Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவ முகாம் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் இராணுவ முகாம் மீது அகோர விமான தாக்குதல்

சிரியா -ஈராக் எல்லையில் உள்ள ஈரானிய இராணுவ நிலைகள் மீது மர்ம நாட்டு விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன .

Deir Ezzor பகுதியில் F-35 உயர் ரக தாக்குதல் விமானங்களே இந்த கூட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன .

ஈரானின் வெளியாக இராணுவ நிலைகள் மீது நடத்த பட்டு வரும் தொடர் தாக்குதல் ஈரானை வலிந்து தாக்குதலுக்கு

இழுக்கும் முக்கிய நகர்வாக பார்க்க படுகிறது

இதுவரை எந்த நாடு எமது இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதை ஈரான் இதுவரை தெரிவிக்கவிலை .

எனினும் இந்த தாக்குதலை மேற் கொள்வது இஸ்ரேல் என ஊகிக்கலாம் ,தமது நாடு மீது ஈரான் ஆதரவு படைகள்

பெரும் தாக்குதலை நடத்த தயராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்த்த பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது

இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை video

ஈரான் இராணுவ முகாம்
ஈரான் இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள்

காட்டு விலங்குகள் விற்க சீனாவில் அதிரடி தடை

காட்டு விலங்குகள் விற்க சீனாவில் அதிரடி தடை

சீனாவில் கட்டு விலங்குகளில் இருந்து பரவிய புதிய வகை வைரஸ் நோய் தாக்கத்தை அடுத்து தற் பொழுது அந்த

உணவுகளை விற்பனை புரிய சீனா அரசு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது .

தற்போது இந்தநோயில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பிந்திய தகவலின் படி தற்பொழுது 2000 பேர் வரை

இந்த நோய் தாக்கத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .

இந்த நோய் மேலு பரவும் என்ற அச்சத்தில் 60 லட்ஷம் மக்கள் முடக்க பட்டுள்ளனர் ,பல நகரகங்கள் செயல் இழந்துள்ளது .read more

இதனை அடுத்தே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது ,பாம்ப்பில் இருந்தே இந்த நோய் பரவியுள்ளதாக

தெரிவிக்க பட்டிருந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது full video

காட்டு விலங்குகள் விற்க
காட்டு விலங்குகள் விற்க
Posted in உலக செய்திகள்

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

சீனாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதனால் சீனாவில்

அவசர அவசரமாக அரச காணியில் சுமார் 1000 படுக்கைகள்

கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றை ஐந்தே நாளில் சீனா கட்டட நிபுணர்கள் கட்டி முடித்தனர் .

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

இதே மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ குழுக்கள்

குறித்த நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் .

சீனாவின் இந்த அசுர வளர்ச்சியும் மருத்துவமனை

அமைத்தலும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

ஐந்தே நாளில் எப்படி ஆயிரம் படுக்கைகள் கொண்ட

மருத்துவமனையை கட்டி முடித்து ,பணியை தொடங்குவது

அப்படி என்றால் சீனாவின் உயரிய தொழில் நுட்பம் ,மற்றும்

நிபுணர்களின் ,திறன் என்பன இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது ,

எவ்வேளையும் எதையும் எதிர்கொள்ளசீனா எப்பொழுதும்

தயராக உள்ளது என்பதே இந்த விடயம் கண்ணப்பிக்கிறது .


இதுவே தான் உலக நாடுகளை அதிர்ச்சியிலும் வியப்பிலும் உறைய வைத்துள்ளது

Posted in உலக செய்திகள்

துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

துருக்கியில் பாரிய நில நடுக்கம் 27 பேர் பலி 300 பேர் காயம்

கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில்

சிக்கி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6,8 ஆக பதிவாகியுள்ளது ,Elazığ பாதிக்க பட்டுள்ளது .


உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள

,சொத்து சேதங்கள் பலமில்லியன் என தெரிவிக்க

full video பட்டுள்ளது

https://www.youtube.com/watch?v=FAPN-FQ3_sU
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள மர்ம அவைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 29 பேர் சீனாவில் பலி யாகியுள்ளனர் ,இந்த நோய்

தாக்கத்தினால் உலக நாடுகள் தழுவிய நிலையில் நாப்பது

பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 900 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கம் உடைய 14 பேர் பிரிட்டன் வான் நிலையம் ஊடாக நாட்டுக்கு நுழைந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது .

இந்த நோயானது பாம்ப்பில் இருந்து பரவியதாக தெரிவிக்க

படுகிறது ,சீனா நாட்டவர்கள் நாய் ,மற்றும் பாம்பு இறைச்சி

அதிகம் விரும்பி உண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதலில்
கொரனோ வைரஸ் தாக்குதலில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது

லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து லண்டனுக்குள் ஆட் கடத்தல் காரகளினால் கடத்தி வரப்பட்ட சுமார் 23 பேர்

கைது செய்ய பட்டுள்ளனர் .

பிரான்சில் இருந்து சுமார் 19 பேரும் நெதர்லாந்து நாட்டில் இருந்து நால் வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போலீசார் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் பொழுதே இந்த பெரும்

ஆட் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

மேலும் இந்த ஆட் கடத்தலை தடுக்கும் முகமாக சர்வதேச போலீசாருடன் இணைந்து மேற்படி ஆட் கடத்தல்

வலையமைப்பை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன .

படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் பல நூறு பேர் நுழைந்துள்ளதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது

இந்த அகதிகள் வருகை பிரிட்டனுக்கு பெரும் தலை வலியாக மாற்றம் பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

6 பில்லியன் வருமானம் ஈட்டிய just eat – தயராகும் மூடுவிழா ஆப்பு .

6 பில்லியன் வருமானம் ஈட்டிய just eat – தயராகும் மூடுவிழா ஆப்பு .

நெதர்லாந்து நாட்டை தாய் தலைமைய மாக கொண்டு இயங்கும் just eat டிலிவரி உணவு விநியோக நிறுவனம் 2016

ஆண்டில் ஈட்டிய வருமானத்தை விட மேலதிகமாக கடந்த வருடம் ஈட்டியுள்ளது

அதன் மொத்த வருமானம் சுமார் ஆறு பில்லியன் பவுண்டுகளாக உள்ளது .

இந்த வருமானத்தை just eat எவ்வாறு பெற்றது என்பது தொடர்பில் CMA விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .


இது போன்ற நிலையே ஊபருக்கு ஏற்பட்டது .அதன் அனுமதி பத்திரமும் முடக்கல் நிலைக்கு உள்ளானது

இவ்வாறு திடீரென எவ்வாறு just eat இவ்வளவு பெரும் தொகையில் பணம் ஈட்டியது என்பது தொடர்பில் தொடுக்க

படும் விசாரணை அந்த நிறுவனம் மீது விரைவில் தடைகளை ஏற்படுத்த படும் அபாயம் எழுந்துள்ளது

ஐரோப்பிய நாடக உள்ள நெதர்லாந்த் நாட்டை தளமாக கொண்டு இது இயங்குவதால் இங்கு மீட்ட படும் வருமானம்

அந்த நாட்டுக்கு செல்வதாக இவர்கள் கருதுகிறார்கள் போலும்

அதனால் ஊபர் ,டிலிவரோ என்பன அமெரிக்கா நிறுவனங்களாக உள்ளன


அவற்றை தாண்டி இந்த நிறுவனம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதே மேற்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாம் .

இயல்பாகவே இந்த just eat உணவகத்தின் ஊடாக பெற படும் ஒரு டிலிவரி தொகை குறைந்தது 20 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும் .

ஆனால் ஊபர் ,மற்றும் டிலிவரோவில் வருவது குறைந்தது ஐந்து பவுண்டுகள் குறையாத ஆடர்களாக இருக்கும்

இது உணவு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அறிந்து கொண்ட ஒன்றே

இவ்வாறான நிலையில் இந்த நிறுவனத்தின் மீது இடம்பெறும் இந்த விசாரணைகளுக்கு அஞ்சி தான்

என்னவோ just eat சாரதிகள் இல்லை என சில வேளைகளில் ஆடர்களை நிறுத்தி வைத்திருக்கும் போல் ..?

அதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்பதே இப்பொழுது ஊகிக்க முடிகிறது

delivery market. போட்டியில் குறித்த நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது ஏனைய நிறுவனங்களுக்கு பெரும்

தலைவலியை கொடுத்துள்ளது

இதனால் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனம் ஊபர் போன்ற சிக்கலில் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்

6 பில்லியன் வருமானம் ஈட்டிய
6 பில்லியன் வருமானம் ஈட்டிய

Posted in உலக செய்திகள்

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்துபரவி வரும் புதிய வகையான வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

.மேலும் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக சுமார் 500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும்

,விமானங்கள் ல் ,கப்பல்கள்,ரயில்கள் ,பேரூந்து சேவைகள் அணைத்தும் தடை செய்ய பட்டுள்ளன .

இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

போக்குவரத்துக்கள் முடங்கிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்த நோய் சீனா தாண்டி அமெரிக்கா வரை சுமார் 11 நாடுகளுக்கு பரவியுள்ளதாம் .

இதனை அடுத்து குறித்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

மர்ம வைரஸ் தாக்குதல்
மர்ம வைரஸ் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

South Wale பகுதியில் தீயினை அணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தண்ணி டங்கர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .

மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

விழுந்து நொறுங்கிய விமானம்
விழுந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் நுழைந்தனர். அவர்கள்

அங்கிருந்து 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர். குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது.

அதைத் தொடர்ந்து குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச் சென்று வைத்திருந்த காட்டுக்குள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது.

அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். உடனே இராணுவம் சரியான பதிலடி

கொடுத்தது. இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் 2 பிரிவினைவாதிகள்

கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பாடசாலைக்குள் புகுந்து

Posted in உலக செய்திகள்

செக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC – வீடியோ

செக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC – வீடியோ

ஒஸ்ரேலியாவில் பிரபல kfc உணவகம் ஒன்று சுமார் 15 செக்கன் விளம்பர காணொளியை ஒன்றை பரபரப்பாக வெளியிடுது வந்தது ,

அதில் தோன்றும் பெண் ஆபாசமாக தோன்றியுள்ள காட்சி ஆரம்பத்தில் ஆரம்பித்து முடிவில் அவரது செயல்கள்

அவ்விதமே அமைந்ததல் அந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது

இதனை அடுத்து தற்போது குறித்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது ,.

அதில் சிறுவர்கள் ,பெரியவர்கள் வரை காண்பிக்க படும் காட்சிகள் சிறப்பானவையாக உள்ள பொழுதும் இந்த பெண் ஆடை ஆபாசமாக கண்ணபிக்க பட்டதே

வாடிக்கையாளர்கள் மத்தியில்
விசனத்தை ஏற்படுத்தியதன் காரணமாக இதனை உளப்பூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம் full video

https://www.youtube.com/watch?time_continue=15&v=wRriM-LPy24&feature=emb_title
Posted in உலக செய்திகள்

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட7 பேர் கைது

வட ஐயர்லாந்தில் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மூன்று முக்கிய பகுதியில் தொடராக நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

215 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் 33, 37, 39, 40, 50 and 67 வயதுடைய ஆறு ஆண்களும் 32 வயது பெண்மணி ஒருவரும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் கைது செய்ய பட இருவர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன, மேலும் பலர் கைதாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்

நெதர்லாந் Roterdam பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 19 மாற்றும் 22 வயது வாலிபர்கள்

பலத்த காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தீய சந்தேக நபரான Zuid-Holland பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த தாக்குதல் சம்பவத்திற்காண கரணம் உடனடியாக தெரியவில்லை ,போலீசார் அவை தொடர்பான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை
நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை
Posted in உலக செய்திகள்

ISIS அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

ISIS அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பாக விளங்கி வரும் ISIS அமைப்பின் தலைவர் அமெரிக்கா படைகளினால்

சுட்டு படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்போது ,அந்த அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்க பட்டுள்ளார் .

இதன் புதிய தலைவர் Amir Mohammed Abdul Rahman al-Mawli al-Salbi,என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இதனை அறிவித்துள்ளது
,குறித்த அமைப்பு ஈரான் அரசினால் இயக்க படுவதான

குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில்
இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது .

ஈரான் ,அமெரிக்காவுக்கு இடையில் போர் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அமைப்பிற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

சூடான் தலைநகர் Khartoum பகுதியில் ரொக்கட் ஒன்று வெடித்து சிதறியதில் சுமார் ஏழுபேர் இதுவரை

பலியாகியுள்ளனர் ,மேலும் 25 பேர் படு காய மடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

வெடி பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இடம்பெற்ற சோதனையின் பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இராணுவத்தினர் குறித்த வெடிப்பு தொடர்பில் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்

2020 ஆம் ஆண்டு உலகின் போர் சாதங்களாக அதிர்ந்த வண்னம் உள்ளது

Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தின் grren house அருகில் இரண்டு ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .


இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

ஈரானின் பின்புல ஆதரவில் இயங்கும் ஆதரவு துணைப்படை குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

எனினும் இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

இதே தளம் தொடர்ச்சியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் வலயமாக மாற்றம்

பெற்றுள்ளது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அறிவித்த

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

பொழுதிலும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலகிட அமெரிக்கா மறுத்து வருகிறது .

