சிறுநீரக கடத்தல் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுநீரக கடத்தல் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

சிறுநீரக கடத்தல் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

குறித்த முகவர் ஆமர்வீதி பகுதியிலும், கிராம உத்தியோகத்தர்கள் ராஜகிரிய மற்றும் கடுவாளை ஆகிய பகுதிகளிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்

No posts found.
இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் டீசல் கிளிநொச்சியில் முதற்கட்டமாக விநியோகம்

சீனாவின் டீசல் கிளிநொச்சியில் முதற்கட்டமாக விநியோகம்

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயத்துறைக்காக வழங்கிய டீசலை விநியோகிக்கும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சீன அரசாங்கம் நாட்டின் விவசாயத்துறைக்காக 68 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளது இதனை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அறுவடை ஆரம்பமாகி உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதலில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்குகிறது.. கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை ஏக்கரிலிருந்து இரட்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டெயருக்கு 15 லீற்றர் வீதம் டீசல் இலவசமாக வழங்கப்படும்.

அறுவடை மேற்கொள்ளும் விதத்திற்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்கும்.


கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும்.

No posts found.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்

இவ்வருடம், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதி யான 75 நாணயங்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால், இரண்டு முத்திரைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முப்படை வீரர்களுக்கும், கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு 1996
வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்
Posted in இலங்கை செய்திகள்

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்

60 மாணவர்களுக்கு சோலார் மின்குமிழ்கள்

மட்டக்களப்பு ரோட்டரி கழகம் மட்டு.மேற்கு வலயத்தில் மிகவும் பின்தங்கிய, மின்சாரம் இல்லாத 60 மாணவர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ்களை வழங்கி வைத்தது.

மட்டக்களப்பு ரோட்டரிக் கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணதாச தலைமையில் இந்த நிகழ்வு சனிக்கிழமை (14) நடைபெற்றது.

குறிஞ்சாக்கேணி பாவற்கொடிச்சேனை உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வுகளில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மின் குமிழ்களை வழங்கி வைத்தார்.

புதிதாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலாவுக்கு ரோட்டரி கழகத் தலைவர் ரமணன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்

No posts found.
லண்டனில் பொங்கலில் பறந்த புலிக்கொடி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் பொங்கலில் பறந்த புலிக்கொடி

லண்டனில் பொங்கலில் பறந்த புலிக்கொடி .

லண்டன் மிச்சம் பகுதியில் தமிழீழ விடுதலை பாற்றாளர் ஒருவரது வீட்டு பொங்கல் ,
நிகழ்வில் தமிழீழ புலிக்கொடி ஏற்ற பட்டு பொங்கல், பொங்கபட்டுள்ள நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது .

இந்த வீட்டில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ,
சிறப்பித்தனர் .

தமிழீழ விடுதலை மறவர்கள் முறையாம் , தமிழர்
பண்பாட்டு முறையுடன் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழர்கள் ,
அகிலத்தில் வாழ்கிறார்கள் என்பதை இவை இடித்துரைக்கின்றன .

No posts found.
காதலியை கடத்தி சென்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கடத்தி சென்ற காதலன்

காதலியை கடத்தி சென்ற காதலன்

இலங்கை பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் இளம் பெண் ஒருவரை கடத்தி சென்றுள்ளார் .

இந்த பெண்ணை கடத்திய சிங்கள இராணுவ சிப்பாய், குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார் .


எனினும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக காதலை முறித்து கொண்டுள்ளார் .இதன் பின்னர் கள்ள காதலிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார் .

சம்பவ தினத்தன்று பெண்ணை சந்தித்து , அவரை கடத்தி சென்றுள்ளார் .


இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியவர் ,திருமணம் முடித்தவர் என தெரிய வந்துள்ளது .

இந்த கடத்தல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ,அவ்வேளை நாட்டின் ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிக்கு இழப்பீடு வழங்கு படி நீதிமன்றம் அறிவித்தது .

நீதிமன்றம் அறிவித்த 10கோடி இழப்பீட்டு தொகை தம்மால் செலுத்த முடியாது எனவும் ,அவ்விதமான தொகையில் என்னிடம் சொத்து ஏதும் இல்லை என மைத்திரி அறிவித்துள்ளார் .

