Tag: வவுனியா புதிய தலைமை பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு போட்டோ
Author: நிருபர் காவலன் Published Date: 25/01/2020 Leave a Comment on வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு போட்டோ
வவுனியா புதிய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு போட்டோ
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரசன்ன வெலிகள கொழும்பு பொலிஸ்
தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவிற்கான புதிய
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும்
வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொண்டு வந்தார்.
இந் நிலையில் இன்றையதினம் (25.01.2020) காலை 8.17 சுபநேரத்தில் வவுனியா பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இரண்டரை வருடங்கள் கடமையாற்றிய பீ.ஆர் மானவடு
இடமாற்றம் பெற்று இன்று முதல் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியாக கடமையாற்றவுள்ளார்.
நிருபர் வெடியரசன்










