Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா
பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா
சர்வதேச எல்லை வழியாக இந்திய பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டின் உளவு ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்- எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்
வயல்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும்
பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பகுதியை உளவு பார்ப்பதற்காக வந்த
ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர்
செக்டாரில் உள்ள ரதுவா பகுதியில் உள்ள வயல்வெளியில் இந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான் ட்ரோனை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
அந்த ட்ரோனை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது
தொடர்பான விரிவான அறிக்கையை எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட உள்ளது.
எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்களை கண்காணித்து, பாதுகாப்பு இல்லாத இடங்களில் பயங்கரவாதிகளை ஊடுருவச்
செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்று ட்ரோன்களை பயன்படுத்தி உளவு பார்க்கின்றனர்.
குறிப்பாக ஹிராநகர் செக்டார் எப்போதுமே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு ஊடுருவல் பாதையாக இருந்து வருகிறது.
அதன் நிலப்பரப்பு மற்றும் மழைக்காலங்களில் பாகிஸ்தானுக்கு பாயும் சிறு ஓடைகள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளன.

நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு
நில நடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலி – இருபது வீடுகள் அழிவு
இன்று Ivory Coast நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருபது வீடுகள் முற்றாக அழிந்தன
இவ்வேளை அந்த வீடுகளுக்குள் வசித்த சுமார் 13 பேர் பலியாகினர் ,மேலும்
டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பாதிக்க பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பது பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்
பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்
பிரிட்டனில் இன்று Haywood Avenue, south Belfast பகுதியில்
இரண்டாம் உலக போரின் பொழுது பயன் படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு கண்டு பிடிக்க பட்டது
இதனை அடுத்து குறித்த வீடுகளுக்கு அருகில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்ற பட்டனர்
இதனை அடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது ,குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்க பட்டு குண்டு மீட்க பட்டது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 13 நாள் சிசு பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பதின் மூன்று நாள் சிசு ஒன்று பலியாகியுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 135 பேர் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற பலி எண்ணிக்கை சுமார் 42,288 ஆக உயர்வடைந்துள்ளது
இதுவரை மூன்று லட்சம் மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
அமெரிக்கா இராணுவத்தின் விமானம் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல்
,படை ,கப்பலில் தரித்து பறப்பில் ஈடுபட்ட பொழுது விபத்தில் சிக்கியது
இதன் பொழுது இரு விமானிகளும் பாராசூட் மூலம் கடலில் குதித்தனர்
இவர்களை உலங்கு வானூர்தி விரைந்து சென்று காப்பாற்றியது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சீனாவில் மீள வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா
சீனாவில் மீள வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா
பீஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா
கொரோனா வைரஸ் பரிசோதனை
சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை. அது
பாதுகாக்கப்பட்ட நகரமாகவே, அரணாக அனைவருக்கும் தோன்றியது.
சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பத்தொடங்கினர். அவர்களின் முகத்தில்
மகிழ்ச்சி தாண்டவமாட தொடங்கியது. பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவின.
ஆனால் பீஜிங் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சீன மக்களுக்கும் ஏற்பட்டது நிரந்தர நிம்மதி அல்ல, இடைக்கால
நிம்மதிதான் என்று சொல்லத்தக்க விதத்தில் அங்கு மறுபடியும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது.
தலைநகர் பீஜிங்கில் 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. தினமும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு
வருகிறது. இது கொரோனாவின் 2-வது அலை தாக்குதல் என்று நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிந்த 22 மணி நேரத்தில் பீஜிங்கில் மட்டும் 27 பேருக்கு கொரோனா கொத்து கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது உகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச
சந்தை என்றால், இப்போது பீஜிங்குக்கு இரண்டாவது அலை வீச வழி வகுத்திருப்பது அங்குள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை.
கொரோனாவின் 2-வது அலையில் பீஜிங்கில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிரடியாக
உயர்ந்து இருக்கிறது. இந்த தகவலை பீஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் உறுதி செய்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “பீஜிங்கில் கொரோனா தொற்று நோய் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது எங்கள்
அதிகபட்ச முன்னுரிமையாக அமைந்து விட்டது. நாங்கள் அங்கு அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
ஒவ்வொரு நிமிடமும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று கொத்து கொத்தாக பரவத்தொடங்கி இருப்பதையொட்டி, பாதிப்புக்குள்ளான
பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அது மடடுமல்ல அந்த நகரை சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால், சர்ச்சைக்குரிய ஜின்பாடி மொத்த சந்தைக்கு மே 30-ந் தேதியில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான
மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு இப்போது தொற்று பரவி இருக்கிறதோ என்ற கவலை, பீஜிங் நகர நிர்வாகத்தை வாட்டி வதைக்கிறது.
அதனால்தான் அந்த சந்தையை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அத்தனையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
போடப்பட்டுள்ளன. பீஜிங் நகரம் போர்க்கால நிலையில் வைக்கப்பப்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
சீனாவில் நேற்று மொத்தம் 40 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 32 பேருக்கு உள்ளூர் பரவல் என்றும் 8 பேருக்கு வெளியூர் மூலமான பரவல் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஹெபெய் மாகாணத்தில் 4 பேருக்கும், சிச்சுவான் மாகாணத்தில் ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. 6 பேருக்கு எந்தவித
அறிகுறிகளும் இன்றி கொரோனா தாக்கி இருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஒரே நாளில் 7 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வீடு திரும்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 221 ஆகும்.
சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக பதிவாகி இருக்கிறது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 377 ஆக உள்ளது.
பீஜிங் நிலவரம் பற்றி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோய் நிபுணர் வு ஜூன்யு பேட்டி ஒன்றில் கூறும்போது “ தற்போது நிலைமை மிகவும் மோசமாகி
இருக்கிறது. பீஜிங்கில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கி உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் ஜின்பாடி மொத்த விற்பனை
சந்தைதான். இது மிகப்பெரிய சவாலாக இப்போது உருவெடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம்” என கூறினார்.
சீனாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கத்தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது
என்றால் உலக நாடுகளுக்கு அது அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவே, உனக்கு ஒரு முடிவு வராதா?
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 வேற்றுகிரக மனிதர்கள்
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 வேற்றுகிரக மனிதர்கள்
நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்
நம் பூமியை தொடர்புகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள்
வேற்றுகிரகவாசி
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது
சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும்
இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு
மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம்
அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.
அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது,
நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.
36 நாகரிகங்கள் பூமியைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று ஏலியன் ஆய்வு வெளிப்படுத்துகிறது – ஆனால் நாம் தயாராக இல்லை.
நமது விண்மீன் மண்டலத்தில் தகவல் தொடர்பில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் இருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
வேற்றுகிரகவாசிகள் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை அனுப்பக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, நமது சொந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், மற்ற கிரகங்களில்
புத்திசாலித்தனமான வாழ்க்கை உருவாக எவ்வளவு சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி,
சமிக்ஞைகளை ஒளிபரப்பக்கூடிய புத்திசாலித்தனமான வாழ்க்கை ஒருவருக்கொருவர் சராசரியாக 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உருவாகும் என கண்டறியப்பட்டு உள்ளது.
பூமி இதுவரை பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கையை நடத்தும் திறனில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது, இது நாம் உண்மையிலேயே தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.
புதிய ஆய்வின்படி, நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தில் உள்ள குறைந்தபட்சம் 36 புத்திசாலித்தனமான நாகரிகங்கள் பூமியை
தொடர்பு கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், நேரம் மற்றும் தூரம் காரணமாக, அவை
இருக்கின்றனவா அல்லது எப்போதாவது இருந்தனவா என்பதை நாம் ஒருபோதும் அறிய முடியவில்லை என ஆய்வு கூறுகிறது.
தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்ட நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு முந்தைய கணக்கீடுகள் டிரேக் சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை, இது 1961 இல் வானியலாளரும்
வானியற்பியலாளருமான பிராங்க் டிரேக்கால் எழுதப்பட்ட சமன்பாடு ஆகும்.
விண்மீன் வேற்றுகிரக வாழ்க்கையில் பலவீனமான மற்றும் வலுவான வரம்புகளை ஏற்படுத்த ஆய்வாளர்கள்
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் கோட்பாடுகளை உருவாக்கினர்.
இதன் மூலம் நமது விண்மீன் மற்றும் நட்சத்திரங்களின் வயது, நட்சத்திரங்களின் உலோக உள்ளடக்கம் மற்றும் உயிர்வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவை அடங்கும்.
உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்திலிருந்து சரியான தூரம், மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ
இருக்காது. அங்கு நீர் இருந்தால் உயிர் வாழ்க்கை கிரகத்தின் மேற்பரப்பில் சாத்தியமாகலாம்.
