Tag: யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்
Author: நலன் விரும்பி Published Date: 15/11/2020 Leave a Comment on யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்
கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்ப்பாணம் காரைநகருக்கு
எடுத்து வந்த ஐவர், தத்தமது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைநகரை சேர்ந்த நபர், கொழும்பு – 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி
சடங்குச் செய்து பூதவுடலை தகனம் செய்யும் நோக்குடன், கொழும்பிலிருந்து காரை நகருக்கு எடுத்துவந்தனர்.
அவர்கள், தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை
எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார்.
இறந்தவரின் சடலம் கோம்பயன் மயானத்தில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.






