இது தான் காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இது தான் காதல்

இது தான் காதல்

எங்க ஊரு வீதியில
ஏ மனமே நடந்தேண்டி
உன் நினைவு எனை துரத்த
உட்க்கார்ந்து அழுதேண்டி

நீ தந்த உணவுகளும்
நீ யிட்ட முத்தங்களும்
நெஞ்சில் நீச்சலிட
நித்தம் உனை நினைக்கிறேன்

மடி சாய்ந்து நீ அழுதிட
மணி விரல்கள் தலை கோத
கண் துடைத்து நீயணைத்த
கால நினைவு துடிக்குதடி

போர் வந்து சதி செய்ய
போராலே பிரிந்தோமே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று

இன்றுவரை உறவில்லை
எங்கிருக்காய் தெரியவில்லை
ஆனாலும் ஆள் மனதில்
அன்பே உனை நினைக்கிறேன்

எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
என்னை நானே சமரசமாக்கி
உன் நினைவோடே வாழ்கிறேன்
உண்மை காதல் இது தானே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024

இவள் எங்கள் ஈழ குயில்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இவள் எங்கள் ஈழ குயில்

இவள் எங்கள் ஈழ குயில்

இசை பாடும் கீதம் – இவள்
இளம் கலை நாதம்
அலை பாயும் ஓடம் – இவள்
அழியாத ராகம்

மெட்டோடு பாடும்
மெல்லிசை கீதமே
துள்ளிசை பாடையில
துள்ளி மனம் குதிக்குமே

மெல்ல வந்து காதோரம்
மெல் லிசைக்கும் நேரம்
துன்பங்கள் மறையுமே
துளி விழி நீர் சொரியுமே

இலை மறை காயானாய் – ஜோதி
இதயங்களில் ஒன்றானாய்
சந்தத்தோடு சொந்தமாகி
சாந்தம் ஆடினாய்

தப்பாமல் தாளமிடும்
சங்கீதமே என் கீதமே
உன்னை நானும் வாழ்த்துகிறேன்
உலகாள போற்றுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-04-2024

லண்டனில் பாடி அசத்தும் எங்கள் ஈழ குயில் ஜோதி

இவள் எங்கள் ஈழ குயில்
இவள் எங்கள் ஈழ குயில்

என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

தோல்விகள் தந்த சாதனை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தோல்விகள் தந்த சாதனை

தோல்விகள் தந்த சாதனை

பங்கு சந்தையில் தோல்வியுற்றால்
பல் இழித்தார் பலரை யான் கண்டேன்
சொல்லி சொல்லி வெல்கின்றார் – என்
சொந்தங்கள் சிலர் முன் வென்றார்

நாளுக்கும் ஆயிரம் வென்று விட்டார்
நாளாந்த வருமானம் இது கொண்டார்
எட்டு ஆயிரம் எட்டும் என்றார்
எதிர் வரும் நாட்களில் ஆகும் என்றார்

தோல்வி எல்லாம் சாதனை தான்
தோழமை தாங்கினார் வேதனை தான்
ஆயிரம் ஆயிரம் நாள் பிடித்தார்
அந்தோ வாய்கள் புகழிட்டார்

அலட்ச்சியம் நாளில் அவர் கொண்டார்
அதனால் தோல்வி ஏற்று நின்றார்
தவறை திருத்தி அவர் எழுந்தார்
தரணி வியக்கும் நிலை கொண்டார்

மணிக்கு ஆயிரம் இலக்கு என்றார்
மகுடம் இதுவே ஏற்றும் என்றார்
திட்டம் போட்டே நகர்கின்றார் – இந்த
திருப்பம் தோல்வியால் பெற்றெழுந்தார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -30-03-2024

விழித்து கொள் தமிழா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

விழித்து கொள் தமிழா

விழித்து கொள் தமிழா

ஒத்த ரூபா நான் தாரேன்
ஓடி வந்து வாக்கு இடு
சங்கதிகள் வெளியில் சொல்லா
சத்தமிடா சென்று விடு

எங்களது ஆட்சியதை – மக்கள்
ஏற்றார் என் றுரைப்போம்
வாக்கிற்கு விலை பேசும்
வையத்து அரசியலாம்

சோற்றுக்கு வழியில்லா
சோர் விழந்தார் என் செய்வார்
வீட்டுக்கு வழியில்லா
வீதி உளார் ஏதறிவார்

மக்களது நலன் காக்க
மன்ரேறி வந்தவரோ
அடுக்கு மாடி கட்டி
அழகாக வாழ்கின்றார்

இன்றைய அரசியல்
இழி நிலை இது காணாய்
இதை மாற்றி நாம் வாழ
நாம் தமிழரை வெல்ல வைப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -29-03-2024

சீமான்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான்

சீமான்

நட மாடும் ஊடகமே
நான் கண்ட நூலகமே
புல்லரிக்கும் உன் பேச்சால்
புலி கூட புல் உண்ணும்

சொல் அடுக்கு உன் மொழிகள்
செல் அடிகள் போலிருக்கும்
மறவாது நினைவிருத்தும்
மாசற்ற பேச்சு இருக்கும்

மறந்த தமிழ் வரலாற்றை
மணி கணக்காய் கற்பிக்கும்
செயல் நெறி வித்தகனே
செந்தமிழன் நீ தானே

இக்கால அரசியலில்
இடி முழக்கம் நீ தானே
இரத்தத்தை சூடேற்றும்
இயந்திரம் நீ தானே

வீர பிறப்பெடுத்த
வீர புலி மகனே
கோட்டை பல நடுங்குதடா – உன்
கொள்கையாலே எரியுதடா

ஆர்ப்பரித்த கூட்டத்தில்
ஆர தழுவுகின்ற
நேசத்தின் முதல் மகனே – எம்
நெஞ்சம் எல்லாம் நீதானே…!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-03-2024

கிழவருக்கு ஒரு மடல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கிழவருக்கு ஒரு மடல்

கிழவருக்கு ஒரு மடல்

மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை

நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு

உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு

பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே

இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு

மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்

இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்

கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024

பாயும் பெண் புலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பாயும் பெண் புலி

பாயும் பெண் புலி

காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு

கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு

நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு

அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு

வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது

ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது

வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்

நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024

23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …

ஏன் வர மறுக்கிறாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் வர மறுக்கிறாய்

ஏன் வர மறுக்கிறாய்

காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்

மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்

சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்

மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024

சாதிக்கலாம் துணிந்துவா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சாதிக்கலாம் துணிந்துவா

சாதிக்கலாம் துணிந்துவா

அழுகை நிறுத்தி எழுந்து வா
அகிலம் படிக்க பறந்து வா
எதுவும் முடியும் துணிந்து வா
ஏவுகணையாய் வெடிக்க வா

கொஞ்சம் சிந்தை துலக்கி வா
கொடிய துயரை உடைத்து வா
அடக்குமுறையை கிழித்து வா
ஆளுமையை நிறுத்த வா

பிடித்த தெல்லாம் படிக்க வா
பிரியமதில் செலுத்த வா
அறத்தை நாட்டி எழுத வா
அறிவாயுதம் எடுத்து வா

இழிவு கடந்து எழுந்து வா
இமையம் தொடலாம் நடந்து வா
பறக்கும் தட்டாய் சுழன்று வா
பகையா அவர் எதிர்த்து வா

பங்கு சந்தை பழகு
பணம் தரும் உலகு
சாதனை இங்கு படை – உலக
சாதனையை இங்கே உடை ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 13-03-2024

உன் இதயத்தை எனக்கு தா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் இதயத்தை எனக்கு தா

உன் இதயத்தை எனக்கு தா

உன்னை தாங்கும் என் இதயம்
உனக்காய் தானே துடிக்கிறதே
கண்ணில் வடியும் நீர் துளியில்
கண்ணே காதல் தெரிகிறதே

மெல்ல பேசும் உன் மொழியில்
மேன்மை நன்றே தெரிகிறதே
மெலிந்த மேனி உன் அழகை
மெய்யாய் விழியும் ரசிக்கிறதே

கரும்பாய் இனிக்கும் உன் பேச்சை
காது கேட்க துடிக்கிறதே
கல்லறை சாயும் காலம் வரை – உன்
காலடி இருக்க பிடிக்கிறதே

நீளும் இந்த இரவுக்குள்ளே
நியத்தை நாங்கள் தொலைப்போமா
மீளா துடிக்கும் ஆசைகளை
மீள சுழற்சி செய்வோமா

உன் பதில் என்ன கூறாயோ
உன் உரிமம் எனக்கு தாராயோ
இன்றேனும் ஒரு நொடி ஏற்காயா
இதயத்தை எனக்கு தருவாயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-03-2024

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே

அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்

தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று

ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று

வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்

படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024

இரக்கம் காட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

பறவைகளே பறவைகளே
பார் தேசம் போனீரா
பகை வனவன் போர் தொடுக்க
மண் விட்டு பறந்தீரா

சொந்த மண்ணின் துயர் அறிந்து
சோகமுடன் வாழ்கிறீரா
பந்தம் அது இழந்து
பார் தேசம் வாழ்கிறீரா

எங்களவன் தேசமதை
எவன் வந்து ஆழ்வதுவோ
ஏக்கத்தில மனம் தவிக்க
ஏங்கி தினம் தவிப்பதுவோ

ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
ஓர்மமதை விட்டுடுவீர்
எங்களுக்கும் உம் உரிமை
எடுத்து கொஞ்சம் தந்திடுவீர்

பார் புகழும் நாடாக – இலங்கை
பாரினில காட்டிடுவோம்
பாசமதை காட்டி விடு
பல தடை உடைந்தோடும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2024

உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு

கொஞ்ச நாளாய் உன்னை தேடி
கொஞ்சுதடி மனசு – உன்
கொண்டையில ஆடும் பூவா
குதிக்குதடி வயசு

கண்ணுக்குள்ள நீ இருக்க
காட்சிகளாய் கொட்டுதடி
என்னை கொல்லும் உன் நினைப்பை
எடுத்து போக வந்திடடி

ஆடியில ஆடும் காற்றாய்
ஆடிடலாம் வந்திடடி
ஆகாய வெண்ணிலவே
அடைக்கலம் தந்திடடி

உன்னை சுமக்கும் என் நெஞ்சை
உயிரே சுமக்க வந்திடடி – நான்
உயிராய் இருப்பேன்
உயிரே ஏற்றிடடி .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-02-2024

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்

சத்தம் என்ன சத்தம் என்ன
சங்கதிகள் பாட முன்ன
கட்டுடைத்து பாய்ந்ததோ – வெள்ளம்
கரை உடைத்து ஓடியதோ

முட்டி மோதும் அலையிலே
முழுவதும் நனையுதே
என்ன இது என்ன இது
ஏதும் புரியலையே

சூறாவளி அடியிலே
சுற்று வட்டம் உடைந்ததோ
சுற்று மதில் இல்லா – வீடு
சுழற்சி இழந்ததோ

புத்தம் புது குளத்திலே
பூகம்பம் நடந்ததோ
வான் கதவு உடைந்து
வையம் அழிந்ததோ

சேதி சொல்லு முன்னே
சேதமான தென்ன
வாழ்வு துயரமாச்சே
வாழ வழியில்லா போச்சே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-01-2024

நீ வேண்டும் எனக்கு
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு

எழுத படிக்க
தெரியா எனக்கு
எழுதி கொடுத்தாய்
காதல் கடிதம்

படித்து முடிப்பதற்குள்
பட்டம் பெற்று விட்டேன்
உன்னால் தானே முடிந்தது
உனக்கு நன்றி

நெஞ்சோரம் ஆலயமாய்
நீ தானே உறைந்தாய்
கண் வடிந்த கண்ணீரை
கண்ணே நீதானே துடைத்தாய்

உன்னை தொழுதே
உயிராய் எழுகிறேன்
நீ வேண்டும் எனக்கு
நீ தானே என் வாழ்வு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-01-2024

நீயே உனக்கு துணை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீயே உனக்கு துணை

நீயே உனக்கு துணை

உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு

காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு

தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு

பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு

உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு

வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023

மனிதம் ஒன்று வீழ்ந்தது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனிதம் ஒன்று வீழ்ந்தது

மனிதம் ஒன்று வீழ்ந்தது

எழுந்து நடந்த பெரியவன் -இவன்
எதுகை மோனையில் உயர்ந்தவன்
அழுது திரிந்த மக்களுக்கு
அழைத்து உணவு தந்தவன்

சிகரம் உயரம் இருந்தவன்
சில்லறைக்கும் உதவியவன்
சிந்தனை உயர்வு கொண்டவன் -எதிர்க்கட்சி
சிம்மாசனத்திலும் அமர்ந்தவன்

படைக்க முடியா சாதனையை
படைத்து காட்டி நிமிர்ந்தவன்
அடக்க முடியா அன்பினை -ஈழ
அண்ணன் மீது கொட்டியவன்

எதற்கும் அஞ்சா நடப்பவன்
எதையும் எதிர் கொள்பவன்
அந்த மலை வீழ்ந்தது
ஆழ வலி தந்தது .

வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஆக்கம் 29-12-2023

28-10-2023 நடிகர் விஜகாந்த மரணித்த பொழுது கண்கள் கலங்கிய வேளையில்
அவருக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறேன்

போர் மகளே வாழ்க
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

போர் மகளே வாழ்க

போர் மகளே வாழ்க

களபூமி வேங்கைக்கும்
காலனி சலங்கைக்கும்
ஓட்டம் நடக்கிறது
ஓர்மம் வெடிக்கிறது

வெற்றி பெற்றுவிட
வேகம் பிடிக்கிறது
அப்பப்பா பிள்ளையின்
அகரம் தெரிகிறது

கரை நகர் மண்ணின்
கல கலப்பு தெரிகிறது
பிடிபட்ட பந்தும்
பிடியாணை கேட்கிறது

அடித்தெறிந்த மட்டையும்
அவமான படுகிறது
கோபத்தின் உச்சத்தில்
கொள்கை வெடிக்கிறது

சிகரம் ஏறிய
சிந்தைக்கு வாழ்த்து
பெருமை தேடிய
பெரு மகளே வாழ்த்து ..!

அன்புடன் – வன்னி மைந்தன்

ஈழம் காரைநகர் களபூமியை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற ஈழத்தமிழச்சி இங்கிலாந்து கிர்க்கெற் அணியில் இடம் பிடித்துள்ளார்.இவர் பொன்னாவளை களபூமியைச் சேர்ந்த தாமோரி ஆறுமுகத்தின் மகன் சபாரத்தினத்தின் பூட்டப் பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
நல் வாழ்த்துகள் அமுருதா.