Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் , காலி மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்று
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர்களுக்கும் அதிகமான மழைபெய்யலாம்.
வடக்கு, கிழக்கு, ஊவா,வடமத்திய, வடமேல்; மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு
வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல்
தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரனோ அதிகரிப்பு – மன்னாரில் 3 குடும்பங்கள் தனிமை படுத்தல்
மன்னாரில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தல்
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட உப்புகுளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வெள்ளிக்கிழமை முதல்
எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் இதனை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மன்னார் உப்புகுளம் பகுதியில் அவரது
வீட்டில் தங்கியிருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மீண்டும் பரி சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட மூன்று குடும்பத்தினர் 14 நாட்களுக்கு
இவர்களது வீடுகளிளேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாத்தளையில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வு
மாத்தளையில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனடித் தீர்வு
ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும்
வகையில் நேற்று (10) மாத்தளை மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கினார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரைதலாவ பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் முயற்சி
எடுக்காததனால் தாம் பாரிய அசௌகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். அதனால் அம்பன்கங்கோரலை பிரதேச சபைக்கும் பல்லேதென்ன
பிரதேச செயலகத்திற்கும் இடையில் பயணிப்பதற்கு 15 கி.மீ கூடுதலான தூரத்தை பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள்
சுட்டிக்காட்டினர். கைக்காவல, கும்பல்தொட்ட வீதியின் நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும்
வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டப்ளியு.ஆர்.பிரேமசிறியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட
ஜனாதிபதி அவர்கள், பாலம் மற்றும் வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.
கதிரைகள், மேசைகளை பெற்றுத் தருமாறு மெட்டிஹக்க, மொன்டிகொல்ல ஆரம்ப பாடசாலை மாணவர்கள்
கேட்டுக்கொண்டதற்கமைய தொலைபேசி மூலம் கல்வி அமைச்சருக்கு தெளிவூட்டி தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.
விசல் மாத்தளை நீர் செயற்திட்டத்தை துரிதப்படுத்தி லக்கல தொகுதியின் நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருமாறும்
கிராமிய மாணவர்களுக்கு கணனி தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொள்ளும் வகையில் ஈ – நெனசல திட்டத்தை மீண்டும்
நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
திரு.சமன் விஜேநாயக்க லக்கல, அம்பன்கங்கை, மெட்டிஹக்க பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் இவ்வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டது.
திரு.திலக் பண்டார லக்கல பேருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம், மொரகஹகந்த செயற்திட்டத்தின் காரணமாக
காணிகளை இழந்ததினால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் குடி நீர் பிரச்சினை போன்ற அத்தியாவசிய கீழ் கட்டுமான வசதிகளில்
நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் லக்கல பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்தனர்.
திரு.லக்ஷ்மன் வசந்த பெரேரா லக்கல நாவுல பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்
. மாத்தளை அபிவிருத்தி திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.
அம்பன் கங்கை கோரலையின் பிரதேச சபை ஊடக விநியோகிக்கப்படும் நீர் குடிப்பதற்கு தரமற்றதென மாத்தளை தொட்டகமுவ, பலாபத்வல மக்கள் ஜனாதிபதி அவர்களிடம்
முறையிட்டனர். பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டி தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அவர்கள்
குறிப்பிட்டார். திரு.நாலக்க பண்டார கோட்டேகொட மாத்தளை பலாபத்வலயில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.
திரு.ரோஹன திசாநாயக்க மாத்தளை நகர் சிறுவர் பூங்காவிற்கு அருகிலும் திரு.சமந்த தர்மசேன ரத்தொட்ட, உக்குவெல பிரதேச
சபையின் வாகனத் தரிப்பிடத்திற்கு அருகிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.
இதுவரை காலமும் ஜனாதிபதி அவர்கள் நாட்டுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை நிகழ்வுகளில் பங்கேற்ற பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் – இராணுவத் தளபதி
வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் – இராணுவத் தளபதி
கொவிட் – 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்கு தொடர்பாக
அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்
2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்
2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்கின் கீழ் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை ; வாக்களிக்கவுள்ளனர்.
எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட அரசியல்வாதி
வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட அரசியல்வாதி
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர்
ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த
நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையேன
தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மீட்டேடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர் கைது
வீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர் கைது
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை
நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறிமங்களபுர, சோமபுர, பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் 18 வயதுடைய யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து
பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்ததாக யுவதியின் தாய் சேருநுவர பொலிஸ் நிலையத்தின் அவசர
தொலைபேசிக்கு விடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 20 மில்லியன் போதைவஸ்து மீட்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன்
பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´ என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
அந்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716
மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன.
அந்த அஞ்சல் பொதி கொழும்பு புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்
நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
நாவலப்பிட்டிய நகருக்கு இன்று (10) வருகை தந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ்
போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியவுக்கு ஜனாதிபதி வருகைதந்தார்.
நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் வந்திறங்கிய அவர், சர்வமத வழிபாட்டில் பங்கேற்றபின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.
நாவலப்பிட்டிய பேருந்து நிலையத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும்
‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி – வரவேற்பளித்தனர்.
இதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்
நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்
சூரத்தில் உள்ள நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நகைக்கடையில் விற்பனைக்கு வந்த வைரம் பதித்த முகக்கவசம்
வைரம் பதித்த முகக்கவசம்
சூரத்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால்,
மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம்.
ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு
வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய்
வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து
நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள்
வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.
தங்கத்தில் முக கவசம் – கோப்புப்படம்
இதே போல் மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து கொண்டிருந்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய
தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கந்தகாடு
புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் என
எதிர்ப்பார்ப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக
அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக
குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பூஸ்ஸ, கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 54 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ, கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 54 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது
தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 54 நபர்கள் 2020 ஜூலை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.
தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த இந்த 54 நபர்களின் 53 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் 01 நபர் கற்பிட்டி கடற்படை
தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார
வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் கடற்படையால் வழங்கப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, 430 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிவிட்டனர்,
மேலும் 52 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், 63 நபர்கள்
கற்பிட்டியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து
வெளியேறியுள்ளனர், மேலும் 28 நபர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன

இராணுவ தொண்டர் படையில் இனைவதற்கு தமிழர்களுக்கு அழைப்பு- கோட்டா அரசின் பயங்கரவாதம்
இராணுவ தொண்டர் படையில் இனைவதற்கு தமிழர்களுக்கு அழைப்பு- கோட்டா அரசின் பயங்கரவாதம்
மதிப்புமிக்க வாழ்க்கையைத் தொடர விரும்பும் நாட்டின் இளைஞர்கள், ஜூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை
இராணுவ தொண்டர் படையில் கெடட் அதிகாரியாக இணைவதற்கு அழைக்கப்படுகிறார்கள்.
கீழ் காணும் விளம்பரத்தின் பிரகாரம் உங்களுக்கு தேவையான தகவல்களை
பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் தொலைபேசி இலக்கங்களின் விபரங்கள் கீழ்வருமாறு.

விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்
விரட்டும் கொரனோ -10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தல்
கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன்
நெருங்கிப் பழகியதாக கூறப்படும் தரப்பினரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள
நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக்
கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய
நிலையமாகும். பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே குறித்த மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
எனினும், அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார் என்பது தொடர்பில் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை
முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால்
வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய
சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவத்தினை
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி
ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால், இது குறித்து ஜனாதிபதியிடம்
எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியால் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிலாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக, அதன் அதிகார காலத்தை
நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி
லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம
பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்
புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்
தமிழர் பகுதியாக விளங்கும் புது குடியிருப்பு பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்க பட்டன .
சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான் லெனின் குமார் அதனை பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிடடார்
போர்க்காலத்தில் புதைக்க பட்ட மனித உடலா ,அல்லது காணாமல் போனவர்
இவ்விதம் எலும்பு கூடாக கண்டு பிடிக்க பட்டனரா என்பது தொடர்பில் போலீசாரை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல்- பிரதமர் இடையிலான சந்திப்பு
அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல்- பிரதமர் இடையிலான சந்திப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின்
கொன்சியுலர் ஜெனரலாக லக்ஷ்மன் ஹுணுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின்
கொன்சியுலர் ஜெனரலாக கடமையை பொறுப்பேதற்காக புறப்பட்டு செல்வதற்கு முன்னர் நேற்று(2020.07.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
லக்ஷ்மன் ஹுணுகல்லே தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் (MCNS) பணிப்பாளர் நாயகமாகவும், அரச சார்பற்ற
நிறுவனங்கள் தொடர்பான செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி
சபையின் (NLDB) உப தலைவராகவும், இலங்கை கொமர்ஷல் வங்கியின்
பணிப்பாளராகவும், வோடர்ஸ் எட்ஜ் (Waters Edge) ஹோட்டலின் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் ஆவார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த திட்டம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில்
இருப்பதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை
எதிர்காலத்தில் மஞ்சள் நிறத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வாகனங்கள் இந்த வாகனங்களை இலகுவாக இனங்கண்டு
கொள்ளும் வகையில் இவ்வாறு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படும்.
அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு பொலிஸ் அதிகாரிகளும்
மாணவர்களை ஏற்றிச் செல்லும் சங்கங்களின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.







