கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்
கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம் ,ஹிக்கடுவ கடலில் நீஶாடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை பொறிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் குறித்த நபர் அது குறித்து பொருட்படுத்தாமல்
அவ்விடத்தில் நீராடச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா









