Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சென்னையில் இலங்கை சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன்
சென்னையில் இலங்கை சகோதரியை வெட்டி கொன்ற சகோதரன்
தமிழகம் சென்னை வலசைவாக்கத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த சகோதிரி வீட்டுக்கு
சபரிமலைக்கு செல்வர்காக ஐம்பது வயது சகோதரன் சென்றுள்ளார் .
அவ்வேளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய வேளையில் சகோதரி மதுவை மறைத்து வைத்து
அருநித்திய நிலையில் வந்துளளர் .
இதனை கண்டுபிடித்த சகோதரன் வாய்தராறில் ஈடு பட்டுளளார் .
இந்த வாய்த் தர்க்கம் முற்றிய நிலையில் அவர் சமையலறை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் .
சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
கொலை குற்றத்தில் கொலையாளி கைது செய்ய பட்டு நீதி
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
சீனா சென்ற 150 இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைப்பு
சீனா சென்ற 150 இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைப்பு
சீனாவில் பரவி வரும் கொடிய வைரஸ் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலி யாகிவரும் நிலையில் தற்பொழுது சீனாவில் கற்கை நெறியை மேற்கொள்ளும் சுமார் 150
இலங்கை மாணவரக்ளை மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது
எதிர்வரும் நாட்களில் இவர்கள் அனைவரும் நாடு திரும்பி விடுவார்கள் என நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது
இலங்கையில் கொரன வைரஸ் தாக்குதலில் நால்வர் பாதிப்பு
இலங்கையில் கொரன வைரஸ் தாக்குதலில் நால்வர் பாதிப்பு
சீவல் பரவி வரும்கோண வைரஸ் தாக்குதலில் சிக்கி இலங்கையில் நல்லவர் பாதிக்க பட்டுள்ளனர் .
சீனாவில் கற்கை நெறிக்கு சென்று இலங்கை திரும்பியவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேலும் இந்த நோய் என சந்தேகிக்க படும் சிலரும் கண்டு பிடிக்க பட்டுள்ளனராம்
இதுவரை உலகில் இந்த நோய் தாக்குதலில் சிக்கி சுமார் 70 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்
திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
இங்கை – வவுனியா பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்கள் காவல்துறையால்
கைது செய்யப் பட்டுள்ளனர்
கைதானவர்கள் மீது மேற்கொள்ள பட்ட விசாரணைகளில் இவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதி கடைகளில்
திருடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது
விசாரணிகளின் பின்னர் இவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கையில் அரச பேரூந்துகளில் பயணிப்பது ஆபத்து
இலங்கையில் அரச பேரூந்துகளில் பயணிப்பது ஆபத்து
இலங்கையில் அரச பேருந்துகளில் பயணிப்பது ஆபத்து என்பதை குறிக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது
சமீபத்தில் இடம்பெற்ற அரச பேரூந்து ஒன்றின் விபத்து தொடர்பான விசாரணைகளில் அதன் பராமரிப்பு மிக
தவறான முறையில் இருந்துள்ளது .
அதாவது உரிய பராமரிப்புக்கு உட்படுத்தாது பல குறைபாடுகளுடன் பேரூந்து சேவையில் ஈடுபடுத்த
பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது
அந்த பேரூந்து விபத்தில் ஒன்பது பேர் பலியாகியும் சுமார் 40 பேர் படு காய மடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறான நிலையில் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதால் அதில் மக்கள் பயணிப்பது ஆபத்தான ஒன்று என ஐயம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இலங்கையில் – இறுதி போரின் பொழுது இடம்பெற்றது ஒரு இன படுகொலையையே என
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி சிவா மோகன்
அவர்கள் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தற்பொழுது இடம்பெற்று
கொண்டிருக்கும் கலை மாலை நிகழ்வில் சிறப்பு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுதே இந்த
விடயத்தை தெளிந்த பார்வையுடனும் ,உள்ளார்ந்த மன குமுறலுடனும் பகிர்ந்து கொண்டார் .
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – லண்டனில் முழங்கிய சிவமோகன் எம்பி video
இந்த நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் இவர் ஆற்றிய ,இந்த உரைக்கு பலத்த கரகோஷமும் ,வர வேற்பும் கிடைத்தது
புதுக்குடியிருப்பு மக்களோடு மக்களாக நின்று இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது ,பல இராணுவ
அச்சறுத்தல்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுடன் நின்று தனது சமுக பணியை ஆற்றி வருகின்றார் .
இவரை நேரில் பல மக்கள் சந்தித்து,மகிழ்வுற்று , தமது எண்ண கருத்துக்களை பரிமாறி கொண்டதை காண முடிந்தது .
இலங்கையில் இடப்பெற்றது ஒரு இனப்படுகொலையே என
சிறிதரன் எம்பியும் இவரை போன்றே தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .
காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா
காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா தற்காப்பு கலையில் கறுப்பு பெட்டியை பெற்றுள்ளார் .
தற்போது 64 வயதாகும் மகிந்தா தற்காப்பு கலையை கற்றுள்ளது ,தமிழர்களை காராட்டி மூலம் அடித்து விடுவார்
என நெட்டிசன்கள் ,குது கழித்து வருகின்றனர் ..
போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் ,அவர் தம் வாழ்வாதாரம் சீர்குலைந்து காணப் படும் வேளையில் ,
அவர்கள் வாழ் வதாரத்தை மேம்படுத்த மறுத்து வரும் மகிந்தா சிந்தனை வாதம் தற்பொழுது தமது களியாட்ட
நிகழ்வில் பயணித்து தமிழர்களை புறம்தள்ளி வருகிறது என்பதனை இந்த நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

கண்டாவளையில் மனைவியின் கழுதை வெட்டி கொன்ற தமிழன்
கண்டாவளையில் மனைவியின் கழுதை வெட்டி கொன்ற தமிழன்
இலங்கை -கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவியை கணவன்
கோரமாக கழுத்தை வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .
மனைவியை கொன்று விட்டு மனைவியின் சகோதரிமுறையிலானவரையும் வெட்டியுள்ளார் .
பலத்த காயமடைந்த நிலையில் இந்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
மேலும் இந்த வெட்டு சம்பவங்களை புரிந்து விட்டு தனது கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முனைந்துளளர்
காயமடைந்த நிலையில் கணவனும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்
குடும்ப தகராறு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு போட்டோ
வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு போட்டோ
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரசன்ன வெலிகள கொழும்பு பொலிஸ்
தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவிற்கான புதிய
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும்
வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொண்டு வந்தார்.
இந் நிலையில் இன்றையதினம் (25.01.2020) காலை 8.17 சுபநேரத்தில் வவுனியா பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இரண்டரை வருடங்கள் கடமையாற்றிய பீ.ஆர் மானவடு
இடமாற்றம் பெற்று இன்று முதல் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியாக கடமையாற்றவுள்ளார்.
நிருபர் வெடியரசன்




வவுனியா பேரூந்து நிலையத்தில் நால்வர் அதிரடியாக கைது
வவுனியா பேரூந்து நிலையத்தில் நால்வர் அதிரடியாக கைது
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு கேரளா கஞ்சாவுடன் நான்கு இளைஞர்ளை விசேட
அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக விசேட
அதிரடிப்படையனருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் புதிய
பேருந்து நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நான்கு இளைஞர்களை சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த வவுனியா கோவிற்குளம் , ஈரட்டைபெரியகுளம் பகுதியினை
சேர்ந்த 35,33,32,28 வயதுடைய நான்கு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து வவுனியா பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களிடமிருந்து 40கிராம் , 20கிராம் ,20கிராம் ,20கிராம் விகிதம் 100 கிராம் கேரளா கஞ்சாவினை
கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக
விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை
வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர் வெடியரசன்

கடைக்குள் புகுந்த லொறி
கடைக்குள் புகுந்த லொறி
இலங்கை குருநாகல் பிரதான வீதியில் கனரக லொறி
ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் .
இதில் காரில் பயணித்த தாய் மகன் படுகாயமடைந்தனர் ,
சாரதியின் கட்டு பட்டை இழந்த லொறி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது
எனினும் கடை பலத்த சேதத்தில் இருந்தும் தப்பித்து
கொண்டது
சராதி நித்திரை கொண்டதினால் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளதாம்
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன


போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது
போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது
நேற்று அதிகாலை மூன்று மணி வரை விசேட போலீஸ் பிரிவினரால் நடத்த பட்ட தேடுதல், சுற்றிவளைப்பில் 2394
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1466 பேரும்
, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 191 பேரும் மற்றும் சந்தேகத்தின் பேரில் 737 பேரும் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போலீசார் மேற்கொள்ளும் இந்த திடீர் நடவடிக்கையால் மக்க மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டது .
எனினும் வீதிதோறும் காவல்துறையினர் பணியில்
ஈடுபட்டு வருகின்ற பொழுதும் விபத்துக்களை தடுக்க
முடியவில்லை எனபத குறிப்பிட தக்கது
முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்க்கள்
தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைக்க பெற்றும்
அதனை செவி மடுக்காது மக்கள் பலியாக இருந்தவர்கள்
மீது விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய
விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்
ஜயசுந்தர தற்போது முன்னிலையாகியுள்ளார்
இவரிடம் பல மணிநேரமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
மகன் முன்னே பலியான தந்தை
புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த சேகு ரபீக்எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த மீனவர் கடந்த வியாழக்கிழமை (23) காலையில் தனது மகனோடு, வழமைபோல மீன் பிடித் தொழிலுக்குச்
சென்றுள்ள நிலையில், புத்தளம் கடலில் தவறுதலாக வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக ௯றப்படுகிறது.
காலை 7 மணியளவில் வழமைப் போன்று கடலில் வலை விரிப்பதற்காக சென்ற மீனவர் ரபீக், தனது இயந்திர படகின்
தளத்தில் அமர்ந்து சென்ற வேளையில் அந்த சமயம் எழுந்த பாரிய அலையொன்றினால் நிலைத்தடுமாறி அவர் கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.
மகன் முன்னே பலியான தந்தை
தனது தந்தை கடலுக்கு வீழ்ந்ததை அடுத்து அவரோடு சென்ற மகன் உடனடியாக தந்தையை காப்பாற்றுவதர்காக அவரும் கடலில் குதித்துள்ளார்.
இந்த சமயத்தில் அவர்களின் இயந்திர படகின் விசிறிகள் அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதுடன், அப்படகு
தானாகவே இயங்கி அந்த இடத்தில் இருந்து தூரமாகிச் சென்றுள்ளது.
இதனால் தனது தந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் மீனவர் ரபீக்கின் மகன் சுமார் ஒரு
மணித்தியாலம் வரை நீந்திச் சென்று புத்தளம் கடல் நீர் ஏரியின் அண்டைய பகுதியான மாம்பூரி மீன்பிடிக்
கிராமத்தை அடைந்து நடந்த சம்பவங்களை தமது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த மீனவரைத் தேடி அன்றைய தினம் புத்தளத்திலிருந்து 35 படகுகளில் மீனவர்களும்,
பொதுமக்களும் இணைந்து வரை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன், காணாமல் போன குறித்த மீனவரைத் தேடி புத்தளம் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும்,
கடற்படையின் நீர் மூழ்கிப் படையணியினர் கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும், குறித்த மீனவர் காணாமல் போய் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மகன் முன்னே பலியான
வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு
வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு
வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு
தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்து வவுனியா சைவப்பிரகாச
மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரி இன்று (24.01) இரவு 8.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் இன்று இரவு 7.30 மணியளவில் தொலைபேசி மூலம் எனக்கு தொடர்பு
கொண்டு உன்னை இல்லாமல் செய்வேன் , பாடசாலையிலிருந்து நீக்குவேன் போன்ற பல்வேறு
விடயங்களை தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்தாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பொலிஸ்
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு
முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக
இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.
பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின்
ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார் என அரச தகவல்
திணைக்கள ஊடகத்தில் NEWS.LK (https://tamil.news.lk/fetures/item/33185-2019-11-28-05-08-21) இல்
செய்தி வெளியாகியிருந்த நிலையில்,
குறித்த மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும் எமது கல்லூரியூடாகவே தொழிநுட்ப
அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான
தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார் என குறித்த தனியார் கல்லூரியின்
இயக்குனர் தெரிவித்திருந்திருந்தார்.
இந் நிலையிலேயே வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின்
இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு
அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
சற்று முன்னர் யேர்மன் சுட்கார்ட் பகுதியில் மர்ம நபர்
ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்
அறுவர் பலியாகியுள்ளனர் .
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
,கடந்த வரம் சிலர் கைது செய்யா பட்ட நிலையில்
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டு விவகாரம்: நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு-
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டு விவகாரம்: நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு- முஸ்லிம்களின் போராட்டம் நிறைவு
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் இடத்தை அகற்றுமாறு கோரி சாளம்பைக்குளம்
மக்களால் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பகட்டு வந்த போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது.
வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றின் குப்பை கொட்டும் இடம் பம்பைமடுவில்
உள்ளதால் அதனருகில் உள்ள புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு
ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடத்திற்கு செல்லும் வீதியை வழி மறித்து
கொட்டகை அமைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா நகரசபையினர், பிரதேச சபையினர், வவுனியா பிரதேச செயலாளர், மேலதிக
அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தியும்
போராட்டம் தீர்வு வரும் வரை தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை என்பவற்றின் குப்பையகற்றும்
பணிகள் 3 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டு சென்றதன் அடிப்படையில் எதிர்வரும் 31-01-2020 வரை போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்ததுடன்,
தொடர்ந்து அவ்விடத்தில் குப்பை கொட்டுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், குறித்த குப்பை
கொட்டும் இடத்தை அகற்ற தவறினால் எதிர்காலத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக
தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிருபர் – வெடியரசன்
மனோ கணேசனிடம் சிஐடி போலீசார் விசாரணை
மனோ கணேசனிடம் சிஐடி போலீசார் விசாரணை
கொழும்பில் வீடுகள் தோறும் போலீசார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து
நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க
முடியாமல் போனதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட
எம்பியுமான மனோ கணேசனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றவியல் புலனாய்வு திணைக்கள
பொலிஸ் அதிகாரிகள், எம்பியின் வீட்டுக்கு வந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி மனோ எம்பி கூறியுள்ளதாவது,
கொழும்பில் தமிழர் செறிந்து வாழும் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மட்டக்குளிய, முகத்துவாரம்,
கொள்ளுப்பிட்டி, தெகிவளை, கல்கிசை, கொகுவளை, கிருலபனை, தெமட்டகொடை, மருதானை, புறக்கோட்டை
மற்றும் கொழும்புக்கு வெளியே வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் வலய பிரதேசங்களை குறிவைத்து
போலீசார், விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை மேற்கொள்ள முயற்சிப்பது, காலம் காலமாக நடைபெறும்
கைங்கரியமாகும். இதை நான் எப்போதும் எதிர்த்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இதற்கு முந்தைய மகிந்த ஆட்சியிலும்
சரி, அதற்கு பின் வந்த நமது ஆட்சியிலும் சரி, இதற்கு நான் இடம் கொடுத்ததே இல்லை.
மனோ கணேசனிடம் சிஐடி போலீசார் விசாரணை
சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கோள்வது ஒன்று. ஆனால், அனைத்து வீடுகளுக்கும் சென்று விபரக்கோவை
திரட்டுவதும், அதிலும் தமிழ் குடும்பங்களை குறி வைப்பதும் இன்னொன்று. போலீசார் திரட்டும்
விபரக்கோவைகள், மூன்றாம் தரப்பு சமூக விரோதிகளிடம் சென்று சேருவதாக நான் சந்தேகப்படுகின்றேன்.
இதை நான் அனுமதிக்க முடியாது.
இந்நிலையில், பொலிஸ் பதிவை நான் தடுத்து நிறுத்தியதால்தான், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு
குற்றவாளிகளை முன்கூட்டியே கைது செய்ய முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டை, அவ்வேளை கொழும்பில்
பிரதி பொலிஸ் அதிபராக இருந்தவர், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரித்து வரும்
விசேட விசாரணை குழுவிடம், எனக்கு எதிராக தெரிவித்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் குற்றவியல் விசாரணை
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமராச்சி திலகரத்ன, என்னிடம் விசாரணை
வாக்குமூலம் பெறவேண்டும் என அறிவித்து நேரம் கோரி இருந்தார். அதிகாரிகளை எனது வீட்டுக்கு வந்து
வாக்குமூலம் பெறும்படி நான் கூறியிருந்தேன். இதன்படி சிஐடி பிரதம பரிசோதகர் ஹெல உடகே தலைமையிலான
பொலிஸ் குழுவினர் என் வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
எனது வாக்கு மூலத்தில்;
“இது மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலை. கடைசியாக கொழும்பில் தமிழ் மக்களை நோக்கிய
பொலிஸ் பதிவுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது, கடந்த வருடம் ஜனவரியில் என எனக்கு ஞாபகம்
இருக்கின்றது. அப்போது, இதுபற்றி வழமைப்போல், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதி
பொலிஸ் மாதிபர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் மட்டுமல்ல, பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அமைச்சரவையில் இந்த விடயத்தை எழுப்பி, விவாதித்து
இருந்தேன். சந்தேக நபர்கள் மீது விசாரணை மேற்கொள்ளுங்கள். ஆனால், வீடு வீடாக, குற்றவாளிகளை
போன்று, தமிழரை தேடி சென்று ஒட்டுமொத்தமாக பொலிஸ் பதிவு செய்யும் நடைமுறையை உடன் முடிவுக்கு
கொண்டுவரும்படி கூறி இருந்தேன். அதன்படி அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.”
மனோ கணேசனிடம் சிஐடி போலீசார் விசாரணை
“இது நடந்து, நான்கு மாதங்களுக்கு பின்னரே ஏப்ரல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்புக்கு வந்த நபர்கள்
கொழும்பில் ஜனவரி மாதமே வந்து தங்கி இருந்திருப்பார்கள் என்பது நம்ப முடியாத பழிவாங்கல் சிந்தனை. உண்மையில், இந்த குண்டு வெடிப்பு
தொடர்பிலும், குண்டு வெடிப்பு பயங்கரவாதி சாஹரான் கும்பல் தொடர்பிலும், நட்பு நாடு என்ற முறையில் இந்திய
புலனாய்வு துறை முன்கூட்டிய தகவல்களை இலங்கை பொலிஸ் துறைக்கு வழங்கி இருந்தது. குண்டு வெடிப்பு
நிகழ சில மணிகளுக்கு முன்கூட இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை வழங்கி இருந்தது. இத்தகவல்களை இலங்கை
குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தேடி கண்டுபிடிக்கவில்லை. இந்திய புலனாய்வு துறையே
இலங்கைக்கு கொடுத்தது. இப்படி கொடுக்கப்பட்ட துல்லியமான தகவல்களைகூட சரியாக பயன்படுத்தி,
குற்றங்களை தடுத்து நிறுத்தி, அப்பாவி மக்களை காப்பாற்றி, குற்றவாளிகளை கைது செய்ய, இலங்கை
பொலிசாரால் முடியவில்லை. சம்பவம் நடைபெற்ற பொலிஸ் வலய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,
பிரதி பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் துறையை தன் கையில் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தம் கடமைகளில் இருந்து முற்றாக தவறியுள்ளனர். தமது கடமை தவறலை
மறைக்கவே, நம்பி வாக்களித்த மக்களுக்காக கடமையை செய்யும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
என் மீது திட்டமிட்டு பழிவாங்கும் முகமாக அபாண்டமாக இந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.”
எனக்கூறி, எனது வாக்குமூலத்தை எழுத வைத்து, கையெழுத்திட்டு கொடுத்தேன்.
றிசாட் பதியுதீனுக்கு எதிராக வவுனிய பிரதேச சபை போராடட்ம -தொடரும் குழப்பம் photo
றிசாட் பதியுதீனுக்கு எதிராக வவுனிய பிரதேச சபை போராடட்ம -தொடரும் குழப்பம் photo
வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
ரிசாட் பதியுதீன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை தகாத வார்த்தை
பிரயோகத்தின் மூலம் விமர்சித்துள்ளமையை கண்டித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களால்
இவ் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ளூஎமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற
உறுப்பினர் ரிசாட்டுக்கு கண்டனம், குப்பைமேட்டுக்கு அருகில் குடியேற்றம் செய்தது யார்? மாவட்ட அபிவிருத்தி
குழுவுக்கு தெரியாதா?, குடியேற்றத்தை குப்பை மேட்டுக்கு அருகாமையில் செய்ய கூடாது என்று தெரியாதா,
குப்பைகளை எங்கே போடுவது’ போன்ற வாசகங்களை தாங்கி நின்றனர்.
முன்னாள் அமைச்சர் அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை ஒரு
மடமைத்தனமானவர் என்று குறிப்பிடுவது உண்மையிலேயே அவருக்கு தான் அது பொருத்தமாக
அமையும். அந்த மக்களை குப்பைமேட்டில் குடியேற்றி விட்டு, அந்த மக்களை கிணற்றில் தள்ளிவிட்டு இன்று
அவர்களுக்குறிய சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசுகிறார்.
இவர் பல வருடங்காக அமைச்சராக இருந்துள்ளார். அப்போது மக்களுக்குரிய தீர்வினை வழங்காது
நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் குப்பை மேட்டிற்கு ஒரு தீர்வு வேண்டுமென பாராளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.
ஆனால் இரண்டு மாத காலத்திற்கு முன் வந்த அரசாங்கத்திற்கு முன்வைக்கின்ற கோரிக்கையினை இவர்
இவ்வளவு காலமாக அமைச்சராக இருந்த சமயத்தில் ஏன் முன்வைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
நிருபர் – வெடியரசன்



வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார்
மீட்டுள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்Nதுகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில்
அமைந்துள்ள வீடொன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா
என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் மகளுடன் இணைந்து
உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். அதிகாலை 5.00 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில்
தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல்
வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.
முதியவர் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில்
டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில்
சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம
சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கும் அறிவித்தல் வழங்கப்பகட்டுள்ளது.
நிருபர் – வெடியரசன்









