Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பரவல் -சிலாபம் மீன் சந்தைக்கு பூட்டு

கொரனோ பரவல் -சிலாபம் மீன் சந்தைக்கு பூட்டு

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு

மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.

சிலாபம் பொது மீன் சந்தைக்கு வருகை தந்தோரில் 50 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்

பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சிலாபம் நகர சபை கட்டத்தில் நேற்று (20) நடத்திய விஷேட கலந்துரையாடலின் போதே

, பொது மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், சிலாபத்திலுள்ள மீனவர்கள் மீன்களை சிலாபம் நகரிலுள்ள துறைமுகத்துக்கு அருகில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுதிட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 83

கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு

வாழ்வதற்குமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

என்னிடமும் பல்வேறு திட்டங்கள் இருகின்றன. அவற்றினை செயற்படுத்துவது குறித்து நாங்கள் பேசுவோம். அவற்றினை

செயற்படுத்துவோம். நானும் பரிந்துரைகளை முன்வைக்க தயாராகவே உள்ளேன்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4வருடங்கள் இருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்துக்கும் அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இந்த வேறுபாட்டை 3332நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடன்

பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டமானது துண்டுவிழும் தொகையில் உள்ளது. . இது அப்பாவி பொது மக்களின் சுமத்தப்படும் சுமை என்ற அச்சம் எழுகிறது.

கொவிட் 19 வைரசியினால் விழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எந்தவிதமான நிரந்தர

தீர்வும் இங்கு முன்வைக்கப்படவில்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாமர மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் இல்லை. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை

மற்றும் மலையக மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எந்த விடயங்களும் இதில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவற்றை மூடி மறைப்பதற்காக சம்பள உயர்வு முன்மொழிவை மட்டுமே இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்வாங்கி இருக்கிறார்கள். இந்த சம்பள உயர்வு முன்மொழிவும் வரவுசெலவுத்

திட்டத்தின் மூலமாக கொடுக்க முடியாது. இது ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் நாணய மதிப்பு

போன்றவற்றுடன் ஒப்பிடும்போது 1,300 ரூபா வழங்கப்பட வேண்டும். ஆகவே இதனைத் தாண்டி இன்னும் ஆயிரம் ரூபா வில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே பிரதமர் அவர்கள்

உறுதியளித்த படி அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்பட வேண்டும். ஏனென்றால் பிரதமர் அவர்கள் இந்த சபையிலேயே கூறிய பிறகு பெருந்தோட்ட

கம்பனிகள் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்கள் எனவே பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

ஒரு சகாப்த காலத்துக்கு மேலாக மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களினால் நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் மூலம் நாட்டின் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதில் உழஎனை-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவது பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நாட்டில் வருமானம் வரும் எந்த தகவல்களும் பாதீட்டில்

உள்ளடக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கம் ஆட்சியைப் பிடிப்பதற்காக மத்திய வங்கி imran parlimentகொள்ளைகளையும், ஈஸ்டர் தாக்குதலையும் பற்றி பேசுகின்றார்கள். எமது அரசாங்கம்

மத்திய வங்கி கொள்ளைலயில் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஏன் இன்னும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பழி சுமத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இந்த குற்றங்கள் உண்மையானவையாக இருந்தால் அந்த குற்றங்களுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை எப்படி வெளிப்படுத்துவது

என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நல்லாட்சியிலும் எத்தனையோ நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறுகளும் நடந்திருக்கின்றன. அதற்கான ஒரு

பிராயச்சித்தமாக தான் இன்று இந்த அரசாங்கம். ஆகையால் நீங்களும் அவ்வாறான தவறுகள் விடாமல் எதிர்காலங்களில் மக்களால் போற்றும் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

முழு உலகமும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தொழிற்சாலைகளும் வர்ததகநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள்

இடை நிறுத்தப்பட்டுள்ளன எங்கள் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நாங்கள்

உணரவேண்டும் மனிங் சந்தையில் நாளாந்தம் உழைப்பவர்கள் முதல் தனது முச்சக்கர வண்டியை லீசிங்கில் பெற்ற முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள்