இவரது கூற்றின் பிரகாரம் நான் இழப்பீட்டை செலுத்த மாட்டேன் என்பது இவரது கூற்றாக உள்ளது .

No posts found.
தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு

தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு

தமிழர் பகுதிகளில் சீனா அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது .

இந்த நட மாட்டம் இந்தியாவை கண்காணிக்கு நோக்கம் கொண்டவை

நவீன கருவிகளை தாங்கி வந்து,அதன் ஊடாக இந்தியாவின் கரையோரங்களை உளவு பார்ப்பதான குற்ற சாட்டை இந்தியா உளவுத்துறை ஊடகம் தெரிவித்துள்ளது .

புலிகளை இலங்கையில் இல்லாது ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியது .

அதன் பின்னர் சீனாவின் ஆதிக்க இலங்கையில் அகல கால் ஊன்றி நிலைத்து கொண்டது .

தமது துரோகங்களை மறந்து தற்போது தமிழர் பகுதியில் சீனா அரசு ஊடுருவி ,இந்தியாவை பிரிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது என்கிறது .

No posts found.
தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

தீயில் எரிந்த 12 வீடுகள் கதறும் மக்கள்

இலங்கை தலவாக்கலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த தினம் ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 12 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அதனை அடுத்து ஏனைய வீடுகள் தப்பித்து கொண்டன .

இந்த 12 குடும்பத்தை சேர்ந்த 47 பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

15.01.2023யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75

வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில்

கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். குறிப்பாக தைப்பொங்கல் என்பது தேசிய விழாவாகும். முற்காலத்தில் விவசாய நாடாக எமது நாடு இருந்தது. நெல் அருவடை கிடைத்த போது அதனை கடவுளுக்குப் படைத்தோம்.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

இன்றைய தைப்பொங்கல் நிகழ்வில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றிய இராமநாதன் அழகியற்கலைப் பீட மாணவர்களை பாராட்டுகிறேன். உயர் தரத்திலான கலை நிகழ்வை அரங்கேற்றப்பட்டது.

நாதஸ்வர கச்சேரியும் பாரம்பரிய அடிப்படையில் சிறப்பாக அமைந்தது. அனைவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறேன். இந்த குழுக்களை உலக மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க முடியும். அது தொடர்பில் இலங்கையர்களாக நாம் பெருமை அடைகிறோம்.

காலியில் நடத்தப்படுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் கலை விழாவொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம்.

நாமும் இந்தியாவை விட மாற்றமாக புதிய தமிழ் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளோம். அதனை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்.நல்லிணக்கத்தை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டன.

எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது. 30-40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத ,இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது.

நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும்.

தைப்பொங்கல் விழா மேடையில் பொங்கல் தயார் செய்வதை கண்டேன். நெருப்பின் மேல் பானையை வைத்து தண்ணீர் மற்றும் பால் என்பவற்றை ஊற்றி அரிசி,கருப்பட்டி என்பற்றை இட்டு பொங்கல் தயாரிக்கப்படுகிறது.

இந்த நெருக்கடியான நிலையில் நாம் சிங்களவர்கள்,.தமிழர்கள் ,முஸ்லிங்கள் ,பேகர் என அனைவரையும் இட்டு அதன் ஊடாக இலங்கையர் என்ற தனித்துவத்தை உருவாக்குவோம்.

வடக்கில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த விழாவின் பின்னர் ஆராய இருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். நாம் மீண்டும் நாட்டை ஒன்றிணைக்கவும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் வேண்டும் என்று அவர்களிடம் கோரினேன்.

பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் கட்சி எம்.பிகளுடன் பேசினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும்.

அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது.

தீர்வு என்ன என்பதை பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

பல பிரச்சினைகள் குறித்து ஏற்கெனவே ஆராய்ந்துள்ளோம். காணமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம்.

என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன். உண்மையை கன்டறிவதை நாமும் விரும்புகிறோம்.

அதன் மூலம் எம்மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள்.எனவே உண்மையை கன்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம்.

வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

அடுத்து காணிப்பிரச்சினை காணப்படுகிறது. வன்னியில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்புள்ள காணிப் பிரச்சினை குறித்து ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் மீள காணிகளை கையளிப்பது குறித்தும் ஆராயப்படும்.யுத்த காலத்தில் இந்தப் பிரதேசத்தை

பாதுகாப்பதற்காக படையினர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை மீள வழங்க இராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்.