அமெரிக்கா,இஸ்ரேல் தூண்டுதலில் ஈரான் ஆதரவு படைகள் நிலைகள் ,மற்றும் முகாம்கள் எரியூட்ட பட்ட நிலையில் read more

இந்த ஏவுகணை தாக்குதல்கள் அமெரிக்கா இராணுவ தளம் மீது மேற்கொள்ள பட்டுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்காவை நாங்கள் தொடர்ந்து பழிவாங்குவோம் என ஈரான் கொள்கை பிரகடனமாக அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

ஈராக்கில் 250 கிலோ பயங்கரவாதி

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில்

ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி – கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்


கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்
பாக்தாத்:

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஈராக். அங்கு அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை

மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் அங்கு பயங்கரவாதிகள்

நடமாட்டம் குறைந்தபாடில்லை. அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர், அடிக்கடி இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வந்தார்.

அவரை ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் சுற்றிவளைத்து கைது செய்தது.

சுமார் 250 கிலோ எடை கொண்ட அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால், சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படாத மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் அபு

அப்துல் பாரி பிறப்பித்து உள்ளார் என ஈராக் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஈராக்கில் 250 கிலோ
ஈராக்கில் 250 கிலோ
Posted in உலக செய்திகள்

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர்

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர்

இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர்

என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு


இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர்
லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து

விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தனர்.

இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத், சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அரச குடும்ப

உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான

ஆதரவை அளிப்பதாக ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச

பட்டங்களையும் துறக்கின்றனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தினர் எச்.ஆர்.எச். (மாட்சிமை தங்கிய அரச குடும்பத்தினர்) என்ற பட்டத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்த பட்டங்களை ஹாரி, மேகன் தம்பதியர் துறக்கின்றனர்.

இதே போன்ற நிலையை இளவரசர் சார்லசை விவாகரத்து செய்தபோது (1996) ஹாரியின் தாயார் டயானாவும் அடைந்தார்.

வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற 2.4 மில்லியன் பவுண்ட்

தொகையை (சுமார் ரூ.22 கோடியே 8 லட்சம்) திரும்ப அளித்து விடுவதாகவும் அரண்மனை அறிவிப்பு கூறுகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் பெயரால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை மற்றும் சமீபத்தில் நடந்த

ஆலோசனையைத் தொடர்ந்து எனது பேரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆக்கப்பூர்வமான, ஆதரவான வழியை நாங்கள் கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமான ஆய்வின் விளைவாக அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன்.

மேலும் சுதந்திரமான ஒரு வாழ்க்கைக்கான அவர்களது விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி
அரச பட்டங்களை துறக்கும் ஹாரி
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தூண்டுதலில் – -லெபனானில் கலவரம் -160 பேர் காயம்

அமெரிக்கா தூண்டுதலில் – -லெபனானில் கலவரம் -160 பேர் காயம்

ஈரான்,அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் ,ஈரானின் கை ஓங்குதலை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ,இஸ்ரேல் ,அமெரிக்கா

இணைந்து அதன் ஆதரவு படைகள் நாடுகள் மீது வன்முறை ,மற்றும் கலவரங்களை தூண்டி விட்டுள்ளது .

மக்கள் போராட்டம் என்ற வடிவில் அமெரிக்கா பின்புலத்தில் அவர்களின் எயண்டுகளுக்கு பணத்தை அள்ளி வழங்கி

அந்த ஆட்சிகளை கவிழ்ப்பதில் குறியாகஅமெரிக்கா செயல் பட்டு வருகிறது .

அவ்வாறே ஈராக்க்கில் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கிறது ,

அதனை அடுத்து தற்போது அரசுக்கு எதிராக லெபனானில் மக்கள் போராட்டம் வெடித்ததில் சுமார் 160 பேர் காயம்

அடைந்துள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது

இந்த போராட்டங்களின் பின்னர் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பின்னடைவை சந்திக்குமா ..? அல்லது

அதே போராட்டத்தை அதன் எதிரி நாடுகள் மீது ஈரான் கட்டவிழ்த்து விடுமா ..?

என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

அமெரிக்கா தூண்டுதலில்
அமெரிக்கா தூண்டுதலில்
Posted in உலக செய்திகள்

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல் -60 இராணுவம் பலி

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல் -60 இராணுவம் பலி

Yemeni இராணுவ பயிற்சி முகமா மீது மேற் கொள்ள பட்ட திடீர் ஏவுகணை தாக்குதலில் சிக்கி சுமார் 60 இராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .

மேலும் பல டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஆதரவுடன் இயங்கும் Houthi கவுதி அமைப்பினர் மேற்கொண்ட திடீர் ஏவுகணை தாக்குதலின் பொழுதே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .


மேற்படி அரச படைகள் அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவுடன் செயல் பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல்
இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல்