Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்
பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .
இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்
யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்
150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
சீனாவை தாயகமே கொண்டு பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 115 பேர்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரே நாளில் 400 க்கு மேற்பட்டவர்கள்
இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
அதனை தொடர்ந்து சுமார் 75,000.பேர் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நோயினை கட்டு படுத்த முடியாது
சீனா தடுமாறி வருகிறது
இந்த நோய் தாக்கத்தின் இறப்பு பல மில்லியன்
கணக்காக உள்ளதாக பிறிதொரு செய்தி வெளியிட்டுள்ளது .
எனினும் அதனை சீனா ஏற்க மருத்துவருகிறது
இந்த நோயானது சீனாவுக்குள் வெளியில் சுமார்
முப்பது நாடுகளில் பரவி உள்ளமை சுட்டி காட்ட தக்கது

பிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்
பிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் கோவை ரெயில் நிலையம் மற்றும் அங்குள்ள கடைவீதிகளில் பொதுமக்களிடம் பிச்சை
எடுத்து, தனக்கு தேவையான உணவுகளை வாங்கி உண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
பிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்
கிம்
கோவை :
சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம். தொழில் அதிபர். இவர் எளிமையாக வாழ விரும்பினார். அதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள தியான மையத்தில் சில காலம்
தங்கி இருந்தார். பின்னர் அங்கு இருந்து வெளியேறிய கிம் எளிமையாக வாழ பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.
கோவை ரெயில் நிலையம் மற்றும் அங்குள்ள கடைவீதிகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, தனக்கு தேவையான உணவுகளை வாங்கி உண்டு வாழ்க்கை
நடத்தி வருகிறார். இதுகுறித்து கிம் கூறுகையில், “நான் எளிமையாக வாழ விரும்பி கோவையில் உள்ள தியான
மையத்திற்கு வந்தேன். பின்னர் மனநிம்மதிக்காக மக்களிடம் யாசகம் பெற்று, அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறேன்” என்றார்.
கிம்
கோவையில் வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி செல்கின்றனர்.
சிலர் ஆர்வத்துடன் அவருக்கு பணம் கொடுத்து செல்கிறார்கள். பணம் கொடுப்பவர்களை கிம் வணங்கி நன்றி சொல்கிறார்.

ஜேர்மனியில் துப்பாக்கி சூடு – 8 பேர் பலி
ஜேர்மனியில் துப்பாக்கி சூடு – 8 பேர் பலி
மேற்கு ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 8 பேர் பலியாகியதுடன், 5 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் பேங்க்பிரட்டின் கிழக்கில் ஹனூ பகுதியில் இருக்கும் ஷீஷா பாரில் ஜேர்மன் நேரப்படி இரவு 10.15
மணிக்கு காரில் வந்த இனந் தெரியாத நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருவதாகவும், தாக்குதல் நடந்து
சில நிமிடங்கள் என்பதால் சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்புவதற்குள் ஹெலிகாப்டரில் தேடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரானோ வைரஸால் 2125 பேர் பலி – பணத்தை எரிக்கும் சீன அரசு
கொரானோ வைரஸால் 2125 பேர் பலி – பணத்தை எரிக்கும் சீன அரசு
சீனாவில் இதுவரை கொரானோ வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 2125 ஆக உயர்ந்துள்ளது மேலும்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில்,நோயாளிகளினால் பயன்படுத்த பட்ட வைரஸ்
தொற்றுள்ள பண நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை, 14 நாட்களில், அதிக வெப்பத்தில் வைத்து எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

நடுவானில் மோதி சிதறிய இரு விமானங்கள் – வீடியோ
நடுவானில் மோதி சிதறிய இரு விமானங்கள் – வீடியோ
அவுஸ்ரேலியாவில் இரு இலகு ரக பயணிகள் விமானங்கள் இரண்டு வானில் நேரெதிர் மோதி சிதறின .
இதில் அதில் பயணித்த நால்வரும் பலியாகினர் .
காட்டு பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளதால் அதனை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இரு விமானத்தில் -வைரஸ் தாயகம் குவானுக்கு சென்று இறங்கிய மருந்துகள்
இரு விமானத்தில் -வைரஸ் தாயகம் குவானுக்கு சென்று இறங்கிய மருந்துகள்
சீனாவின் முக்கிய சிவப்பு பகுதியாக அறிவிக்க பட்டுள்ள குவான் மாகாணத்தில் இன்றும் இரண்டு இரட்சத சரக்கு
இராணுவ விமானங்களில் குவான் சர்வதேச விமான நிலையத்தில் மருந்துகளுடன் விமானம் சென்று தரை இறங்கியுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து செல்கிறது .
இதனை தடுக்க மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனினும் ஆட்கொல்லி
நோயாளிகளுக்கு பயன் படுத்த படும் மருந்துகள் தற்காலிகமாக வழங்க பட்டு வருகிறது
உயிரிழப்பு 2000 யிரத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் ,நேரடி நோய் பாதிப்பு ஒரு லட்ஷசம் என கணக்கிட பட்டுள்ளது

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி நிதி
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி நிதி
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக நிறுவனத்தின் தலைவர் ஜெப் போசஸ் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி நிதி
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் போசஸ்
நியூயார்க்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெப் போசஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் அமெரிக்க
டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடி) நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘போசஸ் எர்த் பண்ட்’ தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பருவநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். பருவநிலை
மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
அமேசான்
நான் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு 10 பில்லியன் டாலர் (ரூ.71 ஆயிரம் கோடி) செலவிடுகிறேன். விஞ்ஞானிகள்,
ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி உதவும். பூமி என்பது நம் அனைவருக்கும்
பொதுவானது. அதை நாம் ஒன்றாக பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
cruise கப்பலில் 681 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
cruise கப்பலில் 681 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு
ஜப்பான் கடல் பகுதியில் தைத்து நிற்கும் cruise கப்பலில் பயணித்த மக்களில் சுமார் 681 பேர் இதுவரை கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் இந்த நோயாளர்கள் தங்க வைக்க பட்டுள்ள பகுதியில் இருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் மக்களை
நிற்குமாறும் எச்சரிக்கை பதாகை அங்கு கட்டி தொங்க விட பட்டுள்ளது
மேலும் இந்த கப்பலின் உள்ளவர்களுக்கு நோய் தொற்று அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது

நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய இராணுவ வீரர்கள் – photo
நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய இராணுவ வீரர்கள் – photo
இந்தியா அசாம் பகுதியில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை இரண்டு இராணுவ வீரர்கள்
நீரில் குதித்து காப் பாற்றி கரை சேர்த்த காட்சிகள் வைரலாகி வருகிறது .
தமது உயிரை பணயம் வைத்து இவ்வாறு பெண்ணை காப்பாற்றிய அந்த இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

கொரனோ வைரஸ் தாக்குதல்1800 பேர் பலி ,72,436 பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல்1800 பேர் பலி ,72,436 பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1,800பேர்
பலியாகியுள்ளனர் மேலும் சுமார் 72,436 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் திங்கள் மட்டும் சுமார் 1,886 பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மேலும் இதே தினத்தில் 93 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த நோய்த்தாக்கம் அதிகமாக பரவி வருகிறது ,குவான் மாகாணத்தில் மட்டும் சுமார் 2600 இராணுவ
வைத்தியர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

வைரஸ் தாக்குதல் 1,700 பேர் பலி 70,548. பேர் பாதிப்பு -ஒரே நாளில் நாளில் 100 பேர் சாவு
வைரஸ் தாக்குதல் 1,700 பேர் பலி 70,548. பேர் பாதிப்பு -ஒரே நாளில் நாளில் 100 பேர் சாவு
சீனாவை தாயகமாக கொண்டு பார்வை வரும் கோர்னோ வைகாசர் தகத்தலில் சிக்கி இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சுமார் 70,548. பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நேற்று மட்டும் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த நோய் தொற்றுக்கு புதிதாக சுமார் 2048 பேர் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது .
சீனா கூறும் இந்த தொகையை விட பல மடங்கு மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் அதனை வெளியிடாது சீனா மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது
உலக நாடுகளின் இந்த குற்ற சட்டை சீனா மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

லண்டன் விமான நிலையத்தில் நடந்த பயங்கரம் — பல விமானங்கள் இரத்து
லண்டன் விமான நிலையத்தில் நடந்த பயங்கரம் — பல விமானங்கள் இரத்து
லண்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால் அங்கு பல டசின் விமான பயணங்கள் திடீர்
இரத்து செய்ய பட்டன ,இதனால் பயணிகள் பெரும் அவதியுற்றன.
குறித்த விமான நிலையத்தில் உள்ள electronic boards stop working,விமான வழிகாட்டி அறிவிப்பு பலகை செயல் இழந்ததல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதனால் அங்கு கரும் பலகை ஒன்றில் கையால் எழுத பட்டு விமான பயணங்கள் மக்களுக்கு காண்பிக்க பட்டன .
இந்த இலத்திரனியல் அறிவுப்பு பலகை செயல் இழப்பு சைபர் தாக்குதல் நிகழ்வா என்பதை குறித்த விமானம்
நிலையம் இதுவரை வெளியிட வில்லை என்பது குறிப்பிட தக்கது


கிராமத்துக்குள் புகுந்து 30 பேரை சுட்டு கொன்று – கடத்தி சென்ற ஆயுத கும்பல்
கிராமத்துக்குள் புகுந்து 30 பேரை சுட்டு கொன்று – கடத்தி சென்ற ஆயுத கும்பல்
நையீரியாவைன் வடமேற்கு பகுதியில் உள்ள sauwa and Dankar in Katsina கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த
முப்பது மக்களை சுட்டு கொன்றதுடன் ,சிலரை கடத்தி சென்றுள்ளது .
இவர்களது இந்த தொடர் வேட்டைகளில் சிக்கி இம்மாதம் மேலும் பலர் பலியாகி இருந்தனர்
குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தை சுற்றிவளைத்த அரச படைகள் பாதுகாப்பை பல படுத்தியுள்ளன.
மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த அதிகமான ஆயுத குழுவே இந்த வெறியாட்டத்தை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது

கொரனோ வைரஸ் தாக்குதல் 1662 பேர் பலி -68 ,000 பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் 1662 பேர் பலி -68 ,000 பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1662 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 68,000 பேர் பலியாகியுள்ளனர்
இந்த நோயின் அறிகுறியால் 150 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
,இந்த நோயின் தாக்கத்தில் சிக்கி முதன் முதலாக ஐரோப்பவில் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் பல திடுக்கிடும் செய்திகள் கீழ் உள்ள காணொளியில் பார்க்கவும்

விமானத்தில் தீ – தப்பிய 163 பயணிகள் – ஜெர்மனியில் பயங்கரம்
விமானத்தில் தீ – தப்பிய 163 பயணிகள் – ஜெர்மனியில் பயங்கரம்
துருக்கி தலைநகரில் இருந்து 163 பயனிங்க்ளை கோவையை படி பயணித்த விமானம் ஒன்றின் சக்கரத்தில் திடீரென தீ
பற்றி கொண்டது ,எனினும் விமானியல் Düsseldorf விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்க பட்டது .
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது
துருக்கியில் தரை இறங்கிய பொழுது விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுடன் ,அதில் மூவர்
பலியாகி இருந்தனர் ,பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிட தக்கது

