Posted in இலங்கை செய்திகள்

அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக  பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்

உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த

இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.

அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த

வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,

நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்

அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு

    மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு

    கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமற் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

    கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது


    இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண

    பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று மூழ்கி உயிரிழந்துள்ளனர். புத்தளம் மகாவௌ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார். கம்பகா நகரம் உள்ளிட்ட

    சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

    சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன. நீர் வழிந்தோடும் பகுதி அடைபட்டுள்ள மையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது.

    இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து

    விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியாவில் நடந்த திருமணம் – மண்டபத்திற்கு சீல் -அதிகாரிகள் அதிரடி

      வவுனியாவில் நடந்த திருமணம் – மண்டபத்திற்கு சீல் -அதிகாரிகள் அதிரடி

      வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால்

      திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் நேற்று மாலை (04) சீல் வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

      வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள

      திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

      இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதுடன்,

      சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு

      கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.

      சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில்

      திருமண மண்டபம் சுகாதாரப பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

        Posted in இலங்கை செய்திகள்

        வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் – -1 இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிப்பு

        இலங்கை

        வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் – -1 இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிப்பு

        சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

        சீரற்ற காலநிலையினால் மூவர் உயிரிழ்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்தோடு இரண்டு பேர் காணாமற்போயுள்ளனர்.

        ஏழு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 468 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள

        அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.33 பாதுகாப்பு நிலையங்ளில் 1145 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து182 தங்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

        இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

        27 நலன்புரி மத்திய நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

        கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது பிரதேசங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கடற்படை 13 நிவாரண குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

        இதேவேளை ,பயண கட்டுப்பாடு காரணமாகவும், மழையுடன் கூடிய காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ள

        மக்களுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் வேலை திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்தார்.

        தவளம, நெலுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

        நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று பகிர்ந்து அளிக்க மாத்தறை மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

        பொலன்நறுவை மாவட்டத்தில் 9 கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றன

          Posted in இலங்கை செய்திகள்

          வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

          வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

          மழையுடன் கூடிய காலநிலையினால் களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.

          களுகங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை விழ்ச்சி பதிவாகியிருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

          இதன் காரணமாக கங்கையை அண்மித்த ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில்

          வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

          இதேவேளை அத்தனகலுஓயவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல,பிரதேசங்களிலும் சிறயளவில் வெள்ளம் ஏற்பட்டிருககிறது.; மழை தொடர்ந்தும்

          பெய்யுமிடத்து, வெள்ளம் அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.

          மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாழ்நில

          பிரதேசங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்வதனால்; தாழ்நில பிரதேசங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

          நேற்றிரவு 8.30இல் இருந்து இன்று அதிகாலை 1.30 வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடவில் 247 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைத்திருக்கிறது.

          களுத்துறை மாவட்டத்தின் இங்கிரியவில் 218 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்கவில் 208 தசம் ஏழு மில்லிமீற்றர் மழையும் பதிவாகி இருக்கின்றன.

          களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் 193 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளன.

          புலத்சிங்கள மோல்காவ பரகொட மற்றும் கெட்டகம்பிட்டிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளன. பாலிந்நுவர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன.

          மீரிகம, ரந்தல்கொட, திருவானவத்த பிரதேசங்களிலுள்ள சில வீடுகள் நீரிவில் மூழ்கியிருக்கின்றன.

          இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடயில் 173 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் களுத்துறை

          மாவட்டத்தின் பாண்டாரகமவில் 156 தசம் ஆறு மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் யக்கல பிரதேசத்தில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ள

            Posted in இலங்கை செய்திகள்

            யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

            யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்

            யாழ் மாவட்டத்திற்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.

            இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு

            செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

            இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அன்று மே 30ம் திகதி 2947 பேருக்கும், மே 31ம் திகதி 6123, பேருக்கும் ஜூன் 1ம் திகதி 13 ,822 பேருக்கும், ஜூன் 2ம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3ம் திகதி 1740 பேருக்கும் மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

            இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

            எனவே நேற்று மாலை வரை (03.06.2021) மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

            சிலவகை மருந்துகள் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா

            வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி தெல்லிப்பளை ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

            மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய

            கிராமசேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை

            886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை

            கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் 947 பேர் கைது

              இலங்கையில் 947 பேர் கைது

              இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

              முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்

              இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி

                கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி

                இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்க பட்டுள்ளது

                ,இதன்படி சினோபார்ம்ஊசிகளை செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

                பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் பைசர் உள்ளிட்ட ஊசிகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை

                  விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை

                  அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

                  சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

                  இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

                  சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

                  Error: View a224183qxc may not exist
                  Posted in இலங்கை செய்திகள்

                  கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்

                  கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்

                  கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்துக்கும் இன்று முதல் ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ஓன்றை ஒட்ட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                  அத்தியவசிய சேவைகளுக்காக பயணிக்கின்ற வாகனங்கள் பல தடவைகள் சோதனைக்குட்படுத்பப்படுவதை

                  தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

                  இதேவேளை, முகக் கவசம் அணியாமை உட்பட, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியயமை தொடர்பாக மேலும் 1,038 பேர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  இதன்படி, இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,140 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

                  Error: View a224183qxc may not exist
                  Posted in இலங்கை செய்திகள்

                  பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை

                  பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை

                  இலங்கையில் நிலவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தனிமை படுத்தல் சட்டங்கள் அமூல்

                  படுத்த பட்டுள்ளது ,இவ்வேளை பேரூந்து ஒன்றில் பயணித்த 48 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                  அரசு அறிவித்த விதிகளை மீறி மக்கள் தொடர்ந்தும் இவ்விதம் செயல் பட்டு வருவது ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான்களுக்கு உணவுகள் வழங்கும் மனிதாபிமான உதவி photo

                    உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான்களுக்கு உணவுகள் வழங்கும் மனிதாபிமான உதவி photo

                    பைஷல் இஸ்மாயில் –

                    கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில்

                    பிரயாணிளின் வருகை இல்லாததால், திருகோணமலை மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிகின்றன.

                    திருகோணமலை நகரில் அமைந்துள்ள மத்திய வீதி, என் சி வீதி மற்றும் அதனை அன்டிய குடியிருப்பு இடங்களில்

                    மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிகின்றதை கருத்திற்கொண்டு மான்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றது.

                    பயணத்தடை காலங்களில் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான வசதிகளை திருகோணமலை நகர சபையினால் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்

                      1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தல்

                      ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின்

                      தொலைநோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

                      இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின்

                      அபிவிருத்தி திட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது.

                      கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்

                      பயணிகள் விமானங்கள் விதிக்கப்பட்டுள்ள தடை நாளை நீக்கம்

                      நாட்டுக்குவரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை நாளை தொடக்கம் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

                      இருப்பினும் நாட்டுக்குவரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்

                      ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்

                      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் முப்பது பேர் மரணமாகியுள்ளனர்

                      இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,441.பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                      வேகமாக பரவும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசு அரசு திணறி வருகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

                        தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

                        கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில்; தீ விபத்துக்குள்ளான கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும்

                        இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

                        கொழும்பு துறைமுகத்தை அண்டிய பகுதியில் தீ விபத்துக்குள்ளான கப்பல் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

                        இந்த தீ விபத்து மூலம் சுற்றாடலுக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலுக்கு

                        கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                        இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்படுத்த பட்டிருப்பதாக கடற்படைத்

                        தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம்- மக்களிடம் கோரிக்கை

                          ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம்-மக்களிடம் கோரிக்கை

                          தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என்று வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

                          இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான நிலை ஏற்படலாம். தடுப்பூசி கிடைத்தவுடன் சகல பகுதிகளுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார துறை அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

                          இதேவேளை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கியுள்ள சில சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

                          கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சில மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.

                          மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில சலுகைகளை

                          அரசாங்கம் வழங்கி இருந்தாலும் அவற்றை சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விடயம் பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு

                            புதிய கொவிட் விடுதி முல்லைத்தீவில் திறப்பு

                            கொவிட் -19 நோயாளிகளுக்காக இராணுவப் படையினரால் கட்டப்பட்ட புதிய வாட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவினால்

                            வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளிடம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

                            முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேட்டின் 16 வது பொறியியலாளர் சேவைகளின் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த புதிய

                            விடுதி அனைத்து மருத்துவ வசதிகளுடன் 25 கட்டில்கள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

                            முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சில நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

                            பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின்

                            பேரில் 68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என்.ஹெட்டியராச்சி, 681 வது பிரிகேட் தளபதி

                            மற்றும் 16 வது பொறியியலாளர் சேவை படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார ஆகியொரின் மேற்பார்வையில் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

                              பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

                              இலங்கையில் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 755 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              இவர்கள் முகக் கவசம் அணியாமை சென்றமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்து சென்ற

                              குற்ற சத்துக்களில் காவல்துறை மற்றும் ,விசேட பறக்கும் படையினரால் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது