Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே

இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ ,தனிமை படுத்தல் விதிகளை மீறி

செயல் படுபவர்களை இலங்கை இராணுவத்தின் பறக்கும் படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்

இவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இந்த படையினர் களத்தில் இறக்கி விட பட்டுள்ளனர்

நவீன ஊந்துருளிகள் மூலம் ,வோக்கிகள் சகிதம் உலா வரும் இவர்கள் ,மக்களை கைது செய்யும் வேட்டையிலும் ,கண் காணிப்பு பணியிலும் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

பறக்கும் படை
பறக்கும் படை
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு

    இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு

    இலங்கை வட பகுதிக்குள் உள்நுழைந்த இந்தியாவின் நாற்பது மீன்பிடி படகுகளை இலங்கை அரச

    கடற்படையினர் விரட்டி அடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

    கொரனோ பரவலை அடுத்து இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் நுழைந்து வருகின்றனர் என்ற குற்ற சாட்டை இலங்கை அரசு முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

      இத்தாலிக்கு ,இலங்கையர்கள் உள்நுழைய அரசு தடை

      இத்தாலிய நாட்டுக்குள் இலங்கையர்கள் உள்நுழைய அந்த நாடு தற்காலிக தடை விதித்துள்ளது ,


      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து மேற்படி இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

      மேலும் இந்தியா ,பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

        தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

        இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 914 பேர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

        டிரோன் உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்ட சுற்றிவளைப்பில் அதிகம் பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          முத்தையன் காட்டில் ஏழை குடும்பத்திற்கு வீடு வழங்கிய இராணுவம்

          முத்துஐயன்கட்டுகுளம், ஒட்டுச்சுட்டான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (27) 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் தலைமையில் ஏற்பாடு

          செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது,ஆர்.ராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்தின் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கான புதிய வீடொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

          மேற்படி திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உபாலி ராஜபக்ஷ அவர்களின் ஆசிர்வாதத்துடன் மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்னவின் வேண்டுகோளின் பேரில்

          கிடைக்கப்பெற்ற கொழும்பை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரின் நிதி உதவியுடன் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

          643 வது பிரிகேடின் தளபதி கேணல் டெரில் டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் 13 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் கட்டுமானத்திற்கு அவசியமான மனித வள மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன.

          இந்நிகழ்வில் ஒடுசுட்டான் பிரதேச செயலாளர் திரு. டி. அகிலன், 643 பிரிகேட் தளபதி கேணல் டெரில் டி சில்வா, 13 இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜி.எஸ்.

          எல் துஷார ஆகியோர் கலந்து கொண்டனர். வறிய குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்கும்

          சிறப்பு வீட்டுவசதி திட்டம் சமூக திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் மக்களுக்கு கொரனோ ஊசி -செலுத்துதல் ஆரம்பம்

            யாழில் மக்களுக்கு கொரனோ ஊசி -செலுத்துதல் ஆரம்பம்

            யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார

            சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

            யாழ் மாவட்டத்தில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்

            இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால்

            வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

              கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

              திருமலை மாவாட்டத்தின் பாராளும்னற உறுப்பினராக விளங்கி வரும் Kapila Nuwan Athukorala பாதிக்க பட்டுள்ளார்

              இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் ,இவர் கோத்தபாயவின் இனவெறி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

                இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

                இலங்கையில் விதிக்க பட்டுள்ள பயணத் தடையானது நான்காம் திகதி விலக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                ,ஆனல் நோயின் தாக்குதல் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இந்த தடை மேலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                  தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                  இலங்கை தம்புள்ள பகுதியில் ஒன்றரை வயது சிசு ஒன்று வீட்டின் முன் பகுதியில் நீர் நிரப்பி வைக்க பட்ட பானைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது

                  மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இது விபத்தா ,கொலையா என்ற நிலையில் விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது

                    ,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
                    வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது

                    இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                      நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்-மனோ

                        இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்

                        -மனோ கணேசன்

                        இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை,

                        பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என தமிழ் முற்போக்கு

                        கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

                        தனது டுவீடர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ எம்பி இதுபற்றி மேலும் கூரியுள்ளதாவது,

                        உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

                        இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை

                        இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான “இல்லை”களின் உண்மை.

                        கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

                        இப்போது இந்நாடு, இலங்கை தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது என தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

                        இன்று இந்நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950 களில், இந்நாட்டின் வெளிநாட்டு செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு

                        அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்க கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கிறோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்தமைதான்.

                        தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா வியட்னாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

                        நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டி பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாக கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

                        இப்போது தென்னாசியாவை பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972ல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்தி போகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

                        இன முரண்பாடுகள், யுத்தம், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு செலவாணி பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகிறேன் என்று

                        சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த

                        உங்களது போலி தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                        அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                        தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                        சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                        கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                        பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                        இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                        தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மத்தினை பெறாது எந்தவொரு அந்நிய

                        சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                        இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                        வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                        பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                        கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                        அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                        அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.


                        https://youtu.be/ZL0zrrJIX30
                        தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                        சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                        கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                        பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                        இதில் ஈழத்தில் சீனாவின் கால்ப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் விவாதிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                        தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாது நிலத்தில் மட்டுமல்ல,

                        நிலத்தை அண்டிய கடலிலும் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                        இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                        வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                        பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                        கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                        அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                        அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி

                        இலங்கைக்கு நிதியை அள்ளி வழங்கும் உலக வங்கி

                        இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின்

                        விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

                        மேலும், 2019ஆம் ஆண்டு இலங்கையில் 50 வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியினால் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

                        இத்திட்டத்தினூடாக, வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோய் வாய்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான பாதிப்பை குறைப்பதற்காக தமது

                        வைத்தியசாலை பிரிவிலுள்ள பிரதேச மக்களை பதிவு செய்து, அவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் நோய்களை தாமதமின்றி அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் உள்ளிட்ட சமூக அளவிலான சேவைகள் மக்கள் மத்தியில் செயல்படுத்தப்பட்டன.

                        அத்துடன், இச் செயற்திட்டமானது 2020 ஆம் ஆண்டு 150 வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

                        இந்த 150 வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக குறித்த கணிப்பீட்டின் படி கண்காணிக்கப்படும்.

                        இதன்படி உலக வங்கியும், இலங்கை அரசும் உடன்பட்டதற்கமைய உலக வங்கிக்கு அறிக்கை வழங்கிய பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

                        இவ்வாறு வழங்கப்படும் ஒதுக்கீடானது 2020ஆம் ஆண்டுக்குறியதாகும், என்று வைத்தியர் ஜெயசுந்தர பண்டார மேலும் தெரிவித்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கோர புயலால் 18 வீடுகள் சேதம்

                          கோர புயலால் 18 வீடுகள் சேதம்

                          இலங்கையில் வீசிய கோர புயல் காரணமாக இலங்கை திருகோணமலையில் பதினெட்டு வீடுகள்

                          சேதமடைந்துள்ளன

                          மேலும் பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன ,பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த

                          முகாமைத்துவ அமைச்சு முயன்று வருகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                            கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

                            இலங்கையில்தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 829 பேர் கைது செய்ய

                            பட்டுள்ளனர் ,இதுவரை கைதானவர்களில் கடந்த தினம் கைது செய்ய பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

                            தொடர்ந்து உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

                            கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

                            கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும்

                            கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

                            கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

                            இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                            இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

                            “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

                            எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.

                            அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

                            குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                            அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

                            எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து

                            கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                              காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                              இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய 28 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

                              அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் படியும்

                              ,வாகனங்களில் செல்ல வேண்டாம் என எச்சரிக்க பட்டிருந்தது


                              அவ்விதம் விடுக்க பட்ட எச்சரிக்கையை மீறி செயல் பட்டவர்களது வாகனங்களே இவ்விதம் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                                587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                                இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 587 பேர் கடந்த 24

                                மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளனர்

                                முககவசம் அணியாமை ,மற்றும் எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                                  புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                                  புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய் ராஜரத்னம் (Sanjay Rajaratnam) இன்று

                                  (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

                                  திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா அதிபராவார்.

                                  சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக

                                  சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

                                  கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, ரோயல் கல்லூரிகளில் கல்விகற்றுள்ள அவர், லண்டனில் உள்ள

                                  குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். திரு.ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.

                                  அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்

                                  . சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

                                  இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்களில்

                                  ஆலோசகர் பதவியை வகித்துள்ள அவர், இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராவார்.

                                  பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.