Tag: வௌிநாடு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த
வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும்,
இதற்குமுன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்
வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார்.
பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது.
அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது.
வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.
மேலும் இவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ரசிந்தவை தற்போது வைத்துள்ள விதம் குறித்து, அங்குள்ள மற்றுமொரு இலங்கையர் ஔிப்பதிவு செய்த வீடியோ இது,
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது
- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது
- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்
- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு














