டெல்லி மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி, ஆர்.ஜே.டி. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநில மந்திரி, முன்னாள் மத்திய மந்திரிக்கு கொரோனா: மராட்டியத்தில் இன்று 3307 பேர் பாதிப்பு
டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின்
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி
வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனாவின் கோரப்பிடில் பொதுமக்கள் மட்டுமல்ல அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரிகள் சிக்குகின்றனர்.
இன்று டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பீகார் மாநில எய்ம்ஸ் மருத்துவமனையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
மந்திரியாக பதவி வகித்தவர் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 3307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர்
உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 1,16,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5651 பேர் உயிரிழந்துள்னர்






