சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்விச் சான்றிதழ்களை நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில்

அதனை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இன்று (டிசம்பர் 19) காலை வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சான்றிதழை ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றார்.

இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 – 43 வயதுக்கிடைப்பட்டவர்கள்.

சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புத் தட்டுப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

உப்புத் தட்டுப்பாடு

உப்புத் தட்டுப்பாடு

உப்புத் தட்டுப்பாடு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை

தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போதுள்ள தீர்வை விகிதத்தின்படி, 30,000 மெட்ரிக் டன் கச்சா அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இறக்குமதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு

வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு ஹோமாகம பனாகொட பெலடகொட பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீது புதன்கிழமை (18) காலை பல

துப்பாக்கிச் சூட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டலின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என

சந்தேகிக்கப்படுவதாக மெகொட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோப் குழு தலைவராக ஹர்ஷ நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

கோப் குழு தலைவராக ஹர்ஷ நியமனம்

கோப் குழு தலைவராக ஹர்ஷ நியமனம்

கோப் குழு தலைவராக ஹர்ஷ நியமனம் பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி

பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் வைத்து லாண்ட் மாஸ்டரை மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம்

குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் மாதி​வெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க

திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை

முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள

பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும்.

அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

பதவி விலகத் தயார் என்கிறார் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பதவி விலகத் தயார் என்கிறார் சஜித்

பதவி விலகத் தயார் என்கிறார் சஜித்

பதவி விலகத் தயார் என்கிறார் சஜித் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தான் கற்ற கல்வி, தன்னுடைய பட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

தான் சமர்ப்பித்துக்கும் ஆவணங்கள் அனைத்தும் உண்மையும். அதில் தவறு இருக்குமாயின் யாராவது கண்டறிந்தால், எம்.பி பதவியிலும் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ஏன்? அரசியலில் இருக்கும் விலகத் தயார் என்றார்.

நான், எனது பிறப்புச்சான்றிதழையும் எடுத்துவந்தேன். யாராவது கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துதான் அவ்வாறு எடுத்துவந்தேன் என்றார்.

நோய் காவு வண்டி பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து

நோய் காவு வண்டி பேருந்து விபத்து மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில்

மோதி மூவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், நோய் காவு வண்டியில் பயணித்த சாரதி உட்பட

மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இருந்து புறப்பட்டு, களுவாஞ்சிகுடியில் நடைபெறவுள்ள

கூட்டம் ஒன்றுக்காக சென்றவேளையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் நோய் காவு வண்டியின் முன் பகுதிக்கும் பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த

வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும்,

இதற்குமுன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்

இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில் மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளதாவது: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை

டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.

இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியா இலங்கை உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சார துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும்.

நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும்.

இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு

இந்திய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத்

தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும்

இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல்,

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக

இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும்

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் பலி

பொலிஸ் உத்தியோகத்தர் பலி

பொலிஸ் உத்தியோகத்தர் பலி வத்தேகம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த வீதி விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட காருடன் காரின் சாரதியும் மாத்தளையில் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், காரை மறைப்பதற்கு அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 46 மற்றும் 48 வயதுடைய மாத்தளை மற்றும் உதிஸ்பத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு ,மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வரவேற்று அளித்தனர்.

அத்துடன், சிறப்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார் பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் இன்று காலமானார்.

அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதயக் கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல தபேலா இசைக்கலைஞரான இவர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் சாகிர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது

பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம்
Posted in இலங்கை செய்திகள்

பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம்

பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம்

பெரும் நெருக்கடிக்குள் அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனினும் அரசாங்கம் அதிகமாக கடன்களை

பெற்றுக்கொள்வதாக சிலர் வாதிடுகின்றனர். அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளகூடியது என சிலர் பதிலளிக்கின்றனர்.

இந்த நிலையில் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவா, அல்லது நாங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்துவதற்காகவா என்று முரண்பட்ட

கூற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மூன்று முக்கிய கேள்விகளை FactCheck.lk தெளிவுபடுத்துகின்றது.

கேள்வி – 01: அரசாங்கங்கள் ஏன் கடன்களை பெறுகின்றன?

அரசாங்கங்கள் மூன்று பிரதான காரணங்களுக்காக கடன்களை பெறுகின்றன. முதலாவதாக பிரதான நிதி பற்றாக்குறையை நிவரத்தி

செய்வதற்கு. இரண்டாவது கடன்கள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு. மூன்றாவதாக முதிர்வு கடன்களை அடைப்பதற்கு.

அரசாங்கம் ஒன்று நிறைவேற்றவேண்டிய இந்த மூன்று காரணங்களையும் ஒன்றாக உற்றுநோக்குவோமாயின் அதுவே ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம்

பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் மொத்த மதிப்பு ஆகும். இதனையே GFN (Gross Financing Need) மொத்த நிதித்தேவை என அழைக்கின்றோம்.

கேள்வி – 02: 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் கடனாக பெற்றுக்கொள்ளவிருந்த தொகை எவ்வளவு?

GFN (Gross Financing Need) க்கு அமைய FactCheck.lk இன் கணக்கீட்டிற்கு ஏற்ப 2024 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் தொகையானது 3,670 பில்லியன் ரூபாவாகும்.

