Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு

தீயில் ஏரியும் பிரான்ஸ் முக்கிய பகுதி – தீயணைப்பு படைகள் குவிப்பு

தற்போது பிரான்சின் முக்கியமான பகுதியாக விளங்கும் cathedral in the western French city of Nantes,பகுதியில் தீ பற்றி பிடித்துள்ளது

இதனால் குறித்த கட்டிடம் பலமாக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

இங்கே தற்போது 60 தீயணைப்பு வீரர்கள் குவிக்க பட்டு தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

இந்த செய்திக எழுதும் வரை தீ முற்றாக கட்டு படுத்தப்படவில்லை என தெரிவிக்க படுகிறது

தீயில் ஏரியும் பிரான்ஸ்
தீயில் ஏரியும் பிரான்ஸ்
      Posted in உலக செய்திகள்

      சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

      சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

      சவூதி நாட்டில் உள்ள மக்கள் அதற்கு வெளியில் உள்ள நாடுகளில்

      பங்கு சந்தை வியாபாரம் செய்திட அந்த நாடு தடை விதித்துள்ளது

      சட்டவிரோதமாக அந்த வியாபார அனுமதி பத்திரம் இன்றி செய்பவர்கள்

      தண்டனைக்கு உட்படுத்த படுவார்கள் எனவும் இவ்விதம் செய்வது தமது

      நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது

      எனவே சவூதி நாட்டி, உள்ள தமிழர்களே இந்த பங்கு சந்தை forex foreign

      exchange market இல் ஈடு பட்டால் தயவு செய்து தப்பித்து கொள்ளுங்கள்

      நாட்டுக்கு வெளியே என்பது புரோக்கர்களாகும் ,அவ்விதமான நிறுவனங்களில் இணைந்து செய்திடாதீர்கள்

      சவூதி மக்கள் பங்கு சந்தை
      சவூதி மக்கள் பங்கு சந்தை
          Posted in உலக செய்திகள்

          நையீரியா முதல் இராணுவ விமான பெண்மணி பலி

          நையீரியா முதல் இராணுவ விமான பெண்மணி பலி

          நையீரியாவின் முதலாவது இராணுவ விமானியாக பணியாற்றிய பெண் இராணுவ சிப்பாய் விமான விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்

          இவரது இந்த மறைவு அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          வீர பெண்மணியாக இராணுவத்தில் இணைந்து உலங்கு வானூர்தி ஒட்டி வந்த இவரது மரணம்
          மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

          சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          நையீரியா முதல் இராணுவ
          நையீரியா முதல் இராணுவ
              Posted in உலக செய்திகள்

              அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா

              அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா

              அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

              தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியும் ,பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்

              இவ்வேளை வேலையின்றி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர் .இதனால் அரசிடம் உதவி பணம் கோரி இதுவரை பதின் மூன்று லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்

              இந்த விண்ணப்பங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்வதால் அமெரிக்கா அரசு தினறி வருகிறது

              அமெரிக்காவில் 13 லட்சம்
              அமெரிக்காவில் 13 லட்சம்
                  Posted in உலக செய்திகள்

                  வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

                  வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

                  சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலோ தேவி நேதம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் நேற்று கொண்டகானில் உள்ள தனது கிராமத்திற்கு சென்றார்.

                  கிராமத்தில் தற்போது நெல் நாற்று நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டில் இருந்து நேராக வயலுக்குச் சென்ற பூலோ தேவி நேதம், வயலில் இறங்கி சிறிது நாற்று நடவு செய்தார். இது விவசாய தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

                  இதுபற்றி பூலோ தேவி நேதம் கூறுகையில், ‘நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள். இங்கே வேலை செய்வது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கொலோனா காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். எனவே, நாங்கள் சொந்தமாக பயிரிடுகிறோம். எங்கள் சொந்த வேலையைச் செய்வதில் அவமானம் இல்லை. அதிக பணிகள் இருந்தபோதிலும், நான் இரண்டு மூன்று முறை இங்கு வந்துள்ளேன். இங்கு வேலை செய்வது எனக்கு நிம்மதியை அளிக்கிறது’ என்றார்.

                  அவர் நாற்று நடவு செய்தபோது எடுத்த புகைப்படத்தை சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவரை பாராட்டியுள்ளார்.

                  ‘காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேதமின் இந்த புகைப்படம், நிலத்தின் மதிப்புகளுடன் தொடர்புடைய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதைக் காட்டுகிறது’ என மந்திரி கூறி உள்ளார்.

                  வயலில் இறங்கி நாற்று
                  வயலில் இறங்கி நாற்று
                  Posted in உலக செய்திகள்

                  சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

                  சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

                  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் சிபிஐ தனித்தனியாக வாக்குமூலம் பெற்றது.

                  சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ
                  கொல்லப்பட்ட தந்தை, மகன்
                  சாத்தான்குளம்:

                  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

                  கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

                  அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

                  இதேபோல் மற்ற 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

                  Posted in உலக செய்திகள்

                  குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                  குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                  உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்குஇ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

                  புத்த பெருமானின் நான்கு பிரதான புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் குஷிநகரில் புத்த பெருமான் பரிநிர்வாண நிலையினை அடைந்துள்ளார். இதற்கு காணிக்கையாக

                  மகாபரிநிர்வாண ஆலயத்தில் 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சயன நிலை புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரமபார் ஸ்தூபிஇ அல்லது முகுபந்தன் கோபுரம் என்று அழைக்கப்படும்

                  அவ்விடத்திலேயே புத்தபெருமானின் ஈமைக் கிரியைகள் நடைபெற்றிருந்ததுடன் இது மகாபரிநிர்வாண ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது.

                  குஷிநகர் மாவட்டத்தில் ஏனைய மதஸ்தலங்களும் புத்த பௌத்த கலாசார மையங்களும் காணப்படுகின்றன. குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                  செய்வதற்கான முக்கிய காரணியாக பௌத்த யாத்திரிகர்கள்இ வரலாற்றாய்வாளர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்கள் அனைவரும்

                  குஷிநகருக்கு மட்டுமல்லாது லும்பினிஇ கபிலவஸ்து மற்றும் சிராவஸ்தி ஆகிய இடங்களுக்கும் செல்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றமை அமைகின்றது.

                  Posted in உலக செய்திகள்

                  பிரிட்டனில் கொரனோவால் 45 ஆயிரம் மக்கள் பலி

                  பிரிட்டனில் கொரனோவால் 45 ஆயிரம் மக்கள் பலி

                  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 45 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் .

                  இவ்வாறு பலியான மக்கள் தொகை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது


                  இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டு இருந்தமையும் ,ஆளும் பிரிட்டன் அதிபர் ஜோன்சன்

                  நோயின் தொற்றுக்கு உள்ளாகி உயிர் தப்பி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      செயல் இழந்த வாட்சப் – பாதிக்க பட்ட பயனாளிகள்

                      செயல் இழந்த வாட்சப் – பாதிக்க பட்ட பயனாளிகள்

                      உலக மக்களை ஆட்டி படைத்து வரும் வாட்சப் மதியம் நான்கு மணியளவில் செயல் இழந்து காணப்பட்டது

                      இதன் பாதிப்பு அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா ,வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      எனினும் அது வழமையான செயல் பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                      தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                          Posted in உலக செய்திகள்

                          கண்ணிவெடி தாக்குதலில் ரசியா இராணுவத்தினர் காயம்

                          கண்ணிவெடி தாக்குதலில் ரசியா இராணுவத்தினர் காயம்

                          சிரியாவின் இட்லி பாகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த ரஷியா

                          ,துருக்கிய இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி மூன்று ரசியா படைகள் படுகாயமடைந்துள்ளனர்

                          மேலும் துருக்கிய படைகளும் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                          தொடர்ந்து அகோர சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              Posted in உலக செய்திகள்

                              சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!

                              சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!

                              இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு

                              வடிவமே! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…


                              கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.

                              9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள்,

                              போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து

                              குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப்

                              பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான

                              வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.

                              இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப்

                              பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து

                              இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக

                              நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக

                              ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.

                              Posted in உலக செய்திகள்

                              இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

                              இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

                              இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள்

                              நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


                              அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர

                              மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

                              மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.

                              அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள

                              கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

                              இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு

                              இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

                              இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல்

                              பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ

                              உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது.

                              கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம்

                              குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

                              எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல்,

                              அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது.

                                  Posted in உலக செய்திகள்

                                  நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்

                                  நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்

                                  தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன்

                                  மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா மருத்துவமனையில் காலமானார்.

                                  நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்
                                  ஜிண்ட்சி மண்டேலா

                                  தென் ஆப்பிரிக்காவில், இன வெறியை எதிர்த்துப் போராடியவர் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் காலமானார்.

                                  இவரது மனைவி வின்னி மண்டேலாவும் இன வெறியை எதிர்த்துப் போராடி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் வின்னி காலமானார்.

                                  இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா (59), ஜோகனஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்

                                  காலமானார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

                                  ஜிண்ட்ஸி மண்டேலா டென்மார்க் நாட்டின் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

                                  நெல்சன் மண்டேலாவின்
                                  நெல்சன் மண்டேலாவின்
                                  Posted in உலக செய்திகள்

                                  லண்டனில் இரு நாட்களில் 9 பேருக்கு கத்தி குத்து -மூவர் பலி

                                  லண்டனில் இரு நாட்களில் 9 பேருக்கு கத்தி குத்து -மூவர் பலி

                                  லண்டனில் இரண்டு வார விடுமுறை நாட்களில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் மூவர் பலியாகியுள்ளனர்

                                  பலியானவர்கள் பெங் ,குரைடன் பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது
                                  இது போன்ற வேறு சில பகுதியிலும் இடம்பெற்றுள்ளது

                                  இரு நாட்களில் ஒன்பது பேர் கத்தி குத்துக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதும் ,மேலும் மூவர் பலியாகியுள்ள செயல் காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                  மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

                                      முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை

                                      டப்பிலினில் புதிய சட்டம் திங்கட் கிழமை முதல் அமுலுக்கு வருகிறது


                                      இங்கு பொது சேவைகளில் பேரூந்து ரயில் போன்றவை உள்ளடங்களாக, முக கவசம் அணியாமல் சென்றால் அவருக்கு

                                      இரண்டாயிரத்து ஐநூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுவதுடன் ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது

                                      எனவே டப்பிலின் மக்களே எச்சரிக்கை ,இது உங்களுக்குமான முக்கிய செய்தியாகும்

                                          Posted in உலக செய்திகள்

                                          தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்

                                          தீயில் எரிந்து சிசு பலி – பெற்றவர்கள் தப்பி ஓட்டம் -அவுஸ்ரேலியாவில் நடந்த சோகம்

                                          தென்மேற்கு அவுஸ்ரேலியா Avon Dam Road in Bargo பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது .


                                          இதன் பொழுது அங்கிருந்த மூவர் அந்த தீயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள தப்பி ஓடினர்

                                          ஆனால் தீயின் வேகமமான பரவலில் சிக்கிய சிசு ஒன்று அந்த தீயில் சிக்கி

                                          மூச்சு திணறி உயிரிழந்துள்ளது
                                          எரிகாயங்களுடன் சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது

                                          தப்பிய மூவரும் பெரும் மூச்சு திணறலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                          இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,மேற்படி

                                          தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                          தீயில் எரிந்து சிசு
                                          தீயில் எரிந்து சிசு
                                              Posted in உலக செய்திகள்

                                              அமெரிக்காவில் இரு போலீசார் சுட்டு கொலை -கறுப்பின கொலைக்கு பழிதீர்ப்பு

                                              அமெரிக்காவில் இரு போலீசார் சுட்டு கொலை -கறுப்பின கொலைக்கு பழிதீர்ப்பு

                                              கடந்த தினம் அமெரிக்கா McAllen, Texas பகுதியில் இரு காவல்துறை

                                              ஊழியர்கள் மர்ம ஆயுததாரிகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்

                                              கறுப்பினத்தவரை கழுத்தில் நெரித்து கொலை செய்ததும் அதன் பின்னர்

                                              எழுந்த கறுப்பின நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் பெரும் பதட்டம் நிலவியது

                                              இவ்வேளை இந்த படுகொலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர் ,

                                              அதன் தொடர்ச்சியாகவே இந்த காவலர்கள் சுட்டு படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என கருத்தை படுகிறது

                                              39 மற்றும் 45 வயதுடைய காவலர்களே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

                                              மேற்படி சம்பவம் அமெரிக்கா காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                              அமெரிக்காவில் இரு
                                              அமெரிக்காவில் இரு
                                                  Posted in உலக செய்திகள்

                                                  249 வருட தேவாலயத்தை எரித்த நெருப்பு – அமெரிக்காவில் துயரம்

                                                  249 வருட தேவாலயத்தை எரித்த நெருப்பு – அமெரிக்காவில் துயரம்

                                                  அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமைய பெற்றுள்ள 249 வருடங்கள்

                                                  பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று திடீரென தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

                                                  250 தாவது ஆண்டு விழாவை கோலா கலமாக கொண்டாட தயாராகி வந்த வேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                                  இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                  249 வருட தேவாலயத்தை
                                                  249 வருட தேவாலயத்தை
                                                      Posted in உலக செய்திகள் சினிமா

                                                      அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                                      அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                                      பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

                                                      அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
                                                      அமிதாப்புடன் அபிஷேக்பச்சன்

                                                      இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம்

                                                      முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

                                                      இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்

                                                      மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
                                                      அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

                                                      இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் ..

                                                      மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான

                                                      முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை

                                                      செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

                                                      இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                                                      அமிதாப்பச்சன் மகன்
                                                      அமிதாப்பச்சன் மகன்
                                                          Posted in உலக செய்திகள்

                                                          டிக் டாக்கை தடை செய்ய உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் – வெடித்தது சர்ச்சசை

                                                          டிக் டாக்கை தடை செய்ய உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் – வெடித்தது சர்ச்சசை

                                                          உலகில் மிக பெரும் நிறுவனமாக விளங்கி வரும் அமோசான் நிறுவனம் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும்

                                                          டிக்ட்டாக செயலியை பயன்படுத்த கூடாது என தமது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அறிவித்துள்ளதக வெளியான தகவலினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது

                                                          இதனை அடுத்து தாம் அவ்விதம் ஏதும் தெரிவிக்கவில்லை என விழுந்தடித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது

                                                          மேற்படி செயல் சீனாவுக்கும் அமோசான் நிறுவனத்திற்கும் இடையில் முறுகளை ஏற்படுத்தி இருந்த நிலையில்
                                                          இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது