ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா

Spread the love

ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 908 ஆக

உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் இறந்ததால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஒரே நாளில் 97 பேர் உயிரைக் குடித்த கொரோனா – பீதியில் சீனா
கொரோனா வைரஸ்
பீஜிங்:

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ்

பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நேற்றைய

நிலவரப்படி, இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளதாக சீன சுகாதர துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘கொரோனா வைரசினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 97 பேர் இறந்தனர். மேலும் 3,062 நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தில் 91 பேர், அன்ஹூய் நகரில் 2 பேர், ஹெய்லோங்ஜியாங், ஜியாங்சி, ஹைனான் மற்றும் கன்சு

ஆகிய இடங்களில் தலா 1 நபரும் கொரோனாவால் இறந்தனர்’ என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 97 பேர் உயிரைக்

Leave a Reply