மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்
மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் ,பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக
அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில்,
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய கடந்த தினம் ஒப்புதல் அளித்திருந்தார்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது









