மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை ,மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை,

பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயல பிரிவுகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு ,நாட்டின் சில பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து மில்லனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், ஏனைய பகுதியில் எலும்புக்கூடு எச்சங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று மதியம், கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களுகங்கையில் சடலம் ஒன்று மிதப்பதாக கிரியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, முன்னெடுத்த விசாரணையில் சடலத்தின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், தலை பகுதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒரு ஆண் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இறந்தவர் வெளிர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்டசின்ன உப்போடை வாவியில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட மெலிந்த உடலமைப்பு கொண்ட பெண் என்பது தெரியவந்தது.

அவர் இறுதியாக வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த கவுன் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நபர் மீது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

நபர் மீது துப்பாக்கிச் சூடு

நபர் மீது துப்பாக்கிச் சூடு

நபர் மீது துப்பாக்கிச் சூடு ,கல்கிஸை, சிறிபால மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மற்ற சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ,மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணொளி

Posted in இலங்கை செய்திகள்

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு ,பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்

தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும்

வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு

பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால்

பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிசார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை

செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150000க்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு

கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட

அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது

தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென

பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

“உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில்

முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு

முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து

விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள்.
இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய

கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு

திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள்.

அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள்.

ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு

கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது.

அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி

இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும்கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது.

சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட

அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது.

அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள்

காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால்.

இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள்.

எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள்.

சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை

இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது.

இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர்.

இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார்.

இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால்

இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என்றார்.

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள் வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி திட்டம் வேகமாக இணைக்க பட்டுள்ளது .

காணொளியில் விபரம்

குழந்தையை கொலை செய்த தாய்
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை கொலை செய்த தாய்

குழந்தையை கொலை செய்த தாய்

குழந்தையை கொலை செய்த தாய் ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், அன்றிரவு (16) குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

video

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

மன்னார் துப்பாக்கிச் சூடு

மன்னார் துப்பாக்கிச் சூடு

மன்னார் துப்பாக்கிச் சூடு ,மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும்

அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

‘மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது.

முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

video

இறுதியாக வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாக இடம் பெற்ற இருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்களாவர்.

எவ்வாறாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார்.

அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம்’ என தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து

மவுஸ்ஸாக்கலை குடியிருப்பில் தீ விபத்து ,மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

video

தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து ,நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்

இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த

வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ள போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும்

அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக

வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகால மோசடி வௌியானது
Posted in இலங்கை செய்திகள்

நீண்டகால மோசடி வௌியானது

நீண்டகால மோசடி வௌியானது

நீண்டகால மோசடி வௌியானது ,எம்பிலிப்பிட்டியவிலிருந்து சிறிய லொறியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட 9 எருமை மாடுகளுடன், லொறியின் சாரதி உட்பட இருவரை கொட்டவில பொலிஸார் இன்று (18) அதிகாலை கம்புருகமுவ சந்தியில் வைத்து கைது செய்தனர்.

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்தபோது, ​​மாடுகளில் ஒன்று ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக கால்நடை திருட்டு நடந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கிளை வீதி ஒன்றின் வழியாக பயணித்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக, கொழும்பு நோக்கி ரகசியமாக செல்ல லொறி ஒன்று தயாராகி வருவதாக பொலிஸாராருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்ட போது, ​​அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் கேபினில் ஒரு சிறிய அளவு ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பட்டா ரக லொறியின் முன்பக்க இலக்கத்தகடும், வாகன வருமான உத்தரவு பத்திரமும் பொருந்தாத நிலையில், போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்தி இந்த மோசடி நடத்தப்படுகிறதா? என்பதைக் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

video

சந்தேகநபர்கள், அளுத்கம தர்காநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

எம்பிலிப்பிட்டி பகுதியிலிருந்து இந்த மாடுகள் திருடப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொட்டவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது
Posted in இலங்கை செய்திகள்

1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது

1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது

1.4 பில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றத்தை சீனா மேலும் நீட்டிக்கிறது ,சீனா தனது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று ஏற்பாட்டை இலங்கைக்கு நீட்டித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.


“இலங்கை மத்திய வங்கி மற்றும் சீன மக்கள் வங்கி, டிசம்பர் 2024 இல், 2021 இல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்

கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக புதுப்பித்தது,” என மத்திய இலங்கை வங்கி நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

video


CNY 10 பில்லியன் நாணய பரிமாற்ற வசதி சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்று நாணய கண்காணிப்பு அமைப்பு மேலும் கூறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்கவும், சீன மக்கள் வங்கியின் சார்பில் ஆளுநர் பான் கோங்ஷெங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.


2021 ஆம் ஆண்டில், இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மூன்று வருட இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்திக்கான இருதரப்பு வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி பின்னர் தெரிவித்தது.

காசா போர் நிறுத்தம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்
Posted in இலங்கை செய்திகள்

காசா போர் நிறுத்தம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

காசா போர் நிறுத்தம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

காசா போர் நிறுத்தம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் ,காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 737 கைதிகள் மற்றும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறைச்சாலையில் காவலில் உள்ள 737 கைதிகள் மற்றும் கைதிகளை விடுதலை செய்வதற்கு “அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது” என்று அதன் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின்படி, இந்த வார இறுதியில் இந்த போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருமா என்பது குறித்த நிச்சயமற்ற நாட்களை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலின் அமைச்சரவை சனிக்கிழமை தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு முன் விடுவிக்கப்பட மாட்டோம் என்று அமைச்சகத்தால் பெயரிடப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். உள்ளூர் நேரம் (1400 GMT).

காசாவில் உள்ள இஸ்ரேலிய கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட வேண்டிய 95 பாலஸ்தீனிய கைதிகள், பெரும்பான்மையான பெண்களின் பட்டியலை அது முன்பு வெளியிட்டிருந்தது.

விரிவாக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களில், பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தா கட்சியின் ஆயுதப் பிரிவின் தலைவரான ஜகாரியா ஜுபேடியும் ஒருவர்.

2021 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து ஐந்து பாலஸ்தீனியர்களுடன் ஜுபெய்டி தப்பினார், பல நாட்கள் வேட்டையைத் தூண்டினார், மேலும் பாலஸ்தீனியர்களால் ஒரு ஹீரோவாகப் பாராட்டப்பட்டார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்ரேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒரு இடதுசாரி பாலஸ்தீனிய சட்டமியற்றுபவர் காலிதா ஜராரும் விடுவிக்கப்பட உள்ளார்.

ஜரார் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டின் முக்கிய உறுப்பினர் ஆவார், இது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் “பயங்கரவாத அமைப்பாக” நியமிக்கப்பட்டது.

video

1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசமான மேற்குக் கரையில் டிசம்பர் மாத இறுதியில் தடுத்து வைக்கப்பட்டு, 60 வயதான அவர் குற்றஞ்சாட்டப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஹமாஸுக்கு நெருக்கமான இரண்டு ஆதாரங்கள் AFP இடம், விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் முதல் குழுவில் மூன்று இஸ்ரேலிய பெண் வீரர்கள் உள்ளனர்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் ,சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது

விஜயத்தின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின் சாங்டு பிராந்தியத்தில் உள்ள பல மின் உற்பத்தி தொழிற்சாலைகளைப் பார்வையிட உள்ளார்.

பின்னர், வறுமை ஒழிப்புக்கான மாதிரி கிராமம் ஒன்றைப் பார்வையிட ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாகாண செயலாளர் வாங் சியாவோஹயை (Wang Xiaohui) சந்திக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்துகொள்வர்.

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு
Posted in இலங்கை செய்திகள்

30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு

30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு

30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற குழு,யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று (16) மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவு என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு சோதனை நடத்தப்போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

video

கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் ,பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக

அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில்,

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய கடந்த தினம் ஒப்புதல் அளித்திருந்தார்.

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது


துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது , சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதிய கிராமம் 3 பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சிதம்பரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்

கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம் ,ஹிக்கடுவ கடலில் நீஶாடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை பொறிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் குறித்த நபர் அது குறித்து பொருட்படுத்தாமல்

அவ்விடத்தில் நீராடச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

video

இந்நிலையில், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது ,கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ​ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு

தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த

இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்

video

கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.