அனைவரும் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும்

இளம் தலைவராகயிருந்தவேளை மகிந்த ராஜபக்ச மனித உரிமைக்காக போராடி ஜெனீவா வரை சென்றவர் இதன் காரணமாக மனித உரிமைகளிற்காக குரல்கொடுத்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

மூன்று படையணிகளை உள்ளடக்கிய இலங்கை இராணுவ பொறியியலாளர்களின் பல் திறன் மற்றும் பன்முகத் திறன்

கொண்ட புதிய முதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு நேற்று முன்தினம் ஸ்தாபிக்கப்பட்டது.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ பொறியியலாளர் பிரிவு பல்திறன் மிக்க பல பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய அனைத்து வகையான தேசிய கட்டுமான பொறியியல் பணிகள்,

சிவில் -இராணுவ பணிகள், கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள், துரித அனர்த்த முகாமைத்துவ பணிகள், தளபதியின்

பணிகள் என்பவற்றை மத்தியஸ்த்தப்படுத்தல், பொறுப்பேற்றல், விநியோகித்தால் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் என்பவற்றை முன்னெடுக்கவுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் , இராணுவத்தின் தளபதியும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர

சில்வா, மத்தேகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள தலைமையக கட்டிடத்திற்கான பெயர் பதாகையை திறந்து வைத்ததுடன்

நிர்மாணப் பணிகளை தொடக்கி வைக்கும் வகையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்ளையும் நாட்டினர்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்

வகையில் உத்தியோகபூர்வ ஏட்டில் இராணுவ தளபதி வைபவ ரீதியாக கையொப்பமிட்டார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவுக்கான முதலாவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஒக்டோபர் 28 ம் திகதி முதல்

அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய பொறியியலாளர் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சப்பர்ஸ் குடா ஒய்வு விடுதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேட்மிட்டன் மைதானம் மற்றும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தையும் இராணுவ

தளபதி திறந்து வைத்தார். அத்துடன் இரசாயன அச்சுறுத்தல்கள், வெடிப்பொருட்கள் அகற்றுதலுக்கு எதிரான தமது எதிர் நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக

இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு சக்தி படை வீரர்களினால் காட்சிப்படுத்தப்பட்ட ஒத்திகை காட்சியையும் இராணுவ தளபதி கண்டுகளித்தார்.

“எமது பணம் வெளிநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் செலவிடுவதற்கு பதிலாக நாம் உயர் தொழில்நுட்பத்துடன் அதிநவீன இயந்திரங்களைப் பெற்று

ஜனாதிபதியின் ஆசியுடன் முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என தெரிவித்த இராணுவ தளபதி,

இராணுவத்தினரால் குறைந்த செலவில் உயர்ந்த தரத்துடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவத்

தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி, மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி , கள பொறியியலாளர்

தலைமை அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவீல் ஒருவர் கோரமாக அடித்து, வெட்டிக் கொலை

முல்லைத்தீவீல் ஒருவர் கோரமாக அடித்து, வெட்டிக் கொலை

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை

பகுதியில் வசிக்கம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து, வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.

32 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய குடும்ப பெண் ஒருவர்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலில், தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள்

காணப்படுவதால் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட

வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர்

சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு

நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொலிஸாரிற்கு இடையூறு

விளைவித்த பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதுடன் சம்பவம்

தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (19) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 கொற்றுக்குள்ளான நோயாளர்களில் நான்கு பேர் (4) உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 73 என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  1. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மரணத்திற்கான காரணம் கொவிட்19
  2. தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. 27 வயதான, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா
  4. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் கல்லீரல் நோய்
  5. நிலை அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. களுத்துறை மாவட்டத்தில் பொக்குணு விற்றவைச்சேர்ந்த 59 வயதான பெண்.. வீட்டில் உயிரிழந்துள்ளார். உயிர்
  7. இழந்தமைக்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. களுத்துறை மாவட்டதில் ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்த 86 வயதான ஆண் நபர்.வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  9. காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாதைத் தொடர்ந்து ஏற்பட்ட மார்பு தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம்

இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்

போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

இந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற

ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர்

வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :

தமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாளாகிய மாவீரர் நாளினை நினைவேந்த உலகத்தமிழர்களாய் நாம் தயாராவோம்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக

ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்கள் மாவீரர்கள்.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்

போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்

நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு ஏற்படுத்திய தடைகளை முன்னராக ஏற்படுத்தியிருந்தது.

