Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கொரனோ வைரஸ் தாக்குதலில் ஒரே நாளில் 116 பேர் பலி -51,986. பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதலில் ஒரே நாளில் 116 பேர் பலி -51,986. பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் உயிர் கொல்லி நோயாக விளங்கும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மீளவும் நேற்று மட்டும் ,ஒரே நாளில் சுமார் 116 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த நோய் தாக்கத்தின் பிடியில் சிக்கி மேலும் 51,986.தவித்து வருகின்றனர் .
இது தவிர 150 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த நோயின் தாக்குதல் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளனர் .
உயிரிழப்புகள் இதுவரை 1500க்கு மேல் எகிறியுள்ளது ,இது பல லட்சங்களை எட்டிவிட கூடும் என அஞ்ச படுகிறது

பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்
பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்
பிரிட்டனில் எட்டு மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரனோ வைரஸ் தாக்கியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த சிசு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது ,
தனது குடும்ப நல மருத்துவரிடம் சோதனைக்கு சென்றபொழுதே இந்த வைரஸ் தொற்றுக்கு சிசு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
Brighton பகுதியில் இரு GP மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி நோய் தாக்கம் உள்ளது உறுதி படுத்த பட்டுள்ளது .
குறித்த சிசுவின் பெற்றோர்கள் கண்ணீரில் நினைத்து கதறி அழுத கட்சி நெஞ்சு பதற வைத்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து

ரஷியா துருக்கிக்கு கடும் எச்சரிக்கை
ரஷியா துருக்கிக்கு கடும் எச்சரிக்கை
துருக்கிய இராணுவம் தமது நாட்டின் எல்லையை கடந்து சிரியாவுக்குள் படை எடுத்துள்ளதுடன் தொடர்ந்தும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
சிரியாவில் இட்லி பகுதியை ஆக்கிரமிக்கும் நகர்வில் அவை தீவிரம் காட்டி வருகிறது .
இவ்வாறான களமுனை நகர்வை அடுத்து ரசியாவின் ஆதரவுடன் சிரியா படைகள் திடீர் இராணுவ முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன் பயனாக தாம் இழந்த கணிசமான பகுதிகளை சிரியா படைகள் மீட்டன .
சிரியா படைகளுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி ஆதரவு தந்து வருகிறது
இவ்வாறான களமுனையில் தற்பொழுது அமெரிக்கா பின்புலமாக தனது பலத்தை வழங்கி வருவதனால்
தற்பொழுது ரசியாவின் வெளியுறவனு அமைச்சர் துருக்கி சென்று தமது அரசின் நிலைப்பாடுகளை விளக்கினார் .
சிரியா பகுதியில் துருக்கி ஆத்திரமூட்டும் செயலை புரிந்து வருவதாகவும் ,தேவையற்ற பதட்டத்தை இவர்கள்
அதிகரித்து வருவதே இந்த போர் பதட்டத்துக்கு காரணம் எனவும் அதனை தவிர்க்கும் படி ரசியா கடும் தொனியில் எச்சரித்துள்ளது
ரசியாவின் இந்த மிரட்டலுக்கு துருக்கி அடங்குமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

ஜப்பான் சொகுசு கப்பலில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஜப்பான் சொகுசு கப்பலில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா
வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில்
பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட
பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இந்தியர்களும் உள்ளனர். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘கப்பலில் உள்ள மேலும் 53 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என மருத்துவ சோதனை
நடத்தப்பட்டது. அதில் 39 பேருக்கு வைரஸ் நோய்த்தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேர் நிலைமை மிகவும்
கவலைக்கிடமாக உள்ளது’ என ஜப்பான் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் no tax or MOT இல்லாது வான் ஒட்டி சென்ற நபர் -14 பேர் மீட்பு
பிரிட்டனில் no tax or MOT இல்லாது வான் ஒட்டி சென்ற நபர் -14 பேர் மீட்பு
பிரிட்டன் எம் ஆறு வேக சாலையில் நபர் ஒருவர் வான் ஒன்றை ஒட்டி சென்றுள்ளார்
இவரை தூரத்தி சென்ற போலீசார் அந்த வானை நிறுத்தி சோதனை செய்த பொழுது ,இரு ஆசனங்களை கொண்ட
அந்த வானுக்குள் இரு பிறந்த குழந்தை உள்ளிட்ட 14 பேர், அதிகம் சிறுவர்கள் இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
குறித்த வானுக்கு no tax or MOT இல்லாது செலுத்தி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இப்படியும் சாரதிகள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்

நைஜீரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி
கோப்பு படம்
கனோ:
நைஜீரியாவின் போகோஹராம் பயங்கரவாத அமைப்பு பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்த பயங்கரவாத அமைப்பு கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல்
வீடுகளுக்கு தீவைத்தும், உணவு பொருட்களை கொள்ளையடித்தும் அட்டுழியத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணம் ஃபிகா மாவட்டம் பகழி கிராமத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்
சிலர் அங்கு வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேரை துப்பாக்கி முனையில் ஒரு வீட்டிற்குள் வைத்து அடைத்தனர்.
பின்னர் அவர்களுடன் சேர்த்து வீட்டை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 16 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் தபால் குண்டு வெடித்தது – அதிர்ச்சியில் பொலிஸ்
நெதர்லாந்தில் தபால் குண்டு வெடித்தது – அதிர்ச்சியில் பொலிஸ்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் Amsterdam பகுதியில் உள்ள
தபால் நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்க பட்ட தபால்
குண்டு இரண்டு வெடித்துள்ளது ,எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
மேற்படி சம்பவம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடராக இவ்வாறான குண்டுகள் குறித்த நாட்டை அதிர வைத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

சிரியா மீது அகோர தாக்குதல் மேற்கொள்ள படும் – துருக்கி
சிரியா மீது அகோர தாக்குதல் மேற்கொள்ள படும் – துருக்கி
எமது நாட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் மேலும் காயமடைந்தால் சிரியாவின் அணைத்து பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்த படும்
எனவும் ,சிரியா பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கிய அதிபர் எடகோன் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
எம்மிடத்தில் விமான பலம் அதிகம் உள்ளது ,அதன் மூலம் நாம் எமது தாக்குதல்களை தொடராக மேற்கொள்வோம்
எனவும் இதன் ஊடாக சிரியா படைகள் பலத்த இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மீளவும் மிரட்டியுள்ளார்
தொடர்ந்து சிரியா இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்ககையில் சிரியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் -மின்சாரம் இன்றி தவிக்கும் 20,000 வீடுகள்photo
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் -மின்சாரம் இன்றி தவிக்கும் 20,000 வீடுகள் photo
பிரிட்டனை சய்ரா என்ற புயல் பாதிப்பை அடுத்து கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
பிரிட்டனில் வேல்ஸ் ,மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன ,
இதுவரை இருபதாயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன .
மேலும் இந்த புயல் மணிக்கு 97 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வண்ணம் உள்ளது .பிரான்ஸ் ,லண்டன் கப்பல்
போக்குவரத்து ,விமான போக்குவரத்துக்கள் என்பன பல இரத்து செய்ய பட்டுள்ளன
தொடர்ந்து 176 வெள்ள எச்சரிக்கையும் ,261 வெள்ள அபாய நிலை உளதாகவும் தெரிவிக்க படுகிறது
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,
கார்கள் மேலே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள ,அதே போல மரங்களும் வீதிகளில் முறிந்து வீழ்ந்துள்ளன ,தொலை தொடர்பு வசதிகளும் பல இடங்களில் பாதிக்க பட்டுள்ளன
மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது




ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா
ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா
சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 908 ஆக
உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் இறந்ததால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா – பீதியில் சீனா
கொரோனா வைரஸ்
பீஜிங்:
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ்
பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நேற்றைய
நிலவரப்படி, இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதர துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘கொரோனா வைரசினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 97 பேர் இறந்தனர். மேலும் 3,062 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹூபே மாகாணத்தில் 91 பேர், அன்ஹூய் நகரில் 2 பேர், ஹெய்லோங்ஜியாங், ஜியாங்சி, ஹைனான் மற்றும் கன்சு
ஆகிய இடங்களில் தலா 1 நபரும் கொரோனாவால் இறந்தனர்’ என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்
ஜாக்கிசான்
சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும்
அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்
இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும்
இதனை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
கொரோனா வைரஸ்
இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு
மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்.
இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை
பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரனோ வைரஸ் தாக்குதல் 803பேர் பலி ,36,690 பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் 803பேர் பலி ,36,690 பாதிப்பு
சீனாவை தயாகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 803 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 36,690 பாதிக்க பட்டுள்ளனர் .
இது தவிர சுமார் 140 ஆயிரம் பேர் இந்த நோய் தொற்று அறிகுறியில் சிக்கி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இதன் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்தஹ் 102 அகதிகள்
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்தஹ் 102 அகதிகள்
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை ஊடுறுத்து படகுகள் மூலம் சுமார் 102 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்துள்ள்ளனர் .
இவ்வாறு நுழைந்தவர்கள் Iran, Iraq, Afghanistan, Pakistan and Syria நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் .
இதில் ஏழு சிறுவர்கள் உள்ளிட்ட 102 பேர் ஒரே நாளில் பிரிட்டனுக்கும் நுழைந்துள்ளதகவும் ,இதுவே கடல் வழியாக
உள்நுழைந்த அதிக எண்ணிக்கையினாலவர்கள் என தெரிவிக்க பட்டுளள்து .
பிரான்சில் இருந்து தினம் தோறும் லண்டனுக்கு சுமார் 600 கப்பல்,படகு சேவைகள் இடம்பெறுவதக் சுட்டி காட்ட பட்டுளள்து

