Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம்

மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் இன்றாகும்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ரூஹூணு கிருவாப்பத்து வீரகெட்டிய கிராமத்தில் பிறந்தார். இலங்கையின்

அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆளுமையைக்கொண்ட பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கருதப்படுகிறார்.

1970 ஆம் ஆண்டு பெலியந்த தொகுதியில் இருந்து 1970 இல் முதன்முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஜனாதிபதி

தேர்தலில் வெற்றி பெறும் வரை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

1994ஆம் ஆண்டு அரசாங்கத்தை அமைக்க இவர் பெரும் பங்களிப்பு செய்தார். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கது.

2001ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் (2004 ஏப்ரல் 06 – 2005 நம்பர்19) பிரதமராகவும்

2005ஆம் ஆண்டின் நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை

முடிவுக்குகொண்டுவந்து நாட்டில் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஆற்றிய பணிகள் உலகெங்கிலும் பாராட்டை பெற்றுள்ளன.

நாட்டின் அபிவிருத்திக்காவும் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவையாகும். ஆங்கிலேயரின்

ஆட்சிக்காலத்திற்குப்பின்னர் பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் அதாவது நெடுஞ்சாலைகளை அமைப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

குறுகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை வழி நடத்தி பெரும் வெற்றியை ஈட்டிய பெருமையையும் அவரைச்

சாரும். கடந்த தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குடன் அவர் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தெரிவான ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66

இலங்கையில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கீழ் குறிப்பிட்ட விபரங்களைக்கொண்ட கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர் ஐவரின் மரணத்தை உறுதி

செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆகும் என தெரிவித்துள்ளார்.

  1. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டவர் புனானி(புனானை) சிகிச்சை மத்திய நிலையம்
  2. மற்றும் அதனைத் தொடர்ந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  3. காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் ஆவார்.
  5. வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என
  6. தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால்
  8. அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  10. காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும்.
  11. தொமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு
  12. நோயில் சிக்கலான நிலையுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

750 காவல்துறையினருக்கு கொரனோ

750 காவல்துறையினருக்கு கொரனோ

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 750 காவல்துறையினர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத் தலுக்கு

உள்ளாக்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதே இவர்களுக்கு இந்த

நோயானது பரவியதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

600 மில்லியன் ரூபா செலவில் 06 தேசிய பாடசாலைகள்

600 மில்லியன் ரூபா செலவில் 06 தேசிய பாடசாலைகள்

மாத்தளை மாவட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவில் 06 தேசிய பாடசாலைகள்…..

 2021 முதலாவது காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு…..

 ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்….

 மாத்தளை மாவட்டத்திற்கு உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்….

உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து

செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் வரலாற்று

சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் 15 ஆம் திகதி மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் இணைந்து நிறுவிய புதிய பொறிமுறை ஊடாக நேரடியாக கிராமங்களுக்கு வளங்கள் பகிரப்படும் வேலைத்திட்டமொன்றை

தயாரித்தல், எதிர்காலத்தில் மாவட்டத்திற்கென ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்வைத்தல் போன்ற அடுத்த ஆண்டு வரவு செலவுதிட்த்திற்காக ஒதுக்கப்பட்ட

நிதியை கிராமத்தின் அபிவிருத்தியில் நேரடியாக ஈடுபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் யோசனைகளை பெற்றுக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின்; ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி

•முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

•மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

•அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

•எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.

•மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


•மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள்

•வரலாற்றில் முதல்முறையாக, முன்பள்ளிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமித்ததன் மூலம் இந்த துறையின் வளர்ச்சி

பணிகளை வெற்றிகரமாக்கியுள்ளது. முறைசாரா முன்பள்ளி கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, பாடசாலை விளையாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளின் வளர்ச்சி

•அகுரம்பொடா மத்திய மகா வித்தியாலயம் (விளையாட்டு பாடசாலை) முதல் கட்டத்தை ரூ 7.7 மில்லியன் செலவில்

அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது இவ்வாண்டின் இறுதியில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

•மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் 55 பாடசாலைகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஒரு விளையாட்டு மைதானம் எனும் அடிப்படையில் 11 விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

•ரூபாய் 50 மில்லியன் செலவில் மாத்தளை ஹொக்கி மைதானத்தை சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

•மாத்தளை மாவட்டத்தில் 30 வெளிப்புற உடற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.

உள்ளூராட்சி நிர்வாகம்

•ரூபாய் 300 மில்லியன் செலவில் மாத்தளையில் ஒரு முழுமையான தீயணைப்பு நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனக பண்டார

தென்னகோன், நாலக பண்டார கோட்டேகொட, சிசிர ஜயகொடி, லசந்த அழகியவன்ன,விதுர விக்ரமநாயக்க, விஜித பேருகொட,

ரோஹண திசாநாயக்க ஆகியோர், ஆளுநர் லலித் யூ. கமகே, மாவட்ட செயலாளர் எஸ்.எஎம்.ஜி.கே.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் புயல் மழை -16 குடும்பங்கள் பாதிப்பு

யாழில் புயல் மழை -16 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 16 குடும்பங்களைச்

சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையினாலே இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்

பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு

ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு

அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

இன்று 17 காலை வரையில் Covid -19 வைரசு தொற்றுக்குள்ளான 382 நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக COVID-19 வைரஸ் பரவலை

தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் உள்நாட்டில் இருந்து 374 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஐந்து இலங்கை கடலோர பாதகாப்பு வீரர்களும் மூன்று வெளிநாட்டு கடலோர பாதுகாப்பு வீரர்களும்

பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள்.

இவர்களின் எண்ணிக்கை 231, கம்பஹா பிரதேசத்தில் 42 தொற்றுக்குள்ளானவர்களும் , களுத்துறை பிரதேசத்தில் 20 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (17) காலை வரை மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்பு பட்டிருந்த உழஎனை-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த

எண்ணிக்கை 14,154 ஆகும். இவர்களுள் 8,381 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி – 3106
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி -11,048

நேற்றைய (16) தினம் இலங்கையில் உழஎனை-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,668

என்பதுடன் இவர்கள் 11,805 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய (16) தினம் வரையில் வைத்தியசாலைகளிளும் COVID -19 பராமரிப்பு நிலையங்களிளும் 5,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (17) காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் வைரஸ் தொற்று பராமரிப்பு நிலையங்களில் இருந்து 311 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்..

இதன் அடிப்படையில் இன்று (17) காலை வரையிலும் இலங்கையில் COVID -19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (17) காலை வரைக்கும் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கடளுடன் (முதலாவது மற்றும் இரண்டாவது)

தொடர்புபட்ட 30,000 பேர் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை EY 264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் துபாயிலிருந்து 26 பேரும் Ul 668 மற்றும் ருடு 218 என்ற பயணிகள்

விமானத்தின் மூலம் கட்டாலிருந்தும் முறையே, 37 மற்றும் 22 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினர் மூலம் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) வரைக்கும் படையினரால் நடத்தப்பட்டுவரும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் 3,281 பேர்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய (16) தினம் வரை 10, 713 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்

இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்

நுவரெலியா மாநகரத்தின் மத்தியில் புதிதாக மக்களின் தேவைக்கருதியும்

நலன்கருதியும் நல்லுள்ளம் படைத்தவர்களினால் நிர்மாணிக்கபட்ட மணிக்கூட்டு

கோபுரத்தில் காணப்படும் 04 மணிக்கூடுகளும் இலங்கை நேரத்தை 04 விதத்தில்

அன்மை காலங்களில் காட்டி வந்தன. இதனால் இதணை பார்க்கும் வெளிநாட்டு

மற்றும் உள்நாட்டு பயணிகள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என அன்மையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தற்போது தொழில்நுட்ப கோளாருக்குள்ளான இந்த மணிக்கூடுகள் திருத்தப்பட்டு

முறையாக செயற்பட்டு வருகின்றது. இந்த நல்ல செயலை முன்னெடுத்து செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில்
இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை

பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை

இலங்கை பளை பகுதியில் இருந்து மாமுனை நோக்கி பயணித்த நாற்பத்தி

நான்கு வயதுடைய நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கோரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இவ்வாறு படுகொலையான நபராது சடலம் மீட்க பட்டு மருத்துவ

பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்ய படவில்லை

Posted in இலங்கை செய்திகள்

9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி

9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி

இலங்கையில் இரத்தினபுரி பகுதியில் ஒன்பது பேரை சுட்டு கொலை செய்ய

போவதாக கூறி காவல்துறை கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர்

தனது துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்

இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பணியில் ;போலீசார் ஈடுபட்டுள்ளனர்

,குடும்ப தகராரே இந்த செயலுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை

இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை

இலங்கை வைமனப்படை வரலாற்றில் முதன் முதலாக இரு சிங்கள

பெண்கள் விமானங்களை செலுத்தி சாதனை படைத்துள்ளனர்

நீண்ட நாட்களாக பெற்று வந்த பயிற்சியினை அடுத்து தற்பொழுது

இந்த இருவரும் விமானத்தை தாமே செலுத்தி சாதனை படைத்துள்ளனர்

இதுவே இலங்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என கருத படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்

கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்

கண்டியில் தலா 100 மில்லியன் ரூபா வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்….

• கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபா வீதம் போசாக்கு பொதி….

• ஆயுர்வேதம் என்ற பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் மீது சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை….

• மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் சேகரித்து மீள்சுழற்சி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும்….

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ அபிவிருத்தி

நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்

கொடுப்பதற்கும், செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ‘சமூக

உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு’ நேற்று (2020.11.14) கண்டி மாவட்ட செலயக காரியாலயத்தில் கூடியது.

புதிய அரசாங்கம் பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்று மனித வள அபிவிருத்தி என்பவற்றை நோக்காக கொண்டு இந்த அபிவிருத்தி

செயற்திட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்துவதுடன், இன்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அந்தந்த அமைச்சுக்களின்

சார்பில் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் கீழ்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கல்வி

•கண்டி மாவட்டத்தில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

•வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு பாடசாலையை மேம்படுத்தி அடுத்த ஆண்டில் காடசாலைக்குள் தங்குமிட வசதிகளுடன் தரம் 8 இற்காக டெலண்ட் ஐடின்டிஃபிகேஷன் வேலைத்திட்டமொன்றின்

கீழ் விளையாட்டில் திறமைவாய்ந்த 35 பிள்ளைகளை இணைத்து கொள்வதுடன், ஒரு பிள்ளைக்கு தலா 10,000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்து அவர்கள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்திலிருந்து

சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டில் அப்பாடசாலையில் 130 மீட்டர் செயற்கை ஓடும் பாதையை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒரு பில்லியன் ரூபாய் முதலீட்டை வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு

பாடசாலைக்கு ஈடுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மாவட்டத்தில் ஆசிரியர் இருப்பு

மிகவும் திறனற்றதாக இருப்பதால் தேசிய அளவில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை வகுக்க முன்மொழியப்பட்டது.

•கண்டியில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் காணப்படும் நெருக்கடியை தீர்ப்பதற்கு வெளி மாவட்டங்களில்

தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

•கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் ஆசிரியர்கள் அங்கு நீடித்திருக்காமைக்கு முக்கிய காரணம்

அவர்களுக்கு தங்குவதற்கு பொருத்தமான இடம் இல்லாமையாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக தேவையுள்ள பாடசாலைகளை அடையாளங்கண்டு ஆசிரியர் தங்குமிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள்

•கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் ஊட்டச்சத்து பொதியை 10 மாதங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

•குழந்தை பருவ வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி கண்டி மாவட்டம் முழுவதும் தேசிய கொள்கையுடன் பல திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

•அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு திட்டங்கள் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படுவதுடன், 1938 மகளிர் உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் அவசர பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது.

கல்வி சேவைகள்

•கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு முன்பள்ளி மற்றும் ஒரு பகல்நேர பராமரிப்பு

மையத்தை வழங்க ஏற்பாடுகள் செய்வதுடன், வெளிப்புற குழந்தைகள் பூங்காவும் இதில் உள்ளடங்கும்.

•கழிப்பறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி இல்லாத அனைத்து பாடசாலைகளுக்கும் அவ்வசதிகளை இவ்வாண்டு

பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதன்படி 2021 முதல் இலங்கையில் ஒவ்வொரு பாடசாலையிலும் மேற்கண்ட வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.

•டிசம்பர் 25 க்கு முன்னர் பாடசாலை பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்குதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

சுகாதாரம்

•தோட்ட மருத்துவமனைகளை அரசிற்கு கையகப்படுத்துவதில் கண்டி மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், 2021 ஏப்ரல் மாதம்

கண்டி மாவட்டத்தில் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

•தெல்தெனிய வைத்தியசாலையை கொவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சை பெறும்

மக்களுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

•கண்டி மருத்துவமனையில் தற்போது இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களால் கொவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு

வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சுதேச வைத்திய பிரிவு

•உள்நாட்டு மருந்துகள் நாட்டில் பயிரிடப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,

இந்த அளவிற்கு இலங்கையை பாதித்த கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் நோய்த்தடுப்பு மருந்துகளே காரணம் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.