தற்போது மாவீரர் நாளினை முன்னெடுக்க முனையும் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு அச்சுறுத்தி வருகின்றது.

மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமைகளை கவனத்தில் கொண்டு தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்த

தயாராவோம். இதற்காக உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தவாறு ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மாவீரர் நாள் வாரம் :

நொவெம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.

நொவெம்பர் 27 – மாவீரர் நாள் :

தாயக நேரம் மாலை 6h05க்கு தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வுகளை www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.

தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில்

ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ

போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ

ஆளும் கோத்தபாயவின் ஆட்சியின் முதலாவது வரவு செலவு நிதி

ஒதுக்கீட்டில் போருக்கு பல மில்லியன் ஒதுக்கி இருப்பதாக சிறிதரன் முழங்கியுள்ளார்

இது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய சிறிதரன் ,தமிழ் மக்கள் தொடர்ந்து புறம் தள்ள பட்டு வருவதாக தொடர்ந்து அவர் சுட்டி காட்டியுள்ளார்

முழுமையாக அந்த காணொளியை பாருங்கள் இங்கேஅழுத்துங்க

https://www.facebook.com/ImShritharan/videos/375237100364118
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

தமிழர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடப் பாண்டு வைரஸ் பாதிப்பின் விதிமுறை படி


இந்த நினைவு கூறல்கள் நடக்கும் என கவுரவ பாராளுமன்ற

உறுப்பினர் சிறுத்தை புலி சிறிதரன் முழங்கியுள்ளார்

கீழே காணொளியை பார்க்கவும் கிளிக் here

https://www.facebook.com/147809565379816/videos/998671540959832

Posted in இலங்கை செய்திகள்

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு முக்கியத்தவமானது அது எந்த மதமாகவும் இருக்கலாம். அந்த வகையில் மதங்ககளையும் மத சார்பான விடயங்களையும்

மதஸ்தானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொருப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் தெல்தோட்டையில் மதஸ்தானம் ஒன்று பாதிக்கபட்டு

வருவதையிட்டு செய்தியாக கொண்டு வருவதில் நாங்கள் கவலை அடைகின்றோம். இது மதத்திற்கோ அல்லது மதஸ்தானத்திற்கோ

சேரு பூசும் நடவடிக்கை அல்ல. தப்புக்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் மதங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காவே.

தற்போது தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஒரு ஆலயம் ஒன்று புரணரமக்கப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக இந்த ஆலயத்தின் நிர்மாண

வேலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆலய நிர்வாக சபையினர் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என கூறியும் இதiனால் சைவ மக்கள் பெரிதும் பாதித்து வருவதாகவும் இதனை

உடனடியாக திருத்தி அமைப்பதற்கு பொருப்பாக இருக்கும் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் நடவடிக்கை எடுக்க

வேண்டும் எனகோரியும் பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

இந்த ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயமாகும். இந்த ஆலய நிர்மாண பனிக்கு நகர வர்த்தகர்கள் பெருந்தோட்ட மக்கள் அரசியல் பிரமுகர்கள் தனவந்தகர்கள் உட்பட

பல்வேறு நன்கொடையாளர்கள் தங்களது நன்கொடைகளை பணமாகவும் பொருட்களாகவும் வழங்கி வருகின்றனர். இருந்தும் இந்ந பணம் முறையாக கையாளப்படவில்லை. பணத்திற்கான

உரிய கணக்குகள் சமர்பிப்பாடவில்லை. பொருட்கள்; பாவனைக்கு உட்படுத்தாது கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது. இந்த ஆலயத்தின் நிர்மாண பனி பல வருடங்களாக முன்னெடுக்கபட்ட

போதும் இது வரை பூர்த்தியாகவில்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் பெரிதும் பாதிப்டைந்து வருகின்றனர்.