நெதர்லாந்தில் மருத்துவர்கள் இன்றி தவிக்கும் நான்கு மாவட்டங்கள்
நெதர்லாந்தில் மருத்துவர்கள் இன்றி தவிக்கும் நான்கு மாவட்டங்கள்
நெதர்லாந்து நாட்டில் நமக்கு நகரங்களில் குடும்ப வைத்தியர் இன்றி மக்கள் தவித்துவருவதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
இவர்கள் நிரந்தர மருத்துவர் இன்றி அந்த மக்கள் தவித்து வருவதாக ஊடகம் ஒன்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது ,
Enschede, Middelburg, Kampen, and Emmen மேற்படி நகரங்களில் இந்த குடும்ப நல நிரந்தர மருத்துவர் இன்றி தவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனராம்

கொலண்டில் புரட்சி 207,000 கம்பெனிகள் புதிதாக திறந்து சாதனை
கொலண்டில் புரட்சி 207,000 கம்பெனிகள் புதிதாக திறந்து சாதனை
நெதர்லாந்து நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த வருடம் சுமார் 207,000 கம்பெனிகள் திறந்து தமது
வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதாக தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது .
இது பெரும் சாதனையாக பார்க்க படுகிறது ,ஆளும் அரசு மேற்கொண்ட கடும் முயற்சசிகளின் பயனாக இந்த வணிகம் பெருகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
நெதர்லாந்து நாட்டில் வரிவிகிதம் அதிகமாக காண படுகின்ற பொழுதும் இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது சாதனையின் உச்சமாக நோக்க படுகிறது
சீனாவில் இருந்து 174 பயணிகளை காவிய படி தரை இறங்கிய கனேடிய விமானம்
சீனாவில் இருந்து 174 பயணிகளை காவிய படி தரை இறங்கிய கனேடிய விமானம்
கனடா நாட்டு மக்களை ஏற்றிய படி கனடிய விமானம் ஒன்று வான்கூவர் பகுதியில் தரை இறங்கியது .
சீனாவின் வைரஸ் அதிகம் பாதிக்க பட்ட பகுதியான குவான் பகுதியில் இருந்தே இந்த விமானம் கனடா நோக்கி வந்திறங்கியது .
இராணுவ விமான தளத்தில் தரை இறங்கிய விமானத்தில் வருகை தந்த அனைவரும் கடும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,.
இதில் சிலருக்கு இந்த நோயின் அறிகுறி உள்ளதாக நம்ப படுகிறது .தமது நாட்டு மக்களை சீனாவில் இருந்து
வெளியேறுமாறு பல நாடுகள் கோரி வந்த நிலையில் இந்த விமானம் தரை இறங்கியுள்ளது குறிப்பிட தக்கது

அல்கொய்தா தலைவரை கொன்று விட்டோம் – டிரம்ப் அறிவிப்பு
அல்கொய்தா தலைவரை கொன்று விட்டோம் – டிரம்ப் அறிவிப்பு
Yemen நாட்டின் அல்கொய்தா தலைவரை தாம் உளவு விமான தாக்குதல் மூலம் கொன்று விட்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார் .
எமக்கு எதிராக செயல் படும் நாடுகள் ,மற்றும் அமைப்புக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்க படும் என
பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது தமது வேட்டையை அமெரிக்கா தீவிரமாக ஆரம்பரித்துள்ளது குறிப்பிட தக்கது

ஈரானில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்க மட்டோம் என தெரிவிப்பு
ஈரானில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்க மட்டோம் என தெரிவிப்பு
ஈரானில் நிகழகால் நிகழ்வுகளின் நிகழ்ச்சிகளினால் மன சோர்வுற்றுள்ள ஈரானிய மக்கள் ,தாம் எதிர்வரும்
தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் ,தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர் .
ஈரான் ,அமெரிக்காவுக்கு இடையில் போர் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் மக்களின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரானோ வைரஸ் தாக்குதல் 636 பேர் பலி -31,161பாதிப்பு
கொரானோ வைரஸ் தாக்குதல் 636 பேர் பலி -31,161பாதிப்பு
சீனாவை தயக்கமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 636 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 1,161பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்
அது தவிர இந்த நோயின் அறிகுறியில் சிக்கி 140 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
நாள் தோறும் இதன் இறப்பு விகிதமும் ,நோய் தொற்றும் அதிகரித்து வருவதல் இதன் இழப்பு ஐந்தாயிரத்தை தாண்ட கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

துருக்கியில் பயங்கரம் 31 பேர் பலி – 53 பேர் காயம்
துருக்கியில் பயங்கரம் 31 பேர் பலி – 53 பேர் காயம்
கிழக்கு துருக்கி மலை பகுதியில் இடம்பெற்ற கடுமையான பனிமழை காரணமாக மலையேறியவர்களில் சுமார் 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தொடர்ந்தும் காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விட பட்டுள்ளது
கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற பெரிய விபத்துக்களாக இது பார்க்க படுகிறது ,
இந்த சம்பவத்தின் உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது