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் வலுவான வரம்பு என்னவென்றால், பூமியைப் போலவே ஒரு கிரகத்தில் உயிர்களின் வாழ்க்கை 4.5 முதல் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கு இடையில்
உருவாக வேண்டும், அதே நேரத்தில் பலவீனமான வரம்பு என்னவென்றால், ஒரு கிரகம் வாழ்க்கையை உருவாக்க
குறைந்தபட்சம் 4 பில்லியன் ஆண்டுகள் ஆகும், ஆனால் அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சாத்தியமான வேற்றுகிரக நாகரிகங்களுக்கிடையிலான சராசரி தூரம் சுமார் 17,000 ஒளி ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். அந்த சமிக்ஞைகளைக்
கண்டறிதல் அல்லது தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்தொடர்புகளை அனுப்புவது இவ்வளவு நேரம் எடுக்கும் என கணிப்பதே கிட்டத்தட்ட சாத்தியமற்றது ஆகும்.
மேம்பட்ட வேற்றுகிரக நாகரிகங்களின் சமிக்ஞைகளைப் பெறுவதற்கான தொழில்நுட்ப அடிப்படையில் பூமியும் அதன் மக்கள்தொகையும் இன்னும் முன்னேறவில்லை
ஒரு தகவல்தொடர்பு நாகரிகத்தின் வாழ்நாள் முக்கிய அம்சம் என்பது தெளிவாகிறது, மேலும் கேலக்ஸிக்குள் இருப்பவர்கள் ஒரு சில செயலில் உள்ள சமகால நாகரிகங்களைக் கூட கொண்டிருக்க
மிக நீண்ட ஆயுட்காலம் தேவைப்படுகிறது. பிற சாத்தியமான நாகரிகங்கள் பூமியில் உள்ளதைப் போல நீண்ட காலமாக
இருக்கின்றனவா? என்பது கேள்விக்குறியே என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வேற்றுகிரகவாசி வாழ்க்கைக்கான தேடல் 7,000 ஒளி ஆண்டுகளுக்குள் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றால், இது
இரண்டு விஷயங்களில் ஒன்றைக் குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாவதாக, இந்த நாகரிகங்களின் ஆயுட்காலம் 2,000 ஆண்டுகளுக்கும் குறைவானது என்று பரிந்துரைக்கக்கூடும்.
இரண்டாவதாக, பூமியில் உள்ள வாழ்க்கை தனித்துவமானது மற்றும் ஆய்வில் நிறுவப்பட்ட ஆஸ்ட்ரோபயாலஜிகல்
கோப்பர்நிக்கன் வரம்புகளை விட மிகவும் சீரற்ற செயல்பாட்டில் நிகழ்கிறது என்று அது பரிந்துரைக்கலாம்.
இது குறித்து ஆய்வு நடத்திய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் கான்செலிஸ் கூறியதாவது:-
எங்கள் புதிய ஆராய்ச்சி, வேற்றுகிரக அறிவார்ந்த நாகரிகங்களுக்கான தேடல்கள் வாழ்க்கை எவ்வாறு உருவாகிறது
என்பதை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த மனித நாகரிகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான தடயங்களையும் தருகிறது.
“அடிப்படையில், புத்திசாலித்தனமான வாழ்க்கை பூமியில் உள்ளதைப் போன்ற பிற பூமி போன்ற கிரகங்களில் உருவாகும்
என்ற அனுமானத்தை நாங்கள் செய்தோம், எனவே சில பில்லியன் ஆண்டுகளுக்குள் வாழ்க்கை தானாகவே பரிணாம வளர்ச்சியின் இயல்பான பகுதியாக உருவாகும்.
டிரேக் சமன்பாட்டின் அடிப்படையில் எங்கள் கணக்கீட்டிற்கும் முந்தையவற்றுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்,
வேற்றுகிரக வாசிகள் வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் எளிமையான அனுமானங்களைச் செய்கிறோம்.
அவற்றில் ஒன்று என்னவென்றால், வாழ்க்கை ஒரு விஞ்ஞான வழியில் உருவாகிறது – அதாவது சரியான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வாழ்க்கை உருவாகும்.
‘ஒரு நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் எந்த கிரகங்களின் எந்த பகுதி உயிரை உருவாக்கும்?’ போன்ற கேள்விகளுக்கு
பதிலளிக்க இயலாது. மற்றும் வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கையின் எந்தப் பகுதியும் அறிவார்ந்த வாழ்க்கையில்
உருவாகும்?’ நாம் இதுவரை செய்யாத ஒரு வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கையை கண்டுபிடிக்கும் வரை இதுகுறித்து பதிலளிக்க முடியாது.