கேள்வி – 03: 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் கடனானது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமானதா?

அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் பின்வரும் தேவைகளுக்காக வரையறைகளை விதிக்கின்றது.

(1) மொத்த நிதித்தேவை மற்றும்,

(2) கடனின் அளவு அதிகரிப்பு – குறித்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடனின் மொத்த தொகை.

அரசாங்கம் வரையறைக்கு அப்பால் சென்று கடன் பெற்றுக்கொண்டுள்ளதா அல்லது பெற்றுக்கொள்ளவில்லையா என்பது தொடர்பில் ஆராயப்படும். 2024 ஆம் ஆண்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் தேசிய

ரீதியாக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மேற்குறிப்பிட்ட விடயம் ஆராயப்படும்.

மொத்த நிதித்தேவையை (GFN) சரிபார்த்தல்

2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு (BE24) அமைய, நடப்பு நிதியாண்டுக்காக அரசாங்கம் நிர்ணயித்த மொத்த நிதித் தேவையின் எல்லையானது 3,670 பில்லியன் ரூபாவாகும். நிதியமைச்சின் தரவுகளுக்கு

அமைவாக கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கத்தினால் 1,903 பில்லியன் ரூபா கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் வரையறையை அதாவது 3,670 பில்லியன் ரூபாவினை பெற்றுக்கொள்வதற்கு

ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதிக்குள் மேலும் 1,766 பில்லியன் ரூபாவினை கடனாக பெறும் தகுதி அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

ஒக்டோபர் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள கூடிய கடன் அளவினை Factcheck.lk மதிப்பாய்வு செய்துள்ளது.

அதற்கமைவாக குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் பெற்றுக்கொள்ள கூடிய கடனின் அளவு 1,612 பில்லியன் ரூபாவாகும்.

இந்த கடன் தொகையானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1,766 பில்லியன் ரூபாவினை விட குறைவான தொகையாகும். அது மாத்திரமின்றி வரவு செலவு திட்டத்தின் வாயிலாக வரையறுக்கப்பட்ட தொகைக்குள் இது அடங்கும்.

BE24 உடன் ஒப்பிடுகையில் T-பத்திரங்கள் (T-bonds) மீதான வட்டி செலுத்துதல் குறைக்கப்பட்டதன் காரணமாக குறைவான கடன் தேவை என கருத முடியும்.

முடிவு: 2024 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த நிதித் தேவைக்காக வரவு செலவு திட்டம் வரையறுத்துள்ள கடன் வரம்பினை மீறி மேலதிகமாக கடன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்க முடியாது.

கடன் பிரிவுகளை (DS) சரிபார்த்தல்

மொத்த நிதி தேவை வரம்பிலிருந்து, திருப்பி செலுத்த எதிர்பார்க்கப்படும் கடனை கழிப்பதன் வாயிலாகஅரசாங்கம் கடன் அதிகரிப்பில் எதிர்பார்க்கப்படும் வரம்பினை தீர்மானிக்க முடியும்.

முதிர்ச்சியடைந்த கடனை செலுத்துவதற்காக அரசாங்கம் கடனை பெற்றிருந்தால் கடன் பிரிவுகளில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்காது.

எனினும் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடனை பெற்றுக்கொள்ளுமாயின் அது கடன் பங்கின் அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளுக்கு அமைய, துண்டு விழும் தொகையானது 2,401 பில்லியன் ரூபாவாக அமையும் என அரசாங்கம் கணித்துள்ளது. அந்த வகையில் கடன் பிரிவுகளிலும் (DS) சமமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் பங்கானது 965 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதாவது,

ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் DS ஐ அதிகரிப்பதற்கான வரவு செலவுத் திட்ட வரம்பிற்குள் அரசாங்கத்திடம் இன்னும் 1,445 பில்லியன் ரூபாய் உள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நிதித்தேவையை ஈடுசெய்வதற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் வரவுசெலவு

திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான வரவு செலவு திட்டத்தில் எஞ்சியிருக்கும் 1,445 பில்லியன்

ரூபாவில் 1,030 பில்லியன் ரூபாவை உள்நாட்டு கடன் வாயிலாகவும், 415 பில்லியன் ரூபாவினை வெளிநாட்டு கடன் வாயிலாகவும் நிதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்டோபர் முதல் நவம்பர் வரை உள்நாட்டு கடன் பங்கானது 371 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. டிசெம்பர் மாதத்திற்கான வரவு செலவுத்

திட்டத்தின் தேசிய நிதி வரம்பு 659 பில்லியன் ரூபாய் ஆகும். அந்த வகையில் 659 பில்லியன் ரூபாய் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

முடிவு: டிசெம்பர் மாதத்திற்குள் குறித்த தொகையினை கடனாக பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் காணப்படுவதால், 2024 ஆம் ஆண்டுக்கான

உள்நாட்டு கடன் வரவு செலவு திட்டத்தின் வரம்பிற்குள் காணப்படுகின்றமை தெளிவாக புரிகின்றது.

ஒட்டுமொத்த நிதித்தேவை மற்றும் கடன் பங்கு அதிகரிப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் குறித்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள

முடிவுகளை கவனத்தில் கொள்ளும் போது 2024 ஆண்டிற்காக மேலதிகமாக கடனை பெற்றுக்கொள்ள வேண்டிய அபாயம் அரசாங்கத்த்திற்கு இல்லை என்பது தெளிவாக புரிகின்றது.