•சுதேச வைத்திய பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இந்த நோக்கத்திற்காக அதிக மாணவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

•கண்டி நகரத்திலும் அதற்கு அப்பாலும் மசாஜ் பார்லர்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த விவாதம் கவனம் செலுத்தியது, மேலும் அவற்றைத் தடுக்கும்

பொருட்டு, ஆயுர்வேத பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சோதனை செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

•மசாஜ் பார்லர்களை பதிவு செய்வதற்கான செயல்முறை கடுமையான சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அபிவிருத்தி குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்கள்

•மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக் பொலிதீனை சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கும் மீள்சுழற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அபிவிருத்தி குழுவில் விவாதிக்கப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா – மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் (15) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான விபரங்கள் பினவருமாறு:

  1. கொழும்பு 13 ஜிந்துபிட்டி பகுதியைச்சேர்ந்த 54 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்டகாலமாக இருந்துவந்த
  2. நுரையீரல் புற்றுநோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையால் அதிகரித்தமை என தெரிவிக்கப்ட்டுள்ளது..
  3. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆண் நபர். கொவிட்
  4. 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டப் பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
  5. மரணத்திற்கான காரணம் நீண்ட கால புற்றநோயினால் அவதிப்பட்டமை மற்றும் கொவிட் தொற்று நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர் மார்பு வலியின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
  7. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. கொழும்பு 08 பொரளை பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண் நபர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானமையினால் நீண்டகால நுரையீரல்
  9. நோய் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  10. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர்.
  11. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம்
  12. கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 58ஆகும்

என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல்

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய கொழும்பு பகுதியில் மேலும் ஐந்து

பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மருதானை, புறக்கோட்டை,

கோட்டை, கொம்பனித்தெரு, டேம் ஸ்ட்ரீட் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன. களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் மாநகர சபைப் பகுதியும், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் களுத்துறை மாவட்டத்தில்

ஹொரனை, இங்கிரிய மற்றும் வேக்கட மேற்கு கிராம சேவகர் பிரிவும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய

பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.

கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ்

பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.

மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ்

பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,

பேலியகொட பொலிஸ் பிரிவு,

களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.

  1. இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி
  2. தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு

Posted in இலங்கை செய்திகள்

யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்

கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்ப்பாணம் காரைநகருக்கு

எடுத்து வந்த ஐவர், தத்தமது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகரை சேர்ந்த நபர், கொழும்பு – 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி

சடங்குச் செய்து பூதவுடலை தகனம் செய்யும் நோக்குடன், கொழும்பிலிருந்து காரை நகருக்கு எடுத்துவந்தனர்.

அவர்கள், தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை

எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார்.

இறந்தவரின் சடலம் கோம்பயன் மயானத்தில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது

யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது

யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியிலிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னவன்

செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு, கடந்த வௌ்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. மாலை

இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31)

சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார்,

சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா

வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா

குருநாகல் நகரிலுள்ள வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய,

19 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களும் அவர்களுடன்

தொடர்புடைய இருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் 14 பேர் அக்குரணை நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்

ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்

துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று

உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர்

பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் , 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வத்தளையில் 721பேருக்குக் கொரோனா

வத்தளையில் 721பேருக்குக் கொரோனா

வத்தளையில் இன்று (14) இனங்காணப்பட்ட 18 தொற்றாளர்களுடன் மொத்தமாக

வத்தளையில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.

ஹெந்தலை, கெரவலபிடிய, திக்கோவிட்ட, பமுனுகம, மாபொல

ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை நீக்கம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டள்ளன.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

  1. மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு நபருக்கும் வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (15) நள்ளிரவு
  2. தொடக்கம் நீக்கப்படுவதாக ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
  3. கொழும்பு மாவட்டம்

  4. இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும்
  5. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.

மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு

  1. கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,

பேலியகொட பொலிஸ் பிரிவு,

களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.

  1. இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்

மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்

இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. எங்கள் மதம் பெரிதா உங்கள் மதம்

பெரிதா என்றும் மதம் பிடித்து திரிபவர்களின் மத்தியில் தமிழ்; பெயரில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதை கேள்விபட்டு இருக்கின்றீர்களா?

கண்டி மாவட்டத்தின் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய” என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.

மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான

நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார் அந்த அந்நேரத்தில்

தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.

அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒருப் பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம்

என்பதனால் “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர்

அவர்களினால் இந்த பெயர சூட்டப்பட்டது தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.

இதன் பயனாக இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள்

ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும்¸ சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய” இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும்¸ இந்து மக்களுக்கும்

தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து

வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தப் போதும் தேரர் அதனை

செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.

எனவே இது போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட்டில் சாந்தி¸ சமாதானம்¸ சமத்துவம்

நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே வேலை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில்

கொள்ள வேண்டும் இது அனைவரையும் சிந்திக்கவும் பெருமைப்படவும் வைக்கின்றது.