அதாவது, பூமியில் புத்திசாலித்தனமான வாழ்க்கையைப்போல் கேலக்ஸியில் வேறு எங்காவது புத்திசாலித்தனமான வாழ்க்கை
அங்கேயும் அதே வழியில் உருவாகும். மற்றொரு அனுமானம் என்னவென்றால், அவை சிக்னல்கள் வழியாக தங்கள் இருப்பை ஒருவிதத்தில் தெரியப்படுத்துகின்றன.
தற்போது, செயற்கைக்கோள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து ரேடியோ பரிமாற்றம் போன்ற சமிக்ஞைகளை மட்டுமே நாங்கள் குறுகிய காலத்திற்கு உருவாக்கி வருகிறோம். நமது
“தொழில்நுட்ப” நாகரிகம் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது. ஆகவே, விண்மீன் முழுவதும் 36 வேற்றுகிரக வாசிகள் இதே
காரியத்தைச் செய்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என கூறினார்.
உதவி பேராசிரியரான ஆய்வின் இணை ஆசிரியர் டாம் வெஸ்ட்பி கூறும்போது
வானியல் உயிரியல் கோப்பர்நிக்கன் வரம்புகள் என்னவென்றால், புத்திசாலித்தனமான வாழ்க்கை 5 பில்லியன் ஆண்டுகளுக்குள்
அல்லது சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது – 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தகவல்தொடர்பு மனித நாகரிகம் உருவான பூமியைப் போன்றது.
ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் வலுவான வரம்பைப் பயன்படுத்தி கணக்கீடுகளின் அடிப்படையில், நமது விண்மீன்
முழுவதும் 36 தகவல்தொடர்பு உடைய அறிவார்ந்த நாகரிகங்கள் இருக்கலாம். இது பூமியில் செயல்படும் வித வாழ்க்கையைபோல்
உருவாகிறது என்று இந்த ஆய்வு கருதுகிறது என்று வெஸ்ட்பி கூறினார்.
டெல்லி மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் 3307 பேர் பாதிப்பு
டெல்லி மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி, ஆர்.ஜே.டி. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநில மந்திரி, முன்னாள் மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் இன்று 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி
வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனாவின் கோரப்பிடில் பொதுமக்கள் மட்டுமல்ல அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரிகள் சிக்குகின்றனர்.
இன்று டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பீகார் மாநில எய்ம்ஸ் மருத்துவமனையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
மந்திரியாக பதவி வகித்தவர் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 3307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர்
உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 1,16,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5651 பேர் உயிரிழந்துள்னர்
கொரோனா மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை
கொரோனா மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை
கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு – இங்கிலாந்து சாதனை
கோப்பு படம்
உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது.
பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து
கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்:
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 40 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்பவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.
இந்த மருந்து கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகித்தை வெகுவாக குறைத்துள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.
டெக்சாமெத்தசோன்
மேலும், இந்த டெக்சாமெத்தசோன் மருந்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மூத்த ஆராய்ச்சியாளர் மார்ட்டின் லேட்ரியின் ஆராய்ச்சியில்,
சராசரியாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரில் ஒருவர் உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது.
சராசரியாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் ஒருவரது உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது என்ற தகவலை கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டெக்சாமெத்தசோன் மருந்து உலக அளவில் பெரும்பாலான
நாடுகளிடம் உள்ளதாகவும், இந்த மருந்துக்கான செலவும் மிகவும் குறைவு
எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான டெக்சாமெத்தசோன் மருந்து நிச்சயம் பலன்
அளிக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்
இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்
இந்தியா, சீனா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ்
ஜெனிவா:
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக்
எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீனா தரப்பில்உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மோதலால் இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
இது குறித்து அண்ட்டோனியாவின் துணைச்செய்தித்தொடர்பாளர் இர் ஹனிஹொ தெரிவித்ததாவது:-
இந்தியா-சீன எல்லையில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இரு நாடுகளும்
அதிகபட்ச கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதல் தரும் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்கிறோம்.
இந்தியா-சீன எல்லையில் மோதல் – தமிழக வீரர்பலி
இந்தியா-சீன எல்லையில் மோதல் – 20 இராணுவம் பலி
எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்- தமிழக வீரர் வீரமரணம்
தமிழக வீரர் பழனி
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக்
எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த
பழனியும் (வயது 40) ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
மோதலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவிற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்னிடம் சொன்னதை செய்யாமலேயே போயிட்டியே சுஷாந்த்…. சானியா மிர்சா உருக்கம்
சானியா மிர்சா, சுஷாந்த் சிங்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர்
மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சுஷாந்த் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் மனம்
உடைந்துவிட்டது. ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம் என கூறினாய். எப்போதும் சிரிப்புடன் இருக்கும்
நபர் நீ. செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் சந்தோசத்தை பரப்பினாய். ஆனால் நீ இவ்வளவு வலியுடன் இருந்தாய் என்பது
எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த உலகம் உன்னை நிச்சயம் மிஸ் பண்ணும் என் நண்பரே.” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் அந்நாட்டுக்கு சொந்தமான விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. அங்கு நட்பு
நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் அந்நாட்டுக்கு சொந்தமான எஃப் 15 ஈகில் ரக போர் விமானம்
ஒன்றில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிக்கொண்டிருந்தார்.
வானில் வட்டமிட்டப்படி பறந்து கொண்டிருந்த அந்த போர் விமானம் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானத்தை தேடும் பணியை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்நிலையில், யார்க்ஷிரின் பகுதியில் இருந்து 74 நாட்டிக்கல் மையில் தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதை படையினர் கண்டுபிடித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற அமெரிக்க விமானப்படை விமானி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ராணுவ வீரர்கள், தலிபான் மோதல் – 6 பேர் பலி
ராணுவ வீரர்கள், தலிபான் மோதல் – 6 பேர் பலி
ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள், தலிபான் பயங்கரவாதிகள் மோதல் – 6 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு
பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றன.
அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாதிகள் இருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உடன்பாடு
ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
மாறாக ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள்
தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், தலீபான்
பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையே பல மணிநேரம் கடுமையான சண்டை நடந்தது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9900 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- இதுவரை 9900 பேர் மரணம்
கொரோனா பரிசோதனை
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை
அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 343091 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம்
அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிறப்பு வார்டு
இதுவரை 180013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில்
42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் மூவர் மீது கத்தி குத்து -ஒருவர் கொலை – பெண் கற்பழிப்பு
பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் மூவர் மீது கத்தி குத்து -ஒருவர் கொலை – பெண் கற்பழிப்பு
பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் இளம் பெண் கற்பழிக்க பட்டுளளார் ,
ஒருவர் படுகொலை செய்ய பட்டுளளார் ,மேலும் மூவருக்கு கத்தி குத்து இடம் பெற்றுள்ளது
தனிமை படுத்தல் தொடர்பாக இடம்பெற்ற போராட்டத்தின் பொழுதே
இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவால் 41,698 பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயியனால் சிக்கி இதுவரை சுமார்
41,698 பேர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதர அமைச்சும் அறிவித்துள்ளது
தற்போதை நிகழ்கால நிலவரப்படி நூற்றுக்கும் குறைவான
உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது ,எனினும் நோயானது
பூரண கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் படவில்லை
இந்த நோயானது ஜூன் மாத இறுதி பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப் படும் என அறிவிக்க பட்ட பொழுதும் அவை சற்றும் குறைந்ததாக தெரியவில்லை ,
இந்தியா , ரசியா,பிரேசில் போன்ற நாடுகளில் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருகிறது
நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து உணவு பஞ்சம் ஏற்படலாம் என்ற ஐயம் நிலவுகிறது
மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை
மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை
பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சுப்ரீம் கோர்ட்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது, பா.ஜ.க.வை சார்ந்த அஜய்
ஷ்யாம், சிம்லா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி
அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு
மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்குமாறு வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு
தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தொடர்ந்து நடத்த சிம்லா போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளன
2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்
2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா
வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும்
பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில்
நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா
அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர்
மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை
பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு
அமெரிக்கா கறுப்பினத்தவர் கொலையை தாங்கி கொள்ள முடியாத
சோகத்தில் – வாலிபர் தூக்கில் தொங்கி சாவு
அமெரிக்காவில் வெள்ளை இன காவல் துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் கழுத்தில் நெரித்து படுகொலை
செய்யப்பட்டதன் சோக செய்தியை அறிந்து ஒரு வாரத்தில் இரண்டாவது நபர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இருபத்தி நான்கு வயதுடைய நபரே இவ்விதம் பெரும் மன உளைச்சலில் காணப்பட்டு இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்