தற்போது ஆலய வளாகம் கைவிடப்பட்டு அமைக்கபட்ட கட்டுமான பனிகளும் பாதிப்படைந்து வருகின்றது. என கூறி இந்த கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேற்படி

ஆலய பரிபான சபையின் தலைவர் சின்னையா சத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்ட போது. ஆலயம் ஒன்று கட்டுவது இழகுவான காரியமல்ல. சில குறைபாடுகள் இருக்கதான்

செய்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு போதுமான பணம் இல்லை. கிடைத்த உதவிகளை முiறாக பயன்படுத்தி உள்ளோம்.

தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார்.

பொதுவாக மலையத்தில் ஆயிரகணக்கான கோவில்கள் இவ்வாறு உரிய திட்ட வரைபு இல்லாமல் உடைக்கபப்பட்டு பணம் போதைமையால் கைவிடபட்டு காணப்படுகின்றது. முதலில்

தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஆலயத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதில்லை. இருந்த ஆலயத்தையும் உடைத்து விட்டு ஆலயமே இல்லாமல் மக்கள் இன்று பாதித்து வருகின்றனர். இந்து

கலாச்சார அமைச்சு இதன் மேல் கவணம் எடுத்து ஆலயங்களை உடைப்பதில் தடைகளை கொண்டு வர வேண்டும். பணம் இருந்தால்

உடைத்து கட்டலாம் என்ற நிலை உறுவாக வேண்டும். நன்றாக இருந்த கோவிலை உடைத்து நாசமாக்கிய நிலையை தடை செய்ய வேண்டும்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை
கோப்புபடம்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக

அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா கூறியதாவது:-

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான யாசகர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது

அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல்

பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு

எடுக்கப்படும்.உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய

பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை

இலங்கையினுள் தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல

என இந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதுவரகங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு

மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை

பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பம் இன்று நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் உள்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு அழைக்கப்பட்ட போது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை

தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த

விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.

அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு

அக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,000மாக அதிகரித்துள்ளது

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இது தொடர்பாக குறிப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின்

எண்ணிக்கை 6,141 பேர் பதிவானதாக குறிப்பிடுகிறது. கம்பஹா மாவட்டத்தில் 5,667 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 610 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் பதிவான வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 327 ஆகும். இதில் 157 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கம்பஹா மாவட்டத்தில் 111 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 3 பேருமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை, அனுராதபுரம், மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்கள் முறையே 2 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம், குருநாகல், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர் என கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய

செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெலிகட சிறைச்சாலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 பேர் ஆகும். பொலிஸ் விசேட

அதிரடி படையில் 6 பேரும், பொலிஸில் 2 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 2 பேரும் ஏனைய 9 பேரும் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று பதிவாகி உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (18) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் மரணம் இடம்பெற்றுள்ளமை

உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 69 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையுடன் நீரிழிவு நோயின்
  2. சிக்கல் நிலைமை ஏற்பட்டதாகும்
  3. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஆவார். கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமை இனங்காணப்பட்டு ஹேமாகமை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்
  4. பெற்றுவந்த வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நிரிழிவுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் நுரையீரல்
  5. பலவீனப்பட்டமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயின்
  7. சிக்கல் நிலை கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையினால் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் நில அதிர்வு

கண்டியில் நில அதிர்வு

கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18)

சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை

காதலர் தினத்தன்று தனது மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று (18) தீர்ப்பளித்தார்.

38/1, பாடசாலை மாவத்தை, ஆண்டாம் குளம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கெந்த கேவாகே அனுர இசாந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018.02.14 ஆம் திகதி கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை காதலர் தினத்தன்று பெற்றோல் ஊற்றி தீ வைத்து

கொலை செய்த குற்றத்திற்கெதிராக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை

விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அவ் வழக்கு தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில்

எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டு எதிரி குறித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக

இணங்காணப்பட்டதையடுத்து எதிரிக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்

சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்

நாட்டின் சகல மாகாணங்களிலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டி கெட்டம்பே கால்நடை மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்; மத்திய மாகாணப் பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் சகல பகுதிகளிலும், கால்நடை வைத்திய சேவைகள் காணப்பட்டாலும், மக்களுக்கு சலுகைவிலையில், முழுமையான

உத்தரவாதத்துடன் கூடிய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான அரச கால்நடை வைத்தியசாலைக்கான பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நாட்டின் சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டாhர்.