Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில்; பாருக்கு சென்ற மக்கள் மீது துப்பக்கி சூடு – 8 பேர் காயம்

அமெரிக்காவில்; பாருக்கு சென்ற மக்கள் மீது துப்பக்கி சூடு – 8 பேர் காயம்


கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா San Antonio bar பகுதியில் துப்பக்கி சூடு நடத்த பட்டது ,இதில் எட்டு பேர் படுகாயமடைந்தனர் .

நவீனராக துக்காக்கியுடன் நுழைந்த நபர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்
இதுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை

அமெரிக்காவில்; பாருக்கு
அமெரிக்காவில்; பாருக்கு
      Posted in உலக செய்திகள்

      கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு

      கொரனோவால் இந்தியாவில் மூன்று லட்சம் பேர் பாதிப்பு

      உலகநாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை இந்தியாவில் 308,ஆயிரத்து 993.பேர் பாதிக்க பட்டுள்ளனர்


      மேலும் 8,ஆயிரத்து 884 பேர் பலியாகியுள்ளனர்
      தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,அரசு

      திட்டமிட்டு இந்த நோயின் தாக்குதல் இழப்புக்களை மறைத்து வருவதாக குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகிறது

          Posted in உலக செய்திகள்

          சீனாவில் மீள பரவும் கொரனோ

          சீனாவில் மீள பரவும் கொரனோ

          சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தற்போது மீள பரவி வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது

          சீனாவின் தலைநகர் பீஜிங் இதனை அறிவித்துள்ளது , 46 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

          மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பியுள்ள நிலையில் மீள வேகமாக இந்த் நோயானது பரவ ஆரம்பித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

              Posted in உலக செய்திகள்

              உலகில் கொரனோ பலி இரண்டாவது இடத்தை பிடித்த பிரேசில்

              உலகில் கொரனோ பலி இரண்டாவது இடத்தை பிடித்த பிரேசில்

              உலகில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் அதிக மக்கள் பலியாகி இரண்டாவது இடத்தை இதுவரை பிரிட்டன் தக்க வைத்து கொண்டிருந்தது

              தற்போது அது கடந்த பெரும் இழப்பாக பிரேசில் நிலவுகிறது ,
              இதுவே உலகில் இரண்டாது அதிக மக்கள் பலியான நாடாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்

                  பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நில நடுக்கம்

                  பிலிப்பைன்ஸ் 5 shook Davao Oriental பகுதியில் பாரிய நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                  இந்த நில நடுக்க அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,
                  எனினும் இன்னும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                  பாதிக்க பட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன

                      Posted in உலக செய்திகள்

                      கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

                      கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

                      உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

                      கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா


                      கொரோனா பாதிப்பில் பிரிட்டனை முந்தியது இந்தியா
                      இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால்

                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக சராசரியாக 10 ஆயிரத்தை தொட்டுள்ளது.

                      இதனால் 2,89,360 எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு

                      முன்னேறியது. இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,754 ஆக உயர்ந்ததால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

                      பிரேசில் 7,75,581 உடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்று ரஷியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

                      ரஷியா 5,02,436 எண்ணிக்கையுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 20,71,495 உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

                      இந்தியாவில் மார்ச் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பாதிப்பு 500-க்கு சற்று மேலாக இருந்தது. 10 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு

                          13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு

                          ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜூலை 9-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                          லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு
                          நிரவ் மோடி

                          மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல்

                          வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

                          லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

                          தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

                          நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

                          அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

                          மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

                          சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார்.

                          இந்நிலையில், இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.

                          இதையடுத்து, நிரவ் மோடியின் சிறைக்காவலை மேலும் 28 நாட்கள் (ஜூலை 9-ம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது. நாடு கடத்துவது

                          தொடர்பான வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை

                              பிறந்த நாளில் -பிரிட்டன் பார்க்கில் இரு சகோதரிகள் வெட்டி கொலை

                              பிரிட்டன் Fryent Country Parkஇல் பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடி கொண்டிருந்த இரு சகோதரிகள் அங்கு வந்த நபர்களினால்

                              திடீரென கோரமாக வெட்டியும் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                              பிறந்த நாள் நிகழ்வு மரண நிகழ்வாக முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


                              இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன

                                  Posted in உலக செய்திகள்

                                  வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்

                                  வெடித்த குண்டு சிதறிய – இராணுவம்

                                  ஆப்கானிஸ்தான் volatile எல்லை பகுதியில் ரிமோர்ட் கொன்ரோல் மூலம்


                                  நடத்த பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்

                                  இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது

                                  இந்த குண்டு தாக்குதலை அடுத்து தற்பொழுது அந்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

                                      நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

                                      வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

                                      வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்
                                      நிரவ் மோடி

                                      மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட

                                      தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

                                      தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு

                                      மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

                                      இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.