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்… காதலியின் பதில்.
16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்… காதலியின் பதில்.
ரஷியாவில் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வீரர் ஒருவர் தனது காதலியிடம் ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ‘லவ் ப்ரபோஸ்’ செய்த வீரர்… காதலியின் பதில்?
17 ராணுவ டேங்கர்கள் சூழ அலெஸ்சாண்டிரியாவிடம் காதலை கூறிய டெனிஸ்
மாஸ்கோ:
உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இளைஞர்களும்,
இளம்பெண்களும் விரும்பும் நபரிடம் தங்கள் காதலை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
இதில் பலர் ரோஜா பூக்களை காதலன் அல்லது காதலிக்கு வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்தினர். சில
காதலர்கள் வித்தியாசமாக இந்த காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல் ரஷியாவை சேர்ந்த ராணுவ ஒரு வீரர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் ப்ரபோஸ் செய்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?
ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ்
கென்ஸ்செவ்(23) . இவர் அலெஸ்சாண்டிரியா(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த
வெள்ளிக்கிழமை அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின்
மையப்பகுதிக்கு அழைத்து சென்றான். அங்கு டெனிஸ் சக வீரர்களின் உதவியுடன் மொத்தம் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார்.

வைரஸ் பரவிய பகுதியில் புதிய மருத்துவமனை கட்டும் சீனா -ஆதர photo
வைரஸ் பரவிய பகுதியில் புதிய மருத்துவமனை கட்டும் சீனா -ஆதர photo
சீனாவின் குவான் மாகாணத்தில் இருந்து கொறனோ வைரஸ் பரவியது ,இங்கு வசிக்கும் மக்களுக்கு சிறப்பு
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் நோக்குடன் விசேட கட்டு மான நிபுணர்கள் வழிகாட்டலில் புதிய
மருத்துவமனை ஒன்றை சீனா அமைத்து வருகிறது .
ஐந்து புதிய மருத்துவ மனைகளை அமைக்கும் பணியில் அது தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அனைத்தும் இருவரத்திற்குள் கட்டி முடிக்க பட்டு விடும் என கூறப்பட்டுள்ளது .
மக்கள் நடமாட்டம் இலலாத பகுதியில் தமது உயிரை பணயம் வைத்து மக்களை காக்கும் நோக்குடன் இந்த
கட்டிட பொறியியலாளர்கள் புதிய மருத்துவமனையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது உலக மக்களை மிரள வைத்துள்ளது
இதே பகுதியில் தான் பல ஆயிரம் மக்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் ,போக்குவரத்துக்கள் தடை செய்ய பட்டு
மக்கள் வீடுகளுக்கு சிறை வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


தாலிபான் தாக்குதல் தளபதியை போட்டு தள்ளிய – இராணுவம்
தாலிபான் தாக்குதல் தளபதியை போட்டு தள்ளிய – இராணுவம்
ஆப் கானிஸ்தான் நாட்டில் தமது தாய் நாடு கோரி போராடி வரும் தலிபான் போராளிகள்
அரசும் படைகள் மற்றும் அமெரிக்கா படைகளுக்கு எதிராக போராடி வருகின்றன .
அமெரிக்கா அந்த மண்ணை ஆக்கிரமித்த நாள் முதல் இதுவரை அந்த போர்க்களத்தில் இந்த அமைப்பு தமது தாக்குதல்களை இடைவிடாது நடத்திய வண்ணம் உள்ளது .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முக்கிய அரச படையணியை குறித்த அமைப்பு கொன்று குவித்தது .
அதற்கு பிழிவாங்கும் தாக்குதலை அரச இராணுவம் மேற்கொண்டது .
இதன் போது குறித்த அமைப்பின் முக்கிய தாக்குதல் தளபதியாக விளங்கி வரும் Maulvi Sardar Mohammad,
என்பவரை Balkh மாகாணத்தில் வைத்து விமான தாக்குதல் மூலம் தாம் கொன்றுள்ளதாக அரச படைகள் அறிவித்துள்ளன .
இவருடன் மேலும் எட்டு பேர் படுகொலை செய்ய பட்டுள்ளதாக குறித்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

குருதிஸ் போராளிகள் 47 பேர் துருக்கியில் அதிரடி கைது
குருதிஸ் போராளிகள் 47 பேர் துருக்கியில் அதிரடி கைது
கிழக்கு துருக்கி பகுதியில் குருதீஸ் போராளிகள் என சந்தேகிக்க படும் 47 பேரை தாம் கைது
செய்துள்ளதாக துருக்கி காவல்துறையினர் தெரிவித்துளள்னர்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்







