கி கல்ராணி
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,
நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.
ஆதி – நிக்கி கல்ராணி
ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி
அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பிறகு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நிக்கி கல்ராணி கூறியிருந்தார்.
அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள்
கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ரஜினி
அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169-வது படம். இந்த படத்தில்
ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள் மோகனும் நடிப்பதாக தகவல் பரவியது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ரஜினி
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன்பு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள முடிவு செய்து
இருப்பதாகவும், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. ஆகஸ்டு மாதம்
படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் முன்னதாக ஜூலை மாதமே படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது
. இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவருகிறார்கள்.