                                      இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரது நிறுவனங்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள

                                      பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,350 கோடி ஆகும்.

                                      நேற்று ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு இவை வந்து சேர்ந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி, இப்பொருட்கள்

                                      முறைப்படி பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                          Posted in உலக செய்திகள்

                                          5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்

                                          5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்

                                          கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

                                          5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
                                          இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி

                                          சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா

                                          வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

                                          கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டு

                                          தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

                                          இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

                                          இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன்

                                          கலந்துரையாடினேன். 5-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வரும் நாட்களில்

                                          இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.

                                          இதேபோல், கம்போடியா பிரதமருடன் கலந்துரையாடியது குறித்து மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவை

                                          கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசினேன். இந்தியாவும், கம்போடியாவும் கலாச்சாரம் மற்றும்

                                          வரலாற்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்

                                              Posted in உலக செய்திகள்

                                              அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்

                                              அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்

                                              அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

                                              அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
                                              நிலநடுக்கம்
                                              போர்ட்பிளேர்:

                                              அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                              இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

                                              மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

                                                  Posted in உலக செய்திகள்

                                                  மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

                                                  மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

                                                  பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

                                                  பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
                                                  பரிசோதனை செய்யும் டாக்டர்

                                                  கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்

                                                  எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

                                                  இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

                                                  உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.42 லட்சத்தைக் கடந்துள்ளது.

                                                  பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.

                                                  மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்-

                                                      பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்-

                                                      திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது பிறந்தநாளான இன்று உயிரிழந்திருப்பது, உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

                                                      பிறந்த நாளில் மறைந்த ஜெ.அன்பழகன்- சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்
                                                      ஜெ.அன்பழகன் எம்எல்ஏ

                                                      கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம்

                                                      அடைந்தார். அவருக்கு வயது 62. இதன்மூலம் முதல் முறையாக எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.

                                                      முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஜெ.அன்பழகன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்சென்னை மாவட்ட திமுக

                                                      செயலாளராக இருந்தவர். கட்சிப் பணிகளை திறம்படச் செய்து முடித்து கட்சி தலைமையிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

                                                      ஜெ.அன்பழகன் எம்எல்ஏ

                                                      அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் கால்பதித்தவர் ஜெ.அன்பழகன். அரசியல் பணிகளுக்கு மத்தியில் திரைப்பட

                                                      விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

                                                      ஆதரவாளர்களை அன்புடன் அரவணைத்து செல்லும் குணம் கொண்ட அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள். எப்படியும் அவர் குணமடைந்துவிடுவார், பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என

                                                      உறவினர்களும், ஆதரவாளர்களும் நினைத்திருந்தனர். ஆனால், பிறந்தநாளான இன்று அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது மறைவு

                                                      உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

                                                          Posted in உலக செய்திகள்

                                                          தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

                                                          தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

                                                          தமிழகத்தில் இன்றும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இது தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,; தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                          அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும்,

                                                          ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின்

                                                          எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து

                                                          வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                              Posted in உலக செய்திகள்

                                                              அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி.

                                                              அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி.

                                                              இங்கிலாந்து நாட்டில் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்த ஜிம் மர்பி என்ற நபர், தனது அறுவை சிகிச்சையை செல்போனில்

                                                              ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார்.

                                                              மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி


                                                              மூளை அறுவை சிகிச்சையின் போது ‘செல்பி’ படம் எடுத்த நோயாளி
                                                              லண்டன் :

                                                              இங்கிலாந்து நாட்டில் ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர்

                                                              ஹல் என்ற இடத்தில் உள்ள ஹல் ராயல் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைப்பகுதிக்கு

                                                              மட்டுமே மயக்க மருந்து கொடுத்து, சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை நடந்தது.

                                                              அறுவை சிகிச்சையை அவர் தனது செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்து அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும்

                                                              ‘வாட்ஸ்-அப்’மூலம் பகிர்ந்து கொண்டார். முதலில் அதைப் பார்த்த யாருமே நம்பவில்லையாம்.

                                                              இதுபற்றி அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையின் போது நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று நான்

                                                              முடிவு செய்தேன். அதனால் விழித்திருந்தேன். அறுவை சிகிச்சையை நான் ரசித்தேன். அறுவை சிகிச்சை கருவிகளின்

                                                              சத்தத்தை மூழ்கடிக்க நான் இசை கேட்டேன். நண்பர்களுடன் பேசினேன்” என்றார்.

                                                              இதில் குறிப்பிடத்தக்க அம்சம், மர்பியை போன்று அவரது மனைவிக்கும் மூளையில் கட்டி இருந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு

                                                              சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளனவாம். மர்பின் மூளை அறுவை சிகிச்சை ‘செல்பி’ படம், சமூக ஊடகங்களில் வைரலானது.

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

                                                                  அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

                                                                  கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

                                                                  அடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                                                                  உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

                                                                  இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

                                                                  கொரோனா வைரஸ் தொற்று

                                                                  அமெரிக்காவில் இன்று புதிதாக 6,658 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில்

                                                                  கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா

                                                                  தொற்றுக்கு மேலும் 176 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1,12,645 ஆக அதிகரித்துள்ளது. மேலும்

                                                                  அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7,63,303 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்

                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்

                                                                      கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்

                                                                      உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

                                                                      கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்: சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார்
                                                                      சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்


                                                                      கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்

                                                                      பட்டாலும் உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்க பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.

                                                                      இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும்

                                                                      என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லிசியென்லூங் பேசியதாவது:-

                                                                      கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக

                                                                      கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம்.

                                                                      நாம் கொரோனா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன்

                                                                      கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

                                                                      சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால்

                                                                      பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகள் உருவாகாமல்

                                                                      தடுப்பதற்கும் சோதனைகள் முடுக்கிவிடப்படும். நாம் முற்றிலும் கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

                                                                      கொரோனா பரிசோதனை

                                                                      கொரோனா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும்.

                                                                      கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் இன்னும் வலிமையான மேம்பட்ட நாடாக மீண்டும் வரும். கிருமி தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர்

                                                                      விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

                                                                      இவ்வாறு அவர் பேசினார்.

                                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                          லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?

                                                                          லண்டன் Kingsbury பார்க்கில் இரு பெண்கள் சடலம் மீட்பு- நடந்தது என்ன ..?

                                                                          இன்று மதியம் ஒன்று முப்பது மணியளவில் பிரிட்டன் லண்டன் Fryent

                                                                          Country Park in Kingsbury பகுதியில் இரு பெண்கள் உயிர் அற்ற சடலங்களாக மீட்க பட்டனர்

                                                                          இவர்கள் மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள்

                                                                          முன்னெடுக்க பட்டு வருகின்றன
                                                                          தற்போது அந்த பார்க் மக்கள் பாவனைக்கு தடை செய்ய பட்டுள்ளது

                                                                          இந்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை .


                                                                          குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற

                                                                          வண்ணம் உள்ளது,இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை

                                                                          லண்டன் Kingsbury பார்க்கில்
                                                                          லண்டன் Kingsbury பார்க்கில்

                                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                              பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

                                                                              பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

                                                                              பிரிட்டனில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குற்ற தடுப்பு போலீசார் மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர்

                                                                              இணைந்து நடத்திய தேடுதலில் Londonderry பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் ,மற்றும் கைக்குண்டுகள் ,தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன

                                                                              இவை புதிய ஐ ஆர் ஏ அமைப்பின் செயல் திட்டம் வாய்ந்த ஒன்றாக சந்தேகிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                              கடந்த ஆண்டு இதே பகுதிக்கு அருகில் , ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்ய பட்டார் ,

                                                                              அவரது படு கொலைகளுக்கு இதே ஒத்த ஆயுதங்கள் பயன் படுத்த பட்டுள்ளது தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                                              அதனால் இந்த ஆயுதங்களுடன் பின்புல தொடர்பில் குறித்த புதிய அமைப்பு இயங்கி வருவதான சந்தேகம் எழுந்துள்ளது

                                                                              மேற்படி இடம் தொடர் தேடுதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,குறித்த குழுவை கண்டு பிடிக்கு உளவுத்துறை நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .

                                                                              இது அரசியல் பின்புல திசை திருப்பும் சதியா ..? அல்லது உண்மையில் இவ்விதமான குழு ஒன்று இயங்குகிறத என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்