அனைத்து மக்களும் ஒன்றாக வாழும் நாட்டிற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்

யாழ் ஆயர் அவர்கள் கோரியது போன்று கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களை மீள நிர்மாணிக்க இருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேலாக பூஜை வழிபாடுகள் நடைபெற்ற ஆலயங்கள் உள்ளன. புதிதாக ஆரம்பித்தவைகளும் உள்ளன.

அடுத்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர்.

இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம்.இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம்.
வறுமை,பட்டினி,தொழிலின்மை என்பன தமிழ் ,சிங்கள மக்களுக்கு மட்டுப்படவில்லை. அனைவரும் கஷ்டப்படுகின்றனர். அனைவரும் இணைந்து தான் கரைசேர வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டி இருக்கின்றன.

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளையும் பாராளுமன்ற கட்சித் தலைவர்களையும் அழைத்து இரண்டாம் கட்ட பேச்சு நடத்த இருக்கிறோம்.

மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது.

அதன் பின்னர் முஸ்லிம் எம்.பிகள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து பேச இருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களையும் அழைத்து பேச வேண்டியுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஓரங்கட்டப்பட்ட கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. குலபேதம் ,வறுமை காரணமாக ஒதுக்கப்படும் நிலை உள்ளது.

கிறிஸ்தவ மக்களுக்கு தமது பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் உள்ளது. அவை குறித்து ஆராய சமூக நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்க இருக்கிறோம்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இலங்கையர் என்ற தனித்துவத்தை உறுதிப்படுத்துவோம். இவை அனைத்தையும் முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாதூகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன்

இராமநாதன், குலசிங்கம் திலீபன், பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க,வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன , பாதுகாப்பு

படைகளின் பணிக்குழாம் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகள், ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கான மேலதிகச் செயலாளர் எல்.
இளங்கோவன் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No posts found.
யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்

யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் அன்ரனி புரம் பகுதியில் உள்ள இராணுவ பாதுகாப்பு வலயம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .

எமது காணிகள் எமக்கு வேண்டும் .இராணுவம் இங்கிருந்து அகல வேண்டும் என கோரியே மக்கள் இந்த போராட்டத்தை நடத்தினர் .

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ,அங்கு நிலைகொண்டுள்ளது சிங்கள இராணுவம் .

போர் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இராணுவம் அங்கிருந்து அகல மறுத்து ,நிலை கொண்டுள்ள செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
தமிழக மீனவர்களை படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு

தமிழக மீனவர்கள் படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு

இலங்கை மீனவர்களின் வாழ்வாதரத்தை கெடுத்து ,அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் ,தமிழக மீனவர்களின் படகுகளை இடியுங்கள் என மீனவ அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார் .

இந்தியா மீனவர்கள் படகுகளை ,இரும்பு படகுகளை பறித்து வைத்துள்ளோம் .
வேண்டும் என்றால் வாருங்கள் அவற்றை தருகிறேன் .

இதை எடுத்து சென்று, அவர்களின் படகுகளை இடியுங்கள் என கேலியாக பேசியுள்ளார் .

இவரது பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை அரசனுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளார் .

மீன் வியாபாரி இங்கும் தனது மீன் வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளார் .

No posts found.
ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்திருந்தார் .

தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்தார் .

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,காணாமல் ஆக்க பட்டோர் ,மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர் .

மக்களை கட்டு படுத்த போலீசார் தண்ணியை பீச்சி அடித்து போராட்ட காரர்களை விரட்டினர் .

இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இலங்கையில் இந்தியா போர் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இந்தியா போர் கப்பல்

இலங்கையில் இந்தியா போர் கப்பல்

இந்தியா கடற்படைக் கப்பல் (INS) டில்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வருகை தந்த கப்பலை,
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இந்த கப்பலில் 390 கடல்படையுடன் வந்துள்ளது .

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்,
இரு கடற்படைகளுக்கு இடையேயான போர் ஒத்துளைத்து மற்றும் பாதுகாப்பு ,
தீவிரவாத ஊடுருவல்கள் தடுக்கும் விடயங்கள் பயிற்சியாக பெறப்படவுள்ளன .

No posts found.
லண்டன் (Trafalgar Square) தற்போது பொங்கல் வாழ்த்துகள்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் (Trafalgar Square) தற்போது பொங்கல் வாழ்த்துகள்

பிரித்தானியாவின் இலண்டன் மாநகரில் அமைந்துள்ள டிராபல்கர்
சதுக்கத்தில் (Trafalgar Square) தற்போது பொங்கல் வாழ்த்துகள் ஒளிரவிடப்பட்டுள்ளது.


தமிழரின் தேசிய அடையாளமான கார்த்திகை மலருடன் கூடிய இந்த மின்னொளி காட்சிப்படுத்தல்,பிரித்தானிய நேரம் இன்றிரவு
9 மணிவரை ஒளிரவிடப்படவுள்ளது.

No posts found.
கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி போர்க்குற்றத்தால் பாதிக்க பட்டவர்கள் ,அதனை புரிந்தவர்கள் அமெரிக்காவால் வசித்தால் வழக்கு தொடர முடியும் என்ற சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

இதனால் இலங்கையில் போர்க் குற்ற இனப் படு கொலை புரிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தங்கி வாழ முடியா நிலை ஏற்பட்டுளள்து .

அவ்வாறு அமெரிக்காவில் தங்கினால் தமிழர்களினால் வழக்கு தொடுக்க பட்டு அதில் கைது செய்யப்படும் பேராபத்து காணப்படுவதால் ,அமெரிக்காவை கோட்டபாய மறந்து இலங்கையில் முடங்க வேண்டிய பரிதாபத்தில் சிக்கியுள்ளார் .

No posts found.
ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்

ஓமானில் வதைகளிற்கு உள்ளான 15 பெண்கள் இலங்கை வந்தனர்

ஓமானில் வீட்டு வேலைகளுக்கு சென்ற பெண்கள் பலத்த வதைகளிற்கு உள்ளாகினர் .

அவ்வாறு உள்ளான பெண்களில் 15 பேர் இலங்கை வந்தடைந்தனர் .

இலங்கை மீள வந்த பொழுதே ,தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக கண்ணீர் மல்க ,பாதிக்க பட்ட பெண்கள் தமது கருத்துக்களை பதிவிட்டனர் .

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட எதிமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச பொலிஸ் மா அதிபரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார அண்மையில் 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி கைது

முன்னதாக, மொனராகலையில் உள்ள எஸ்.எஸ்.பி.யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கஞ்சா செடிகளுடன் எஸ்.எஸ்.பி, இரண்டு பொலிசார் மற்றும் மூன்று சிவிலியன்களை STF கைது செய்தது.

பின்னர், எஸ்எஸ்பி சிசிர குமார ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன.

பொலிஸ் அத்தியட்சகர் குமார, எதிமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தர்மதாச மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதி சசிந்து மதுஷன் உள்ளிட்ட சந்தேக நபர்களை ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
நான்கு முக்கிய அமைச்சுக்கள் தொடர்ந்து ரணில் வசம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி

ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி

பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்,

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள்,
காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தைப் பொங்கல் வாழ்த்து செய்தி

உற்பத்தித்திறன் மற்றும் செழுமையையும் குறிக்கும் இந்த ‘தைப் பொங்கல்’ தினத்தில்,
இலங்கையர்களாகிய நாம் அரசாங்கத்தின் புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த
வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும்,
பொருளாதார வளத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன்
செயற்படுவது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தைப் பொங்கல்’ கொண்டாட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு
ஆசீர்வாதங்களை வழங்கட்டும். ‘பொங்கலின்’ ஆவி மற்றும் மரபுகளுக்கு அமைவாக,
இலங்கை மக்கள் செழிக்க வெற்றி நிரம்பி வழியட்டும் என்றும் ஜனாதிபதி
தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No posts found.
வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்த பேருந்து

வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் புகுந்த பேருந்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த 750
ஆம் இலக்க வழித்தட பேருந்து , சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.

இதன் போது சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள்
வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற பேருந்துகளை மோதித் தள்ளியுள்ளது.

இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.